Friday, August 19, 2011

மிட்டாய் - கில்மா படமா? கொல்மா படமா? - சினிமா விமர்சனம்

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/10748_17_Mittai.jpg 

ஒரு பெண் ஒரே சமயத்தில் 2  ஆண்களை காதலிப்பதும், பின் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்வதும் தான் இந்தப்படத்தின் சர்ச்சைக்குரிய கதை என்று இந்தப்படத்தின் இயக்குநர் மீடியாக்ளில் கொளுத்திப்போட்டார். நம்ம ஆளுங்க உடனே அது ஒரு கில்மாப்படமா இருக்கும்னு ஆர்வமா வெயிட்டிங்க். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சோ, பெண்ணியவாதிகளின் எதிர்ப்போ தெரில இயக்குநர் கதையை மாத்திட்டார் போல. 

பட ஷூட்டிங்க் நடக்கும்போது கூட ஹீரோயின் மணக்கோலத்தில் இரு ஆண்களுடன் மண மேடையில் இருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. ஆனால் எல்லாம் டுபாக்கூர். 

இப்போ ரிலீஸ் ஆன பின்னாடி படத்தோட கதை என்ன? 2 ஃபிரண்ட்ஸ், ஒருத்தன் ஒரு ஃபிகரை லவ்வறான், இன்னொருத்தன் படிக்காம அடிதடில சுத்திட்டு இருக்கான்,அவனை திருத்தறதுக்காக யாரோ ஒரு பொண்ணு எழுதற மாதிரி ஒரு ஃபோர்ஜரி லெட்டர் அனுப்பறான்.அதுல நீங்க நல்லா படிச்சு பெரிய ஆள் ஆகனும், அதுக்கப்புறம்தான் நாம் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு இருக்கு.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4LeJxgfG7qWoO2og9wbV9E1ioEP-YgGhSp-6U2x8URxaEugvfuEo4MIfVJhSsA_MqIwgR1P30tSPNwZFkl-QTUd3uz5wnKU9fdFh1gGYmiwZItntNwv8iB4rpbbAyU2uh0vyeheS9a8A/s400/mittai__5_.jpg
உடனே அவன் நல்லா படிச்சு காலேஜ் ஃபர்ஸ்ட் ஆகிடறான். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமா  லெட்டர் அனுப்புன ஃபிகர் தன் நண்பனோட காதலிதான்னு தப்பா நினைச்சுக்கறான்.ஆனா தன் நண்பன் காதலிக்கறது அவனுக்குத்தெரியாது. இதனால என்னென்னெ குழப்பம் வருதுங்கறதை முடிஞ்ச வரை பொறுமையை சோதிக்க வைக்கும் மகா மட்டமான திரைக்கதை உதவியுடன் இயக்குநர் போட்டு சொதப்பி எடுத்த படம் தான் மிட்டாய்.. 

டைட்டில் போடறப்ப  சன் நியூஸ் டி வி  ல வர்ற மாதிரி ஸ்க்ரீன்ல காட்டி டெக்னீஷியன் நேம் எல்லாம் போடும்போது ஆஹா , நல்லா புதுசா சிந்திக்கற இயக்குநர் கிடைச்சுட்டார்னு சந்தோஷப்படறோம்.. படம் போட்ட 4 வது ரீல்லயே வார்னிங்க் அலாரம் அடிக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

படத்துல வர்ற 2 ஹீரோக்களூமே ஏன் தாடியோட வர்றாங்கன்னு தெரில, அவங்க கேரக்டர்  மாதிரியே தாடியும்  கேவலமா இருக்கு. ஹீரோயின்  ஓக்கே, தேறிடும், ஆனா அவர் உதடு மகா மைனஸ். இதுல அடிக்கடி அந்த உதட்டை சில்க் ஸ்மிதா மாதிரி சுழிக்கறாரு. ஹய்யோ ஹய்யோ..

http://www.myfirstshow.com/img/2524_mittai_hori-11.gif-galleryimages-l.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. எதுக்காக இங்க்கை என் மேல தெளிச்சே?

ஒரு பேனாவை சுட்டேன்,அதுல இங்க் இருக்கா?ன்னு செக் பண்ணுனேன்.

2.  காலேஜ் லெக்சரர் - முந்தி எல்லாம் நான் இருக்கற இடம்  தேடி வந்து டவுட்ஸ் கேட்பாங்க. இப்போ அவனுங்க இருக்கற இடம் தேடிப்போய் அட்டெண்டென்ஸ் எடுக்க வேண்டி இருக்கு..

