Tuesday, June 28, 2011

. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன??


1. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் அவசர முத்தங்களால் கறைகள் காட்டிக்குடுத்துவிடும் அபாயமாகக்கூட இருக்கலாம்#ஜிகிடி

--------------------

2. நீ தலைக்குக்குளித்து வரும் நாட்களில் உன்னைத்தவிர்க்க நினைக்கிறேன்,காரணம் உன் முக வசீகரத்தை கூந்தல் அழகு முந்துவதை விரும்பாததால்#ஃபிரைடே

--------------------

3. காதலிக்க கண்கள் மட்டும் போதும்,ஆனால் அதை கண்ட்டினியூ பண்ண பாக்கெட்ல காசு வேணும்#நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டோய் 

---------------------

4. உன்மேல் உள்ள அன்பை முழுசாக வெளிப்படுத்த எனக்குத்தெரியவில்லை என்றாய்,சோ வாட்?உள்ளே அன்பு இருக்கு என்று தெரிந்தாலே போதாதா?

---------------------

5. உன்னுடன் சந்திக்கும் வாய்ப்பு ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் என்னோடு இருக்கும் பர்ஸ் காலி ஆகி விடும்#வெட்டிச்செலவு வந்தனா 

--------------------
6. ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்

---------------------

7. கணவன்மார்கள் பைக்கில் போகும் நேரத்தை விட மனைவியை டிராப் பண்ணும் நேரம் அதிகம்,மனைவிமார்கள் பெரும்பாலும் கணவன்களை டிரைவராக யூசிங்க்

---------------------

8. ஆண்கள் பைக் உலா போகையில் அவன் கம்பீரம் கூடுகிறது,பெண்கள் ஸ்கூட்டி உலா போகையில் அவள் நளினம் குறைகிறது

--------------

9./ கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எனக்குப்பிடிக்காமல் போனதற்குக்காரணம் ,அவள் கண்கள் கட்டப்படுவதால்

----------------
10.  எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன்-ஜெ#அப்போ முதல்ல கரண்ட்கட்டுக்கு ஒரு வழி பண்ணுங்க தாயே

------------------11. பிரதமர் முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால்,  சிறப்பாக செயல்பட முடியாது-ஜெ#சிஎம்மாக இருக்கறவங்க கூடதோழியின் பேச்சைத்தானே கேட்கறாங்க?

--------------------

12. எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்-ஜெ#அய்யய்யோ,அம்மா,குண்டை தூக்கிப்போடறீங்களே?அப்போ திமுகவுல உங்க நண்பர் யாரு?

---------------------------
13. நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்-ஜெ#இந்நாள் சினிமா நடிகை பேட்டி மதிரியே இருக்கே?

----------------------

14. நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்-ஜெ#என்னம்மா? இது?45 நாட்களுக்குள்ளேயா?

-------------------------

15. ஊழல்அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடே எதிர்பார்க்கிறது-ஜெ #ஊழல் செய்த முதல் அமைச்சர்கள் மீதும்,2 பேரும் மாட்னீங்க

-------------------16. அரசு பேருந்தில் 'தீ' 36 பயணிகள் தப்பினர்-செய்தி # தீ ரஜினி நடிச்ச படம் ஆச்சே.. ரஜினியே தப்பிச்சுட்டாரு..பயணிகள் தப்பிக்க மாட்டாங்களா?

------------------------

17. பிரபுதேவா- பியா ஒரேவிமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர்# நயன்தாரா எங்கிருந்தாலும் சீதை படப்பிடிப்பை கேன்சல்செய்துவிட்டுஆஜர்ஆகுக

---------------------------

18.  என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்.

----------------------

19.  எல்லோரிடமும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்,ஆனால் அது எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படாது#ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்&டீலிங்க்

-----------------------
20.  உன்னை சமாதானப்படுத்த என்ன பரிசு வேணும்? என கேட்டேன் .செலவே இல்லாத எப்போதும் கிடைக்கும் 4 எழுத்து மந்திரம் என்றாள் #கிஸ்ஸாலஜி

----------------------

42 comments:

Unknown said...

