Monday, June 27, 2011

உதயன் -சந்தானத்தின் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

http://indiatheatres.com/MovieStills%5CUdhayan(1).jpga

10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின்  இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....

சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத்தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்‌ஷன்.. அண்ணன் தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்... 2 கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார்.. சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்.. ஹி ஹி ..


படத்தோட கதை என்னான்னா.. 2 தாதா கோஷ்டி... (அய்யய்யோ.. மறுபடி தாதா கதையா? வுடு ஜூட்.. )  ஒரு தாதா கோஷ்டில ஹீரோயின் அப்பா கணக்குப்பிள்ளை... இன்னொரு தாதா கோஷ்டில ஹீரோவோட அண்ணன் (இவரும் ஒரு ஹீரோ தான் )2 கோஷ்டியும் மாற்றி மாற்றி அடிச்சுக்குது.. இதெல்லாம் இடைவேளைக்குப்பிறகுதான்.. அதுவரை ஹீரோ ஹீரோயின் லவ் காட்சிகள், சந்தானம் காமெடி காட்சிகளை வெச்சு ஒப்பேற்றப்பார்த்திருக்காங்க.. ..ஹூம்... 

60 மார்க் ஃபிகரை 80 மார்க் ஃபிகர் ஆக்கும் ரசவாத வித்தையை ஆடை வடிவமைப்புக்கலைஞரும்,முக ஒப்பனைக்கலைஞரும் பிரமாதமாக கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு சபாஷ்.. ..ஹீரோயின் முகத்தைபார்த்துக்கொண்டே இருக்கலாம்.. சோ க்யூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்‌ஷன் தான் வருது.. 

டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது நம்ம சந்தானம் தான்.. பாம்பு பிடிப்பவராக  டி வி கேமராமேன்களோட அவர் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் பில்டப் சீன்கள் செம காமெடி ரகளை கச்சேரி.. 




http://3.bp.blogspot.com/-kfPs1OC8zjI/Td4_IiVeGsI/AAAAAAAAOiY/4SfWTHCrZSg/s1600/Pranitha-+Cute-+Stills+-In-+Udhayan-+Movie-008.jpg



சந்தானம் காமெடியில் பின்னிப்பெடல் எடுத்த காட்சிகள்..

1. எதுக்காக மறுபடியும் அங்கே போய் திரும்பி எண்ட்ரி கொடுக்கறீங்க?


சந்தானம் -  ஹி ஹி பில்டப்ல பேண்ட் ஜிப் போட மறந்துட்டேன்..

2. சந்தானம் - பாம்பை பிடிக்க பரபரப்பா போறேன்.. எதுக்கு கேமராவை முன்னால கொண்டு வர்றீங்க?.. இந்த கீரித்தலையனை கூடவே கூட்டிட்டு போறேன்.. பாம்பை பயமுறுத்த உதவுவான்..

3. சந்தானம் -  அவன் என்ன அபிஷேக் பச்சனா?க்ளோஷப்ஷாட் வைக்க?

4. சந்தானம் -  அடேய்.. பாம்புக்கு எதுக்கு பால், முட்டை இதெல்லாம்? அதென்ன ஜிம்முக்கா போகுது?

5. சந்தானம் -  அடப்பாவிகளா.. இந்நா வரைக்கும் பூட்டாத கதவையா நம்பிட்டு இருந்தீங்க..?நீங்கள்ளாம்......

6. ஹீரோ- சாரி. மிஸ்.. நீங்க ரொம்ப அழகு.. வண்டியை இடிச்சா திரும்பி பார்க்கறீங்க.. அதுக்குத்தான் அடிக்கடி இடிச்சேன்.. அடிக்கடி உங்க முகத்தை பார்க்கலாமே..?

7. ஹலோ.. இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க?

சந்தானம் - ம் ,அழுக்கு பனியனும்,கிழிஞ்ச லுங்கியும் போட்டிருக்கேன்.. பேசுதுங்க பாருங்க.. ஃபோன்ல..

