Monday, June 06, 2011

மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajal-Agarwal-01/kajal-agarwal-photos-031.jpg 

1. செயின் திருடர்கள் எல்லாரும் ஆந்திரா போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே.. அப்புறம் எப்படி நகை திருட்டு நடந்தது?

அட நீ வேற .. இவங்க எல்லாம் நெக்லஸ் திருடங்களாம் ...

-----------------------------------

2. ஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க?


அந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே?


-------------------------------

3. ஆக்சிடெண்ட்ஸ்  நடந்த தகவல்களை எல்லாம் தலைவர் எதுக்கு கலெக்ட் பண்றாரு?

அவை எல்லாம் திட்டம் இட்டு நடந்த கொலைகள்னு அறிக்கை விடத்தான்..

--------------------------------------

4. அரசியல்வாதி பையனை லவ் பண்ணுனது தப்பா போச்சு.. 

ஏன்?

எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் லவ் ஃபெயிலருக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்று காதலன் பதவியை ராஜினாமா பண்ணிடறேன்னாரே..?

----------------------------------------------

5. பொதுத்தேர்தல்ல படு தோல்வி அடைந்தும் தலைவரோட பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..

ஏன்?

இடைத்தேர்தல்ல ஜெயிச்சுத்தான் எனக்கு பழக்கம்னுட்டாரே?

--------------------------------------

http://www.cinemagupshup.com/wp-content/uploads/2010/06/kajal-agarwal-saree-1.jpg

6. ஆஃபீஸ் மேனேஜர் ஏன் கடுப்பா இருக்காரு?

ஒழுங்கா வேலை செய்யலைன்னு டிஸ்மிஸ் செய்யப்பட்ட கிளார்க் ஆஃபீசை விட்டுக்கிளம்பறப்ப  எனக்கு ஓய்வு கொடுத்த  மேனேஜருக்கு நன்றின்னாரே?

------------------------------

7. தலைவர் ஏன் கோபமா இருக்காரு?

ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி.. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி.. மைனாரிட்டியாகத்தான் இருப்பேன்னு ஏன் அடம் பிடிக்கறீங்க?ன்னு நிருபர்கள் கேட்டாங்கலாம்.. 

----------------------------------

8. செயின் திருடர்கள் டூரிஸ்ட்டா?ன்னு ஏன் கேட்கறீங்க?

பின்னே? அவங்க தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகான்னு ரவுண்டிங்க்ல இருக்கறதா சொன்னா என்ன அர்த்தம்?

-------------------------------------

9. அந்த காக்காவை ஏன் குளத்துல முக்கி எடுக்கறாங்க?

காகம் கரையும்னு சொன்னாங்களாம் டீச்சர்.. அதை செக்கிங்க்.. 

--------------------------------

10 . மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?

நடிகை - மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றம் இல்லாததுன்னு உலகுக்கு உணர்த்த விரும்பறேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigHCVFAS_5dUu-qTYJa5VU3kReRtpph_u2D-Av-iS6G2wWgBD2u-6HSdINUC3o5Z-HCr_iTGHxvHqJOCImufQ-u2oJJCdzaGByoMR08a6YOwqQh9LMw36EisFeRwEpwpDKCsCaLkNV2QSc/s1600/Kajal+Agarwal_hot_stills_04.jpg

27 comments:

Unknown said...

அண்ணன் அறிவுடை நம்பி களைய பெருமாள் நவீன பாக்கியராஜ் வாழ்க ஹிஹி!

கோவை நேரம் said...

காலை வணக்கம்

சக்தி கல்வி மையம் said...

காலையிலே செம சிரிப்பு..

வைகை said...

கல்யாணம் செல்லாதுன்னு அறிவிச்சது உண்மையா தலைவா? # நப்பாசை

வைகை said...
This comment has been removed by the author.
கேரளாக்காரன் said...

No ideology today? why?

ARV Loshan said...

காஜலின் மூன்று படமும் கலக்கல்.. நன்றிங்கோவ்..

ARV Loshan said...

அட ஜோக்ஸ் வேற எழுதியிருக்கீங்களா? ஹீ ஹீ.. சிரிச்சேன் ;)

Unknown said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

திமிர திமிர சிரிக்க வைக்கிறீங்க பாஸ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலையிலே இம்புட்டா என்னால முடியல சாமி...

அசத்தல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் 7 வது ஓட்டும் போட்டாச்சி..

உணவு உலகம் said...

ஹா,ஹா,ஹா ரசிச்சு சிரிச்சேன் தலைவரே!

கூடல் பாலா said...

அப்படியா .........தமிழ்நாட்டுக்கு செயின் திருடர்கள் போயி நெக்லஸ் திருடர்கள் வந்துட்டாங்களா .........?

sathishsangkavi.blogspot.com said...

தலைப்புக்கு விளக்கம் நச்...

Mohamed Faaique said...

காலையிலேயே கண்ணுக்கு விருந்தளித்த சிபி.. வாழ்க....

சென்னை பித்தன் said...

எங்கேதான் தேடிப் பிடிக்கறீங்களோ இப்படி ஜோக்கெல்லாம்!காலையில் சிரிப்போடு ஆரம்பித்தால் நாள் முழுதும் மகிழ்ச்சியா இருக்கலாம்!

Unknown said...

ஹா ஹா ஹா.. ஜோக்ஸ் எல்லாம் ரசிக்கும்படியா இருந்ததுங்க சி.பி.

மகதீரா பார்த்ததில் இருந்து காஜல் நினைப்பிலயே இருக்கீங்க போல.. :-)

sivagiri senthil said...

Ha ha ha..........

NKS.ஹாஜா மைதீன் said...

கலக்கல்....

Yoga.s.FR said...

எங்கேதான் தேடிப் பிடிக்கறீங்களோ இப்படி.......(ஜோக்கெல்லாம்!)

தமிழ்வாசி பிரகாஷ் said...

ha....haa.... jokes top takkar

கடம்பவன குயில் said...

`ஹ..ஹ..ஹ.. கலக்கல் காமெடி.
திருமணம் செல்லாது காமெடி ரொம்ப கலக்கல்.

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க??
ரொம்ப ஓவரா அறிவை ஆண்டவன் கொடுத்துட்டாரோ??

சுதா SJ said...

ஹா ஹா
செம காமடி தர்பார்

நிரூபன் said...

மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?//

பல குடும்பங்களுக்குள் பிரச்சினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் கிளம்பியிருக்கிறீங்க போல இருக்கே..

ஹி....

நிரூபன் said...

செயின் திருடர்கள்...சூப்பர்.


நகைச்சுவைகள் மாலை வேளையில் படிக்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது..

Yoga.s.FR said...

இடைத் தேர்தல்ல............................................................."இடை"யே காணமே?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.