Wednesday, June 08, 2011

THE READER - சினிமா விமர்சனம் 18 +

http://www.daemonstv.com/wp-content/uploads/2011/03/mildred-pierce-hbo-poster-thumb.jpg
ஐயா படத்துல நயன் தாரா எப்படி கும்முன்னு இருந்தாரோ அந்த மாதிரி டைட்டானிக் படத்துல கும்முனும், ஜம்முன்னும் தான் இருந்தாரு கேட் வின்ஸ்லேட் (லேட்டா தியேட்டர்க்கு வந்தா சீன் கட்),ஆனா இந்தப்படத்துல ஆள் வதங்கிப்போன கத்திரிக்கா மாதிரி டல் அடிச்சு வில்லு நயன் மாதிரி இருந்தாலும் நம்ம ஆளுங்க அசரலையே.. போஸ்டர் பார்த்ததும் கண்டிப்பா சீன் இருக்கும் கற நம்பிக்கையோட ( கில்மா ரசிகர்களின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி ஹி ஹி ) நீண்ட க்யூவில் நிற்கறதைபார்த்ததும் எனக்கு ஆனந்தக்கண்ணீர் வந்துடுச்சு ஹி ஹி

பட்டிமன்றங்கள்ல, பொது விழாக்களில் ஆடியன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பாங்க.. அதாவது செல்ஃபோனை ஆஃப் பண்ணுங்க.. அல்லது சைலண்ட் மோடுல வைங்கன்னு .. ஒரு பய கேட்கனுமே.. குறிப்பா எஸ் வி சேகர், ஒய் ஜி மகேந்திரன் நாடகங்கள்ல யாராவது செல்ஃபோன்ல பேசுனாலோ,ரிங்க் டோன் கெட்டாலோ 2 பேரும் செம டென்ஷன் ஆகிடுவாங்க.. (என்ன கில்மா பட விமர்சனம் ரூட் மாறுது..?) ஆனா இந்தப்படத்துக்கு வந்த ரசிக பெருமக்கள் டிக்கெட் வாங்குனதுமே செல் ஃபோனை ஆஃப்  பண்ணிட்டாங்க.. ஆஹா என்னே அவங்க கடமை உணர்ச்சி.. அது ஏன்னா சீன் வர்றப்ப அவங்க மைண்ட் டைவர்ட் ஆகக்கூடாதாம்.. ஹி ஹி(கான்செண்ட்ரேஷன் ரொம்ப முக்கியம்)

 ஓக்கே மேட்டருக்கு வருவோம். ( மேட்டரா ? எங்கே எங்கே? )இந்தப்படம் 4 பிரிவுல ஆஸ்கார்க்கு போட்டி இட்டு ஒரு அவார்டை அள்ளிக்கிச்சு.. 2009 மார்ச்ல ரிலீஸ் ஆச்சு..படத்தோட  கதை என்ன?ன்னு சுருக்கமா மத்த படத்துக்கு பார்க்கலாம்? கில்மா படத்துக்கு திரைக்கதையோட பயணிச்சாத்தானே கிக்கு? ஹி ஹி

ஹீரோவுக்கு வயசு 16.. ஹீரோயினுக்கு வயசு 34.. ( பர்த் சர்ட்டிஃபிகேட் அட்டாச்டான்னு கேட்கக்கூடாது)ஒரு மழை நாளில் ஹீரோயின் வீட்டு வாசல் முன்னால ஒதுங்கறான்.. முன்னே பின்னே அறிமுகமே இல்லைனாலும் ஹீரோயின் அவனை உள்ளே கூப்பிட்டு உபசரிக்கிறா.. ( ஹூம், நாமளும் தான் பல வீடுகள்ல ஒதுங்கறோம். யாராவது கண்டுக்கறாங்களா? )
http://cdn.mos.totalfilm.com/images/k/kate-winslet-800-75.jpg
வெளில வெயிட் பண்ணு.. நான் டிரஸ் மாத்திட்டு வர்றேன்கறா.. அவன் ஒளிஞ்சு நின்னு பார்க்கறான். அவன் பார்க்கறதை இவளும் பார்த்துடறா.. முறைக்கறா.. பயந்து இவன் ஓடிடறான்.. ( தாழ் போடாம கதவை திறந்து வெச்சுட்டு டிரஸ் மாத்துனா எவன் கண்ணை மூடிக்கிட்டு சமர்த்தா ஹால்ல உக்காருவான்? )

