Monday, August 22, 2011

ஃபிகர்கள் சுடிதார்க்கு ஷால் போடாமல் இருப்பது ஏன்?ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி.. ஹி ஹி

1.ஒவ்வொரு ஆணுக்கும் 2 தேவதைகள் பரிச்சயம்.தன்னை கருவில் சுமந்த தாய்,தன் கருவை சுமக்கும் மனைவி


---------------------

2. ஃபிகர்கள் சுடிக்கு ஷால் போடாமல் இருப்பது பரிணாம வளர்ச்சியின் காரணமாகவா?பரிமாண வளர்ச்சிக்குறைவின் காரணமாகவா?டவுட்டு

---------------------------

3. ஒரு பெண்ணின் அன்பால் ஆகர்சிக்கப்பட்டவன் இந்த பூவுலகில் இருக்கும்போதே தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகிறான்

-----------------

4. பெண்ணின் அன்பு கிடைப்பது சிரமம், ஆனால் மாறாதது(CONSTANT)ஆணின் அன்பு கிடைப்பது எளிது,,ஆனால் அலை பாயும் தன்மையது(OSCILLATING)

-----------------

5. குடும்ப சண்டையில்  பணிந்து போவது  என்பது அடங்கிப்போவது என்ற தவறான கருத்தினால் தான் பல பிரச்சனைகள் வெடிக்கிறது

---------------6.தன் மனைவியின் கற்பின் மீது ஆணுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்,ஆனால் தான் தகுதியானவன் தானா?என்ற கேள்வி வாழ்நாள் முழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும்

---------------------

7. மென்மையான தேகம் கொண்ட பெண்கள் வன்மையான மனம் கொண்டும்,வலிமையான தேகம் கொண்ட ஆண்கள் மென்மையான மனம் கொண்டும் உலவுகிறார்கள்

--------------------

8. உன் சந்தோஷம் என்னை அடுத்த நிமிஷமே பற்றிக்கொள்கிறது,உன் சோகம் அடுத்த நொடியே தொற்றிக்கொள்கிறது

--------------------

9. மது வகைகளில் எது போதை அதிகம்? என விவாதிப்பவர்கள் மாது வகைகளை அறியாதவராக இருப்பார்கள்#பத்மினி,சித்தினி

----------------------

10. ”சாரி. டியர். 3 மணி நேரம் லேட் ஆகிடுச்சு.போர் அடிச்சுட்டு இருந்தீங்களா?”

“ ச்சே ச்சே .. பீச்ல போற வர்ற ஃபிகருங்க 863 பேரை சைட் அடிச்சேன்

---------------
11. காதல் மட்டுமே சிபாரிசு செல்லுபடியாகாத ஒரே இடம்


----------------

12. அந்த ஃபிகரோட அண்ணன் ரவுடி- பயந்தவன் சொல்வது,அந்த ரவுடியோட தங்கச்சி செம ஃபிகர்டா -துணிந்தவன் சொல்வது #பயம் அறியான்

---------------------

13. உங்கள் நேர்மைக்குப்பலன் கிடைக்கும்,ஆனால் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்

-------------------

14. தற்கொலை பண்ணிக்கப்போனவரு ஆத்துல குதிச்சாரு.. அதுல இருந்த மீனை எடுத்து கரைல தூக்கிப்போட்டுட்டு சொன்னாரு,” நான்தான் சாகறேன்,நீயாவது பிழைச்சுகோ”

--------------------

15. முதுகில் குழந்தை யானை சவாரி செய்யும்போது உடலில் பாரம் ஏறும், மனதில் பாரம் இறங்கும்#மழலை விளையாட்டுக்கள்

---------------------


16. ஹீரோ சார்,உங்க ஆதரவை அந்த கட்சிக்கு தரலையே ஏன்?

