Thursday, August 04, 2011

பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்களே!!!! நீங்க பண்றது சரி இல்ல..

To be Insured Happiness Don't take life too Seriously
1.உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்

-----------------------------

2. என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதுகள் அல்ல, நீ என்னுடன் இல்லாத பொழுதுகளே

-------------


 3. மரத்தை வெட்டியே ஆக வேண்டும் எனும் சூழல் வந்தால் வெட்டிய இடத்தில் புதை இன்னும் ஒரு விதை


-------------------------------

4. டியர்,வீட்டோட மாப்ளையா இருக்க முடியுமா?ன்னு அப்பா கேட்டாரு?

உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் உன் 15 வயசு தங்கச்சிக்காக அந்த தியாகத்தை பண்றேன்

------------------------

5. காட்டுல ஒரு மரத்துல ஒரு மலைப்பாம்பு தொங்கிட்டு இருந்தது,பொடியன் சொன்னான், சும்மா தொங்கிட்டு இருக்காதே!அம்மாவை காம்ப்ளேன் குடுக்க சொல்லு-----------------------


6. கணவன் எனும் உரிமையை மனைவியிடம் இரவுகளில் நிலை நாட்டும்போது மனைவிக்கான உரிமம் நிலைக்கண்ணாடி ஸ்டேண்டில் மாட்டப்படுகிறது

--------------------------

7. மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல நினைக்கையில் உதடுகள் ஒத்துழைக்கவில்லை, இப்போது இமைகளும் ஒத்துழைக்கவில்லை , நித்திரை வர வில்லை

----------------------

8. தாலி கட்டியவுடன் தன்னுடையவள் என்ற அகங்கார உணர்வு வந்துவிடுவதால் காதலிக்கும்போது கிடைத்த போதைகள் தெளிந்து விடுகிறது

---------------------

9. சிநேகிதன் என்ற போர்வையில் சில சுயநலவாதிகள் தன் தோழிகளிடம் பொய்யான கஷ்டங்களை பட்டியல் இட்டு ஆதாயம் பெறுகிறார்கள்

--------------------

10. இரக்கசுபாவம் உள்ளவர்கள் என்பதாலேயே பெண்களிடம் தங்கள் பொருளாதாரக்கஷ்டங்களை சொல்லி ஒரு தொகை தேற்றிவிடும் ஆண்களை அடையாளம் காண்பது அவசியம் # உயர் திரு 420

------------------------


11. அசினுக்கு குழந்தை குணம் : புகழ்ந்து தள்ளும் தோனி!#பார்த்து, உங்களை அப்பான்னு கூப்பிட்றப்போகுது பாப்பா..


-----------------

12. மாணவியுடன் உதவிக்கல்விப் பணிப்பாளர் விடுதி அறையில் வைத்து கைது #கல்வில உதவி பண்ணாம கலவில உதவி பண்ணி இருக்கு பய புள்ளே

----------------------

13.ஒரு பெண் சாதாரணமாக குளிக்க 22 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறாள் - ஆய்வு #ஆனா மலையாளப்படங்களில் எல்லாம் 8 நிமிஷம் தானே வருது?ஏமாத்தீட்டாங்களா?

---------------------

14. விட்டுக்கொடு -விருப்பம் நிறைவேறும்,மன்னிப்புக்கொடு- தவறு குறையும், மனம் விட்டுப்பேசு - அன்பு பெருகும்

---------------------

15. ஃபிகர் உன்னை விட்டுத்தொலைவில் இருந்தால் ஐ மிஸ் யூ என்க,அருகில் இருந்தால் ஐ கிஸ் யூ என்க#லவ்வாலஜி

----------------------


16. அவள் குரல் அலைபேசியில் கம்மத்தொடங்கும்போதே என் விழிகள் விம்மத்தொடங்கி விட்டன

--------------------------

17. மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய் முடித்தால் ஹைக்கூ,மூன்று எழுத்தே முத்தாய்ப்பாய் அணைத்தால் அது அம்மா

----------------------------

18. நான் எப்போதும் பூக்களுடனேயே உன்னை சந்திக்க வருகிறேன்,நீ முட்களை என் முகத்தில் எறிந்து விட்டுப்போய் விடுகிறாய்

------------------------

19. உங்க வாழ்க்கைல நடந்த மறக்க முடியாத சம்பவம் எது?

உன்னுடன் மழைநாட்களில் இணையாக நடந்த தருணங்கள்

----------------------------

20. தினமும் இரவுகளில் கொசுக்களை விரட்ட கொசு வர்த்தி பற்ற வைப்பது மாதிரி உன் நினைவுகளை விரட்ட நினைவுவர்த்தி பற்ற வைக்க முடியுமா?

