Tuesday, March 08, 2011

என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் (பாகம் 1 )

http://tamilwavez.com/uploads/2/7/4/8/2748076/4981172_orig.jpg 
பொதுவா ஒரு மனுஷன் கேவலப்படுற மேட்டரை வெளில சொல்ல மாட்டான்.(அப்போ  நீ மனுஷன் இல்லையா?) அதுவும் பொண்ணால கேவலப்பட்டா அது ஆளுங்கட்சிகள் செய்யும் ஊழல் மாதிரி வெளிலயே வராது...இதையும் தாண்டி நான் ஏன் அதை வெளில சொல்றேன்னா மனிதனின் மனோவியல் சாஸ்திரம் தான்.அடுத்தவனுக்கு  ஒரு கேவலம்னா அதை ஆர்வமா படிப்போம்.சரி... அந்த கேவலத்தை ஏன் கல்கியின் பொன்னியின் செல்வன் மாதிரி பாகம் 1, பாகம் 2 -னு போடறேன்னா  நிறைய பேர்கிட்டே கேவலப்பட்டு இருக்கேன்.. ஹி ஹி .

நான் ரொம்ப சின்னப்பையனா இருந்தப்ப (இப்போ சின்னப்பையன்னா அப்போ ரொம்ப சின்னப்பையன்தானே? - நான் கரெக்டா பேசறேனா?)எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போன அனுபவம் தான் இந்த பதிவோட KNOT.

மணல் கயிறு படம் பார்த்த எஃபக்டோ என்னவோ நான் சில கண்டிஷன்ஸ் போட்டேன்.

1. பொண்ணு சிவப்பா கலரா இருக்கனும். ( பிளாக்& ஒயிட்னா ஒத்துக்க மாட்டியா?) ஆனா நான் கறுப்புத்தான். கறுப்பும் ,சிவப்பும்  சேர்ந்தா நாடாளுமாமே..?#டி எம் கே

2.பிளஸ் டூ வரை படிச்சிருந்தா போதும். ( சின்ன வயசு ஃபிகரா சிக்கும்னு ஒரு நப்பாசை)

3. சைவமா இருக்கனும்.(பின்னால சண்டை வந்தாக்கூட கடிக்கக்கூடாது.).அதுவும் சுத்த சைவமா முட்டை,கேக் கூட சாப்பிடாததா இருக்கனும் ( செலவு கம்மி)

4.வேலைக்குப்போற பொண்ணா இருக்கக்கூடாது...(ஏன்னா எனக்கு மட்டும் வேலை இல்லாதப்ப மனைவி மட்டும் வேலைக்குப்போனா நமக்குக்கேவலம் தானே..?)

மேலே சொன்ன கண்டிஷன்லாம் எதுவுமே செட் ஆகலை.(ஃபிகரும் செட் ஆகலை) அதுக்கு முக்கியக்காரணம் எனக்கு செவ்வாய் தோஷம் இருந்ததுதான்.(இப்போ வெள்ளி தோஷம் மட்டும் #சினிமா ). சரின்னு என் கண்டிஷன்சை கொஞ்சம் கொஞ்சமா தளர்த்திட்டே வந்தேன்.கலைஞர் சோனியா கிட்டே பணிஞ்சு போற மாதிரி..

ஈரோட்ல ஜெகநாத புரம் காலனில ஒரு பொண்ணு இருக்கறதா சொன்னாங்க.. ( அவ்வளவு பெரிய காலனில ஒரே ஒரு பொண்ணா?)சரின்னு பொண்ணு  பார்க்கப்போனோம்.பொண்ணோட வீட்ல பொண்ணு பார்க்க விட மாட்டாங்க.அதனால பக்கத்து வீட்டுல ஏற்பாடு.அந்த வீட்ல 3 ஃபிகருங்க..28 ,22, 18 (வயசு).மூணு ஃபிகருமே எனக்கு பிடிச்சுப்போச்சு.( நாம எந்த ஃபிகரை வாழ்க்கைல பிடிக்கலைன்னு சொல்லி இருக்கோம்?)

அம்மா.. எனக்கு 3மே ஓக்கே.. அப்படின்னேன். எங்கம்மா முறைச்சாங்க..டேய்.. அவங்க பக்கத்து வீட்டுப்பொண்ணுங்க..அதும் ஒரு பொண்ணு கல்யாணம் ஆனது..நாம பார்க்க வேண்டிய பொண்ணு இப்பத்தான் வரும்.. வெயிட்.

தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீ கணக்கா ( ஏன் பிசிக்ஸா,கெமிஸ்ட்ரியா இல்லை?) ஒரு ஃபிகர் வந்தது.. சினிமால பார்க்கற மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணலை. பவுடர் கூட அடிக்கலை.ஆனா செம கலர். ( அதென்ன செம கலர் ? செம்மையான கலர்  தான் மருவி செம கலர் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்)

5 நிமிஷம் எங்க முன்னால உக்காந்திருந்தது. என்னை தைரியமா பார்த்துது.(பொண்ணுங்க எல்லாம் தைரியமா பார்த்துடறாங்கப்பா) அப்புறம் உள்ளே போயிடுச்சு.போய் பக்கத்து வீட்டு ஃபிகர் 28 வயசுன்னு சொன்னேனே அந்த அக்கா கிட்டே (இப்ப திடீர்னு ஏன் அக்கா?#கல்யாணம் ஆனாலே அந்த லிஸ்ட்டுக்கு கொண்டு வந்துடுவோம் இல்ல?) மாப்பிள்ளை என்னை விட கலர் கம்மி.. எனக்கு பிடிக்கலை. இதை அவங்க மனம் கோணாம சொல்லிடுங்கக்கா.. அப்படின்னு சொல்லுச்சாம்...

இதை அப்படியே ஒப்பனா, பப்ளிக்கா சொன்னாங்க..எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு..அப்பத்தான் நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன். பணால் ஆச்சு.. எல்லாரும் கிளம்பிட்டோம்.பொண்ணு பேரு அபிராமி.நான் முதன் முதலா பார்த்த பொண்ணோட ஞாபகமாத்தான் இப்போ என் குழந்தைக்கு அபிராமின்னு பெயர் வெச்சதா நினைக்காதீங்க.. அது எதேச்சையா நடந்தது.

அடுத்து ஈரோடு லோட்டஸ் அப்போலோ ஹாஸ்பிடல்ல ரிசப்ஷனிஷ்ட்டா ஒர்க் பண்ற மோஹனா அப்படின்னு ஒரு பொண்ணு. அதைப்பார்க்க போனோம்.வீட்ல பார்த்தா செண்ட்டிமெண்ட்டா ராசி இல்லைன்னு அவங்க ஒர்க் பண்ற ஹாஸ்பிடலுக்கே போனோம். பொண்ணோட அப்பா பேரு சிவக்குமார்.அவர் ஹாஸ்பிடலை சுத்தி காண்பிச்சார். (அந்த பொண்ணு வேலை செய்யுதா?ஓனரா?)
http://www.chennai365.com/wp-content/uploads/actress/Laila/Laila.jpg
மொத்தம் 36 நர்சுங்க..எல்லாம் கேரளா ஃபிகருங்க.. நீங்க 1000 தான் சொல்லுங்க.. அல்லது 1001 கூட சொல்லுங்க கேரளா ஃபிகர்னா கேரளா ஃபிகர் தான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்.(இது பற்றி தனி பதிவு மறுக்கா போடறேன் ,டைட்டில்-பாலக்காட்டுப்பொண்ணுங்க - தேங்காய் பன்னுங்க )

சினிமால டூயட் சீன் காட்டறப்ப தோழிகளைக்காட்டி பிறகு கடைசியா ஹீரோயினை காட்டுன மாதிரி மோஹனாவை  கடைசியா காட்னாங்க.. அடாடா.. லைலா மாதிரி தில் படத்துல வருமே உன் சமையல்  அறையில் நான் உப்பா? சர்க்கரையா? பாட்டுக்கு . அதே மாதிரி சாயல்...வயசு 19 3/4 தான் இருக்கும்.( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்த மாதிரியே சொல்றானே)

நல்லா பேசுச்சு... நானும் பேசுனேன். செம கடலை...அப்புறம் ஒரு ஆச்சரியம் நடந்தது.. பொண்ணுக்கு என்னை பிடிச்சிடுச்சு... ஒரே கொண்டாட்டம் தான்.

கிட்டத்தட்ட நிச்சயம் வரை போயிட்டோம். அப்புறம் தான் விதி விளையாடுச்சு.( விதி என்ன ஸ்போர்ட்ஸ்மேனா?) எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி  (வாய் மட்டுமா?)பொண்ணோட அப்பா கிட்டே பேச்சு வாக்குல சார்... நீங்க புக்ஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களா? ஆனந்த விகடன்,குமுதம் இதுல எல்லாம் என் ஜோக்ஸ் வரும்...

