Wednesday, June 29, 2011

எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல?

1.சீட்டுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் - திருமாவளவனுக்கு ராமதாஸ் அறிவுரை.# கவர்ச்சி காட்ட வேணாம்னு ரேவதிக்கு, சில்க்ஸ்மிதா சொல்ற மாதிரி இருக்கே?!

---------------------

2. ஸாரி,டியர்..உங்களோட வாழ எனக்குப் பிடிக்கல.. நான் போய் ஒரு லாயரைப்பார்க்கறேன்..

அடிப்பாவி,லாயர் கூட வாழப்போறியா?

---------------------

3. நிர்வாக முறையில் மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு துறைகளில் மாற்றம் #அய்யய்யோ இதுவரை ரூ 500க்கு கை ஏந்துனவங்க எல்லாம் ரூ 5000 கேட்பாங்களே?

------------------------
4. உன் அன்பு எனக்கு முழுதாகக்கிடைக்குமா? என்றாள் காதலி . வேணாம்.நீ திணறி விடுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்தும்போதே உன்னால் தாள முடிவதில்லை.

------------------

5. நம் உடன் எப்போதும் இருப்பவர்களுக்கு நம் அருமை தெரியாது. நம்மை விட்டு விலகி இருப்பவர்களே பிரமிப்பாக பார்ப்பார்கள்

----------------------


grande_barriere_de_corail_18-austrialia.jpg

6. பத்திரிகையாளர்களுடன் பிரதமர் சந்திப்பு!#"இங்கே பாருங்க.கேள்விகளை செவிமடுக்கும் அதிகாரம் மட்டுமே எனக்கு வழங்கப்பட்டுள்ளது,பதில்கள் நோ

--------------------
7. ”எப்போ பாரு என் கிட்டே பேசிட்டே இருக்கியே? போர் அடிக்கலை?”  “என்ன பேசறோம்னே தெரியறதில்லை, தெரிஞ்சாத்தானே போரடிக்கும்?##காதல் கடலை

--------------------------

8. தவறு செய்த மனிதனின் மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சி தரும் தண்டனையை விட பெரிய தண்டனை வேறு ஏதும் இருப்பதாகத் தெரிவதில்லை

---------------------

9. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன், இனி எனது மகன் சினிமாவில் ஆர்வம் காட்டுவார்-சிரஞ்சீவி# அடடா, இதைக்கேட்கறப்ப கலைஞர்,ஸ்டாலின் கதை நினைவுவருதே

--------------------

10. கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க தி.மு.க., முடிவு#மார்க்கெட் அவுட் ஆன நடிகை கல்யாணம் பண்ண முடிவெடுக்கற மாதிரி..??

----------------------


bali_6-5-indonesia.jpg11. எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல? என்றாள் காதலி. அன்புக்கு அடிமையாய் இருக்கையில் அறிவு ஓய்வு எடுக்க போய் விடும் என்றேன்.


--------------------

12. உன்னிடம் பேசி என்னால் ஜெயிக்க முடியாது என்பதால் நேசித்து அதிலாவது ஜெயிக்கலாம் என்று பார்க்கிறேன்#லவ் ரேஸ் லவ் க்ரேஸ்

-------------------
13. என்னை இனி நடிக்க வேணாம்னு அவர் சொல்லிட்டார்- நயன் தாரா #இனிமே ஓக்கே மேடம், இத்தனை நாளா ஏன் நடிக்கலை?டவுட்டு

------------------------
14. நங்கையிலேயே நகை இருந்தும் இந்த நங்கைகள் ஏன் தான் நகை நகை என அலைகிறார்களோ?#நகைமுகன்

--------------------
15.கனிமொழிக்கு ராகுகேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் #தமிழ்நாட்டையே பிடிச்ச தோஷத்துக்கே தோஷமா?விதி வலியது

------------------

 

16. ”என் பின்னாலயே வர்றியே?வெட்கமா இல்லை?” “சம்மதம் சொன்னால் உனக்குஇணையாகவே வருவேன்,அப்புறம் உனக்கு வெட்கமா இருக்கும்,பரவால்லியா?#காதல் கடலை

---------------------
17. ”தினமும் எனக்கு ஊட்டி விடும் காதலா, இதில் உனக்கு என்ன இன்பம்?” “ஊட்டி விடும் சாக்கில் உன் உதடுகளின் ஸ்பரிசம்”#லவ்விஸம்,டச்சிஸம்

------------------

18. கனிமொழி ரொம்ப நல்லவர்-முன்னாள் கணவர்# நல்லா யோசிச்சு சொல்லுங்கண்ணே,நல்லவரா? வல்லவரா?