8. சந்தானம் -  சரி சரி.. போடா.. பேண்ட் சர்ட் உனக்கு ஓசி கொடுத்தவன் உன்னை தேடுவான்.. இவரு பெரிய மிஸ்கின் பாரு.. கூலிங்க் க்ளாஸ் போடாம வெளீல வரவே மாட்டாரு.. 

9. ஹீரோ -  இது யாரு ஆண்ட்டி..? உங்க தங்கச்சியா? ஓ சாரி உங்க மகளா?

10. ஹீரோயின் - ஆம்பளைங்களூக்கு உடனே கிடைச்சுட்டா அதனோட அருமை தெரியாது.. ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க.. 

11. மிஸ்.. உங்க பேரென்ன? 

------------------------

ஓ , ஊமையா? சாரிங்க... 

அய்யோ.. என் பேரு பிரியா.. 

12. இப்போ பாருடி.. என் சர்ட் பட்டன் மேல் பட்டனை ஒண்ணு மட்டும் கழட்றேன்.. லோன் சாங்க்‌ஷன் ஆகிடும் பாரு.. ( ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா வாழ்க)

13. சந்தானம் -  மேடம், உள்ளே ஏ சி ஒர்க் ஆகலையா? ஏன் பட்டனை கழட்டி விட்டிருக்கீங்க?

ஸ்டுப்பிட்.. 

டவுட் கேட்டா ஏன் திட்டறீங்க?
14.  என்னப்பா இது சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?

சொல்லாம வந்தா சர்ப்பரைஸ்.. சொல்லிட்டு வந்தா அது மீட்டிங்க்.. 

15. அவ பேரு கூட என்னமோ வர்றியா? போறியா?ன்னு வருமே.. ம் பிரியா.... 


http://movies.vinkas.in/files/2011/06/pranitha-stills.jpg

16. சின்னப்பையன் - அங்க்கிள், எங்க கூட விளையாட வர்றதா சொன்னீங்க?

சந்தானம் -  அது உங்கக்கா கூட இருக்கறப்ப சொன்னது.. இப்போ நீ தனியாத்தானே இருக்கே?

17. சந்தானம் -  கோணியை திட்டுனா சாணிக்கு ஏன் கோபம் வருது?

18. சந்தானம் -  இந்த பொண்ணுங்க எல்லாம் சாக்கு மூட்டைல கால் விட்டு தத்தி தத்தி வர்றாங்க பாருங்க.. இந்த கேமை நிமிர்ந்து பார்த்தா  தெரியாது.. குனிஞ்சு பார்த்தாதான் தெரியும்.. 

19. எத்தனை  பேர் இருந்தாலும் அந்த கூட்டத்துல  பொண்டாட்டி வாசனை புருஷனுக்கு தெரிஞ்சிடும்.. 

20. ஸாரி.. மேடம்,,. நான் வேணும்னு பண்ணலை.. தெரியாம இடிச்சுட்டுது..

இல்லை.. நான் வேணும்னுதான் இடிச்சேன்... ( ஆஹா பெண்ணுக்கு சம உரிமை)

21. சாரி சார்.. யாரும் சாகலை.. சுடுகாடு காலி.. அதனால டியூ கட்ட முடியல.. 

22. ஏய்.. வசந்த்.. நீயா!!!!!!!!!!!

ஏன்? வேற யாரையாவது எதிர்பார்த்தியா?

அது இல்ல.. வீட்டுக்குள்ள எப்படி வந்தே?

வாசல் வழியாத்தான்... 

23. ஹலோ.. பூசாரியா? நீங்க மந்திரிச்சதுல இருந்து என் பொண்ணு ராத்திரில உளர்றதில்லை.. 

வெரிகுட்..
பகல்லயே உளற ஆரம்பிச்சுட்டா.. 

