Friday, August 05, 2011

போட்டோ போட்டி - மொக்கை காமெடி லூட்டி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpRZ4BbPEfQEY-2-n_th-KLWSu9ZKRXIegqIMjuamDH8bElGTANT-XptSqc7Uuj5aGUf941OQHUIBoXZpM4is_alH85PoeXgKw6uCybAT8SF3NBX_r_SF3RD8LzZ09ta4e0PfY-1-9mmxO/s1600/potta_potti_50_50_movie_patta_patti.jpg 

லகான் அப்டினு ஒரு சூப்பர் ஹிட் படம் ஹிந்தில வந்து இத்தனை வருஷம் ஆகியும்  ஒரு ஆள் அதை உல்டா பண்ணக்காணோமேன்னு பலர் ஆச்சரியமா நினைச்சுட்டிருந்தாங்க.. யாமிருக்க பயமேன் அப்டினு ஒரு குரூப் கிளம்பி அந்த லகானை அப்டியே கோடம்பாக்க ஃபார்முலாவுல காமெடி, மொக்கை, காதல்  எல்லாம் சேர்த்து பஞ்சாமிர்தம் ஆக்கி ஒரு வழி பண்ணீட்டாங்க..

ஒரு கிராமத்துல 70 மார்க் ஃபிகர், அதுக்கு 2 முட்டாள் முறைமாமனுங்க.2 பேரும் ஸ்டாலின், அழகிரி மாதிரி அடிச்சுக்கறாங்க. உடனே பஞ்சாயத்து கூடி கிரிக்கெட் போட்டி வைச்சு யார் ஜெயிக்கறாங்களோ? அவங்களுக்கு பொண்ணு அப்டினு கேவலமா ஒரு தீர்ப்பு சொல்லுது.. உடனே 11 பேர் மாப்ளையா?ன்னு கேட்கக்கூடாது, கேப்டனுக்குத்தான் பொண்ணு .சைக்கிள் கேப்ல கிரிக்கெட் கோச்சர் சடகோபன் ரமேஷ் ஃபிகரை எப்படி கல்யாணம் பண்ணி 2 மாமன் மார்களுக்கும் அல்வா குடுக்கறார்ங்கறது தான் கதை..

தமிழ்படம் , மகா நடிகன் , கோல் மால் , புதையல் பட வரிசைல  மொக்கை காமெடி பட பட்டியல்ல இதையும் சேர்க்கலாம், அங்கங்கே ஆக்‌ஷன் ஹீரோக்களை , தமிழ் சினிமா க்ளிஷேக்களை நக்கல் அடிச்ச விதம் ஓக்கே.. 

சடகோபன் ரமேஷ் முதல் படம் என்ற அளவில் பாஸ் மார்க் நடிப்பு.. அடுத்த படம் எப்படியோ.. அவர் ரிலேட்டட் சப்ஜெக்ட் என்பதால் தப்பிச்சிடறார்.. 

ஹீரோயின் ஹரிணி ( பாய்ஸ் பட ஹரிணி அல்ல) ஒற்றை நாடி தேகம்.. ஒப்பனை தேவை இல்லாத அழகு முகம் , கண்ணியம் மிக்க தோற்றம் , நடித்த வரை ஓக்கே.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiid_CyUPWlvIj5c7RPOvAcdhVdoh9MmLjQO9o89sl7WUaL1b4SMxfFoLbRZHjSKg3edonByj5kRDfTnlosIITb1Ft2sAihpLJCOadsy0hngxeYv4ZXfI7UdXDLtFw5BWbG8HPyY9Gv5yzC/s1600/patta-patti-actress-harini-stills-pics-photos-03.jpg

வசன பவுலிங்கில் காமெடி சிக்ஸர் அடித்த இடங்கள்

1. இதோ இவனுங்க தான் உருப்படியான ஊரை உருப்படி இல்லாம ஆக்குனதுல முக்கிய பங்கு வகித்தவர்கள்......( ஆர் பார்த்திபன் குரலில் கதை சொல்லும் ஓப்பனிங்க்.. )

2.  இப்போ வெண்ணைனு திட்டுனது என்னையா? எங்கண்ணனையா?

உங்கண்ணனைத்தான், ஏன்?

நல்ல வெளை, எங்கண்ணனை திட்டினே. என்னைத்திட்டி இருந்தா நடப்பதே வேற.. 