--------------------

19. :என்னுடன் ஜாகிங்க் வருவதை ஏன் தவிர்க்கிறாய்?” எதிர்ப்படுபவர்கள் உன்னை கவனிப்பதை நான் கவனிப்பேன்,அதை நீ கவனிப்பாய்.தேவையற்ற சங்கடங்கள் ஏன்?

------------------

20. அன்பு என்பதன் அர்த்தத்தை உன் கண்களில் கண்டேன்,அழகு என்பதன் மயக்கத்தை உன் உதட்டு சிரிப்பில் உண்டேன்.
---------------------------------
23 comments:

Unknown said...

வணக்கம்னே!!

Unknown said...

முதலாவது-அரசியலாலோஜி

Unknown said...

ரெண்டாவது-கஷ்டத்திலும் கடியாலொஜி

Unknown said...

நாலாவது-அவ்வ பெருசாலோஜி,நாங்க சின்ன பசங்க

Unknown said...

ஒன்பதாவது-ஹிஹி

Unknown said...

காதல் கடலை...ஹிஹி டேச்டாலோஜி

Unknown said...

காதல் கடலை...ஹிஹி டேச்டாலோஜி

Unknown said...

இன்னும் தமிழ்மணம் காணவில்லையே பாஸ்

குரங்குபெடல் said...

"நிர்வாக முறையில் மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு துறைகளில் மாற்றம் #அய்யய்யோ இதுவரை ரூ 500க்கு கை ஏந்துனவங்க எல்லாம் ரூ 5000 கேட்பாங்களே?"

Good Attack

Admin said...

எப்பவும்போல் அருமை..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பயங்கரம்

rajamelaiyur said...

Super . . Super . . Super . . Super . . Super . . Super . . Super . . Super . .

செங்கோவி said...

அதெல்லாம் சரி..அநாகரிகம் படத்தோட விமர்சனம் எங்கே?

சுதா SJ said...

பத்தாவது முத்து மாதிரி நச்சுன்னு இருக்கு பாஸ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

கன்னடத்தால் தமிழும், தமிழனும் அழியும் அவல நிலையில் உள்ளோம். அமெரிக்காவில் வள்ளுவனுக்கு சிலை வைக்க ஆங்கிலேயன் போராடுகிறான். ஆனால் இங்கு அய்யன் பச்சை காகிதம் கொண்டு மறைக்கப்படுகிறான். கன்னடத்தை விட தமிழ் இழிவா?

ராஜி said...

”என் பின்னாலயே வர்றியே?வெட்கமா இல்லை?” “சம்மதம் சொன்னால் உனக்குஇணையாகவே வருவேன்,அப்புறம் உனக்கு வெட்கமா இருக்கும்,பரவால்லியா?#காதல் கடலை
>>>>
வெட்கம் மட்டுமா இருக்கும், கேவலமாவும் இருக்குமே

Unknown said...

நல்லா இருக்கு....ஆனா பல இடங்களில் இரட்டை அர்த்தங்கள் ஹிஹி!

நிரூபன் said...

எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல?//

பாஸ், உங்களுக்கு ஒரு அடிமையா...யார் அந்த புண்ணியவான்...

ஹி...ஹி...

நிரூபன் said...

உன் அன்பு எனக்கு முழுதாகக்கிடைக்குமா? என்றாள் காதலி . வேணாம்.நீ திணறி விடுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்தும்போதே உன்னால் தாள முடிவதில்லை.//

தணிக்கைக் குழு இதனைக் கண்டுக்கலையா;-))

அவ்...என்னம்மா யோசிக்கிறாங்க.

நிரூபன் said...

எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல? என்றாள் காதலி. அன்புக்கு அடிமையாய் இருக்கையில் அறிவு ஓய்வு எடுக்க போய் விடும் என்றேன்.//

அவ்............இதிலை ஏதோ ஒன்னு தொக்கி நிற்கிறதே;-))

நிரூபன் said...

அன்பு என்பதன் அர்த்தத்தை உன் கண்களில் கண்டேன்,அழகு என்பதன் மயக்கத்தை உன் உதட்டு சிரிப்பில் உண்டேன்.//

கவிதை........பெண்ணை ஆழமாக ரசிக்கிறீர்கள் போல இருக்கு.

டுவிட்ஸ், அருமை, பல இடங்களில் ஒட்டியும் ஒட்டாமலும்
சிறுவர்களாகிய எமக்கு பெரியவங்க மேட்டர் பாடம் கற்பிசிருக்கீங்க.

டுவிட்ஸ் இற்கு ஏற்றாற் போல படங்களும் அருமை.

Unknown said...

arumai