3.  காலேஜ் லெக்சரர் - தம்பிகளா! கூச்சப்படாம  க்ளாஸ் வந்தா பாடம் எடுப்பேன் இல்ல! தயவு செஞ்சு வாங்கப்பா. 

 போர் அடிச்சா நாங்களே வருவோம் இல்ல? போங்க சார் வர்றோம்.

4.  மிஸ்! உங்க பேரு?

சொல்ல மாட்டேன், சொன்னா பூஜா அங்கே வா காபி சாப்பிடலாம், இங்கே வா பூஜா , பீஜ் போலாம்னு கூப்பிடுவீங்க. 

அப்போ. உங்க பேரு பூஜா தானே?  ( கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு. )

அய்யய்யோ. நானே உளறிட்டனா? ( ஆமாண்டி, பேக்குகள் எப்பவும் அப்படித்தான். )

5. படிக்காதவனைக்கூட காலேஜ்ல வெச்சுக்கலாம், ஆனா கொலைகாரனை வெச்சுக்கவே முடியாதுங்க. சாரி. பெத்த பிள்ளைக்காக நீங்க ஆர்கியூ பண்றீங்க, நான் மத்த  பையன்களுக்காக பார்க்கறேன். 

6. சாரிடா. நான் இப்போ குடிக்கறது இல்ல. 

என்னடா  ஆச்சு?

புரில, ? அண்ணன் இப்போ லவ்ல விழுந்துட்டார்,.,. 

7. சார்.. லீவ் வேணும்.. 

காலேஜ்க்கு வாரம் ஒரு தடவைதான் வர்றே. அதுல ஆஃப் டே லீவ் கேட்டா எப்படி?

8.  உன் மனசு எனக்கு பிடிச்சிருக்கு, கேட்டா தருவியோ, மாட்டியோ அதான் நானே எடுத்துக்கிட்டேன்.

9. க்ளாஸ் எப்போ முடியும்?

மணி அடிச்சா.. 


டேய் மணி அவரை அடிடா 


10.  லவ் ஸ்டார்ட் ஆகறப்ப பேரண்ட்ஸ்கிட்டசொல்லாம இருந்தா அது தப்பில்லை, ஆனா லவ் கண்டிநியூ  ஆகறப்பவும் அவன் சொல்லலைன்னா ஃபிராடுன்னு அர்த்தம்


http://www.filmics.com/gallery/d/20789-1/Mittai-Movie-Stills37.jpg


11.பொண்ணுங்க ஐ லவ் யூ சொல்ற வரை அவங்களை துரத்தி துரத்தி லவ் பண்ற பசங்க அவ OK சொன்ன பிறகு கண்டுக்காம இருக்கறதுல ஒரு உளவியல் காரணம் இருக்கு

சரி.. என்ன பண்ணனும்கறே?

டெயிலி ஃபோன் பண்ணனும், பார்க்கும்போதெல்லாம் கிஸ் பண்ணனும்..


12.  சுந்தரி. சுடிதார்ல நீ சூப்பரா இருக்கே.

நாயே.. அவ போட்டிருக்கற்து ஜீன்ஸ்ம் டாப்ஸூம்.

13.  வா மீட் பண்ணலாம்னு லவ்வர் கூப்பிட்டா போயிடாதீங்க பொண்ணுங்களே. வாமிட் பண்ண வெச்சுடுவானுங்க..  ( ஆனந்த விகடன் ஜோக் 2009 பை சி.  பி )

14.  நான் போய் என் ஆளை மீட் பண்ணப்போறேன்..

நாங்களூம் வர்றோம்டா.

நானே இப்போத்தான் அவளை முத முறையா மீட் பண்ணப்போறேன்.. உங்க முகரை எல்லாம் பார்த்தா அவ பயந்துடுவா..

15.  சரி.. விடுங்கடா. அவன் கூடப்போனாத்த்னே தப்பு..? அவனை ஃபாலோ பண்ணிட்டு போவோம்.

16. காதலுக்கு பர்சனாலிட்டி கூட அவ்வளவு முக்கியம் இல்லை, பங்க்சுவாலிட்டி தான் ரொம்ப முக்கியம்..


17. சரி.. நான் வேணா அவ கிட்டே நூல் விடவா?

நீ நூலும் விட வேணாம்.. .....................

டேய்.....!!!!!!!!!