அவர் உடனே..ஆமா.. பார்த்திருக்கேன்.. பாக்யால கூட ஏ ஜோக்ஸ் எழுதுவீங்களே.. அது நீங்க தானா?

ஹி ஹி ஆமா சார்...

அவர் டக்குன்னு ஆள் சைலண்ட் ஆகிட்டார். எதுவும் பேசல. அடுத்த நாள் மோஹனா ஃபோன் போட்டுச்சு (கீழே போடலை)

”நீங்க புக்குக்கு எழுதறது அப்பாவுக்கு பிடிக்கலை’

ஏன்?

ஏ ஜோக் நிறைய வருதாம்... அப்போ உங்க கேரக்டரும் அதே மாதிரி தானே இருக்கும், இந்த இடம் வேணாம்னு சொல்றார்”

அட.. ராஜேஷ் குமார் கூட க்ரைம் கதை எழுதறார்,, அப்போ அவர் கொலை பண்ற ஆளா?

அப்படி இல்லைங்க... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. எங்கப்பா அப்படி ஃபீல் பண்றாரு...

சரி இப்போ என்ன பண்ணனும்னு சொல்றே,..?

நீங்க பாக்யா புக்குக்கு ஜோக் எழுதறதை  நிறுத்தனும்.. அதை எங்கப்பா கிட்டே சொல்லனும்.இனிமே அந்த புக்குக்கு ஏ ஜோக் எழுத மாட்டேன்ன்னு....

அது நடக்காது.. கே பாக்யராஜ் சார் புக்கிற்கு தொடர்ந்து எழுத காரணமே அவர் எப்பவாவது என் எழுத்துல இன்ஸ்பிரேஷன் ஆகி ஏதாவது வசன சான்ஸோ, காமெடி ஸ்கிரிப்டோ தருவார்னு தான்.சாரி....

அவ்வளவுதான்....அந்த மோஹனா சேப்டர் க்ளோஸ்......
http://thatstamil.oneindia.in/images32/optimized/lailao-500.jpg
இந்த 2 பெண் பார்க்கும் படலங்கள்ல இருந்து நமக்கு தெரியற நீதி என்னன்னா..

1. பொண்ணு பார்க்கப்போறப்ப இயற்கையா என்ன அழகு இருக்கோ அது போதும்னு அசால்ட்டா இருக்கக்கூடாது.. பியூட்டி பார்லர் போய் நம்மை அழகு படுத்திட்டு டீசண்ட்டா போகனும்...(அப்போ நான் இண்டீசண்ட்டா..?)

2. ஓப்பனா எதையும் நாம பேசிடக்கூடாது.. மனசுக்குள்ளே என்ன எண்ணம் இருந்தாலும் வெளில நல்லவன் மாதிரியே காட்டிக்கனும். உண்மையான மனிதனுக்கு மதிப்பில்லை.. பொய்யா நல்லவனா வேஷம் போடனும்.

நல்ல வேளை அந்த மோஹனாவோட அப்பா பாக்யா மட்டும் படிச்சாரு.. விருந்து,திரைச்சித்ரா,ஹெர்குலிஸ் எல்லாம் படிக்கலை... ஒரு வேளை அதையும் படிச்சிருப்பாரோ#டவுட்டு.

டிஸ்கி -1 : மகளிர் தினத்துக்கும், இந்த பெண் பார்க்கும் படலத்துக்கும் என்ன சம்பந்தம்.?என்னை கட்டிக்காம போனதே அந்த பொண்ணுங்களுக்கு நல்லது தானே.. அது பெண் குலத்துக்கு நல்லது நடந்த மாதிரிதானே...#சமாளிஃபிகேஷன்

டிஸ்கி -2 : பதிவுக்கும், லைலா ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம்னா முத பொண்ணு ஃபோட்டொ, 2வது பொண்ணு ஃபோட்டோ 2ம் வெச்சிருக்கேன். ஆனா இந்த பதிவு போட அனுமதி கொடுத்த அந்த 2 ஃபிகருங்களும் ,ஃபோட்டோ போட அனுமதிக்கலை..அதனால நடிகை ஃபோட்டோ...