இன்னொரு நாள்.. மறுபடி இவன் அவளை தேடி வர்றான்.. இவ அவனை குளிக்க சொல்றா.. ( #நீதி.. வெளில போறப்ப குளிக்காம போகனும் சான்ஸ் கிடைக்கலாம்)அவன் குளிச்சுட்டு வர்றப்ப இவ ரொம்ப உப்புசமா இருக்குன்னு டிரஸ்  எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சுட்டு அவனுக்கு துவட்டி விடறா.. ( வெளில மழை பெய்யறப்ப குளிர் பிரதேசத்துல ஏன் உப்புசமா இருக்கப்போகுதுன்னு யாரும் லாஜிக் கேள்வி கேட்காம படம் பார்க்கறாங்க.. )

அப்புறம்  2 பேருக்கும் கசமுசா நடந்துடுது.. இது தொடருது.. ஹீரோயினுக்கு படிக்கத்தெரியாது.. அதனால அடிக்கடி ஹீரோவை ஏதாவது கதை படிக்க சொல்லி கேட்பா.. ( டைட்டில்க்கு விளக்கமாம்). திடீர்னு ஹீரோயின்  மாயம் ஆகிடறா..

ஹீரோ லா காலேஜ்ல சேர்ந்து படிக்கிறான். ( ஹீரோயின் கூட படுக்கிறான்னு சொன்னப்ப ஆர்வமா இருந்தவங்க படிக்கிறான்.ன்னு சொன்னதும் போர் அப்டின்னு புலம்பறது எனக்கு கேட்குது ஹி ஹி )

ஹீரோயின் ஒரு பஸ் கண்டக்டர்.. அவ ஒரு கேஸ்ல மாட்டிக்கறா.. ( ஒரு கேஸே கேசில் மாட்டியதே அடடே ஆச்சரியக்குறி என கவிதை சொன்னா வன்மையா கணடனம் தெரிவிக்கப்படும்)அது என்ன கேஸ்.. கோர்ட்ல என்ன நடந்தது போன்ற விபரங்கள் எல்லாம் படத்துக்கு தேவை ஆனா நமக்கு தேவை இல்லை ஹி ஹி .. 

அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்குது.. ஜெயில்ல இருக்கறப்ப அவளுக்கு ஹீரோ ஆடியோ கேசட்ல கதை சொல்லி ரெக்கார்டு பண்ணி அனுப்பறான்..20 வருஷங்கள் கழிச்சு ஹீரோயின் ரிலீஸ் ஆகறப்ப  ஹீரோ அவளை வந்து பார்க்கறான்..

ஹீரோ ஹீரோயினை ஏத்துக்கறாரா? இல்லையா? என்பதை வெண் திரையில் காண்க..

http://www.film-autos.com/rampenlicht/media/0709_the_reader_der_vorleser_01.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. ஹீரோயின்  - நீ செம டேலண்ட் தான்..

ஹீரோ - நீ எதுல டேலண்ட்னு சொன்னே? ராஸ்கல்.. 

2. அவளுக்கு கதை படிக்கறதை விட மற்றவர்களை படிக்க சொல்லி கேட்கறதுல ஆர்வம் அதிகம்.. 

3. நீ என்னை உனக்கு அடிமை ஆக்கீட்டே.. நீ எது சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைக்கறே.. ஆனா அது நடக்காது.. 