24. சந்தானம் -  வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களைவிட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போறபொண்ணுங்க அதிகம்

25. வோட்கா சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 


சந்தானம் -  மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்தெரியுமா உங்களுக்கு? 

26.  சந்தானம் -  நீயும் சிங்கிள்,நானும் சிங்கிள்.. ஒய் டோண்ட் வீ  கெட் மிங்கிள்?

27. சந்தானம் -  கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு கேட்டதுக்கு ஏன் இந்த கத்து கத்தறா?கற்பழிச்சிருந்தாக்கூட இப்படி கத்தி இருக்க மாட்டா.. போல.. 

28. ஹீரோ - ஹாய்.. ப்ரியா.. நீ பக்கத்துல இருந்து பார்க்கறதை விட தூரத்துல இருந்து பார்க்கறப்பத்தான் அழகா தெரியறே!!


அப்படியா? அப்போ நான் கிளம்பறேன்.. என்னை தூரத்துல இருந்தே ரசிச்சுக்கோ..

29. சந்தானம் - எதுக்கு இத்தனை பொண்ணுங்க? இவங்க எல்லாம் யாரு?

எல்லாரும் என் ஒயிஃப்ங்க தான்.. ஹவுசிங்க் லோன் வாங்கி கட்னதால எல்லாரும் ஹவுசிங்க் ஒயிஃப் ஆகிட்டாங்க.. 

30. சந்தானம் -  டேய்.. உன் கிட்டே கரண்ட் இருக்கறதால தானே லோன் வாங்கி லோன் வாங்கி வீடு கட்டறே..?ஃபீஸ் பிடுங்கிட்டா?

எப்படி பிடுங்குவீங்க..?

இப்படி உதைச்சுத்தான்

அய்யோ.....




http://telugu.go4wallpapers.com/bollywood_babes33/P/Praneetha/PRANEETHA151110a.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது சோ க்யூட் சீன்.. 

2. ஹீரோயின் காதல் வசப்பட்ட முதல் நாள் ஹீரோவின் ரூமில் உடை மாற்றும்போது ஹீரோவின் ஃபோட்டோவை தன் துப்பட்டாவால் மூடும் இடம் கவிதை.. 

3.  இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும் , ஹீரோயின் முக அழகை 100%  மெருகேற்றி காட்டியதும்.. 

4. அபார்ட்மெண்ட்சில் ஹீரோ,ஹீரோயின், சிறுவர் ,சிறுமிகள் கண்னாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை

5. டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது..  ( டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது)





http://4.bp.blogspot.com/-ePEdG9oWWcQ/TdsWYEMmOMI/AAAAAAAAKMI/FnE5QpRMlSQ/s1600/Pranitha%2Bnew%2BHot%2BPhoto%2BStills%2B%25285%2529.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும் ,டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? THE DRESSING SENSE OF THE HERO IS VERY BAD


2. டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடி ரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே  . அது எப்படி? எந்தப்பெண் அப்படி போடுது?

 3. ஹீரோவுக்கு முக உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தத்தெரிவதில்லை என்பதற்காக அவருக்கு படம் பூரா கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டது.. 


 4. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்தவர் திடீர் என யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல என்ற மோசமான டப்பாங்குத்துப்பாடலை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்தது..




http://www.imageboxoffice.com/photos/1024-768/simg34d53c99263536.jpg

இடைவேளைக்குப்பிறகு வன்முறை  ஜாஸ்தி.. 

ஏ , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி .பி .கமெண்ட் - சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்

பலரது வேண்டுகோளுக்கிணங்க  நாட்டுக்கு முக்கியமான தகவல்  ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)

டிஸ்கி - 1 வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்

டிஸ்கி 2 கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது ... 



41 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்..

விக்கியுலகம் said...

அண்ணே உங்க அலசலான விமர்சனம் நல்லா இருக்கு.....சொல்லுங்க எங்க அந்த மெமரி மாத்திரை வாங்கறீங்க ஹிஹி!