------------------------


21. திடகாத்திரமான என் 6 அடி உயர உருவமும் அடி பணிவது காத்திரமான உன் அன்பிற்கு மட்டுமே!

-------------------------

22. உங்க குரல் ஏன் கர கரன்னு இருக்கு?

கர கரப்ரியா ராகத்துல பாட ட்ரெயிங்க் எடுக்கறேன் #சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்

------------------------

23. யார் வேண்டுமானாலும் ஏதாவது செய்து என்னை சந்தோஷப்படுத்தி விடலாம், ஆனால் எதுவுமே செய்யாமல் சும்மா அருகில் இருந்தே சந்தோஷப்படுத்துவது அவளால் மட்டுமே முடியும்

-------------------------

24. அரப்புப்போட்டு குளிக்கும் பெண்கள் அருகி விட்டார்கள்,ஷாம்பு போட்டு குளிக்கும் பெண்கள் பெருகி விட்டார்கள்#ஆடி 18 அவதானிப்பு@பவானி ஆறு

---------------

25. பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்கள் ஆற்றில் இறங்காமல் சும்மா வேடிக்கை மட்டும் பார்ப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கு..

---------------------------

40 comments:

Arul Kumar P அருள் குமார் P said...
This comment has been removed by the author.
Arul Kumar P அருள் குமார் P said...

ஹய்யா நான் தான் மொதல்ல வந்தேன் ...!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என் முதல் வடையைப் பறித்தது யார் ?

கும்மாச்சி said...

என்ன ஒரு அநியாயம் பாஸ், ஹை கிளாஸ் பிகருங்கோ அத்துல இறங்கமாட்டேங்குதா?

நிரூபன் said...

ஆய், அண்ணாச்சி, புரோபைல் போட்டோவை மாத்திட்டாரு,
சூப்பரா இருக்கு,

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2 -நச்
5 -sms
8 -ஆதலினால் காதல் செய்யாதீர் !!
10 - நாங்க உஷாருப்பா உஷாரு. 'அச்சச்சோ' னு சொல்லிட்டு அப்பீட்டு
வழக்கம் போல் படங்கள் செலச்ஷனுக்கு ஒரு ஷொட்டு !

நிரூபன் said...

பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்களே!!!! நீங்க பண்றது சரி இல்ல..//

ஏன் நீங்கள் அவங்களைப் லுக்கு வுடுறது தப்பு என்று சொல்லிட்டாங்களா.

நிரூபன் said...

உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்//

ஐடியா கொடுக்கிறாராம். ஐடியா.
ஹா...ஹா...

நிரூபன் said...

டியர்,வீட்டோட மாப்ளையா இருக்க முடியுமா?ன்னு அப்பா கேட்டாரு?

உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் உன் 15 வயசு தங்கச்சிக்காக அந்த தியாகத்தை பண்றேன்/

ஸப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே,

நிரூபன் said...

மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல நினைக்கையில் உதடுகள் ஒத்துழைக்கவில்லை, இப்போது இமைகளும் ஒத்துழைக்கவில்லை , நித்திரை வர வில்லை//

ஆகா....இது செம பீலிங்ஸா இருக்கே.

நிரூபன் said...

சிநேகிதன் என்ற போர்வையில் சில சுயநலவாதிகள் தன் தோழிகளிடம் பொய்யான கஷ்டங்களை பட்டியல் இட்டு ஆதாயம் பெறுகிறார்கள்//

யாருக்கோ காலங்காத்தாலை அடி விழுதே,

நிரூபன் said...

.ஒரு பெண் சாதாரணமாக குளிக்க 22 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறாள் - ஆய்வு #ஆனா மலையாளப்படங்களில் எல்லாம் 8 நிமிஷம் தானே வருது?ஏமாத்தீட்டாங்களா?//

அவ்,...அவ்...

பாஸ் திரும்பத் திரும்ப ரிப்பீட்டு பண்ணிப் பாருங்க பாஸ்.

நிரூபன் said...

அவள் குரல் அலைபேசியில் கம்மத்தொடங்கும்போதே என் விழிகள் விம்மத்தொடங்கி விட்டன//

ம்...ம்...என்ன காதல் வர வர அதிகமாகிக் கொண்டே போகிறது.

நிரூபன் said...

எல்லாமே செம நச்.

ரேவா said...

தாலி கட்டியவுடன் தன்னுடையவள் என்ற அகங்கார உணர்வு வந்துவிடுவதால் காதலிக்கும்போது கிடைத்த போதைகள் தெளிந்து விடுகிறது

சுடும் உண்மைகள் சூப்பர்...

