Tuesday, August 09, 2011

RISE OF THE PLANET OF THE APES-தமிழ்ஈழ KNOT டு சுட்டிகளுக்கான ஹிட்டு - சினிமா விமர்சனம்



http://files.g4tv.com/ImageDb3/275828_S/rise-of-the-planet-of-the-apes-uk-trailer.jpgஅனகோண்டா, ஜூராசிக் பார்க்,கோட்சில்லா படங்களுக்குப்பிறகு குழந்தைகளுடன்  தியேட்டரில் போய் பார்க்க நல்லதொரு பொழுதுபோக்குப்படம் வரவில்லையே என ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு அடிச்சது ஒரு ஜாக்பாட்.. ஜாலியான ,அனைவரும் பார்க்கும் அளவில் ஒரு ரசனையான படம்.

இந்த மாதிரி படங்களை பார்க்கறதுல என்ன ஒரு பெனிஃபிட்னா நாம நேரில் பார்க்க முடியாத , அல்லது பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காத அழகழகான லொக்கேஷன்ஸ்சை பார்த்துக்கலாம் ஆசை தீர.. 

கொரில்லாக்குரங்கு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரியும் ஹீரோ அவங்களோட புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்தும் ஆராய்ச்சியில் இருக்கிறான்.ஒரு சந்தர்ப்பத்துல ஒரு கொரில்லாக்குட்டியை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்க்கிறான். அது 2 வது வயசிலேயே மனிதனின் 8 வது வயதில் பெறும் புத்திசாலித்தனத்துடன் வளருது..

ஹீரோவோட அப்பாவுடன் பக்கத்து வீட்டுக்காரர் சின்ன விஷயத்துக்காக சண்டை போடறப்ப அந்த கொரில்லாக்குட்டி பக்கத்து வீட்டுக்காரரை தாக்கி கடிச்சு வெச்சுடுது. உடனே போலீஸ்ல புகார் சொன்னதால அந்த கொரில்லாக்குட்டியை மறுபடியும் ஆராய்ச்சி நிலையத்துக்கே கொண்டு போய் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை..

சில நாட்கள் கழிச்சு ஹீரோ மேலிடத்துல பர்மிஷன் வாங்கி மீண்டும் அந்த குட்டியை தன் வீட்டுக்கு அழைத்துப்போலாம்னு முடிவு பண்றப்போ அந்த குட்டி வர மாட்டேங்குது.. தன்னோட இனத்தின் வாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட முடிவு செய்யுது.. 

அங்கே அடை பட்டுக்கிடக்கும் எல்லா கொரில்லாக்களையும் விடுவிச்சு மனிதர்களுக்கெதிரா எப்படி போராடுது.. என்ன ஆகுது?ங்கறதுதான் கதை..

இந்தக்கதையோட சிறப்பம்சம் என்னான்னா அடிமைப்பட்டு கிடக்கும் சமூகங்கள் தங்கள் கதையை நினைவு படுத்திக்கொள்ள  ஒரு சாதனமா இதை பயன்படுத்தறதுதான். உதாரணமா தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களின் போராட்டம் நினைவு வரும் .




http://www.daemonsmovies.com/wp-content/uploads/2011/07/rise-of-the-planet-of-the-apes-movie-photo-07-e1310357511951-550x385.jpg

நினைவில் நின்ற வசனங்கள்

1.  நீ நினைச்சா எது வேணாலும் செய்ய முடியும். 

அதுவும் சரிதான், உன்னை வேலையை விட்டுக்கூட தூக்க முடியும், செய்யவா?

2.  எனக்கு இங்கே எல்லாமே தெரியும்.. 

ஆமா, மனித மூளை எப்படி செயல்படுதுங்கறதைத்தவிர எல்லாமே தெரியும்./. 

3.  இந்த கொரில்லாக்குட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. 

அப்பா, கொஞ்ச நாள் தான் அது நம்ம கூட இருக்கும், அதிகமா பாசம் வெச்சு  அட்டாச்மெண்ட்டை வளர்த்துக்காதீங்க.

4. உங்கப்பா இனி இங்கே இருக்கக்கூடாது.ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க, ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு.. 
இது என் வீடு, எப்பவும் நான் இங்கேயே தான் இருப்பேன். 

5.  கொரில்லா - ஜாக்கிரதை, மனிதர்கள் தங்களை விட புத்திசாலிகளாக கொரில்லாக்கள் திகழ்வதை விரும்புவதில்லை. 


6. இயற்கையை உன்னால மாத்திடவே முடியாது.. 


7. ஹீரோயின் ( டாக்டர்) -  கொரில்லாக்குட்டி உங்க கிட்டே என்ன சொல்லுது>?

ஹீரோ - டாக்ரம்மாவை வீட்டுக்கு சாப்பிடக்கூப்பிட சொல்லுது.  ( ஹூம், எப்படி எல்லாம் பிட்டு போடறாங்கப்பா..!@!கேப் கிடைச்சா கிடா)
http://www.123telugu.com/photo_gallery/var/resizes/Bollywood/Movies/R/Rise_of_the_Planet_of_the_Apes/Set_1/Rise_of_the_Planet_of_the_Apes.jpg?m=1312343333


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கொரில்லாக்குட்டி தன் அம்மா இறந்த செய்தி , இறந்த இடம் குறித்து ஹீரோ சொல்லும்போது காட்டும் முக பாவனைகள் டாப் க்ளாஸ்.. வெல்டன் டைரக்டர்.. 