அது பற்றி எனக்கு கவலை இல்லை.. ஆனா நான் சொல்ல வேண்டியதை உன் கிட்டே சொல்லியே தீருவேன்.. 

4. என் க்ளாஸ் ஃபிரண்ட்ஸோட என்னால இயல்பா பழக முடியலை.. உன்னுடனான தருணங்கள், நினைப்புகள் என்னை வாட்டி வதைக்குது,,

5.யுவர் ஆனர் 300 பேர் மரணத்துக்கு நான் காரணம்கறதை என்னால ஏத்துக்க முடியாது.. நான் மட்டும் தான் காரணம்னு சொல்றது டூமச்.. என்னோட பணியில் இருந்த எல்லாரும் தான் அதுக்கு பொறுப்பு.. 

6. நீங்க மட்டும் தான் அவருக்கு ஆதரவா இருக்கீங்க.. நீங்க அவளை கண்டுக்காம விட்டுட்டா அவளுக்கு ஆதரவா யாருமே இருக்க மாட்டாங்க.. அவளால அதை தாங்கிக்க முடியாது.. 
7.நமக்குள்ளே  இனி எல்லாம் அவ்வளவு தானா? 

ஆமா. எனக்கும் ஒரு மக இருக்கா.. அவளை வளர்த்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு..  உனக்கு நான் ஒரு வீடு ரெடி பண்ணிடறேன்.. அங்கே பக்கத்துல ஒரு லைப்ரரியும் இருக்கு,.. 

வேணாம்.. நீயே எனக்கு இல்லைன்னு ஆனப்ப எனக்கு மற்ற எதுவும் வேணாம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcpFICL6Fk9K03K2fpLZe66RHfNIlG5IDeps5X07AYJzzeKKHIGb1XRiJw-F5zfsFDJtohIb4M1IXhB6Y-9tEE2-_YCNYz4vsfkqM7e1hJLZ6pg4aRiN7Ga9TZsev0PeJ8T99RD_3E7_D/s320/The-reader-winslet-kross.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில் முதல் 3 ரீல்களுக்குப்பிறகு இது ஒரு சீன் படம் அல்ல,, அழகிய காதல் கதை என்ற விஷயத்தை இயல்பாக சொன்னது.. அழகிய காட்சி அமைப்புகள்

2. ஹீரோயின் ஓவ்வொரு தருணத்திலும் கதை கேட்கும் ஆர்வத்துடன் இருப்பதாக சித்தரித்தது.. பின்னாளில் அவளது ஜெயில் வாழ்க்கைக்கு அந்த பழக்கம் பயன் உள்ளதாக காட்டியது.. 

3. டீன் ஏஜ் ஹீரோ, ஓல்டு ஏஜ் ஹீரோ இருவருக்குமான முகச்சாயல் பொருந்திவரும் கேரக்டர் செலக்சன்.. 

4. மகளுடனான சந்திப்பில் தந்தை தன் காதலி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வது..

5. கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பொறி பறக்கும் வசனங்கள் இல்லாமல் இயல்பான காட்சிகளால் நகர்த்தியது.. 

6. நாயகி தற்கொலை  செய்வதை நாசூக்காக காட்டியது.. தான் நேசித்த புத்தகங்களையே தூக்கு மேடை ஆக்குவது..


http://imstars.aufeminin.com/stars/fan/kate-winslet/kate-winslet-20080107-359737.jpg

 

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. 20 வருடங்கள்  கழித்து நாயகன் நாயகியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க காரணம் என்ன அன்பதை தெளிவாக சொல்லாதது.. அந்த சந்திப்பில் காதலன் உணர்ச்சி வசப்படாமல் ஜஸ்ட் ஒரு டச்சோ, கிஸ்சோ இல்லாமல் அவளை விட்டு விலகுவது..
2. ஹீரோயின் தற்கொலை செய்து கொள்ளும் அளவு மனோ தைரியம் இல்லாதவள் என்று ஒரு சீனில் கூட கேரக்டரைசேஷன் செய்யாதது.. 