3.  இவனுங்க யார் தெரியுமா? இவனுங்க 2 பேருக்கும் படிப்பு வர்லைங்கறதுக்காக ஊர் ஸ்கூலையே இழுத்து மூடுனாங்க..

4. என்னங்க? யாரோ என்னை காய் அடிக்கறாங்க.. 
என்னடி சொல்றே?


அடச்சே! திரு விழா கூட்டத்துக்கு வந்தவங்க யாரோ என் மீது காயை வீசி அடிக்கறாங்க.. 

5.  நீயும் தானே என் மகன் கூடப்போனே? அவனை அடியில் இருந்து காப்பாத்தி இருக்கலாம் அல்ல?

என்னையும் தானே உக்கார வெச்சு கும்முனாங்க?

6.  இன்னைக்கு வெள்ளிக்கிழமை, நான் யாரையும் அடிக்க மாட்டேன்னு தெரிஞ்சு என்னை கோர்த்து விடறியா?

7. ரேக்ளா ரேஸ் வைப்போமா? ஜெயிக்கறவனுக்கு பொண்ணு.. 

டேய் நாயே, எனக்கு வண்டி ஓட்டவே தெரியாதுடா.. 

8. அண்ணே! ஒரு ஐடியா..உங்க மாமா பொண்ணை கடத்திட்டு வந்து முடிச்சிடுங்கண்ணே!

அடப்பாவி, கொலை பண்ண சொல்றியா?

அய்யோ ரேப் பண்ணிடுங்கண்ணே!

நான் மாட்டேன்


சரி நான்.......

டேய்,,,,,,

நான் ஒரு ஐடியா சொல்றேன்னு சொல்ல வந்தேன்.. 

9.  ஹீரோயின்  - ச்சே.. இவன் எல்லாம் காரோட்றான் பாரு, காத்தை இப்படி கிளப்பிட்டு போறானே.. டேய்.. பொடியா.. நீ ஏண்டா சிரிக்கறே?

நீ ரோஸ் கலர் ஜட்டி தானே போட்டிருந்தே?  ( காட்சி அமைப்பில் கண்ணியம், வசனத்தில் மட்டும் கொஞ்சம் ஜில் நயம்)

10. என்னப்பா என்னை தம்பின்னு கூப்பிடறே?நான் மைனர்ப்பா.. 

நான் மேஜர், தாராளமா அப்படி கூப்பிடலாமே?

நீ எப்போ மேஜர் ஆனே?

எனக்கு 18 வயசு ஆன போது.. 
http://www.filmics.com/gallery/d/31840-1/Patta-Patti-50-5012.jpg

11.  முதல்ல எல்லாரும் வார்ம் அப் பண்ணிக்கலாம்.. 

என்னது? ஓமமா? நான் என்ன அய்யரா?

12.  நீ பேயா? பெண்ணா?

பொண்ணு தான்.. 

எங்கே பாவாடையை தூக்கு?

யோவ்!!!

கால் இருக்கான்னு பார்த்துக்கறேன்மா.. 

13. சரி, நான் இந்த ஊரை விட்டு போகனும், அதுக்கு ஒரு வழி சொல்லு.. 

அதோ, அந்த ஆத்துல குதி, அடுத்த ஸ்டாப் மதுரை தாண்டி.. நீச்சல் தெரியும் தானே?

14. BALL.. எங்கே சொல்லு பார்ப்போம்?

பால்..

உஷ் அப்பா, முடியல,, உங்களுக்கு கிரிக்கெட் சொல்லித்தர்றதுக்குள்ள எனக்கு பால் வந்துடும் போல இருக்கு. 

15.  பஞ்சாயத்து நடக்கறப்ப கொட்டாவி விடாதீங்க.. 

அடப்பாவி, ஏண்டா?

அதுக்கு தனியா ஒரு  பஞ்சாயத்து கூட்டிடப்போறாங்க.. 

 16. கிரிக்கெட்ல ஒரு டவுட்டு, பாலை போட்ட பிறகு பேட்டை தூக்கி அடிக்கனுமா? பேட்டை தூக்கிய பிறகு பாலை போடனுமா?

கோழி முதல்ல வந்ததா? முட்டை முதல்ல வந்ததா?ன்னு கேக்கற மாதிரியே இருக்கே?

17. மாஸ்டர். எங்களுக்கெல்லாம் கிரிக்கெட் சொல்லித்தர்றீங்களே, நீங்க இது வரை பேட் கைல பிடிச்சு  நாங்க பார்த்ததே இல்லையே?

