Monday, August 15, 2011

நயன்தாரா சிம்புவுக்கு ராக்கி கட்டிட்டாரா? அய்யய்யோ!!!!!!

1.அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை மூடல் # ம்க்கும், மூட வேண்டியதை மூடிடாதீங்க!!!

-------------------------

2. அதிககடன் சுமைநாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம் # அம்மாவை பிரதமர் ஆக்கிவிட்டால் முதலிடம் பிடிக்க ஆவண செய்யப்படும்-அதிமுக சூசகம்@இமேஜினேஷன்

----------------------

3. இன்று ரக்‌ஷாபந்தன் விழா. வாழும் சீதை நயன் தாரா முன்னாள் முதல் ராமர் சிம்புவின் கையில் ராக்கி கட்டினார்@ இமேஜினேஷன்

---------------------

4.ஆத்தூர்-ல் தொடர்பை தொடர மறுத்த அண்ணியை கத்தியால் குத்திய கொளுந்தன் சிறையில் அடைப்பு # நாட்டில் நடப்பதைத்தான் படம் பிடித்தேன் - உயிர் சாமி பெருமிதம்

-----------------------

5. "டூத் பிரஷ்'கள் மூலம் பரவும் மஞ்சள் காமாலை வைரஸ் # அதான் எங்க தலைவர் அன்னைக்கே பாடுனாரா? ஆலைப்போல் வேலைப்போல் ஆலம் விழுதுபோல்னு?

-----------------------
6. நிறைவேறாத காதல்களில் காதலியை தங்கையாக ஏற்றுக்கொண்டுவிட்டால் இந்த உலகமே சகோதரத்துவம் பொருந்தியதாகிவிடும் # ரக்‌ஷாபந்தன் எதிர்ப்புக்குழு

-----------------------------

7. சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!# பிரபுதேவாவை கழற்றி விடப்போவது ஏன்? தமிழகத்தை கலக்கும் செய்தி விரைவில்?

---------------------------

8. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினால், தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்,'' விஜயகாந்த் # வைகோவை சப்போர்ட்டிங்க்?

--------------

9. கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -கனிமொழி# நல்ல வேளை ,உங்க ஸ்டேட்மெண்ட்ல டிவி மட்டும் இல்லன்னா??????


----------------------------------10.மனுஷன் சாவைக்கண்டு ஏன் பயப்படறான்?

எத்தனை நாளைக்குத்தான் பொண்டாட்டி கிட்டே மட்டும் பயந்துட்டு இருக்கறது?

----------------------------11. டாக்டர், தல சுத்துது .

யோவ், அல்டிமேட் ஸ்டார்னா அவுட்டோர் அங்கெ இங்கேன்னு சுத்தத்தான் செய்வார், அதைப்பத்தி உனக்கென்ன?

--------------------------

12. லவ்வர்,லவ் ஃபெயிலியரர் என்ன வித்தியாசம்?

டெயிலி பார்க் (PARK)போனா அவன் லவ்வர், BAR க்கு போனா அவன் லவ் ஃபெயிலியரர்

-----------------------------

13.  உன் லவ்வர் ஒரு குடிகாரன்னு ஏன் சந்தேகப்படறே?

லவ் லெட்டர் எழுதறப்ப மார்”ஜின்” விட்டே தான் எழுதறார்.#மிஸ் டவுட்ஃபயர்

----------------------


14. திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை: ராமதாஸ் ஆவேசம் #ஆக்கப்பூர்வமா நாம என்னைக்கு சிந்திச்சிருக்கோம்?

--------------------------

15. தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக குறையுமா?ஜெ கையில் முடிவு!! # எந்த டிக்கெட்டும் 10 ரூபாய்னா சீப்பா போயிடுமே?

-------------------
16. தேவயானி இன்னமும் ஹீரோயினா நடிக்கிற அளவு இளமையாகவும், அழகாகவும்தான் இருக்காங்க- ராஜகுமாரன் # ஆனா 25 வயசு ஆனாலே ரிஜக்ட்டட்தான் - தமிழர்கள்

-------------------------

17. திருடனுக்கு கடன் கொடுத்தா அது காந்தி கணக்கு, போலீஸ்க்கு கடன் கொடுத்தா அது தொந்தி கணக்கு

------------------------

18. XQS மீ மிஸ், டேக் மை விசிட்டிங்க் கார்ட்,ஐ ஆம் எ ரேப்பிஸ்ட்.

அய்யோ, எதுக்கு என் கிட்டே இதை தர்றே?

போலீஸ் விசாரனைல ரேப் பண்ணுனவன் யார்னே தெரியாதுனு சொல்லாம இருக்க .

-----------------------------


19. மேடம்,உங்க முகத்துல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்.


DR,நான் ஒரு ஹை க்ளாஸ் ஃபிகர், எதுக்கு பிளாஸ்டிக்? பிளாட்டினம், தங்கம்னு ட்ரை ப்ளீஸ்

-----------


20. அவசர போலீஸ் உதவிக்கு 100னு ஃபோன் நெம்பர் தர்றாங்களே? அவசரம் இல்லாத, அமைதியான , நிதானமான போலீஸ்க்கு ஃபோன் நெம்பர் கிடையாதா? #டவுட்டு

----------------------------
21.இடுப்புல எந்த டாட்டும் குத்திக்கக்கூடாதுன்னு என் ஆளுக்கு தடா போட்டிருக்கேன்.  ஓ! இடைக்”கோல” தடை !!?

----------------------

22. மேடம், அட்வர்ட்டைஸ்மெண்ட்ல நடிக்க உங்களுக்கு ஏன் சான்ஸே கிடைக்கலை?

எனக்கு விளம்பரமே பிடிக்காது, நோ பந்தான்னு  சொன்னதை தப்பா நினைச்சுட்டாங்க.

