Saturday, March 26, 2011

சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்

http://movies.vinkas.in/files/2011/03/Sattapadi-Kutram.jpg 

சீன் 1 டேக் 1 

விஜய் - அப்பா ,ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்க பழைய பாணில ஒரு படம் பண்ணறீங்க.. மறுபடி ஃபார்ம்க்கு வந்துடுவீங்களா?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.. மறுபடியும் கலைஞர் ஃபார்ம்க்கு வந்துடக்கூடாது.. அதுதான் முக்கியம்.

விஜய் - பல வருஷங்களா அந்த கட்சில இருந்துட்டு இப்படி திடீர்னு பல்டி அடிக்கறீங்களே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆமா , என்ன பிரயோஜனம்.. ஏதாவது தேறும்னு பார்த்தேன்.. ஒண்ணும் பப்பு வேகலை.. சரி ரூட்டை மாத்துன்னு இப்போ அம்மா பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன்..


விஜய் - சரி படத்தோட கதை என்ன?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை...

விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
https://lh3.googleusercontent.com/-VkNeltauK6M/TYLPSp8u7lI/AAAAAAAAIsA/00iJgqFegK0/s320/sattapadi_kutram_movie_stills_010.jpg
விஜய் - சரி ,இந்த டப்பா கதைல எப்படி கலைஞரை தாக்குவீங்க?


எஸ்.ஏ. சந்திரசேகர் - இது ஒரு பெரிய விஷயமா?ஆ ராசா மேட்டர்,நித்யானந்தா மேட்டர் அப்படின்னு இப்பத்த ட்ரெண்ட்ல எதெல்லாம் பரபரப்பா இருக்கோ அதை எல்லாம் தாக்கற மாதிரி பிட் பிட்டா சீன் எடுக்க வேண்டியது.. சம்பந்தமே இல்லைன்னாலும் அதை எடிட்டிங்க்ல சமாளிச்சு கதைல இணைச்சுட வேண்டியது.. எவனாவது பத்திரிக்கக்காரன் மானம் கெடற மாதிரி விமர்சனம் எழுதுனா லாஜிக் இல்லா மேஜிக் அப்படின்னு சமாளிச்சுடலாம்...

விஜய் - சரி.. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மாறு வேஷத்துல போலீஸ் கிராமத்துல வர்ற மாதிரி காட்றீங்களே.. எந்த மாங்கா மடையனாவது அப்படி  ரிவால்வரை பப்ளிக்கா வெச்சிருப்பானா? 

எஸ்.ஏ. சந்திரசேகர்- என்னப்பா சேம் சைடுல கோல் போடுறே...?

விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...

எஸ்.ஏ. சந்திரசேகர் -அதை விடப்பா.. போலீஸ் ஆஃபீசர் எம் பியை செருப்பால் அடிக்கற சீன் எப்படி? கலக்கீட்டமில்ல?

விஜய் - அட போங்கப்பா.. வால்டர் வெற்றிவேல்லயே அதை அவர் பண்ணீட்டாரே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சத்யராஜை சேர்ல கட்டிப்போட்டு வில்லன் குரூப் அவரோட குடும்பத்தை சிதைக்கற சீன் எப்பூடி?

விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... சத்யராஜோட சேகுவாரோ கெட்டப் எப்படி?
https://lh3.googleusercontent.com/-A0QdAf5cz1E/TX4F2ChY-tI/AAAAAAAAVuQ/LPkaBDz00bo/s1600/sattapadi_kutram_movie_stills_02.jpg
விஜய் - நல்ல வேளை அவர் உயிரோட இல்லை... ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?

எஸ்.ஏ. சந்திரசேகர் -சரி கோர்ட் சீன்ல சீமான் வக்கீலா எப்படி?

விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஏம்ப்பா ..தாமிரபரணில விஷால்க்கு ஜோடியா நடிச்ச  பானு நல்ல உருப்படி இல்லையா?

