Monday, June 06, 2011

ஆண்மை தவறேல் - திரில்லர்+பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம் - சினிமா விமர்சனம்

http://3.bp.blogspot.com/-1SU5iZJ1lbg/TdI0KOO2l3I/AAAAAAAAAPk/8WvVZ-L0xF4/s1600/Aanmai-thavarael1.jpg


சிட்டில வேலை செய்யும் பெண்கள், கால் செண்ட்டர்ல ஒர்க் பண்ற லேடீஸ் என பெண்கள் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு விஸ்தீரணமாக யாரும் படம் எடுத்ததில்லை என சொல்லும் அளவுக்கும், இது ஒர்க்கிங்க் விமனுக்கான முதல் முழு விழிப்புணர்வுப்படம் என்று சொல்லும் அளவுக்கு  தகுதியான படம் தான்.. ஆனால் அதற்காக பிரச்சார தொனி இன்றி ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்கே உரிய விறு விறுப்புடன்  படம் செம ஸ்பீடுடன் செல்கிறது..(முதல் பாதி வரை)

கால் செண்ட்டரில் வேலை செய்யும் ஹீரோயின் டியூட்டி விடிகாலை 4 மணிக்கு முடிகிறது.. அவர் வழக்கமாக காதலனுடன் கடலை போட்டு விட்டு 6 மணிக்கு வீட்டுக்கு போபவர்..ஒரு நாள் திடீர் என மர்ம ஆசாமிகளால் கடத்தப்படுகிறார். அவர்கள் இளம்பெண்களை கடத்தி வெளிநாடுகளில் ஆன்லைனில் ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கும் கும்பல்.. அவர்களிடம் இருந்து எந்த வித  ஹீரோயிஸமும் இல்லாமல் எப்படி ஹீரோ ஹீரோயினை காப்பாற்றுகிறார் என்பதே கதை..

நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வரும் பெண்கள், காதலனுடன் ஊர் சுற்றும் பெண்கள், பணத்துக்காக தன்னையே விற்க துணிபவன் காதலன் என்பதை உணராத பெண்கள் என படம் முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு பாடங்கள் அதிகம்..


படத்துல முக்கிய பாராட்டு ஒளிப்பதிவு.. படம் முழுக்க கேமரா முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறது,..எடிட்டிங்க் பக்கா.. ஆனால் இடைவேளைக்குப்பிறகு இன்னும் டிரிம் பண்ணி இருக்கலாம்..

ஹீரோ புதுமுகம் த்ருவா.. சுமார் நடிப்பு.. கெஸ்ட் ரோல் சம்பத்.. நல்லா பண்ணி இருக்கார்.. ஹீரோயின் ஸ்ருதி ஓக்கே ரகம்..
http://2.bp.blogspot.com/_qNNOJ4ZsOHY/TJyKG9YdfUI/AAAAAAAAMEk/iPSm9t5tjGA/s640/www.cinekingdom.com-Aanmai-Thavarael-14.jpg

 படத்தில் கலக்கிய வசனங்கள்

1. ஏம்ப்பா.. 3000 கிமீ நிக்காம போகுமா வண்டி?

நீங்க 30,000 கிமீ நிக்காம ஓட்ட முடியும் தானே?

2. ஏண்டி.. எப்பவும் ஏன் நைட் டியூட்டியா பார்த்து போறே?

அம்மா..பகல்ல வேலை செஞ்சா  பல பசங்களோட தூக்கம் கெட்டுப்போயிடுமே?அதான்..

3.ஏண்டா பேய் அடிச்ச மாதிரி இருக்கே?

சரக்கடிச்சுட்டு வந்து எவனோ என்னை மூடு அவுட் பண்ணிட்டான் மாப்ளே..

4. என்னய்யா.. ஏதாவது சொன்னானா அந்த கைதி.. ?

இல்லைங்கய்யா..

அப்போ பெண்டிங்க்ல இருக்கற 4 கேஸையும் அவன் மேல போடு..

5. சார்.. யூ ஆர் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க்.. லவ் பண்ற எல்லாரும் அக்யூஸ்ட் கிடையாது.. வேணும்னா  சஸ்பெக்ட்னு சொல்லிக்குங்க..

6. என்னடா லவ் இந்தக்காலத்துல நீங்க பண்றது?

கட்டாயப்படுத்தாம அவங்க சம்மத்தத்தோட கற்பழிப்பீங்க.. அதான் லவ்வா?
http://cineviduppu.com/wp-content/uploads/2011/05/cin2.jpg

7. மும்பைல இருக்கற பொண்ணை கஷ்டப்பட்டு ட்ரேஸ் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.. காதலன் என்ன சொன்னான் தெரியுமா? அவ ஒரு ********* அப்டின்னு சொல்லி துரத்திட்டான். அவ விஷம் சாப்பிட்டு செத்துட்டா.....லவ் பண்றப்ப கண்னே மணியேங்கறது.. இந்த மாதிரி பிரச்சனைல மாட்டிக்கிட்டா அவளை ******** அப்டின்னு சொல்லிடறது.. இதாண்டா ஆம்பளைங்களோட வழக்கம்..?