என் ஆதரவு இல்லாமலேயே  தோத்துடும்னு எனக்கு தெரியும்

----------------------

17 . தலைவர் லவ் மேரேஜா?ன்னு ஏன் கேட்கறே?

நாம் யோசிக்காமல் செய்யும் எந்த ஒரு காரியமும் நம்மை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்னு ஸ்லோகன் எழுதி வெச்சிருக்காரே?

--------

18.ஆஸ்கார் விருது சிலை ஏன் மஞ்சள் கல்ர்ல இருக்கு?

கார்க்கு சிவப்பு கலர்ல பெயிண்ட் அடிக்கக்கூடாதுன்னு அமெரிக்கால சட்டம் இருக்கே?#கடி

-------

19.  20 - 20 மேட்ச் மாதிரி எக்ஸாம்ஸ் ஆனா எப்படி இருக்கும்?

ஒவ்வொரு அடிஷனல் ஷீட் வாங்கறப்பவும் சியர் அப் கேர்ள்ஸ் ஒரு டான்ஸ் ஆடுவாங்க ,ஐ ஜாலி

------------------

20.  நாளைய வெற்றியைத்தீர்மானிப்பது இன்றைய உழைப்பு

-----------------


21. நம் இதயத்தை எப்போதும் நாமே நம்ப முடியாது. ஏன் எனில் அது ”ரைட்” சைடில் இல்லை

--------------

22. சோகம் இருக்கும்போது கூட  சிரித்துக்கொண்டே இரு,. உன் சிரிப்புக்காகவாவது யாராவது உன்னை நேசிக்கக்கூடும்

-----------------


23 வாழ்க்கை என்னும் விளையாட்டை வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடு,எதையும் இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் அல்ல

----------------


24 உண்மையான அன்பு கிடைக்கும்போதுதான் உன்னையே உனக்கு மிகவும் பிடித்து விடும்

---------------------

25. நதிகள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பது இல்லை,மனிதன் தான் லட்சியங்களில் இருந்து பின் வாங்குகிறான்

------------------

Hairpin Bends In The Tunnels Climbing Toward San Boldo Pass, Treviso District, Veneto, Italy

 

26. கடின உழைப்பு என்பது படிகள் போல ,அதிர்ஷ்டம் என்பது லிஃப்ட் போல,லிஃப்ட் ரிப்பேர் ஆகும்,ஆனால் படிகள் தான் உன்னை உச்சத்துக்கு என்றும் அழைத்துச்செல்லும்

---------------


27. நோட்புக்,ஃபேஸ்புக் என்ன வித்தியாசம்?

நோட்புக்கை டீச்சர் மட்டும் தான் கரெக்ட் பண்ணலாம், ஃபேஸ்புக்ல டீச்சரையே கரெக்ட் பண்ணலாம்

------------

28. வாழ்க்கை உனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்.

டீச்சர்,எனக்கு ஸ்கூல் பாடமே பிடிக்காம கட் அடிக்கற ஆள். இதுல வாழ்க்கைப்பாடம் வேறயா?

-----------


29.உருவம் அற்ற ஒன்று இந்த உலகை ஆள்கிறது என்றால் அது அன்பாக மட்டுமே இருக்க முடியும்

----------------

30.உறவு என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை, ஆனால் உயிர் என்று சொல்லிக்கொள்ள நீ இருக்கிறாய்

--------------------


 


31. நேரில் சிரிக்க வைப்பாள், நினைவில் அழ வைப்பாள் ,காதலி


--------------------

32. இந்த பில்டிங்க் ஒரு சாமியாரின் ஆசிரமம்னு எப்படி சொல்றே?

காம்பவுண்ட் சுவர்ல வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு போர்டு இருக்கே?

---------------------

33. டேய்,எங்கப்பாவுக்கு ஐ -ஜி வரை பழக்கம், என் கிட்டே வெச்சுக்காதே!