விஜய் - ஹூம் அப்பா மாதிரியா பேசறீங்க?..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...கமிஷனர் மனைவியா ஒரு பொண்ணை காட்றீங்களே , வேலைக்காரி மாதிரி இருக்கா.. பாத்திரத்தேர்வுல கவனம் வேணும்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஹூம்.. எல்லாம் என் நேரம்.. அதை நீ சொல்றே.. ஒரே மாதிரி கேரக்டர்ல 19 படம் பண்ணுன நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றே... சரி படத்தோட வசனங்கள் அனல் கக்குமே.. அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே....

http://3.bp.blogspot.com/-er0mTFIJBYM/TX6_J1I_kbI/AAAAAAAAF5U/3ecS0-zC7Ec/s1600/Sattapadi%2BKutram%2BAudio%2BLaunch%2BGallery%2B%25282%2529.jpg
படத்தின் உயிரோட்டமாய் அமைந்த வசனங்கள்

1.  என் பொண்ணை மட்டுமல்ல.. அவனையே அவன் மறக்கனும்.. புரியலை..? அவனை அடிக்காதீங்க.. அடிக்ட் ஆக்குங்க...


2. நீ காதலை இழந்ததை நினைச்சு கவலைப்படாதே.. நம்பிக்கையை இழக்காதே..


3. தோழர்களே. உங்கள் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் . ( சேகுவாரா ,பிரபாகரன் வீர உரையிலிருந்து சுட்டது)

4.  நீங்க உளவுத்துறையா?

ஹூம்.. அந்தப்படத்தைக்கூட நான் பார்க்கலை.. ( நல்ல வேளை தப்பிச்சாரு)

5.  தீவிரவாதியா? அது ஊரை ஏமாத்த நீங்க எனக்கு வெச்ச பேரு.. நான் போராளி.. காட்டுக்குள்ள கூடி இருக்கற கந்தகக்கோட்டை...

6.  அரிசியைக் கடத்துனாங்க, சாராயத்தை கடத்துனாங்க.. இப்போ அரசாங்க ஆஃபீசரையே கடத்தறாங்களே..

7. எம் பி சார் உங்களை பார்க்க ஆசைப்படறார்... 

நான் என்ன சமைஞ்ச பொண்ணா? ( சத்யராஜின் இந்த நக்கல் கமெண்ட்டுக்கு செம கிளாப்ஸ்)

8. தலைவரே.. அந்தாள் கூட எதுக்கு சாவகாசம்..? சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டீங்க

நம்ம இலாகா (POOR ) புவரா இருக்கலாம்.. ஆனா நான் எப்பவும் பவரா (POWER) இருப்பேன்..

9. டியர்.. நான் ஒரு கவிதை சொல்லட்டா?

ம்.. ( முதல்ல நீ சொல்லு.. கவிதையா.. கருமாந்திரமா?ன்னு நாங்க சொல்றோம் # பக்கத்து சீட் ஆள்)

உன் கண்களில் இவ்வளவு மின்சாரம் இருக்கிறதே.., நீ என்ன நிலக்கரிக்கு பிறந்தவளா?   ( அடங்கோ.... அப்பாவை அவமானப்படுத்திட்டு பேச்சைப்பார்...)

10. இதயத்துக்கும்,மூளைக்கும் நடக்கற போராட்டத்துல உருவாகறதுதான் காதல்.. இந்த உலகமே அதுலதானே இயங்கிட்டு இருக்கு..?

11. ஒரு மினிஸ்டர் என் மேலயே நீ கை வைக்கறியா?

நீ மட்டும் மக்கள் பணத்துல கை வைக்கலாமா?

12. ராசாவை  போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

. 13.  எங்களை மாதிரி ஒரு போராளி சாகலாம்.. ஆனா உங்களை மாதிரி ஒரு லீடர் சாகக்கூடாது..அப்புறம் நம்ம இயக்கமே இல்லாம போயிடும்..

14. எனக்காக ஒருத்தி வாழறதை விட , 4 பேருக்காக நான் வாழ ஆசைப்படறேன்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Sattapadi-Kutram-Audio-Launch/Sattapadi-Kutram-Audio-Launch-0022.jpg

கோர்ட் சீனில் சீமான் அனல் கக்கும் வசனங்கள்

1,  நம்ம தலைவருக்கு திருக்குறள் ஏன் பிடிக்கும் தெரியுமா?

அதுல அதிகாரம் இருக்கே..? ( பாவம் கலைஞர்)

காமத்துப்பால் கூட இருக்கு...

அது அவரோட தனிப்பட்ட விஷயம்...

2.  நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)

3. எல்லாம் தெரிஞ்சவன் வக்கீல்.. எதுவுமே தெரியாதவன் அமைச்சர்.. 

4. யுவர் ஆனர்.. என்னால இந்த குற்றவாளிக்கூண்டுல நிக்க முடியல... ஒரு சேர் குடுங்க ..