செங்கோவி said...

படமே டப்பா படம்..இதுல ஹீரோயின் சீன் காட்டுனதால தரம் குறைஞ்சிடுச்சோ?

கோவை நேரம் said...

படம் மொக்கை யாமே பாஸ்...எப்படிங்க உங்களால மட்டும் முடியுது ..?

டக்கால்டி said...

ok

டக்கால்டி said...

Anne Heroine super

டக்கால்டி said...

Vilasam vilasam

டக்கால்டி said...

Pan Parag vilai oru packet 40 rs aayiduchaame namma oorula? so sad

டக்கால்டி said...

Muthal moonu line rasithen

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Hero name last vara sollave illa

கவிதை காதலன் said...

ஆனா வம்சத்துல இவர்கிட்ட நடிப்பு வாங்கின பாண்டிராஜை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்.. படம் இன்னும் பார்க்கலை.. பார்த்துடணும்

கவி அழகன் said...

சுவாரசியமான விமர்சனம்

நிரூபன் said...

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பத்து இலட்சம் ஹிட்ஸ்களை எட்டிப் பிடிக்கப் போகும்,

பதிவுலகின் சிகரம்,
மன்னிப்புக் கேட்பதில் மணி மகுடம்,
நகைச்சுவையில் நவரசம் கலந்த இளவல்,
எப்போதுமே ஜாலியாக பேசுவதில்
அட்ராசக்க.........
அவர்களுக்கு இச் சிறியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Shiva sky said...

நான் படம் பார்ப்பதே..சந்தானத்தின் காமெடிக்காக தான்....

Shiva sky said...

நெல்லை சந்திப்பு பதிவு...எங்க ன்னா..........காத்திருக்கிறேன் அதற்காக

நிரூபன் said...

வித்தியாசமான ஒரு விமர்சனத்தைத் தந்திருக்கிறீங்க,
நன்றி பாஸ்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சே.குமார் said...

வித்தியாசமாக ஒரு விமர்சனம்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் மூதேவி கொஞ்சம் அடங்குடா பொறாமையா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

சரி பிழச்சி போ ஆறாவது ஓட்டு போட்டுடுறேன்....

சென்னை பித்தன் said...

எந்தப்படமானாலும் பார்த்துப் பொறுமையா விமரிசனம் வேற எழுதிடறீங்க!சகிப்புத்திலகம்தான் நீங்க!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள இந்தப் படத்துக்கெல்லாம் போய் பொறுமையா பார்த்து விமர்சனம் போடற உனக்கு அவார்ட் எதாவது தரலாம்லேய் ..

koodal bala said...

99 % நடிகர்கள் தற்போது 1 % மட்டுமே நடிக்கிறார்கள் .ஒரு காலத்தில் கொடுக்கிற காசுக்கு மேலாக கூவினார்கள் .....விமர்சனம் வழக்கம் போல் அமர்க்களம் .

RAMVI said...

வணக்கம் செந்தில்குமார். என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு நன்றி. உஙகள் பதிவு பெயருக்கு எற்ற மாதிரியே அட்ரா சக்க யாக இருக்கிறது. கூடிய விறைவில் நீங்கள் எழுதிய மீதி பதிவுகளையும் படித்து விடுகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தியேட்டர்ல மந்த்லி பாஸ் வாங்கி வெச்சிருந்தா இப்படித்தான் கண்ட படத்தையும் பாக்க வேண்டி வரும்! என்னிக்கோ ஒருநாள் வரப்போகும் பிட்டுப்படத்துக்காக இதையெல்லாம் பாக்க வேண்டி இருக்கே? சிபி நீங்க ஒரு தியாகச்செம்மல்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கம் போல ஹீரோயினி பேர் சொல்லலை.... எலேய் சின்றாசு, அந்த சொம்ப கொண்டா...! அல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, இந்தக் குத்தத்துக்கு தண்டனையா சிபி இனி விமர்சனத்துல, புதுமுக ஹீரோயின்னா அதைப்பத்தி ஒரு நாலுவரி தனியா எழுதனும், இதுதான் என்ற தீர்ப்பு.........