போடி லூஸூ, எங்கப்பாவுக்கு ஏ,பி,சி டி .. இஜட் வரை பழக்கம் # 26 >2

--------------------

34. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்ற முடியும்

------------------
35. நீ விரும்புவதில் எது பெஸ்ட்டோ அதுக்கு ட்ரை பண்ணு, இல்லையேல் உனக்கு எது கிடைக்குதோ அதை விரும்பும் நிலைக்கு நீ தள்ளப்படுவாய்

----------------------------
nchal Actress Hot stills photos

53 comments:

Unknown said...

எலேய் உமக்குத்தான் நெட்ட கட் பண்ணிபுட்டாங்களே!...எப்படி இப்படி ஹிஹி!...பதிவை படிக்கப்போறேன்!

Unknown said...

வழக்கம்போல சூப்பர் பாஸ்!

Unknown said...

தலைவரின் லவ் மேரேஜ் செம்ம! :-)

vidivelli said...

என்ன சார்...ஒரே கலக்கலாய் இருக்கு..
எங்கிருந்து வருது இந்த சிந்தனையெல்லாம்..
7வது பொயின்ற்....அதுதான் ஆண்கள் தாடி வளர்த்து திரிவது மென்மையான மனம் என்பதால்...
நல்ல நல்ல சிந்தனைப்பகிர்வு..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுகள்.

Unknown said...

எண்ணிக்கை முப்பதுக்கு பிறகு மீண்டும் 16 என்று ஆரம்பிக்கிறதே..

Unknown said...

தேவதைகளின் ஆசி உங்களுக்கு உண்டு அண்ணா

6 , 7 , 16 , 30 எனக்கு பிடிச்சு இருக்கு

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

i enjoyed

MANO நாஞ்சில் மனோ said...

.தன் மனைவியின் கற்பின் மீது ஆணுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்,ஆனால் தான் தகுதியானவன் தானா?என்ற கேள்வி வாழ்நாள் முழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும்//

எலேய் நீ யாரை சொல்லுறேன்னு புரியுதுலேய் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

மென்மையான தேகம் கொண்ட பெண்கள் வன்மையான மனம் கொண்டும்,வலிமையான தேகம் கொண்ட ஆண்கள் மென்மையான மனம் கொண்டும் உலவுகிறார்கள்//

எலேய் ராஸ்கல் இதையெல்லாம் உனக்கு எவம்லேய் சொல்லித்தாறான் மூதேவி....

MANO நாஞ்சில் மனோ said...

மது வகைகளில் எது போதை அதிகம்? என விவாதிப்பவர்கள் மாது வகைகளை அறியாதவராக இருப்பார்கள்#பத்மினி,சித்தினி//

டேய் சிபி அண்ணே எனக்கு வெக்க வெக்கமா வருது ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த ஃபிகரோட அண்ணன் ரவுடி- பயந்தவன் சொல்வது,அந்த ரவுடியோட தங்கச்சி செம ஃபிகர்டா -துணிந்தவன் சொல்வது #பயம் அறியான்//

சொம்பு பலமாதான் நசுங்கி இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

தற்கொலை பண்ணிக்கப்போனவரு ஆத்துல குதிச்சாரு.. அதுல இருந்த மீனை எடுத்து கரைல தூக்கிப்போட்டுட்டு சொன்னாரு,” நான்தான் சாகறேன்,நீயாவது பிழைச்சுகோ”//

இது சர்தார் ஜோக் நான் எப்பவோ படிச்சது போடாங்.....

MANO நாஞ்சில் மனோ said...

சோகம் இருக்கும்போது கூட சிரித்துக்கொண்டே இரு,. உன் சிரிப்புக்காகவாவது யாராவது உன்னை நேசிக்கக்கூடும்//

நாசமாபோச்சி போடா.....

MANO நாஞ்சில் மனோ said...

டேய்,எங்கப்பாவுக்கு ஐ -ஜி வரை பழக்கம், என் கிட்டே வெச்சுக்காதே!