--------------------------------

23. தூய்மையடைகிறது சென்னை; ஜெதிட்டத்துக்கு அமோக வரவேற்பு # என்னது? துய்மை அடையுதா? அப்போ சாரு சென்னையை காலி பண்ணிட்டு எங்கே போவாரு?

-----------------------------------
24. .நீ விரும்பும் இதயம் உன்னை தவிக்க விட்டுச்செல்லும்போதுதான், நீ தவிக்க விட்டுச்சென்ற இதயத்தின் வலி உனக்கு புரியும்

---------------------

25. வாழ்க்கை என்பது ரப்பர் இல்லாமல் வரைய முற்படும் ஓவியம் போன்றது,எதையும் மாற்ற முடியாது, எந்த ஒரு சின்ன முடிவையும் கவனமாக எடு

--------------------

26. வலி கொண்ட இதயம் வடிக்கின்ற கண்ணீர்க்கு நீ காரணி ஆகி விடாதே!உன் மனசாட்சியே உன்னை உறுத்திக்கொன்று விடும்

-------------------
27 எல்லாப்பெண்களும் கண்களில் தூண்டில் வைத்துக்கொண்டு இருப்பதில்லை, ஆனால் எல்லாஆண்களும் பெண்ணின் கண்களில்தான் தன்பலவீனத்தை அடகுவைக்கிறார்கள்

------------------
28 எனக்கு வாக்கிங்க்தான் பிடிக்கும் எங்கே போனாலும் வாக்கிங்க் தான் #ங்கொய்யால, பெட்ரோல் விலை லிட்டர் ரூ 70 ஆகிடுச்சே?

-------------------

 

29 பனி மூட்டத்தில் நடக்கும் இளைஞனை இயற்கை நேசன் என நினைக்க வேண்டாம், பார்ட்டி திருட்டு தம் பார்ட்டியாகக்கூட இருக்கலாம்

-------------------

30. அவளைப்பார்க்க பஸ் ஸ்டாப் போனேன், பஸ் கூட நின்னு நின்னு போகுது, அவ மட்டும் நிக்காம போய்க்கிட்டே இருக்காளே?#ஹவ் டூ ஃபாலோ?

---------------------

31 உலகின் மிகச்சிறந்த சுயநல வாக்கியம் - நீ என்னுடையவள்.காதலியால் விரும்பப்படும் மிகச்சிறந்த வாக்கியமும் அதுதான்


-------------------------
32. .உன் அன்புக்கு உரியவர்கள் உன்னை ஒதுக்காமல் இருக்க ஒரே வழி, அவர்களுக்காக  தினமும் நேரம் ஒதுக்குவதே

------------------
33. ஆகஸ்ட் முதல் தேதி ஐயப்பனைத் தொழுது மாலை போடுகிறேன்.  14 நாள் விரதம்-சாருநிவேதிதா#அங்கே லேடீஸ் யாரும் வர மாட்டாங்களே? எதுக்கு போறீங்க?

-----------------


34. டியர், எந்த அடிப்படைல என் லவ்க்கு OK சொன்னே?

முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற ராசா ஃபார்முலாதான்,நீங்க தான் முதல்ல லவ் யூ சொன்னீங்க

-------------------

35. ஜட்ஜ் - நீ அந்த பொண்ணை ரேப் செஞ்சியா? 


கைதி - யுவர் ஆனர்,எனக்கு முன்னால சில ரவுடிங்க என்ன செஞ்சாங்களோ ,அதைத்தான் நானும் செஞ்சேன் # ராசா ஜோக்

---------------------

36. உலகின் 194-வது நாடாக தமிழீழம்: ராமதாஸ் வலியுறுத்தல்#கூட்டுத்தொகை 5 வருது, அம்மா இதுக்கு ஒத்துப்பாங்களா?


--------------------------

37. அமைச்சர்கள் கைதாகும்போது அவர்கள் பி ஏ க்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே,இதை தடுக்க ஏதும் சட்டம் இல்லையா?


--------------------

38. .திருப்பூரில் 4ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம்: # “ஃபுல்லா” அடைச்சுடுவீங்களா?

---------------------

39. மிஸ். ஐ லவ் யூ. 

சாரி மிஸ்டர்,ஆல்ரெடி நான் ஒருத்தரை லவ் பண்றேன்.


ஓக்கே மிஸ், அட்லீஸ்ட் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னாவது சொல்லுங்க

---------------------

40. .ராசா வாதத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது: கபில் சிபல் உதறல்# அப்போ சேதாரமா எடுத்துக்கலாமா? டவுட்டு

---------------------

16 comments:

Unknown said...

முதல் சிரிப்பு...

Unknown said...

ரப்பர் இல்லா ஓவியம் தான் வாழ்க்கை - மிக ரசித்தேன்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

ஹிஹி அம்மாடி நாலு பதிவுக்கான சரக்கு ஒரே பதிவில்!!!!

Unknown said...

ஆமா அந்த....கில்........மா...................
அடச்சீ காலங்காத்தால...
கடை ஒனர் படம் பார்க்க போய்ட்டாரோ??

Unknown said...

தமிழ்மணம் என்கையா?

இராஜராஜேஸ்வரி said...

இயற்கைக்காட்சிப் படங்கள் அருமை. பாராட்டுக்கள்.

கவி அழகன் said...

பார்த்தவுடன் அதிசயிக்கும் படங்களும் பகிடிகளும்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலர் கலரா ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

படங்கள் அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

Super . . .

rajamelaiyur said...

Happy independence day . . .

Unknown said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

tamilmanam seventh voted.

Anonymous said...

நல்லா இருக்கு, புகைப்படங்களும் அருமை .

சுதந்திர தின வாழ்த்துக்கள் .