2.  கொரில்லாக்குட்டி ஹீரோவின் வீட்டில் வளரும்போது செய்யும் லூட்டிகள் சின்னக்குழந்தைகளை குதூகலப்படுத்தும், நம்மை மீண்டும் சின்னக்குழந்தைகள் ஆக்கும், அந்த அளவு அழகான இயக்கம். 

3.ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் காதல் வருவது கூட கொரில்லாக்குட்டியின் சிகிச்சையின்போதுதான் என்பதாக திரைக்கதையில் மூவரையும் சம்பந்தப்படுத்தியது. 

4. தனி ஒரு ஆளாக கொரில்லா தன் இனத்தை தன் கட்டுக்குள் கொண்டு வர செய்யும் நடவடிக்கைகள். 

5. ஹீரோ கொரில்லாக்குட்டியை மீண்டும் தன் வீட்ட்க்கு அழைத்துச்செல்ல வரும்போது அது ஜ்=ஹீரோவுக்கு முதுகைக்காட்டி நின்று தன் கோபத்தை வெளிப்படுத்துவது.

6. க்ளைமாக்ஸில் ஹீரோ கொரில்லாவை மீண்டும் அழைக்கையில் “ இது என் இடம்” என்று வாய் திறந்து வசனம் பேசுவதும், முதல் முறை அது பேசுவதைக்கண்டு தன் ஆராய்ச்சியின் உச்ச பட்ச வெற்றி கண்டு பூரிப்பு, எதிர்பாராத அதிர்ச்சியின் கலவையாக ஹீரோவின் நடிப்பு எல்லாம் டாப் ரகம். 


http://static7.businessinsider.com/image/4e2dd05feab8eac638000000/immortals-freida-pinto.png

 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஒரு காட்சியில் ஒருவர் இன்னொருவர் மீது இருமுகிறார், ஏதோ தெறித்து அவர் மீது விழுகிறது,.. ஏதோ வைரஸ் பரவியது போல காட்சிப்படுத்தி விட்டு பின் அது பற்றிய சுவடே காணோம்,., எடிட்டிங்க் ஃபால்ட்டா? செகண்ட் ஆஃப்ஃபை வேற மாதிரியும் எடுக்க ட்ரை பண்ணி இருப்பீங்களா?

2. ஹீரோ தான் கண்டு பிடித்த கொரில்லாவுக்கான மருந்தை முதன் முறையாக மனிதர்க்கு சோதனை செய்கையில் தன் அப்பாவுக்கு கொடுக்கிறாரே? அது எப்படி? யாராவது தன் சொந்த அப்பாவை ரிஸ்க்காக சோதனைக்கு உட்படுத்துவார்களா?

3. கொரில்லாக்குட்டியை போலீஸ் வந்து எடுத்துச்செல்லும்போது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியதற்காக ஹீரோ மேல் வழக்கு ஏதும் போடவில்லை.இந்த குட்டியை ஆராய்ச்சி கூடத்தில் இருந்து அனுமதி இன்றி அழைத்துசேன்றது ஏன்? என்ற கேள்வியும் கேட்கவில்லை.. அது எப்படி?

4. ஆராய்ச்சிக்கூடத்தில் தன் இனம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இன்னும் நம்பும்படி சில சீன்களை காட்டி இருக்கலாம். 

5. க்ளைமாக்சில் திடீர் என்று அதுவரை கொரில்லாக்கள் மேல் இரக்கம் வருவது மாதிரி திரைக்கதை அமைத்டு விட்டு திடீர் என வில்லன் ரேஞ்சுக்கு காட்டி இருக்க வேணாம்.. 

http://www.joblo.com/video/media/screenshot/Rise-of-the-Planet-of-the-Apes-TV-Spot2.jpg



இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் , செண்ட்டர்களில் 30 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். 

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன். 

ஆங்கிலப்படத்துக்கு மார்க்குகள் போடுவதில்லை விகடன்.

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


http://www.impawards.com/2011/posters/rise_of_the_planet_of_the_apes__ver7.jpg
டிஸ்கி-1 ஹீரோயினைப்பற்றி  ஒரு தகவல், இந்த பதிவுக்கு சம்பந்தமே இல்லாதது. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பருக்கு சம்பந்தமே இல்லாம ஏதாவது ஒரு பதிலை தருவோமே அது போல.. அதாவது  ஹீரோயின் freida pinto ஹாலிவுட் கில்மா படமான  immortals என்ற படத்தின் ஹீரோயின்.. படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. ஆனா சுட சுட விமர்சனம் வரும். 