18.  புரிஞ்சுதா?

 ஒண்ணுமே கேட்கலையே?

நான் தான் எதுவுமே சொல்லலையே?இப்படித்தான் சும்மா படம் காட்டனும்.ஆப்போசிட் டீம் ஆளுங்க நாம ஏதோ பிளான் போடறோம்னு ஏமாந்துடுவாங்க.. 19. எங்கண்ணன் நின்னா கோபுரம், நடந்தா தேரு....

படுத்தா பன்னியா?

20. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நான் எதுக்கு இருக்கேன்?

அதையே தான் நானும் கேட்கறேன், நீ எதுக்கு இருக்கே?

 21. ஓக்கேப்பா, பேட்டிங்க் தெரிஞ்சவங்க, பவுலிங்க் தெரிஞ்சவங்க, ஃபீல்டிங்க் தெரிஞ்சவங்க எல்லாரும் தனி தனி கியூல நில்லுங்க.. 

இதுல எதுவுமே தெரியாதவங்க?

ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ? சரி , அவங்க தனி கியூல நில்லுங்க.. 

அடப்பாவிகளா? பாதிப்பேரு அந்த கியூல!!!!

22.. என்னடா , கிழவிங்க எல்லாம் மேட்ச் ஆடும் செலக்‌ஷன்க்கு வந்திருக்காங்க? சரி, சமாளீப்போம், அதோ அந்த மலையை தொட்டுட்டு இங்கே ஓடி வாங்க..  ஆல் கிழவீஸ் ஓடுங்க.. 

இன்னைக்கு ஊர்ல எத்தனை எழவு விழப்போகுதோ?

23. மலையை வாங்கறது இருக்கட்டும், உங்களோட வந்த பொண்ணுங்க 3 பேருக்கும் உடம்பை மறைக்க துணியை வாங்கி குடுங்க முதல்ல.. 

24. ஆப்பிள் ரூ 25,000 

அடேங்கப்பா. எங்க ஊர்ல வெறும் 15 ரூபா தான்

டேய், நான் சொன்னது ஆப்பிள் ஃபோனை.. 

25. மங்கம்மா சொல்லறா.. 

வழக்கமா ஜக்கம்மா தானே சொல்லுவா?

அவ லீவ்ல இருக்கா. 

ஓ. சரி..மங்கம்மா எப்படி? நல்ல ஃபிகரா?

26. உங்களுக்கு நேரம் சரி இல்லை, ஆயுள் ரேகை கம்மியா இருக்கு.. 

சும்மா கதை விடாதீங்க.. நேத்துத்தானே ஒரு ஃபிகரை முடிச்சேன்?

அதுதான் நீங்க தொட்ட கடைசி ஃபிகரு. போதுமா?

27. பட்டாம்பூச்சி, குருவி, தவளை இதுல தான் கடவுள் இருக்காரு.. மலையை அழிச்சுட்டா மழை வராது

28. அடப்பாவி, கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டே கிரிக்கெட்ல பேட்டிங்க்கா?பகல்லயே உனக்கு பசு மாடு தெரியாது,ராத்திரில எருமையா தெரியப்போகுது?

29. நீ ஏன் பால் அடிச்சுட்டு ஓடலை?

நான் ஓடினா அவங்க ரன் அவுட் பண்ணிடுவாங்க.. ஃபோர், சிக்சர் மட்டும் அடிப்போம்.. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT5VDmvnXCUQxsGD8wLV_IiKC6wRlVVFq-19-wRDscR006TpNeZDIFkOoj5Zm95K4HhTsKq-kNTIBEigSNZslFA-9bJ-KnG_WJuBHEJ6Qk0jWxVQbASWPCSRZnRYuYZYZXM794_SdwI4g/s400/patta+patti+50-50+tamil+movie+stills+012.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. நம்மை யோசிக்கவே விடாமல் மள மள என காட்சிகளை நகர்த்தும் பாங்கு.. எடிட்டிங்க், வசனம் பக்கா. 

2. கிராமத்துக்கதையை மண் வாசம் மாறாமல் தந்ததும் ஆங்காங்கே கிராமத்து மூடப்பழக்கவழக்கங்களை நக்கல் அடித்ததும்.. மண் வளம் ,இயற்கை, மலை வலம் பற்றி பிரச்சார நெடி இல்லாமல் சொன்னது.. 