டிஸ்கி 3 - முதலாவதா பார்த்த ஃபிகர் அபிராமி த்ரிஷா மாதிரின்னு சொல்ல முடியாது.. ஆனா அந்த ஃபிகரோட டிரஸ்ஸிங்க் சென்ஸ் த்ரிஷா மாதிரி இருக்கும். வழக்கமா பொண்ணுங்க வளையல் போடும்போது புடவை கலர்ல போடுவாங்க.. ஆனா த்ரிஷாவோட இந்த ஸ்டில்லுல பாருங்க பார்டர் கலர்+ புடவை கலர் 2 காம்பினேஷனும் மேட்ச் ஆகற மாதிரி வளையல் கலர் மேட்ச் ஆகறதை....அந்த ஃபிகரும் அப்படித்தான் போட்டிருந்தது..#நல்லா நோட் பண்ணு ஆனா கோட்டை விட்டுடு@மனசாட்சி

116 comments:

Speed Master said...

1

சக்தி கல்வி மையம் said...

I...

Speed Master said...

ஐயா வடை எனக்குதான் கருன்

Speed Master said...

இது தான் புள்ளி வைக்கர நேரத்தில முந்தரது

சி.பி.செந்தில்குமார் said...

ஓஹோ ஸ்பீடு மாஸ்டர்னு இதுக்குத்தான் பேரா.. அடடா..

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், யதார்த்தம் கலந்த உள்ளத்து உணர்வுகளைப் பதிவாக்கியிருக்கிறீர்கள். பொண்ணு பார்க்கப் போறதுக்கு டிப்ஸ்சு வேறை. அருமை அருமை.
ஒரு கேள்வி நாம ஏன் பொண்ணு பார்க்கப் போகணும்? நாமளே நமக்குப் பிடித்த பொண்ணைத் தேடிக்க கூடாதா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

பொண்ணு பார்க்க நாம போட்ட கண்டிஷன் எல்லாம் மலையேறி போச்சு. அப்படி போட்டா கடைசியில சப்ப பிகர் கூட சிக்காது. சரியா? தப்பா?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், யதார்த்தம் கலந்த உள்ளத்து உணர்வுகளைப் பதிவாக்கியிருக்கிறீர்கள். பொண்ணு பார்க்கப் போறதுக்கு டிப்ஸ்சு வேறை. அருமை அருமை.
ஒரு கேள்வி நாம ஏன் பொண்ணு பார்க்கப் போகணும்? நாமளே நமக்குப் பிடித்த பொண்ணைத் தேடிக்க கூடாதா?

hi hi ஹி அது எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்.. ஹி ஹ்

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

பொண்ணு பார்க்க நாம போட்ட கண்டிஷன் எல்லாம் மலையேறி போச்சு. அப்படி போட்டா கடைசியில சப்ப பிகர் கூட சிக்காது. சரியா? தப்பா?

ஹி ஹி ஆமா ஆமா

நிரூபன் said...

எம்மையெல்லாம் சிரிக்க வைக்கும், புன்னகை CP(senior police superintendent- SP செந்தில் குமார்) அவர்களின் உள் மனதிற்குள் இத்தனை சோகங்களா? வெகு விரைவில் உங்கள் எண்ணப்படி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம். சும்மா இருந்து சிரிப்பை வரவழைக்கிற எரிமலையைச் சீண்டினது யாரு? அதான் கேட்கிறனில்லை.

Speed Master said...

யப்பா என்னால சிரிப்ப அடக்கமுடியல

சக்தி கல்வி மையம் said...

Speed Master said...

இது தான் புள்ளி வைக்கர நேரத்தில முந்தரது
///அதுதான் முந்தியாச்சே... இதுல ஒர் சந்தோஷம். ம்.ம்...

Speed Master said...

//வேடந்தாங்கல் - கருன் said...
Speed Master said...

இது தான் புள்ளி வைக்கர நேரத்தில முந்தரது
///அதுதான் முந்தியாச்சே... இதுல ஒர் சந்தோஷம். ம்.ம்...

பின்னே பிரபல பதிவர் பதிவில் வடை வாங்குவது சுலபமாஎன்ன சி.பி சார்

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.. ha.ha.ha.ha.ha.ha....

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

யப்பா என்னால சிரிப்ப அடக்கமுடியல

அவனவன் வேதனைல இருக்கான்.. உங்களுக்கு கொண்டாட்டமா? எஞ்சாய்

சக்தி கல்வி மையம் said...