டிஸ்கி 2  - கீழே இருந்து 3 வது ஸ்டில்லா, இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள் டைட்டிலுக்கு மேலே  பல்பு எரிஞ்சா மாதிரி பளிச்னு இருக்கே பாப்பா அந்த ஸ்டில் அந்த கில்மா பட ஸ்டில் தான் .. ரசித்து மகிழவும்.


24 comments:

Mohammed Arafath @ AAA said...

hmm nice review... i too watch this movie yesterday ON VSP theatre

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டாவது டிக்கெட்...

ராஜி said...

Ellam sari. Adhu kutteeskal parkum padamaache. Neenga yen adhuku poneenga

Anonymous said...

என்ட் (end ) ஒப் தி வேர்ல்ட் ,அவதார் _ருக்கு அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்து கொண்ட படம். எந்த வித மிகைப்படுத்தலும் இல்லாத அழகான கிராபிக்ஸ்

Anonymous said...

///ஒரு காட்சியில் ஒருவர் இன்னொருவர் மீது இருமுகிறார், ஏதோ தெறித்து அவர் மீது விழுகிறது,.. ஏதோ வைரஸ் பரவியது போல காட்சிப்படுத்தி விட்டு பின் அது பற்றிய சுவடே காணோம்,., எடிட்டிங்க் ஃபால்ட்டா? செகண்ட் ஆஃப்ஃபை வேற மாதிரியும் எடுக்க ட்ரை பண்ணி இருப்பீங்களா?/// படம் முடிந்து எழுத்தோட்டம் சென்றா பிறகு இறுதி ஒரு நிமிட காட்சியாக அந்த நபர் நியூயோர்க் செல்வது போல காட்டியதாக நினைவு...

Anonymous said...

விமர்சனம் சூப்பர் பாஸ் .

காட்டான் said...

மாப்பிள தமிழ் மணத்தில2வது ஓட்டு போட்டாச்சு.. இப்ப காட்டானும் தமிழ் மணத்துக்கு வந்துட்டான்யா....

காட்டான் குழ போட்டான்..

Mohamed Faaique said...

பாத்துட்டா போச்சு.... சி.பி சொல்லிடீங்கள்ள....

சக்தி கல்வி மையம் said...

வந்தாச்சு, படிச்சாச்சு,கமென்ட் ம் ஓட்டும் போட்டாச்சு.. எஸ்கேப்

Unknown said...

ஹீரோயினைத் தெரியும் பாஸ்! 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தின் நாயகி!

rajamelaiyur said...

Good review . . .

Unknown said...

அந்த ஸ்டில்லை full ஆ போட்டிருக்கலாமே! கலவரமா இருக்கும் பாஸ்!

Mathuran said...

விமர்சனம் சூப்பர்

Unknown said...

விமர்சனம் அருமை..... இதில் அண்ணே நீங்கள் பல்ப்பு வாங்கிய இடங்கள் சொல்லுங்க ஹிஹி...!

சுதா SJ said...

நானும் தம்பியும் பட பாக்க பிளான் போட்டோண்டு இருக்கும் போது
உங்க விமர்சனம் , சூப்பர் விமர்சனம் பாஸ்

அம்பாளடியாள் said...

அருமையான விளம்பரம் மிக்க நன்றி
சார் பகிர்வுக்கு.வாழ்த்துக்கள்....

நாய் நக்ஸ் said...

ஏன்பா--கமெண்ட் போட கூட காபிபன்னமுடியல ---

சுதர்ஷன் said...

நல்ல விமர்சனம் ..வாழ்த்துகள் :)
நேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுட்டி சுட்டி...


அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

சி.கிருபா கரன் said...

யோவ் சி பி கில்மா படம்னா மட்டும் எப்புடியா உன் கண்ணனுக்கு தெரியுது...

Raj Muthu Kumar said...

C.B Sir, Dont you know that this heroine is the "Slumdog Millonaire" Herione.

பிரசன்னா கண்ணன் said...

Immortals ஒன்னும் கில்மா படம் இல்ல தலைவரே.. 3D-ல எடுக்கப்பட்டு வரும் Greek Mythology சம்பந்தப்பட்ட ஆக்ஷன் படம்.. சமீபத்துல தான் அதோட trailor ரிலீஸ் பண்ணினாங்க.. Moreover, Its expected to be good in its grapics works.. நான் ரொம்ப எதிர்பார்க்கிற படம் இது...

BorN 2 BooM said...

அந்த பொண்ண பாத்தா Slumdog Millionaire ஞாபகம் வரலையா உங்களுக்கு....

இந்த படத்தோட முந்தைய பகுதிய பாத்திங்கனா அந்த வைரஸ் சமாசாரம் புரியும்..

"குரங்குகளை பாதிக்காத அந்த வைரஸ் உலகம் முழுக்க பரவுது, மனித இனம் அழிஞ்ச பிறகு செயற்கையா பரிணாம வளர்ச்சி அடைஞ்ச இந்த குரங்குகள் உலகத்த ஆள தொடங்குது இதோட தொடர்ச்சி தான் இதுக்கு முந்தின படம்"

ramalingam said...

அந்தப் பெண் ஸ்லம்டாக் மில்லினர் ஹீரோயின். இந்தப் படம் planet of the apes படத்தின் prelude.