3. நாயகி பல வருடங்கள் சிறையில் இருக்கும்போது அவள் நினைவாகவே காலம் தள்ளும் ஹீரோ நாயகி ரிலீஸ் ஆனதும் அவளை கழட்டி விட நினைப்பது..

4. படத்தின் போஸ்டர்களிலும், விளம்பரங்களிலும் இது ஒரு சீன் படம் என்ற மாயையை ஏற்படுத்தியது.. இதனால் ஒரு நல்ல காதல் படத்தை பெண்கள் தவற விடுகிறார்கள்..

5.ஹீரோ டீன் ஏஜில் தன்னுடன் படிக்கும் மாணவியுடன்  ஒரு நாள் திடீர் என உறவு கொள்வதும்,அப்போது நாயகியை நினைத்துப்பார்ப்பதும்...இந்த காட்சியால் பின்னால் அவர் நாயகியை ஏற்காத போது பாத்திரத்தின் தன்மை பற்றிய குழப்பம் வந்து விடுகிறது..

ஈரோடு அன்ன பூரணி,ஸ்டார் ஆகிய 2 தியேட்டர்களில் இந்தப்படம் நடைபெறுகிறது..  படத்தில் ஆபாசம் இல்லை.. எனவே பெண்களும் பார்க்கலாம். நல்ல காதல் கதை..

28 comments:

குணசேகரன்... said...

nice review..nice stills..i will see

Unknown said...

ஏன்யா இது பொண்ணா இல்ல... ஹிஹி!

rajamelaiyur said...

ஓவரா படம் பார்ப்பது உடம்புக்கு நல்லது இல்லை

rajamelaiyur said...

டிக்கெட் என்ன ரேட் ? ( நான் தியேட்டர் டிக்கெட் ய் சொன்னேன் ..)

Unknown said...

படிக்க தெரியலன்னா கண்டக்டர் உத்தியோகம் பொண்ணுக்கு மட்டும் தருவாங்களா வெளிநாட்டுல ஹிஹி டவுட்டு!

Unknown said...

அண்ணே என்னனே இவுங்க பாட்டி மாதிரி இருக்காங்க

சக்தி கல்வி மையம் said...

விமர்சனம் முழுவதும் படித்தேன்.. ஆனா என்ன கருத்து சொல்லறதுன்னு தெரியல..

சி.பி.செந்தில்குமார் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா


கண்ணியமான தளம் இது.. ஹி ஹி

Unknown said...

நல்லா ஜொள்ளியிருக்கீங்க சூப்பர்...

சுதா SJ said...

நீங்க சொன்னா பாக்காம இருக்க முடியுமா ??

பாத்துட்டா போச்சு

நிரூபன் said...

கில்மா பட விமர்சனம் 18 பிளஸ்//

அப்போ, 12 வயசு பிள்ளைகங்களை உள்ளே விட மாட்டீங்களா?

நிரூபன் said...

ஆனா இந்தப்படத்துல ஆள் வதங்கிப்போன கத்திரிக்கா மாதிரி டல் அடிச்சு வில்லு நயன் மாதிரி இருந்தாலும் நம்ம ஆளுங்க அசரலையே.. போஸ்டர் பார்த்ததும் கண்டிப்பா சீன் இருக்கும் கற நம்பிக்கையோட ( கில்மா ரசிகர்களின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி ஹி ஹி ) நீண்ட க்யூவில் நிற்கறதைபார்த்ததும் எனக்கு ஆனந்தக்கண்ணீர் வந்துடுச்சு ஹி ஹி //

ஹா..ஹா....
ஐயோ, ஐயோ சின்னப் புள்ளத் தனமா இல்லே இருக்கு. பழைய ஆளில் புதுமையை எதிர்பார்க்கிறீங்க. அவா டைட்டானிக் நடிச்ச காலத்திற்கும், இன்றைய நாளுக்கும் எவ்ளோ வயசு வித்தியாசம்?
அவா என்ன மார்லின் மன்றோவா?
எப்பவுமே ஒரே மாதிரி இருக்க.