ஐ வடை

Unknown said...

super super

Unknown said...

no..6
no..7
no..9
no..14
no..17
r my favarite super voted

Unknown said...

ஏன்னே உங்களால மட்டும் எப்படின்னே இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...!

super!

கூடல் பாலா said...

அரசியல் பக்கமா காத்து அதிகமா வீசுது .......

sathishsangkavi.blogspot.com said...

நச் வரிகள்....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறே? எங்கிருந்து வருது இதெல்லாம்..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

1. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் அவசர முத்தங்களால் கறைகள் காட்டிக்குடுத்துவிடும் அபாயமாகக்கூட இருக்கலாம்#ஜிகிடி:////

ஆஹா!!! என்ன ஒரு கண்டுபிடிப்பு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2. நீ தலைக்குக்குளித்து வரும் நாட்களில் உன்னைத்தவிர்க்க நினைக்கிறேன்,காரணம் உன் முக வசீகரத்தை கூந்தல் அழகு முந்துவதை விரும்பாததால்#ஃபிரைடே

ஹா ஹா ஹா இதுலுமா? ஆண்களின் மனசு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. காதலிக்க கண்கள் மட்டும் போதும்,ஆனால் அதை கண்ட்டினியூ பண்ண பாக்கெட்ல காசு வேணும்#நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டோய் //////

கண்டிப்பாக!

எனக்குப் பிடிச்ச பாட்டும் கூட!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4. உன்மேல் உள்ள அன்பை முழுசாக வெளிப்படுத்த எனக்குத்தெரியவில்லை என்றாய்,சோ வாட்?உள்ளே அன்பு இருக்கு என்று தெரிந்தாலே போதாதா?////

அதானே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

5. உன்னுடன் சந்திக்கும் வாய்ப்பு ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் என்னோடு இருக்கும் பர்ஸ் காலி ஆகி விடும்#வெட்டிச்செலவு வந்தனா /////

அட பர்ஸ் மட்டும்தானா? இங்க வேற மாதிரி் சி பி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

6. ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்/////

ஆமா சி பிக்கு நாட்டுக்கட்டை பிடிக்குமா? நகரக்கட்டை பிடிக்குமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

7. கணவன்மார்கள் பைக்கில் போகும் நேரத்தை விட மனைவியை டிராப் பண்ணும் நேரம் அதிகம்,மனைவிமார்கள் பெரும்பாலும் கணவன்களை டிரைவராக யூசிங்க்////

ட்ரைவராக மட்டுமா யூஸ் பண்றாங்க?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

8. ஆண்கள் பைக் உலா போகையில் அவன் கம்பீரம் கூடுகிறது,பெண்கள் ஸ்கூட்டி உலா போகையில் அவள் நளினம் குறைகிறது////

என்னது குறையுதா? நோ காதல் படத்துல சந்தியா, வேட்டைக்காரன்ல அனுஷ்கா.... இவங்க எல்லாம் பைக் ஓட்டும் போது சூப்பரா இருந்திச்சே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

9./ கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எனக்குப்பிடிக்காமல் போனதற்குக்காரணம் ,அவள் கண்கள் கட்டப்படுவதால்/////

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் ‘ கட்டவிழ்க்கப்படும் ‘ விளையாட்டுக்கள்தான் சி பிக்குப் பிடிக்கும்! ஹி ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

10. எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன்-ஜெ#அப்போ முதல்ல கரண்ட்கட்டுக்கு ஒரு வழி பண்ணுங்க தாயே///

முக்கியமான கோரிக்கை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

11. பிரதமர் முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், சிறப்பாக செயல்பட முடியாது-ஜெ#சிஎம்மாக இருக்கறவங்க கூடதோழியின் பேச்சைத்தானே கேட்கறாங்க?////

நட்புக்கு முதலிடம் போலும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்-ஜெ#அய்யய்யோ,அம்மா,குண்டை தூக்கிப்போடறீங்களே?அப்போ திமுகவுல உங்க நண்பர் யாரு?////

