Monday, June 27, 2011

என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி?

1.நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு #ஈரோடு என் கே கே பி ராஜா மீது அம்மாவுக்கு என்ன கோபமோ?

------------------------------

2. டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் : லாரிகள் நாளை ஓடுமா? #டீசல் அடிச்சுட்டு ஓட்டுனா ஓடும்,லபோ திபோன்னு அடிச்சுக்கிட்டு இருந்தா ஓடாது

-----------------------

3. காதலன் வீட்டு முன்பு தீக்குளித்த பெண் பலி#அப்டியே காதலனையும் கட்டிப்பிடிச்சு கரை சேத்தி இருக்கலாம்

---------------------

4. எஸ்.ஐ.,யை தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு#அவர் என்ன அரசியல்வாதியா?எப்படி பேசுனாலும் போனாப்போகுதுன்னு விட?

---------------------

5. ஓட்டலில் சாப்பாட்டிற்கு அப்பளம் வைக்காததால் ஆவேசம்  10 பேர் கைது#அடடா அப்பளம் சாப்பிட ஆசைப்பட்டு இப்படி ஜெயில்ல களி சாப்பிடறாங்களே?

--------------------

6. மகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி தகவல்#மகனையும் உள்ளே அனுப்பிடலாமா?அப்பா மட்டும் போதுமா?

--------------------

7. கும்பகோணம்:அண்ணியின் விரலை கடித்த வாலிபருக்கு வலை#மாறுபட்ட கோணத்துல சிந்திச்சு இருக்கார் போல..

---------------------


8. விஜய்யின் போக்கிரி பட தயாரிப்பாளர் கைது!#விஜய்யை  வெச்சு படம் தயாரிச்சா அவ்வளவு பெரிய சமுதாயக்குற்றமா? அவ்வ்வ்

-------------------

9. ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்: சல்மான் வாழ்த்து!#நல்ல மனம் வாழ்க ,நாடு போற்ற வாழ்க

---------------------

10சீதையாக நடிப்பதால்,  பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா.#ஆமாமா,முதல் ராமரை நினைச்சு 2வது ராமரை அவாய்டுபண்றாரோ?

----------------------------

11. "ஐ லவ் யூ அண்ணா". என ஒரு ஃபிகர் அழைத்தால் பயம் தேவை இல்லை,உங்கள் பெயரை அண்ணாமலை என மாற்றுக#விடாக்கண்டன் விமல்ராஜ்

---------------------

12.ஆ.ராசாவை விசாரிக்க சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை#இது ஜெ வின் பழி வாங்கும் நடவடிக்கை-கலைஞர் புலம்பல்@இமேஜினேஷன்

-----------------------

13.அண்ணா என ஒரு ஃபிகர் அழைத்தும் ஒருவன் கவலைப்படவில்லை என்றால் அந்த ஃபிகர் கேரளத்துப்பைங்கிளியாக இருக்கும்

--------------------

14. சின்ன விஷயத்தை பெரிசாக்கி நமக்கு தொந்தரவு தர்றவங்க 1.நம்ம சம்சாரம் 2.சினிமாவில் நடிகைகள்#நோ உள்குத்து

--------------------15. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி- ஹன்சிகா மோத்வானி#அப்புறம் ஏன் நயன் தாரா உங்களை சக்களத்தின்னு வையறாங்க?ஒரு வேளை கண்ணன் மாதிரியோ?

--------------------

16. ட்விட்டரில் உன்னால் ஐலவ்யூ சொல்ல முடியுமா? என சவால் விட்டாள்.ஏன் முடியாது என்றேன்.140 க்குள் முடிக்கவேண்டும் எப்படி 143 முடியும்?என்றாள்

---------------------

17. எனக்காக காத்திருப்பது உனக்கு போர் அடிக்கவில்லையா? என்றாள் காதலி.உன் சமீபத்தைவிட எனக்கு அதிகபோதை தருவது உனக்காக காத்திருக்கும் தருணங்களே

--------------------

18. கணினியுகத்தில் எந்த கிறுக்கனாவது காதலியின் ஃபோட்டோவை மணிபர்சில்வைத்திருப்பானா?என்றாள் காதலி.எந்த யுகத்திலும் காதலியின் முகம்தானே சுகம்?

---------------------

19. காதலியிடம் 143 என்றேன்.இப்போதைக்கு உங்கள் எண்ணத்தை 356 என்றாள்.நான் என்ன 420யா? என்றேன்#அக்கவுண்டன்ஸி கேர்ள் லவ்

-----------------------------

20. என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி? என்றாள் காதலி.உன்னையே தேற்றிய எனக்கு கவிதைகளை தேற்றுவதா கஷ்டம்? என்றேன்

27 comments:

ராஜி said...