நிரூபன் said...

என்ன கில்மா பட விமர்சனம் ரூட் மாறுது..?) ஆனா இந்தப்படத்துக்கு வந்த ரசிக பெருமக்கள் டிக்கெட் வாங்குனதுமே செல் ஃபோனை ஆஃப் பண்ணிட்டாங்க.. ஆஹா என்னே அவங்க கடமை உணர்ச்சி.. அது ஏன்னா சீன் வர்றப்ப அவங்க மைண்ட் டைவர்ட் ஆகக்கூடாதாம்.. ஹி ஹி(கான்செண்ட்ரேஷன் ரொம்ப முக்கியம்//

அனுபவங்களை ஒன்னு திரட்டி, தலைவர் மற்றவங்கள் போனை ஆப் பண்ணுறார் என்று சும்மா தான் சொல்றார் என்று நினைக்கிறேன்.

முதல் ஆளா சிபி தான் போனை ஆப் பண்ணியிருப்பார்.

நிரூபன் said...

என்ன கில்மா பட விமர்சனம் ரூட் மாறுது..?) ஆனா இந்தப்படத்துக்கு வந்த ரசிக பெருமக்கள் டிக்கெட் வாங்குனதுமே செல் ஃபோனை ஆஃப் பண்ணிட்டாங்க.. ஆஹா என்னே அவங்க கடமை உணர்ச்சி.. அது ஏன்னா சீன் வர்றப்ப அவங்க மைண்ட் டைவர்ட் ஆகக்கூடாதாம்.. ஹி ஹி(கான்செண்ட்ரேஷன் ரொம்ப முக்கியம்//

அனுபவங்களை ஒன்னு திரட்டி, தலைவர் மற்றவங்கள் போனை ஆப் பண்ணுறார் என்று சும்மா தான் சொல்றார் என்று நினைக்கிறேன்.

முதல் ஆளா சிபி தான் போனை ஆப் பண்ணியிருப்பார்.

நிரூபன் said...

தாழ் போடாம கதவை திறந்து வெச்சுட்டு டிரஸ் மாத்துனா எவன் கண்ணை மூடிக்கிட்டு சமர்த்தா ஹால்ல உக்காருவான்? )//

ஹா...ஹா...என்ன ஒரு அட்வைஸ்...

நிரூபன் said...

ஈரோடு அன்ன பூரணி,ஸ்டார் ஆகிய 2 தியேட்டர்களில் இந்தப்படம் நடைபெறுகிறது.. படத்தில் ஆபாசம் இல்லை.. எனவே பெண்களும் பார்க்கலாம். நல்ல காதல் கதை.//

கிளு கிளுப்பாக ஒரு தலைப்பைக் கொடுத்திட்டு,
ஆபாசமே இல்லையாம்...ஹி....ஹி...என்ன ஒரு கொல வெறி.

நிரூபன் said...

விமர்சனம் வழமை போல அருமை சகோ, படத்தின் அனைத்துப் பகுதிகளையும் அருமையாக அலசி, சுருக்கமான விமர்சனத்தை, காமெடி கலந்து சுவாரஸ்யமாகத் தந்துள்ளீர்கள் சகோ.

நன்றி மாப்பிளை...
சாரி,,

நன்றி மாமா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல, விமர்சனத்தை முழுசா படிச்சேன்! [ பின்ன இதுமாதிரி ஒரு விமர்சனத்த எவனாவது படிக்காம இருப்பானா? )
பல இடங்கள்ள சி பி முத்திரை பளிச்சிடுகிறது! அதையெல்லாம் காப்பி பண்ணி ஒவ்வொரு வாக்கியத்துக்கும் தனித்தனியே கமெண்டு போட்டு உங்களை பரவசத்தில் ஆழ்த்தலாம் என்றால் நீங்க காப்பி பண்ண முடியாதவாறு ப்ளாக் பண்ணி வச்சிருக்கீங்க!