3. ஹீரோயினை கண்ணியமாக காட்டியது, காதலையும்....

4. படத்தில் 90% புது முகங்களையே பயன் படுத்தியது.. 

5. ஃபாரீன் ஃபிகர்கள் 3 பேரினை ஒரு பாட்டில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியது.. 
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. கதைப்படி மயில்சாமி டுபாக்கூர் கிரிக்கெட் கோச்சர், ஆனால் அவர் பயிற்சி அளிக்கும் அல்லது அளித்ததாய்  நடிக்கும் டீம் எப்படி கிரிக்கெட் ஆட பிரமாதமாக கற்றுக்கொண்டது?

2. என்னதான் ஒருவர் பணக்காரர் என்றாலும் ஒரு ஊரில் உள்ள மலையே ஒருவருக்கு சொந்தமாக இருக்க முடியுமா?ஃபாரீன்காரர்கள் அவரிடம் வந்து நல்ல தமிழில் பேரம் பேசுகிறார்கள்!!!!!!

3. ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் இன்னும் விலா வாரியாக காட்டி இருக்க வேண்டாமா?அவர்களுக்குள் காதல் வருவதையே துல்லியமாக காட்டவில்லையே?

4. வில்லன் தன் அப்பாவை கவுண்டமணி  ரேஞ்சுக்கு டேய் போட்டு பேசுவது, மிரட்டுவது ஓவர் என்றால் வில்லனின் அம்மா ஹீரோவுக்கு உதவி செய்வது படு செயற்கை. 

5.  லகான் படத்தில் க்ளைமாக்ஸ் மேட்சின் லாஸ்ட் 5 நிமிஷம் செம பரபரப்பாக இருக்கும்.. அது இதில் மிஸ்ஸிங்க்.. மேட்ச் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்..

ஜாலியான படம் பார்க்க விரும்புபவர்கள்,மொக்கை காமெடிகளை ரசிப்பவர்கள், கிரிக்கெட் பிரியர்கள் ரசிக்கலாம்.. 
ஏ செண்ட்டர்களில் 30 நாட்கள் , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் , சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஜாலிவாலாக்களுக்கு மட்டும்

ஈரோடு ஆனூர்-ல் இந்த படம் பார்த்தேன்

டிஸ்கி -

டூ -ஊடலாடும் காதல் உள்ளங்கள் - சினிமா விமர்சனம்

17 comments:

நாய் நக்ஸ் said...

VADAI

நாய் நக்ஸ் said...

படித்துவிட்டு வருகிறேன்

Anonymous said...

நான் எதிர்பார்த்து காத்திருந்த படங்களில் இதுவும் ஒன்று...காமெடி பிட் பார்த்த உடனேயே
பிடிச்சு போச்சு...

சிபி ...விமர்சனம்..கலக்கல் ...விலாவாரியாக...

நாய் நக்ஸ் said...

அட அட ..பிகுர் படமெல்லாம் சூப்பர்

மதுரை சரவணன் said...

kamadikkaaka udane paarththu vida vendiyathu thaan... vaalththukkal

நாய் நக்ஸ் said...

நாம்தான் முழித்துக்கொண்டு இருக்கோமோ ???

நாய் நக்ஸ் said...

ஹையையோ......

செங்கோவி said...

அப்போ டவுன்லோடு பண்ணிற வேண்டியது தான்..

சுதா SJ said...

பார்த்துட்டா போச்சு

Unknown said...

super sir

rajamelaiyur said...

படம் ஓடும் னு சொல்லுங்க

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கலைஞர் டி.வி.க்கு, வெகு கச்சிதமாக ஒரு ‘கடக்!’- விறுவிறுப்பு ரிப்போர்ட்

சி.கிருபா கரன் said...

padam ok than..
neenga enna vetti paiyana oru padam vidurathu illa

Rizi said...

cp vimarsaman pakka.. tnx

கவி அழகன் said...

pakkalaam

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மொக்கை காமெடி படம்...
சிரிப்பு வந்தா சரி...

பார்ப்போம் எப்படி இருக்குன்னு...

Saminathan said...

இந்த மூஞ்சிக்கு (ஹீரோயின்) 70 மார்க்கா ஏங்க இப்படி ? படத்தில் சடகோபன் ரமேஷ் இருந்ததால் நான் கடைசி வரை பார்த்தேன் இல்லையென்றால் இடைவேளையோடு எஸ்கேப் ஆகியிருப்பேன்.