பட்டமும் விட வேண்டாம்னு சொல்ல வந்தேன்..  ( இவ்வளவு மோசமான டபுள் மீனிங்க்  வசனம் உள்ள படம் எப்படி யூ சர்ட்டிஃபிகேட் வாங்குச்சு? )

18. தான் காதலிக்கற பையன் மற்றவங்களை விட பெஸ்ட்டா இருக்கனும்னு ஒவ்வொரு பொண்ணும் நினைச்சா எப்படி?

19.  காதலி கொடுக்கற கிஃப்ட்டை எந்த மடையன் தன் நண்பனுக்கு கொடுப்பான்?

20. புத்திசாலித்தனமாக ஆரம்பித்து முட்டாள் தனமாக முடிகின்றன காதல் திருமணங்கள்


http://www.filmics.com/gallery/d/20765-1/Mittai-Movie-Stills24.jpg

21. ஏமாற்றத்தையும், தோல்வியையும் தாங்கிக்கற சக்தி உள்ளவங்க மட்டும் காதலிங்கப்பா

22.  ஒரு ஃபிரண்டுக்கு பிரச்சனைன்னா காதலியையே கை நீட்டி அடிக்கிற நீ காதலிக்கே பிரச்சனைனா என்ன செய்வே? ( இதென்ன லாஜிக் இல்லா கேள்வி? ஃபிரண்டை அடிப்பான். )

23.  வர்லைன்னு நான் வருத்தப்பட்டாலும், வர முடியலைன்னு நீ வருத்தப்பட்டாலும் அது காதலுக்கு அழகா?

24.  ஒரு பொண்ணு அப்பா கிட்டே தனியா பேசணும்ப்பா அப்டின்னாலே அது லவ் மேட்டராத்தான் இருக்கும்மா.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ‘மண்ணுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் அன்பு.


இவருடைய இரண்டாவது படம்தான் இந்த ‘மிட்டாய்’. இப்படத்தில் இரு சந்தோஷ், பிரபா என இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் கேரளத்து அழகியான மாயா உன்னி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 http://3.bp.blogspot.com/_Zk6F7-r115Q/S6IwTmVU6bI/AAAAAAAACW0/Qom35gffJBk/s400/tamil-actress-maya-unni-in-saree-stills_actressinsareephotos.blogspot.com_32.jpgஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. டைட்டில் டிசைனும், ஒவ்வொரு தொழில் நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்திய கண்ணியம் மிக்க மரியாதை சொற்களும் அழகு. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டரை கார மிட்டாய் எனவும், ஹீரோயினை ஸ்வீட் மிட்டாய் எனவும் குறிப்பிட்டது.

2. ஓப்பனிங்க் சாங்கில் ஹீரோவை ஒயிட் & பிளாக்கில் மற்ற நடன குழுவை கலரில் பின் நடன குழுவை  ஒயிட் & பிளாக்கில், ஹீரோவை கலரில் என ஒளிப்பதிவில் ரசிக்க  வைக்கும்  ஜாலம்

3. காலேஜ் பஸ்ஸில் வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே. பாட்டை அதகளப்படுத்தியது.

4.  போஸ்டர் டிசைனும் , தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டில்ஸூம்

http://www.filmics.com/gallery/d/21336-1/Actress-Maya-Unni-latest-Stills10.jpg


இயக்குநரிடம்  பல கேள்விகள்

1. ஹீரோயின் ஹீரோவை வண்டில வந்து மோதறப்ப ஹீரோ கைல இருக்கற கிளிக்கூண்டு எகிறி விழற மாதிரி சீன் எடுக்கனும்.  நிந்த சீன்ல ஹீரோ தன் கைல இருந்து கிளீக்கூண்டை அவரே வீசற மாதிரி அப்பட்டமா இருக்கு..

2.  லவ் சீன்களில் ஹீரோயின் கிட்டே ஒரு வெட்கம், நளினம் ,இத்யாதிகளை பார்க்கவே முடியலை.. வந்து பக்கத்துல உக்காருன்னா பாப்பா படுத்துக்கும்போல. அட்வான்ஸ்டு கேர்ள் போல.

3.  கடலோரக்கவிதைகள் பட பாடல் ஆன அடி ஆத்தாடி இள மனசொன்னு பாட்டை எத்தனை படத்துல ரீ மிக்ஸ் பண்ணுவீங்க?