யுவர் ஆனர்.. இவருக்கு CHAIR  குடுத்தா உங்களுக்கும் SHARE குடுக்க ட்ரை பண்ணுவாரு...

5. ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)

6. முட்டாப்பசங்க எல்லாம் ஓட்டுப்போட்டு அயோக்கியப்பசங்களை ஆள வைப்பதுக்குப்பேருதான் தேர்தல்னு பெரியார் சொல்லி இருக்காரு.. ( அது எங்களுக்கே தெரியும்.. நீ என்ன சொல்றே # ஆடியன்ஸ்)

7. இப்பவாவது விழிச்சுக்குங்க.. இப்பவும் மக்கள்ட்ட விழிப்புணர்வு வர்லைன்னா அப்புறம் அவங்களுக்கு விழிக்க விழிகளே இல்லாம  போயிடும்.


எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... இந்தப்படம் எத்தனி நாள் ஓடும்?

விஜய் - படத்தோட மேக்கிங்க் ஸ்டைல்  மகா மட்டமா இருந்தாலும் செகண்ட் ஆஃப்ல வர்ற சில வசனங்களுக்காக 30 நாட்கள் ஓடும்... அதுவும் பி செண்ட்டர்ல தான்.. ஏ செண்ட்டர்ல 20 நாள் தான்.. சி செண்ட்டர்ல ஒரு வாரம்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி.. ஆனந்த விகடன் மார்க்?

விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....

எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?

விஜய் - ஓக்கே என ரேங்க்  போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்... 

. ஈரோடு சண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. ( இது மட்டும் சி பி வாய்ஸ்)

டிஸ்கி - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

65 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

firstuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு ஏ படத்துக்கு எத்தனை யு

உணவு உலகம் said...

சாரி, டூ மினிட்ஸ் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

இல்லை .. 17 நிமிடங்கள் லேட்

உணவு உலகம் said...

ஆமா இல்ல!

உணவு உலகம் said...

அதற்கு தாங்கள் தரும் தண்டனையை ஏற்று கொள்கிறேன், மன்னா!

உணவு உலகம் said...

வழக்கம்போல வந்தேன், வாசித்தேன், ரசித்தேன்,வாக்கிட்டேன், விடு ஜூட்.

உணவு உலகம் said...

8

உணவு உலகம் said...

9

உணவு உலகம் said...

10.இதுக்காகவாவது ஒரு வடை கொடுங்களேன். !

Unknown said...

இந்த நாதாரிங்க ஒரு கெழவிய குளிக்கும் போது படம் எடுத்து மிரட்டுசிங்க.........இப்போ என்னடான்னா இன்னொரு படம் எடுத்து மக்களை மிரட்டுதுங்க ஹிஹி!

ஆனா சிபி உன் நேர்மை பிடிசிருக்குய்யா அதனால தானே கடசில உன் பேர போட்டு இருக்க ஹிஹி!

Ram said...

படம்.. படம்.. படம்.. மட்டமான படம்..

செங்கோவி said...

அந்த உருப்படி தேறுச்சா இல்லையா?

கோவை நேரம் said...

ஆவலுடன் எதிர்பார்க்கிற சாந்தி என்னாச்சு ...

settaikkaran said...

//விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?//

அதுனாலதான் இவரு நடிக்கலியா? :-)

Unknown said...

//எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?

விஜய் - ஓக்கே என ரேங்க் போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்...//
எப்படியும் ரெண்டாவது நாள் நெறைய சென்சார் ஆகும்ன்னுதான் நேத்தே படம் பார்த்தாச்சு CPS !
திருப்பூர் MPS தியேட்டர்ல 50 பேர் கூட இல்ல...
அமைதியா படம் பார்க்க முடிஞ்சது, என்ன ஒரு PC (போலீஸ் தான்) கையில வாக்கி டாக்கியோட வந்த 1st Half ல கொஞ்சம் இடையில remix போட்டாரு...
விமர்சனம் நீங்க போட்ருவீங்கன்னு தான் கமெண்ட்ஸ் நான் போட்டறேன்....
இந்த படத்தை தடை செய்யக்கோரி போட்ட மனு 29 தேதி தான் கோர்டுக்கு வருது...அதுக்குள்ளார மக்காஸ் எல்லோரும் பார்த்திடுவாங்க....
(அதுக்குத் தானே தேர்தல் நேரத்தில ரிலீஸ் ஆகுது....
போன தேர்தலப்போ சுயேச்சை MLA வந்துச்சே 1st day house full - அது போன PERIOD (!) ஹ்ஹாங் )

settaikkaran said...

//விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...//

இவங்க கேட்டது சரி, அந்தப்பொண்ணு "எத்தனை கிலோ வேணும்?"னு திருப்பிக் கேட்டுச்சா..?

settaikkaran said...

//விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?//

அதுக்கும் முன்னாலே சிவாஜி நடிச்ச ஒரு படத்துலே வந்தாச்சு! படம் பேரு ஞாபகத்துக்கு வரலே!

settaikkaran said...

//ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?//

இரண்டரை மணிநேரத்துலே 42 சுருட்டுப் பிடிக்கிறது சாதனைதானே?

settaikkaran said...

//விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...//

அப்பாடா, ஒண்ணாவது உருப்படியா இருக்கா? தப்பிச்சீங்க!

settaikkaran said...

மொத்தத்துலே பார்க்க வேணாங்குறீங்க. சரி!

Unknown said...

எஸ் ஏசி படம்னாலே உருப்பட்ட மாதிரிதான் :-)

ராஜி said...

அட விமர்சனத்தை இப்படி கூட போடலாமா? பின்னீட்டீங்க.

ராஜி said...

டியர் நான் ஒரு கவிதை சொல்றேன்.
நீ முதல்ல சொல்லு. அது கவிதையா? கருமாந்திரமா? னு நான் சொல்றேன் (பக்கத்து சீட் ஆள்)
>>
அட இது நல்லா இருக்கே

ராஜி said...

வந்தேன், படித்தேன், ரசித்தேன், கமெண்டினேன், கிளம்புகிறேன்

பாட்டு ரசிகன் said...

விமர்சனம் பாணி அருமை..
படிப்தற்கு நகைச்சுவையாகவும் நையாணடியாகவும் இருந்தது..

பாட்டு ரசிகன் said...

மிஸ்டர் தமிழ்மணத்தில் 7-வது ஓட்டையும் போட்டுட்டேன்...

Unknown said...

வணக்கம் பாஸ்....

ஆமா விசையை வைத்து அடிக்கடி ஓட்டுறீங்க...
கேக்க ஆள் இல்லைன்னு நெனைச்சீங்களா??

அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

Unknown said...

//
விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை..//

ஹிஹிஹி ஏன் சி பி கூட செம காண்டா தானே இருக்காரு??நூறுக்கு நூறு கூட போடுவாரு!!

Unknown said...

//ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)
//
ஹிஹி யாரு??
சி பி க்கு இருபத்தி நாலு சின்ன வீடு தானே??

ரஹீம் கஸ்ஸாலி said...

மைந்தன் சிவா said...
ஹிஹி யாரு??
சி பி க்கு இருபத்தி நாலு சின்ன வீடு தானே??
///
ஏப்பா சிவா....நீ குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவே போல....சி.பி.க்கு மூனோ, நாளோ இருப்பதாத்தான் கேள்வி..ஹி...ஹி...

பொ.முருகன் said...

எபபடி பாஸ் பொறுமையா உக்காந்து படம் பாக்றீங்க.

Unknown said...

//எபபடி பாஸ் பொறுமையா உக்காந்து படம் பாக்றீங்க. //
சீட்ல தான் ன்னு ஈஸியா சொல்லிடலாம்...
அதை தாங்க்கிற பொறுமை உங்களுக்கு வேணும் முருகன் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Senthil

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய் சி பி! விமர்சனம் ரொம்ப வித்தியாசமா இருக்கு!! ரெண்டுபேரோட உரையாடல வச்சே மொத்த மேட்டரையும் சொல்லிட்டிங்களே! சூப்பருங்க!!

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா.. நண்பன் வந்துட்டாரு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....


ஹா.......ஹா....... நக்கல்!

சக்தி கல்வி மையம் said...

இன்னைக்கு எந்த தியேட்டரு?

சக்தி கல்வி மையம் said...

40..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
.
இந்தமாதிரி அரைச்ச மாவையே அரைக்கும் டைரக்டர்சுக்கு இத விட ஒரு கடி இருக்க முடியாது! வாழ்த்துக்கள் நண்பா! இனியாவது திருந்துறாங்களா னு பார்ப்போம்!!

சி.பி.செந்தில்குமார் said...

>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னைக்கு எந்த தியேட்டரு?