இதனால உங்களுக்கு வர்ர கமெண்டுகளின் எண்ணிக்கை குறையுது! ஹி ஹி ஹி !!

அப்புறம் கில்மா படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு ஒரு தனி திறமை வேணும்! அது உங்கிட்ட நிறையவே இருக்கு!

அதேமாதிரி கில்மா பட விமர்சனத்த ரசிச்சு ருசிச்சு படிக்கிறதுக்கும் ஒரு தனிதிறமை வேணும்! அது நம்மகிட்ட தாராள்மா இருக்கு!

ஸோ தொடர்ந்து இதுபோல கில்மா விமர்சனங்களை போட்டு, எம்மை குளிர்விக்குமாறு அனைத்துலக கில்மா விமர்சனத்தை எழுத்தெண்ணிப் படிப்போர் சங்கத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்!

( பயபுள்ள கமெண்டு போடுன்னா கடிதம் எழுதி வச்சிருக்கானேன்னு திட்டாதீங்க )

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நண்பா.. இனி உங்களுக்கு மட்டும் பதிவை ஈ மெயில் பண்ணிடறென் ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

@நிரூபன்

என்னது? மாமாவா? விளங்கிடும்

Unknown said...

வணக்கம் பாஸ்!
இது சீன் படம் இல்லைன்னு சொல்லிடீங்க..! :-)

இயக்குனரின் பல்பு தொடர்பாக...
இருபது வருடங்கள் கழித்து அவளை ஏற்காதது - அவர்களுக்குள் இருந்தது முறை தவறிய காதல். அவனுக்கு திருமணமாகி, வளர்ந்த ஒரு மகளும் உண்டு.
அவளைக்கழட்டி விட நினைக்கவில்லை. தன்வீட்டில் சேர்ந்து வாழ முடியாதென்றே கூறுகிறான்.
தற்கொலை செய்து கொள்வோரெல்லாம் மனோதைரியம் அற்றவர்கள் அல்ல!

Unknown said...

நாளைக்கு ஒரு பதிவு உங்கள் பெயருடன் தான் .. குரு

சென்னை பித்தன் said...

//நாமளும்தான் பல வீடுகள்ல ஒதுங்கறோம். யாராவது கண்டுக்க றாங்களா!//
முயற்சி திருவினையாக்கும்!

Jana said...

விமர்சனத்தை வாசிக்கவில்லை காரணம் இந்தப்படத்தை பார்ப்பதாக ஒரு பிளான் இருக்கு :)
என்ன இருந்தாலும் நாயகியின் அன்றைய நச் இன்று ரொம்ப ரொம்ப மிஸ்ஸிங்...
ஏஜ் மட்டும்தான் காரணமா?

செங்கோவி said...

அப்போ நான் டைட்டானிக்கையே இன்னொருக்கா பாத்துக்கிறேன்.

Stock said...

ad paavikala.... unga vimarsanam keetta padam eduththavan thuukku maattikkuvan.

//Iyakkunar Bulb vangiya idangkaL//
you need to understand something called "nuances" while watching these movies. If you know the subtle message you will understants that your 5 points are :-((.


Please anna ithu pola padangkaLukku unga paanila vimarsanam pannatheengka.

BTW "Anagareegam" eppo release:-)

Sathish said...

இது வரை 6 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இந்த படத்திற்கு தான் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் என்பது இன்னும் கூடுதல் தகவல். இதையும் உங்க பதிவின் இறுதியில் சேர்த்துகோங்க தல.

சரியில்ல....... said...

ஹிஹிஹி.... தி ரீடர் பட விமர்சனம் சூப்பரு... அதுசரி...இது கில்மா படமா இல்ல காதல் படமா... படத்துல எத்தன சீன் இருக்குன்னு சொல்லவே இல்லையே... உங்களுக்கு எங்கமேல அக்கறையே இல்ல பாஸு ...