போடி லூஸூ, எங்கப்பாவுக்கு ஏ,பி,சி டி .. இஜட் வரை பழக்கம் # 26 >2//

ஹா ஹா ஹா ஹா முடியல....

முத்தரசு said...

எல்லாமே நல்லாவே யோசிகிரிங்கப்பா - அது சரி #2 - ரொம்பவே யோசிக்க வச்சிடீன்கப்பா!!!????

நாய் நக்ஸ் said...

As usuvel super

நாய் நக்ஸ் said...

As usevel super

பொ.முருகன் said...

சரக்கு[துணுக்கு]அருமை,அதைவிட சைடுடிஸ்[படம்]ரொம்ப அருமை.மொத்தத்தில் டாஸ்மாக் சீ பாஸ்மார்க்.

rajamelaiyur said...

Super boss

rajamelaiyur said...

10 th point super

குணசேகரன்... said...

கடைசி ஸ்டில் சி.பி.யின் ஸ்பெசல் அக்மார்க் ரகம்

ASHOK said...

யோவ் சி.பி எதுனாச்சும் வேற வேலை வெட்டி இருக்கா இல்லை இது தான் பொழப்பா ? சரி தொலை இது நல்லாஆஆஆஆ தான் இருக்கு

இந்திரா said...

//கருவில் சுமந்த தாய்...
கருவை சுமக்கும் மனைவி..//

அழகு, அருமை.

கடைசியிலிருந்து மூன்றாவது படம் சூப்பர்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள தலைப்பு சூப்பர்..

இராஜராஜேஸ்வரி said...

அருமையான இயற்கைக்காட்சி படங்களுக்கு பாராட்டுக்கள்.

வளமஆ சிந்தனைகள் பகிர்வு.

ஆச்சி ஸ்ரீதர் said...

இந்த பதிவின் தலைப்பு சம்மந்தமாக கருத்து சொல்லியிருப்பீங்கனு வந்தேன்.

ஆனால் பதிவின் ஒவ்வொரு வரியும் எதார்த்தமான உண்மை.படங்களும் அழகு

Mohamed Faaique said...

எல்லாமே நல்லாயிருக்கு.... 16, 27 அசத்தல்..

படங்களும் சூப்பர்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! நம்ம கடையை மறந்துட்டாருனு நெனக்கிறேன்...

ஸ்ரீராம். said...

பரிணாமம், பரிமாணம்...ஓவர்!
இதயம் ரைட் சைடில் இல்லாததை ரசிக்க முடிந்தது.
நோட்புக்-ஃ பேஸ்புக்.....ஹா..ஹா...
நேரில் அழவைக்கும் காதலிகளும் உண்டு!
படங்கள் யாவும் வெகு அழகு.

செங்கோவி said...

அருமையான பதிவு.

சசிகுமார் said...

ஷால் மட்டுமா போடாம இருக்காலுக கையே காணோம் கேட்டா ஸ்லீவ்லெஸ் ன்னு சொல்றாலுக, கூடிய சீக்கிரம் பாடிலெஸ்ஸாக ஆகாம இருந்தா சரி

ஆமினா said...

//ஆணின் அன்பு கிடைப்பது எளிது... ஆனால் அலைபாயும் தன்மையது
//
சூப்பர்....
புதிய வடிவில் திருக்குறளோ? :))

Unknown said...

பிட்டு படம் மாதிரி தலைப்பு பார்த்து படம் பார்க்க வந்தா” நான் எதிர்பார்த்தது இல்ல” . என்ன ஒரு டெக்னிக்கு ??

கடம்பவன குயில் said...

//முதுகில் குழந்தை யானை சவாரி செய்யும்போது உடலில் பாரம் ஏறும்.மனதில் பாரம்இறங்கும்-மழலை விளையாட்டு.//

முதுகில் குழந்தை பாரம் அல்ல. அது ஒரு சுகமான மலர் கூடை.