8. இந்த நாட்டுல ட்ரக்ஸ்க்கு அடுத்ததா அதிகமா கடத்தப்படறது எது தெரியுமா? பெண்கள் தான்.. மனுஷனுக்காக மனுஷனால மனுஷனையே கடத்தற சோகத்தை என்னன்னு சொல்ல?

9.இப்போ சிட்டில மொத்தமா 6500 ஃபிகருங்க இந்த தொழில்ல இருக்காங்க.. அவங்களை கண்காணீக்க 4500 மாமா பசங்க இருக்காங்க..

10.  என்னது ? வெர்ஜினிட்டி டெஸ்ட்டா? அது எதுக்கு?

பொண்ணுங்களை கடத்துனதும் முதல்ல கன்னித்தன்மையை பரிசோதனை செய்வாங்க.. கை பட்ட ஃபிகரா இருந்தா லோக்கல்லயே வந்த ரேட்டுக்கு தள்ளி விட்ருவாங்க..ஃபிரெஸ் பீசா இருந்தா இண்ட்டர்நெட்ல ஏலம் விட்ருவாங்க..

11. நீங்க பொண்ணா பிறந்தது தான் ஒரே தப்பு.. அதுவும் அழகான பொண்ணா பொறந்தாச்சே.. அதான் இவ்வளவு அவஸ்தை படறீங்க..

12. எவனாவது ஒருத்தியே போதும்னு நினைக்கறானா? புதுசு புதுசா பார்க்கனும்னு ஆசைப்படறதனால தான் இந்த பிஸ்னெஸ் கொடி கட்டிப்பறக்குது...


http://narumugai.com/wp-content/uploads/2010/09/Udhayanidhi-Stalin.jpgஇயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. படத்தின் கதை, திரைக்கதை கவர்ச்சியை அனுமதித்தாலும் இயக்குநர் எதையும் மிஸ் யூஸ் பண்ணாமல் கண்ணியமாக காட்சிகளை படம் ஆக்கிய விதம்..

2. சிட்டியில் பெண்கள் எப்படி கடத்தப்படுகிறார்கள் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் நேரில் நடப்பது போலவே படம் ஆக்கியது..

3.படகின் மூலம் தப்ப வேண்டிய சூழலில் அங்கே இருக்கும் பணியாள் முரண்டு பிடிக்கிறான் என்பதற்காக பெண் ஒருவரை பலி ஆக்க முன் வரும் காட்சியும், அதை படமாக்கிய விதமும்..

4. காதலனே தன்னை கடத்த உடந்தையாக இருக்கும் அதிர்ச்சியான சீனை நம்பும்படி படம் எடுத்தது..

5.படப்பிடிப்பு நடத்த தேர்வு செய்த இடங்கள் , ஆர்ட் டைரக்‌ஷன், இசை என டெக்னிக் அம்சங்கள் நீட்..

http://boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Aanmai-Thavarael-Movie-Stills,Photos,Pics/Aanmai%20Thavarael%20Movie%2000-2.jpg?m=1305789829


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

 1. படத்தில் பல இடங்களில் ஹிந்தி பேசற மாதிரி காட்சிகள் வருது.. அந்த இடங்களில் தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாமே?

2. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயின் செல் ஃபோன்ல வீடியோ ஆப்ஷன் ஆன் பண்ணிட்டு படம் எடுக்கறப்ப வில்லனோட ஆளுங்க கடத்தறாங்க. அப்போ அவ செல் ஃபோன் கீழே விழுது.. அந்த ஃபோன் மூலமா அவ கடத்தப்படற  மேட்டர் செல் ஃபோன்ல பதிவாகுது.. அது எப்படி? கீழே விழும் செல் ஃபோன் குப்புற விழும், அல்லது மல்லாக்க விழும்.. கரெக்ட்டா படம் எடுக்கற ஆங்கிள்ள நின்ன வாக்குல இருக்குமா?ஆட்கள் அதை கவனிக்க மாட்டாங்களா?

3. சிட்டில பெண்களை கடத்திட்டு போகும் வேன் எப்படி எந்த செக்கிங்க்கிலும் மாட்டலை?

4. பெண்களை கடத்தும் முன் அவர்கள் பயோடேட்டா பார்த்துட்டு பல நாள் ஃபாலோ பண்ணிட்டு தான் கடத்துவோம் என வில்லன் ஆட்கள் சொல்றாங்க.. ஆனா வழில ஒரு கமிஷனரோட பொண்ணை ஏன் கடத்தறாங்க.. போலீஸ் கமிஷனர் பொண்ணை கடத்துனா டேஞ்சர்னு தெரியாதா?ஊர்ல பொண்ணூங்களுக்கா பஞ்சம்?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை ஏலம் எடுக்கும் ஹீரோ அவரை மீட்கப்போறப்ப ஏன் ஃபைட் வருது?ஏலம் எடுக்கறது யாரா இருந்தா என்ன ? அவங்களூக்கு வேண்டியது பணம் தானே?