தம்பியை ரெண்டுநாளா கானோம்...

தமிழ் 007 said...

ஐய்யோ பாவம்!

கடவுள் பொண்ணுங்களை(அழகான) வச்சு உங்க வாழ்க்கையில ஒரு வேல்டு கப்பே நடத்தி இருக்காரே!

உங்க வாழ்க்கையில இப்படி ஒரு சோகமா!

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.. ha.ha.ha.ha.ha.ha....

கருண், நீங்களுமா? #நண்பேண்டா..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

ஐய்யோ பாவம்!

கடவுள் பொண்ணுங்களை(அழகான) வச்சு உங்க வாழ்க்கையில ஒரு வேல்டு கப்பே நடத்தி இருக்காரே!

உங்க வாழ்க்கையில இப்படி ஒரு சோகமா!

பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன்.//

அது மவுன கீதங்கள். அசிங்கப்பட்டார் சிபி

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.. ha.ha.ha.ha.ha.ha....

கருண், நீங்களுமா? #நண்பேண்டா..
/// my blog list -ல பேர் எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல வேளை அந்த மோஹனாவோட அப்பா பாக்யா மட்டும் படிச்சாரு.. விருந்து,திரைச்சித்ரா,ஹெர்குலிஸ் எல்லாம் படிக்கலை... ஒரு வேளை அதையும் படிச்சிருப்பாரோ#டவுட்டு.//

நல்லவேளை நீங்க சரோஜாதேவில கதை எழுதுறது அவருக்கு தெரியாம போச்சு

ராஜ நடராஜன் said...

முதல் பாகமா!இன்னும் இருக்கா!அவ்வ்வ்வ்வ்வ்:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

Kuttymaanu said...

ஆயிரந்தான் இருந்தாலும் இத்தனை வருஷத்துக்கு பிறகும் இன்னும் அவங்களை "ஃபிகருன்னு" சொல்லி குஷிப் படுத்துன உங்க பெ....ரி....ய......மனசு.....( வீட்டம்மா கமெண்ட் சொல்லுலயா? செயல்லயா?)

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன்.//

அது மவுன கீதங்கள். அசிங்கப்பட்டார் சிபி

haa haa ஹா ஹா யார் கிட்டே.. சினிமா பக்கங்களை புரட்டிப்பாருங்க

சி.பி.செந்தில்குமார் said...

Kuttymaanu said...

ஆயிரந்தான் இருந்தாலும் இத்தனை வருஷத்துக்கு பிறகும் இன்னும் அவங்களை "ஃபிகருன்னு" சொல்லி குஷிப் படுத்துன உங்க பெ....ரி....ய......மனசு.....( வீட்டம்மா கமெண்ட் சொல்லுலயா? செயல்லயா?)

ஹலோ.. இதெல்லாம் சமீபத்துல நடந்த மேட்டர்ஸ்.. நாங்களும் யூத்துதான்.. ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

டியூசன் டைம் ஆயிடுச்சு . ஓட்டு போட்டுட்டு கிளம்பரேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல வேளை அந்த மோஹனாவோட அப்பா பாக்யா மட்டும் படிச்சாரு.. விருந்து,திரைச்சித்ரா,ஹெர்குலிஸ் எல்லாம் படிக்கலை... ஒரு வேளை அதையும் படிச்சிருப்பாரோ#டவுட்டு.//

நல்லவேளை நீங்க சரோஜாதேவில கதை எழுதுறது அவருக்கு தெரியாம போச்சு

ஆமா.. அந்த புக்ல எழுதுனேன்.. ஆனா சொந்தப்பெயர்ல எழுதுனா இமேஜ் போயிடும்னு பிந்தூப்பிரியன்கற பேர்ல எழுதுனேன். இது நமக்குள்ளயே இருக்கட்டும்.. யார்க்கும் சொல்ல வேணாம்.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ராஜ நடராஜன் said...

முதல் பாகமா!இன்னும் இருக்கா!அவ்வ்வ்வ்வ்வ்:)

பயப்பட வேணாம்.. ரெண்டாம் பாகம் அவ்வளவு சீக்கிரம் வராது.. இது ஹிட் ஆனாத்தான்.... நீங்க சொல்றதைப்பார்த்தா பதிவு ஊத்திக்கிச்சு போல... ஹூம்.. எதையும் தாங்கும் இதயம் வேணும்னு எங்க தலைவர் சொல்லி இருக்கார்,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன்.//

அது மவுன கீதங்கள். அசிங்கப்பட்டார் சிபி

haa haa ஹா ஹா யார் கிட்டே.. சினிமா பக்கங்களை புரட்டிப்பாருங்க/

நான் சொல்லலை சிபி ரொம்ப அலெர்ட்டுன்னு. ஹிஹி

செங்கோவி said...