4.  முதன் முதலா காதலி மீட் பண்ண வர்றதா சொன்ன இடத்துக்கு வர்லைன்னு ஆனதும் காதலன் என்னமோ உலகமே அழிஞ்ச மாதிரி அப்டி ஒரு ஃபீலிங்க் குடுக்கறாரு,. பின்னணி இசைல  ஊருக்கே இழவு விழுந்த மாதிரி அப்டி ஒரு அநியாய சோகம்..

5. எக்ஸாம் எழுதும்போது ஹீரோ கை விரல்களை க்ளோசப் ஷாட்ல காட்றாங்க. அண்ணன் நகங்களை வெட்டாம ஃபுல்  அழுக்கோட நகங்களை மெயிண்டெயின் பண்ணாம வெச்சிருக்காரு. இதைக்கூட ஒளிப்பதிவாளர் கவனிக்க மாட்டாரா?அதை இயக்குநர் சரி பண்ணக்கூடாதா?

6. காலேஜ்க்கு வர்ற 1789 ஸ்டூடண்ட்ஸூம் சாதா சர்ட் போட்டுட்டு வர்றாங்க, ஆனா ஒவ்வொரு ஷாட்லயும் ஹீரோ மட்டும் டி சர்ட்  தான்  போடறார்,. அது ஏன்?

http://lh4.ggpht.com/_561gP6TDhvA/S23TR9uL_0I/AAAAAAAAi-U/aK5kTrd6VPg/actress.maya-unni.mitaai-movie-stills-002.jpg

7. காலேஜ் லேப்ல ஹீரோ கலாட்டா பண்றப்ப பொண்ணுங்க எல்லாம் பயந்து ஓடற மாதிரி சீன்ல எதுக்கு குறுக்கே , நெடுக்கே என்னமோ ஜப்பான்ல பூகம்பம் வந்த மாதிரி ஆளுங்க போய்ட்டும் வந்துட்டும் இருக்காங்க?

8.  ஹீரோயின் எழுதுன லெட்டரை ஹீரோ படிக்கறப்ப எதுக்கு ஊரையே தூக்கிட்டு போற மாதிரி ஹம்மிங்க்? வசனமே புரியலையே?

9. அதே மாதிரி இடைவேளை முடிஞ்ச பின்னால் விஜயகுமார் தன் மகன் பற்றி புலம்பும் காட்சில ஓவர் சத்தத்துல பின்னணி இசை. சோகம் வரலை நமக்கு , எரிச்சல்தான் வருது.

10.  தேவதையே நீ சூறாவளியா? தீபாவளியா? பாடல் வரிகள் ஏற்கனவே விஜய்யின்  தீபாவளி  தீபாவளி  நீ தாண்டி சூறாவளி சூறாவளி நான் தாண்டி பாடலில் வந்தவை தான்..

11. சின்னத்தம்பி குஷ்பூ மாதிரி ஹீரோ பாட்டில்களை அறை முழுது உடைத்துப்போட்டு நடந்து காலில் ரத்தக்களறி ஆவதெல்லாம் ஓவர்.. அடுத்த நிமிஷமே காலில் ரெண்டே இன்ச்சுக்கு பிளாஸ்திரி.. ஹய்யோ ஹய்யோ..

12.  காதல் படம் எடுக்கற எல்லா இயக்குநர்களும் கத்துக்க வேண்டிய முதல் பாடம் காதலை நண்பனுக்கு தாரை வார்த்து தர்ற மாதிரி சீன் வெச்சா நம்பற மாதிரி காட்டுங்க. சொதப்பாதீங்க..

13. க்ளைமாக்ஸ் செம சொதப்பல்.. ஹீரோயின் 2 பேருக்கும் இல்லை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதுல அக்கா பக்கம் பக்கமா டயலாக் வேற பேசுது..https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1xmHodrwjtZZpCiIyT00kxTOx2YC9q4kcog3yvC4-OxYML1594IHofGndwebyCgw7J-yISmpA5kamx34P778lOY2ehmfwfbf6Ji6tzTA2OtzhfTkEBfyidqm3xQaIP1v5YulMWilx70CH/s1600/malayalam%25252Bactress%25252BVishnupriya%25252BWallpapers.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் தான் தாங்கும்..
ஈரோடு சங்கீதா வில் படம் பார்த்தேன்.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி  கமெண்ட் - அய்யய்யோ...!!!!!!!!!!!!!!

31 comments:

ஸ்ரீகாந்த் said...

today's vada enakkuthaan

ஆர்வா said...