6. ஜீப் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டபோது பலி ஆனதாக கருதப்படும் சம்பத் எப்படி திடீர்னு க்ளைமாக்ஸ்ல உயிரோட வர்றார்? ஹீரோ இதே கேள்வியை கேட்கறப்ப “ அதை சொல்லிட்டிருக்க எல்லாம் இப்போ நேரம் இல்லங்கறாரே? அது சமாளிஃபிகேஷன் வசனமா?

7. வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கும் காட்சிக்கான காமிரா கோணங்கள் இன்னும் கண்ணியமாக வைத்திருந்திருக்கலாமே?

8. படத்துக்கு பெண்மை தவறேல் என டைட்டில் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே?அதே போல் படத்தின் போஸ்டர் டிசைன்கள் அனைத்தும் இது ஆண்களூக்கான படம் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/pooja-chopra8.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 30 நாட்கள் , பி செண்ட்டர்களில் 25 நாட்கள்  சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்..

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட்ஸ் - படம் பார்க்கலாம்

இயக்குநர் புது முகம் ,பெயர் குழந்தை வேலப்பன்.இவர் இதற்கு முன் எந்த இயக்குநரிடமும்  உதவி இயக்குநராக பணியாற்றாதவர்.. 

22 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Vadai

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Hayya. . . Nan than first

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ok appa padam pakkalam. ,

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Hello . . . Yarathu erukenkala.?

Speed Master said...

வந்துட்டேன்

விக்கி உலகம் said...

அண்ணே சிட்டில கடத்தபடுற பொண்ணுங்க வேன் ஏன் செகிங்க்ள மாட்டல..............ஹிஹி நம்ம ஊர்ல அமைச்சர கொன்னாலேயே புடிக்க 15 நாளு ஆகும் ஹிஹி!

விக்கி உலகம் said...

இந்த படத்துக்கு பேரு சரியா....இல்லை பெண்மை தவறேல்ன்னு வச்சா கூட்டம் வராதுன்னு மாத்திட்டாங்களா டவுட்டு!

Anonymous said...

பாஸ் உங்களுக்கு மெமரி பவர் ஜாஸ்தி..)

இம்புட்டு டயோலோக்கையும் நினைவில வச்சு எழுதியிருக்கீங்களே...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல விமர்சனம் குட்

படங்கள் அருமை

tamil444news.blogspot.com said...

விமர்ச்சனம் நன்றாக உள்ளது

கடம்பவன குயில் said...

டைரக்டர் பெயர், டைரக்டர் பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லியிருக்கலாம். விறுவிறுப்பான விழிப்புணர்வு படம் என்று உங்கள் விமர்சனம் பார்த்தாலே தெரிகிறது.

நீ்ங்களும் கடைசியில் விமர்சன பாக்ஸ் வைத்து CP VIEW: 1. பார்க்கலாம். 2. தேறாது. etc. போன்ற ஆப்சன்ஸ் வச்சு உங்க view சொல்லுங்க. இன்னும் நல்லா இருக்கும்.

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

அப்போ படம் பாக்கலாம் பாஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விமர்சனம் நல்லா இருக்கு நண்பா! பெண்களுக்கு ரொம்ப புடிக்கும்னு நெனைக்கிறேன்!

ஆனா இந்த மாதிரி படங்கள் இங்க தியேட்டரில போடமாட்டாங்க! மாஸ் ஹீரோக்கள் நடிச்ச படங்கள் மாத்திரம் தான் போடுவாங்க!!

இண்டெர்னெட்டில் பார்த்தால்தான் உண்டு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்தப் படத்திற்கு எப்ப மாப்ள போன?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு..

நிரூபன் said...

இனிமே வெள்ளிக் கிழமைகளில் விமர்சனம் வராதா,,,,
திங்களிலா...

நிரூபன் said...

ஆண்மை தவறேல்...அருமையான விமர்சனம்...

BKK said...

it looks like the movie is remake of the English movie TAKEN.

King Viswa said...

படத்திற்கு மக்கள் வரவேற்ப்பு எப்படி? ஓக்கேவா? தேறுமா?

கிங் விஸ்வா
சல்மான் கானின் ரெடி (2011) - திரைவிமர்சனம்!!

டக்கால்டி said...

hmm...parpom

Shiva sky said...

ஆண்மை தவறேல்...அருமையான விமர்சனம்...
அப்போ படம் பாக்கலாமா ?

சிவகிரி செந்தில் said...

vikatan mark athikam pa