ரேவா said...

தினமும் இரவுகளில் கொசுக்களை விரட்ட கொசு வர்த்தி பற்ற வைப்பது மாதிரி உன் நினைவுகளை விரட்ட நினைவுவர்த்தி பற்ற வைக்க முடியுமா?

எங்க இருந்து சகோ இப்படிஎல்லாம் பிடிக்கிறேங்க...நினைவை விரட்ட நினைவுவர்த்தி...யாரவது கண்டுபிடிச்சா நல்ல இருக்கும்

ராஜி said...

விட்டுக்கொடு -விருப்பம் நிறைவேறும்,மன்னிப்புக்கொடு- தவறு குறையும், மனம் விட்டுப்பேசு - அன்பு பெருகும்
>>
பிரச்சனை இல்லாத வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயத்தை எவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டீங்க.

ராஜி said...

1.உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்.
>>
என்னா வில்லத்தனம்

ராஜி said...

என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதுகள் அல்ல, நீ என்னுடன் இல்லாத பொழுதுகளே
அடடா, ஃபீலிங்க்ஸ்ல இருக்கீங்க போல‌

ராஜி said...

மரத்தை வெட்டி யே ஆக வேண்டும் எனும் சூழல் வந்தால் வெட்டிய இடத்தில் புதை இன்னும் ஒரு விதை

இதுக்காக தமிழ்மணத்துல ஒரு ஓட்டு

ராஜி said...

டியர்,வீட்டோட மாப்ளையா இருக்க முடியுமா?ன்னு அப்பா கேட்டாரு?

உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் உன் 15 வயசு தங்கச்சிக்காக அந்த தியாகத்தை பண்றேன்
இப்பேர்பட்ட புருஷன் கிடைக்கனும்னு அந்த பொண்ணு எத்தனை முறை பாவை நோன்பு இருந்துச்சோ தெரியலையே

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்லா தலைப்பு வக்கிறாருய்யா....

Anonymous said...

1.உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்.

100 ஆ ?

'பரிவை' சே.குமார் said...

//அவள் குரல் அலைபேசியில் கம்மத்தொடங்கும்போதே என் விழிகள் விம்மத்தொடங்கி விட்டன//

சூப்பர்...

எல்லாமே "நச்".

செங்கோவி said...

கலக்கல் ட்வீட்ஸ்...காத்திரமான அன்பா?..நிரூ கூடச் சேராதீங்கன்னா கேட்டாத்தானே..

இந்திரா said...

//அவள் குரல் அலைபேசியில் கம்மத்தொடங்கும்போதே என் விழிகள் விம்மத்தொடங்கி விட்டன//


அனுபவித்து எழுதுனீங்க போல...
அருமையாயிருக்கு.

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

கோகுல் said...

கூலிங் கிளாஸ் இடம் மாறியதன் மர்மம என்னவோ

வைகை said...

உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்//

உங்கள ஊரே அடிக்கிற ரகசியம் இதுதானா?

Unknown said...

சான்சே இல்லை
என்ன சிந்தனை சிந்தனை

நான் கூட உங்களை மாதிரி எழுதலாம்ன்னு முயற்சி பண்ணி ஒண்ணு கூட தேறல..

Unknown said...

சூப்பர் தம்பி! எல்லாமே கலக்கல்ஸ்!

ரா: அரசகுமாரன் said...

4th bittu super....
http://tamilpadaipugal.blogspot.com/

Unknown said...

சிங்கங்களே...இப்போதைக்கு தக்காளியின் பின்னூட்டங்கள் பெரியன்னனால் அனுமதிக்கபடுகிராதாம்...ஹே ஹே ஹோ ஹோ !

F.NIHAZA said...

கொசுக்கிள விரட்ட கொசுவரத்தி...
நினைவுகளை விரட்ட நினைவுவர்த்தி...

ஆஹா....

சக்தி கல்வி மையம் said...

raittu..

Mohamed Faaique said...

இந்த முறை லொல்லு ஜாஸ்தி.... 13வது...... உங்க பீலிங்`சுக்கு ஒரு அளவே இல்லையா????

a said...

muthal padam Jupparunkoo....

Anonymous said...

மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய் முடித்தால் ஹைக்கூ,மூன்று எழுத்தே முத்தாய்ப்பாய் அணைத்தால் அது அம்மா///

க்ளாஸ்... அருமை!

Unknown said...

8 வது,உளவியல் ரீதியானது.உண்மையும் கூட,மற்றவையும் ரசிக்க வைத்தன.