அவ்ளோ மொக்கையாவா இருக்கு???

Shiva sky said...

OUT ah?

ஆர்வா said...

இந்தப்படத்துக்காக போராட்டாம் எல்லாம் நடத்துனாங்களே. எல்லாம் தண்டத்துக்கா?

சசிகுமார் said...

பேரு மட்டும் தான் இனிப்பா வசிருக்கான்களோ

Anonymous said...

திருட்டு VCD ல rewind பண்ணி பண்ணி பார்த்துட்டு தியேட்டர்ல பார்த்தேன்னு பொய் சொல்றீங்களே சி பி...-:)

எப்படி தான் இவ்வளவு வசனத்தையும் மறக்காம எழுதுறீங்களோ...

வழக்கம் போல் கதை...வசனம்...படம் எல்லாம் உங்க பதிவிலேயே பார்த்தாச்சு...இனி படம் எப்படி இருந்தா என்ன...?

தொடர்ந்து கலக்குங்க....

Unknown said...

அண்ணனுக்கு ஜே!

Unknown said...

மிட்டாய்....காட்டமாய் எப்படி மாப்ளேய்!

காட்டான் said...

கிளி போல பொண்ணுன்னு சொல்லுவாங்க கதாநாயகிய பார்த்தா அப்பிடிதான்யா இருக்கு....

காட்டான் குழ போட்டான்..

கவி அழகன் said...

அசத்தல்

கோவை நேரம் said...

1789 ஸ்டுடண்ட் இருக்காங்களா..? உங்க தொழில் பக்திக்கு அளவே இல்லையா ..?

rajamelaiyur said...

MITTAI Without taste

சென்னை பித்தன் said...

இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கா?

Mathuran said...

நல்ல வேளை காப்பாத்திட்டீங்க

Aravindan said...

இப்படியும் படம் இருக்கு என்று சொன்னதற்கு நன்றி சிபி.
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

Jaganathan Kandasamy said...

மிட்டாய்.இனிப்பு இல்லை

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி பி கமென்ட்: அய்யோ!!!!

தப்பிச்சோம்ல....

இராஜராஜேஸ்வரி said...

வருங்கால இயக்குநர் மிட்டாய் இயக்குநரிடம் கேட்ட கேள்விகள் அருமை.

செங்கோவி said...

மிட்டாய்னு சொல்லிட்டு, அல்வா குடுத்துட்டாங்களா...

இராஜராஜேஸ்வரி said...

சுவை இல்லாத மிட்டாய்.

Jeyamaran said...

என்ன கொடுமை சார் இது
இந்த மிட்டாய் கசக்குதே
நிலாரசிகன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இன்னும் ஸ்டில்ல தூக்காம இருக்காரு? அண்ணே நான் பாத்துட்டேன்....

KANA VARO said...

அண்ணே நீங்க ஒவ்வொரு முறையும் படம் பார்க்க போய் எமாறுததை நினைக்க சிப்பு சிப்பா வருது...

நிரூபன் said...

பாஸ், விமர்சனத்தைப் படிப்பதா?
இல்லே படங்களைப் பார்ப்பதா என்று குழப்பமா இருக்கு பாஸ்.

நிரூபன் said...

தூக்கம் வருது பாஸ்,
விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.

ஜெய்லானி said...

ஒரு வேளை சவ்வு மிட்டாயா..? அவ்வ்வ்வ்

கலக்கல் விமர்சனம் பாஸ் :-)

கேரளாக்காரன் said...

டைட்டில் போடறப்ப சன் நியூஸ் டி வி ல வர்ற மாதிரி ஸ்க்ரீன்ல காட்டி டெக்னீஷியன் நேம் எல்லாம் போடும்போது ஆஹா , நல்லா புதுசா சிந்திக்கற இயக்குநர் கிடைச்சுட்டார்னு சந்தோஷப்படறோம்.. படம் போட்ட 4 வது ரீல்லயே வார்னிங்க் அலாரம் அடிக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்

கேரளாக்காரன் said...

13. க்ளைமாக்ஸ் செம சொதப்பல்.. ஹீரோயின் 2 பேருக்கும் இல்லை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதுல அக்கா பக்கம் பக்கமா டயலாக் வேற பேசுது..


// Idhu toppuu

மாதேவி said...

"மிட்டாய்" தப்பித்தோம்.

Unknown said...

பபுள்காம்ன்னு வச்சுருக்கலாம்......

calmmen said...

pakka writing