அடடா ஏன் இந்த சுய விளம்பரம். டுவீட்டுல கூட நீங்க B.Sc Mathsன்னு காட்டனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த 14-வது பாயிண்ட்டு....? ரைட்டு விடுங்க, நீங்க வேற திருந்திட்டேன்னு சொன்னீங்க.. எதுக்கு வம்பு?

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே.... நீங்க டிவிட்டுலையும் நம்பர் ஒன் தான்...

மைந்தன் சிவா said...

என்ன பழக்கம் நயிட்டில டுவீட் போடுறது???

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
மைந்தன் சிவா said...

நயிட்டில நயிட்டி தான் போடணும் டுவீட்டு போட்டால் துவண்டு விடுவாள் துணையவள்!!

மைந்தன் சிவா said...

ஹிஹி பதின் நாலாவது நோ உள்குத்து???ஹிஹிஹி
பன்னி அண்ணே...விடுங்க விடுங்க...புளிச்சு போகட்டும் சி பி அண்ணா!!

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
மைந்தன் சிவா said...

ஹிஹி படங்கள் கடி....

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் சகோ,

இருங்கள் படித்து விட்டு வருகிறேன்.

நிரூபன் said...

@மைந்தன் சிவா


என்ன பழக்கம் நயிட்டில டுவீட் போடுறது???//

சின்னப் பிள்ளைகள் இருக்கும் இடத்தில்,
அசிங்க, அசிங்கமாக,
இரட்டை அர்த்தத்தில் பேசும் மைந்தனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நிரூபன் said...

@மைந்தன் சிவா


என்ன பழக்கம் நயிட்டில டுவீட் போடுறது???//

சின்னப் பிள்ளைகள் இருக்கும் இடத்தில்,
அசிங்க, அசிங்கமாக,
இரட்டை அர்த்தத்தில் பேசும் மைந்தனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நிரூபன் said...

காதலன் வீட்டு முன்பு தீக்குளித்த பெண் பலி#அப்டியே காதலனையும் கட்டிப்பிடிச்சு கரை சேத்தி இருக்கலாம்//

ஐடியா கொடுக்கிறாராம், ஐடியா,

ஈரோட்டிலை செந்தில் வீட்டுக்கு சமீபமாக யாராச்சும் லவ் பண்ணினால் ஜாக்கிரதையாக இருங்கோ.

நிரூபன் said...

கும்பகோணம்:அண்ணியின் விரலை கடித்த வாலிபருக்கு வலை#மாறுபட்ட கோணத்துல சிந்திச்சு இருக்கார் போல..//

அவ்....அவ்..

ஹா...ஹா...
எப்பிடீங்க இப்படி.

நிரூபன் said...

சின்ன விஷயத்தை பெரிசாக்கி நமக்கு தொந்தரவு தர்றவங்க 1.நம்ம சம்சாரம் 2.சினிமாவில் நடிகைகள்#நோ உள்குத்து//

சரியா சொன்னீங்க பாஸ்,

இருங்க உங்க வீட்டுக்கு ஒரு போன் போட்டு காம்பிளைண்ட் பண்ணிட்டு வாறேன்.

நிரூபன் said...

என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி? என்றாள் காதலி.உன்னையே தேற்றிய எனக்கு கவிதைகளை தேற்றுவதா கஷ்டம்? என்றேன்//

பாஸ்...கவிதை கலந்த கலக்கலான டுவீட்ஸ் இது,

இதைத் தானே ஆப்பிஸிலை உங்க பக்கத்திலை ஒர்க் பண்ற பொண்ணுக்கு கொடுத்தீங்க...

நிரூபன் said...

டுவிட்ஸ் எல்லாமே வழமை போல கலக்கல்.

துஷ்யந்தன் said...

ஹி ஹி
ஒரு மசாலா பதிவு பாஸ்
வழமை போல் கலக்கல் பதிவுதான்

குணசேகரன்... said...

எப்போதும் போல..இன்றும்...நச்-நு இருக்கு பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All twits are short and sweet

RAMVI said...

இரு வரி கவிதையா?? நன்றாக இருக்கிறது செந்தில்குமார்.

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க இனிமை

சசிகுமார் said...

//உன்னையே தேற்றிய எனக்கு கவிதைகள் தேற்றுவத கடினம் //

செம லாஜிக்

விக்கியுலகம் said...

குண்டூசி விக்கும் தள ஓனர் வாழ்க ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீங்க வேற திருந்திட்டேன்னு சொன்னீங்க.. // அப்படியா பன்னி..

சே.குமார் said...

Romba nalla irukku.