கடம்பவன குயில் said...

26 . அருமை. அதிர்ஷ்டம் எப்போதும் கிடைக்காது. படிகள் எப்பவும் ஏமாற்றாது.

கோகுல் said...

சிக்ஸ் இன் பர்ஸ்ட் பால்!!!

சென்னை பித்தன் said...

எல்லாமே சூப்பர்!படங்களும்!

மாலதி said...

படங்களுக்கு பாராட்டுக்கள்.

KANA VARO said...

தத்துவங்கள் நெஞ்சை நனைக்குது தல!

சுதா SJ said...

தொட்டுட்டீங்க பாஸ், அட நெஞ்சை சொன்னான் பாஸ்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தலைப்பை பார்த்திட்டு உள்ளே வராமலேயே போயடுவோமானு நினைச்சேன்.
14 தானும் தற்கொலை, மீனையும் கொலை
19 விளங்கும் !!
21 புத்திசாலி தனம்
என்னது சிபிக்கு நெட்டை கட் பண்ணிட்டாங்களா? ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் பார்சேல்ல்ல்ல் !

ரைட்டர் நட்சத்திரா said...

காதல் மட்டுமே சிபாரிசு செல்லுபடியாகாத ஒரே இடம் நல்ல சிந்தனை நண்பரே

Mathuran said...

கலக்கல்

Anonymous said...

தலைப்புக்கும்,குருவிக்கும் என்ன சம்பந்தம்..?எவனோ சொன்னானாம்..அதனால இயற்கை காட்சி போடுறாராம்...பாதி நனைஞ்ச பின்னாடி முக்காடு எதுக்கு..? செந்தமிழ் தலைப்பு வெச்சிட்டு பிட்டு படம் எடுக்குற மாதிரி...ஒழுங்கா...காதலுக்கு மரியாதை ஷாலினி படத்தையாவது போடவும்

Jaganathan Kandasamy said...

35 number message ku keela irukira photo kum message kum yethavathu iruka?

சித்தாரா மகேஷ். said...

பதிவு நல்லாத்தான் இருக்கு.போரடிக்காம இடைக்கிடையே அருமையான காட்சிகள்.நன்று.


பெண்மையைப் பற்றி கொஞ்சம்....

Anonymous said...

அழகு...அருமை...

காட்டான் said...

2. ஃபிகர்கள் சுடிக்கு ஷால் போடாமல் இருப்பது பரிணாம வளர்ச்சியின் காரணமாகவா?பரிமாண வளர்ச்சிக்குறைவின் காரணமாகவா?டவுட்டு

ரெம்ம முக்கியமான ஆராச்சி மாப்பிள.!!!??.

நிரூபன் said...

ஆராய்ச்சி என்று சொல்லி அழைத்தீர்கள்.
உள்ளே ஒரு ரணகளத்தை எதிர் கொள்ளும் நோக்கத்தோடு வந்தால்...
காமெடி, காதல் டுவிட்ஸ் போட்டு கலாய்ச்சிருக்கிறீங்களே!

Philosophy Prabhakaran said...

Oscillating, Constant தத்துவத்தில் தப்பு செய்துவிட்டீர்கள் தல... பெண்கள் காதல் நிலையற்றது.. ஆண்கள் காதலே நிலையானது... இதை நான் சொல்லவில்லை, தத்துவஞானிகள் சொன்னது...

Ponchandar said...

”பரிணாம”-----------”பரிமாண” - வார்த்தைல விளையாடுறீரே ! ! ! !

அம்பலத்தார் said...

துணுக்குகள் ஒவ்வொன்றும் ஜோர் ரொம்ப நல்லாத்தான் யோசிக்கிறிங்கப்பா

”தளிர் சுரேஷ்” said...

பரிணாமமா?பரிமாணமா? பலே ஆராய்ச்சிதான்! சூப்பர் பதிவு