வெள்ளீக்கிழமை மட்டுமே தியேட்டர் வாசம்... மற்ற நாளில் வீட்டு வாசம்.. அல்லது ஆஃபீஸ் வாசம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய் சி பி! விமர்சனம் ரொம்ப வித்தியாசமா இருக்கு!! ரெண்டுபேரோட உரையாடல வச்சே மொத்த மேட்டரையும் சொல்லிட்டிங்களே! சூப்பருங்க!

நண்பா! நார்மலான படம்னா நார்மல் விமர்சனம், டப்பா படம்னா படிக்கறவ்ங்களுக்கு சுவராஸ்யத்தை கூட்ட .. அப்படி... ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரெண்டாவது படத்த நல்லா உற்று கவனிக்க வைத்துவிட்டீர்கள்! - பின்னாடி தூரத்துல ரெண்டு ரோஜாப்பூ இருக்கே அத சொன்னேன்! ( ஹி.......ஹி......ஹி...... )

Arul Kumar P அருள் குமார் P said...

ஹும்ம்... நல்ல விமர்சனம் . ஆனா படத்த கண்டிப்பா பார்க்க போறது இல்லை . இங்க புனேல அந்த மாதிரி படம் எல்லாம் ரிலீஸ் பண்ண மாட்டாங்க . நான் தப்பிச்சேன் . சட்டப்படி குற்றம் மொதல்ல மாட்டிட்டு உங்ககிட்ட முழி பிதுங்கி பொய் இருக்கு. மற்ற படங்கள் எல்லாம் இந்த sat ,sunday ல பார்துடுவிங்கன ninaikkuren .

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

12. ராசாவை போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

அட விடுங்க செந்தில்! இந்த மாதிரி வசங்கள் சினிமாவுல வந்தா தப்பே இல்லைங்க! எல்லாரும் கை தட்டி ரசிப்பாங்க! ஆனா நாம மட்டும் இந்த மாதிரி ப்ளாக் ல எழுதக்கூடாதாம்! ( எ .கொ.ச )

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

12. ராசாவை போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

அட விடுங்க செந்தில்! இந்த மாதிரி வசங்கள் சினிமாவுல வந்தா தப்பே இல்லைங்க! எல்லாரும் கை தட்டி ரசிப்பாங்க! ஆனா நாம மட்டும் இந்த மாதிரி ப்ளாக் ல எழுதக்கூடாதாம்! ( எ .கொ.ச )

ஆம் நண்பா.. மணி உனக்கு கனி எனக்கு ஜோக் போட்டப்ப எதிர்ப்பு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய் சி பி! விமர்சனம் ரொம்ப வித்தியாசமா இருக்கு!! ரெண்டுபேரோட உரையாடல வச்சே மொத்த மேட்டரையும் சொல்லிட்டிங்களே! சூப்பருங்க!

நண்பா! நார்மலான படம்னா நார்மல் விமர்சனம், டப்பா படம்னா படிக்கறவ்ங்களுக்கு சுவராஸ்யத்தை கூட்ட .. அப்படி... ஹி ஹி

March 26, 2011 12:25 PM

இதனால தானே உங்கள எல்லோரும் ரொம்ப நல்லவேன்னு சொல்றாங்க!!


( ஒரு டவுட்டு! - இப்பவெல்லாம் வடிவேலுவோட பன்ச் கேட்கும் போது ரசிக்கிறீர்களா? வெறுக்கிறீர்களா? )

சி.பி.செந்தில்குமார் said...

வெட்டிப்பையன்...! said...

ஹும்ம்... நல்ல விமர்சனம் . ஆனா படத்த கண்டிப்பா பார்க்க போறது இல்லை . இங்க புனேல அந்த மாதிரி படம் எல்லாம் ரிலீஸ் பண்ண மாட்டாங்க . நான் தப்பிச்சேன் . சட்டப்படி குற்றம் மொதல்ல மாட்டிட்டு உங்ககிட்ட முழி பிதுங்கி பொய் இருக்கு. மற்ற படங்கள் எல்லாம் இந்த sat ,sunday ல பார்துடுவிங்கன ninaikkuren .

அவ்வளவுதான் சார்.. இனி பார்க்க ஒண்ணும் இல்ல..ஓவர்

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

வணக்கம் பாஸ்....

ஆமா விசையை வைத்து அடிக்கடி ஓட்டுறீங்க...
கேக்க ஆள் இல்லைன்னு நெனைச்சீங்களா??

அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

என்னை எதிர்ப்பவர்களையே நான் கோபிப்பதில்லை.. நீங்க நம்ம ஆதரவாளர்கள் ஆச்சே

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

அட விமர்சனத்தை இப்படி கூட போடலாமா? பின்னீட்டீங்க.