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

பலரது வேண்டுகோளுக்கிணங்க நாட்டுக்கு முக்கியமான தகவல் ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

பலரது வேண்டுகோளுக்கிணங்க நாட்டுக்கு முக்கியமான தகவல் ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)//////

இது நல்ல பிள்ளைக்கழகு..... சரி சரி, ஹீரோயின் பேர் மட்டும் போட்ட போதுமா? பேக்ரவுண்ட பத்தி கொஞ்சம் வெளக்கமாத்தான் சொல்றது?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நெல்லை பதிவர் சந்திப்புக்குப்பிறகு நான் நல்லவன் ஆக முயற்சித்து வருகிறேன்.எனவே ராம்சாமி போன்ற கெட்ட சகவாசத்தை கட் பண்ணிடலாமா? என யோசித்து வருகிறேன்,.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாங்ஸ்ல ஹீரோயினை கவர்ச்சியா காட்டறது ஒண்ணும் புதுசில்லையே? உங்களுக்காக படம் முழுக்க அப்படியேவா காட்ட முடியும்? இது என்ன பிட்டுப்படமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நெல்லை பதிவர் சந்திப்புக்குப்பிறகு நான் நல்லவன் ஆக முயற்சித்து வருகிறேன்.எனவே ராம்சாமி போன்ற கெட்ட சகவாசத்தை கட் பண்ணிடலாமா? என யோசித்து வருகிறேன்,.. ஹி ஹி
////////

என்னது நல்லவனா மாற முயற்சிக்கிறீங்களா? அப்போ இதுவரை இல்லியா? (ஏன்னா என்கூட பழகுறீங்களே, அப்படின்னா நல்லவனாத்தானே இருக்கனும்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதன்மூலம் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், அதாகப்பட்டது மேற்படி சிபி அவர்கள் இனி பிட்டுப்படம் பார்க்க மாட்டார், பார்த்தாலும் விமர்சனம் எழுதமாட்டார், எழுதினாலும் கவர்ச்சிப்படம் போடமாட்டார், போட்டாலும் 18+ வைக்க மாட்டார், ஏனென்றால் அவர் திருந்தி விட்டார்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்ப போதுமாண்ணே, நீங்க திருந்திட்டீங்கன்னு நீங்களே சொன்னா நல்லாருக்காதேன்னு நானே மக்களுக்கு அறிவிச்சுட்டேண்ணே....!

angelin said...

YOU'VE BEEN TAGGED .எங்க ஊர்(உங்க) தொடர் பதிவு எழுத அழைக்கின்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

10 லட்சம் ஹிட்ஸ் தாண்டியாச்சு, சிபி......... வாழ்த்துக்கள்!

மதுரன் said...

அருமையான் விமர்சனம்...சந்தானத்திற்காக படம் பார்க்கலாம் போலுள்ளது

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நன்றி ராம்சாமி

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



hot tamil actress gallery

மதன்செந்தில் said...

வழக்கமாவே உங்களுக்கு விகடன் மார்க்குக்கும் ஆகாது.. இதுவும் அப்ப்படியே.. இந்த படம் 39 வாங்கினாவே அதிசயம்.

அப்புறம் காஜல் அகர்வால் சிஸ்டர் பேரு நிஷா அகர்வால்.. இந்த ஹீரோயின் அவங்க இல்ல..

தமிழ் பையன் said...

<< டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது >>

இதெல்லாம் நெம்ப ஓவருங்ண்ணா..

velmurugan s said...

Heroine is not Kajal Agarwals sister.
Praneeta is from karnataka ( acted in kannada pokkiri )..

kajal agarwals sister is Nisha Agarwal