வேற யாரு? கலைஞர்தான்/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

13. நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்-ஜெ#இந்நாள் சினிமா நடிகை பேட்டி மதிரியே இருக்கே?////

முந்நாள் நடிகை என்பதாலோ்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

14. நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்-ஜெ#என்னம்மா? இது?45 நாட்களுக்குள்ளேயா?////

ஹி ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

15. ஊழல்அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடே எதிர்பார்க்கிறது-ஜெ #ஊழல் செய்த முதல் அமைச்சர்கள் மீதும்,2 பேரும் மாட்னீங்க////

நிச்சயமா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

16. அரசு பேருந்தில் 'தீ' 36 பயணிகள் தப்பினர்-செய்தி # தீ ரஜினி நடிச்ச படம் ஆச்சே.. ரஜினியே தப்பிச்சுட்டாரு..பயணிகள் தப்பிக்க மாட்டாங்களா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

17. பிரபுதேவா- பியா ஒரேவிமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர்# நயன்தாரா எங்கிருந்தாலும் சீதை படப்பிடிப்பை கேன்சல்செய்துவிட்டுஆஜர்ஆகுக///

இன்ஃபோமர் ஏகாம்பரம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

18. என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்./..////

யாரைப்பார்த்து சொல்றீ்ங்னா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

19. எல்லோரிடமும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்,ஆனால் அது எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படாது#ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்&டீலிங்க்////

காதலி நெருக்கமாகும் போது ஆம்பளைங்க கொழந்தையாகிடுவாங்களாம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

20. உன்னை சமாதானப்படுத்த என்ன பரிசு வேணும்? என கேட்டேன் .செலவே இல்லாத எப்போதும் கிடைக்கும் 4 எழுத்து மந்திரம் என்றாள் #கிஸ்ஸாலஜி
\///

முத்தம் முத்தம் முத்தமா?
மூன்றாம் உலக யுத்தமா?

ராஜி said...

ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்/////
அப்படியே எத்தனை வயசானால் ஆண்களை கண்ட்ரோல் பண்ண முடியும்னு சொல்லுங்க சார்.

ராஜி said...

என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்./
>>>
ஏன் அம்புட்டு "அழகானவங்களா"?

கவி அழகன் said...

கலக்குது பாஸ்
சிரிப்பு தாங்க முடியல
எப்படி உங்களால முடியல

செங்கோவி said...

ஓஹோ..அப்படியா..சரி,சரி!

செங்கோவி said...

என்னய்யா இது..தமிழ்மணம் பகல்லயும் படுத்திருச்சே..

சென்னை பித்தன் said...

பதினெட்டு கலக்கல்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரிடம் எத்தனை வயதானாலும், குழந்தைத் தன்மையை காட்டுவது இயல்பாய் வந்து விடுகிறது

கோவை நேரம் said...

என்ன ..? திருந்தி விட்டீர்களா ..? வர வர நீங்க மாறிக்கிட்டே வரீங்க..இது நல்லதுக்கு இல்ல ...எவ்ளோ ஆசையா இருந்தோம் ..ஒரு பிகர் போட்டோ கூட இல்லையே .....

கோவை நேரம் said...

நான்....கோபமா வெளிநடப்பு செய்யறேன் ...

RAMA RAVI (RAMVI) said...

செந்தில் குமார்,பதிவு கலக்கலாக இருக்கிறது? இயற்கை காட்சி படங்கள் அருமை....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஓகே..ரைட்

ராஜ நடராஜன் said...

பிட்டுகளை படங்கள் முந்திக்கொண்டன.எங்கிருந்து புடிச்சீங்க படங்களை?

பிட்டுகளைப் பற்றி கேட்க மாட்டேனே:)

நிரூபன் said...

யார்றா அவன் ஓ.வ நாராயணன் என்ற பெயரில் சிபியின் பதிவினை, என் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போடுவது;-)))

ஹா.....ஹா....

நிரூபன் said...

முதற் பாதி நறுக்குகளில் காதல் ரசம் கனிந்து வழிகிறது,

இரண்டாம் பாதியில் அரசியல் அதிரடி மூலம் அசத்தியிருக்கிறீங்க.