ரைட்டு.. படம் டப்பான்னாலும் விமர்சனம் டாப்பா இருக்குன்னு சொல்ல வைக்க ஆசை

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

அதற்கு தாங்கள் தரும் தண்டனையை ஏற்று கொள்கிறேன், மன்னா!

நீங்கள் தான் எனக்கு அண்ணா

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

இந்த நாதாரிங்க ஒரு கெழவிய குளிக்கும் போது படம் எடுத்து மிரட்டுசிங்க.........இப்போ என்னடான்னா இன்னொரு படம் எடுத்து மக்களை மிரட்டுதுங்க ஹிஹி!

ஆனா சிபி உன் நேர்மை பிடிசிருக்குய்யா அதனால தானே கடசில உன் பேர போட்டு இருக்க ஹிஹி!

தக்காளி.. உனக்கு மட்டும் யாரும் மைனஸ் ஓட்டு போடறதில்லையே அது ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

ஆவலுடன் எதிர்பார்க்கிற சாந்தி என்னாச்சு

நான் திருந்தீட்டேன் சார்.. ( ஹி ஹி படம் பிக்சர் பெட்டி வர்லை)

சி.பி.செந்தில்குமார் said...

>>சேட்டைக்காரன் said...

//விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?//

அதுக்கும் முன்னாலே சிவாஜி நடிச்ச ஒரு படத்துலே வந்தாச்சு! படம் பேரு ஞாபகத்துக்கு வரலே!

ம் ம் ஞாபகம் வந்தால் சொல்றேன் அண்ணே

Anonymous said...

இந்த கலை படைப்பை த்டுக்க முயற்சி நு அழுவாச்சி வேற நான்சன்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

சதீஷ்.. அதை விடக்காமெடி.. இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய விடலைன்னா தற்கொலை செஞ்சுக்கரதைத்தவிர வேற வழி இல்லைன்னு எஸ் ஏ சி சொன்னதுதான்.. ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு மினிஸ்டர் என் மேலயே நீ கை வைக்கறியா?


நீ மட்டும் மக்கள் பணத்துல கை வைக்கலாமா?///

கொய்யால சரியான பதில்...

MANO நாஞ்சில் மனோ said...

//ராசாவை போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?


ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )//

ஆமா ராசா யாரை வச்சிருக்காரு...?

MANO நாஞ்சில் மனோ said...

//நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)//

ராசா செத்தான்....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)///

எலேய் என்ன எங்க ஊர் பக்கம் வந்தா மாதிரி இருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....//

ஹா ஹா ஹா ஹா அப்பிடி போடு அருவாளை...

ஜெய்லானி said...

இதெல்லாம் எப்போ எங்கே உட்கார்ந்து எழுதுறீங்கன்னு ஒரு பதிவு போட்டா தேவல...!!

அப்பன் ,புள்ளைய வச்சி போட்ட அந்த டயலாக் சூப்பர் :-)))

முரளி said...

நல்ல விமர்சனம் நண்பரே தொடரட்டும் உனது பணி நிறைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்

ELANGOVAN said...

அப்பனும் பயனும் ஒன்னாம் நம்பர் கேடிங்க! சங்கவிய வெச்சிருந்து எல்லாம் மறந்துடுச்சி! இவனுக்கு 86kku மேலே இருக்கும். சத்யராஜ் ஒரு அடுத்த கேடி, இவன் எத்தனை heroine பின்னால ஜொள்ளு விட்டான். ஏன்டா வுங்க படத்த லொள்ளு சபால கிண்டல் பண்ணதுக்கு மிரட்னிகளே, எத்தனை reportara மிரடிருக்கிங்க.

-------------------------
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லா வற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் சீமான் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக சீமான் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது , ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடிய வில்லை.

N.H. Narasimma Prasad said...

இந்த தேர்தலில் திமுக மட்டும் திரும்ப ஆட்சிக்கு வந்தால் விஜய்யையும், அவரது அப்பாவையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. விஜய்யின் ஒரு படம் பிரச்சனை காரணமாக இன்று இவர்கள் அதிமுக பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். ஆனால் இதே அப்பனும், மகனும் திமுக அரசை பயன்படுத்தி கொண்டு என்ன ஆட்டம் ஆடினார்கள்? அப்போதெல்லாம் அந்த கட்சி ஊழல் செய்தது என்று தெரியவில்லையா?