இந்த பதிவு போட அந்தப் பொண்ணுங்க அனுமதி வாங்கிட்டேன்-னு சொல்றதுல இருந்தே நீங்க எவ்வளவு நல்லவர்னு தெரியுது...நிறையப் பேரு நாம எழுதுறதை வச்சே தப்பா நினைச்சுடறாங்க..நல்ல பதிவு!

செங்கோவி said...

பதிவுலகுல யாரும் உங்களைக் கேவலப்படுத்தலையாண்ணே?..சும்மா கேட்டேன்!

சி.பி.செந்தில்குமார் said...

@ ரமேஷ்...

சமாளிஃபிகேஷன் சண்முகராஜ் விருது உங்களுக்குத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

இந்த பதிவு போட அந்தப் பொண்ணுங்க அனுமதி வாங்கிட்டேன்-னு சொல்றதுல இருந்தே நீங்க எவ்வளவு நல்லவர்னு தெரியுது...நிறையப் பேரு நாம எழுதுறதை வச்சே தப்பா நினைச்சுடறாங்க..நல்ல பதிவு!

ஆமாண்ணே... பிட் படம் பார்க்கறதை எல்லாருமே பண்றாங்க.. ஆனா விமர்சனம் போட்டா ரொம்ப கேவலமா பார்க்கறாங்க...(ஆனா அதை படிச்சிடறாங்க)

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

பதிவுலகுல யாரும் உங்களைக் கேவலப்படுத்தலையாண்ணே?..சும்மா கேட்டேன்!

இதுவரைக்கும் 18 பேர் கேவலப்படுத்தி இருக்காங்க.. இப்போ உங்களோட சேர்த்து 19.. ஹி ஹி

Unknown said...

பதிவை அரை மணி நேரம் முன்னாடியே வெளியிட்டமையால் நான் வெளிநடப்பு செய்கிறேன்!!

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

பதிவை அரை மணி நேரம் முன்னாடியே வெளியிட்டமையால் நான் வெளிநடப்பு செய்கிறேன்!!

அடடா... எதுக்கு எல்லாம் கோவிச்சுக்கராங்க.. சாரி.. தாவணி, சுடி, மிடி

ரஹீம் கஸ்ஸாலி said...

அட.. ராஜேஷ் குமார் கூட க்ரைம் கதை எழுதறார்,, அப்போ அவர் கொலை பண்ற ஆளா?///
அது சரி

Unknown said...

மணல் கயிறு படம் பார்த்த எஃபக்டோ என்னவோ நான் சில கண்டிஷன்ஸ் போட்டேன்.//

ஐயையோ அந்தபடம் நா பிறக்கிறதுக்கு முன்னாலே ரிலிஸ் ஆய்டுச்சே ,அப்ப நீங்கஇப்ப தாத்தாவா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நா.மணிவண்ணன் said...

மணல் கயிறு படம் பார்த்த எஃபக்டோ என்னவோ நான் சில கண்டிஷன்ஸ் போட்டேன்.//

ஐயையோ அந்தபடம் நா பிறக்கிறதுக்கு முன்னாலே ரிலிஸ் ஆய்டுச்சே ,அப்ப நீங்கஇப்ப தாத்தாவா

ada.. அட.. என்ன மணி .. ஹரிதாஸ் கூட பார்க்கறோம் அப்போ நாம ஆவியா?

Unknown said...

நீர் ஒரு பிகர் ஆராய்ச்சியாளர்

தனி காட்டு ராஜா said...

//அப்பத்தான் நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன்.//

:))

Unknown said...

அப்பறம் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லியா ,(ஆகிருக்கும் அப்பறம் எப்படி உங்க குழந்தைக்கு அபிராமினு பேரு வச்சிருப்பீங்க )

Unknown said...

எனிவே உங்க அனுபவத்தை நா மைண்ட்ல ஏத்திக்கிறேன்( நா பொண்ணு பாக்க போறப்ப ஊஸ் ஆகும்ல )

Unknown said...

அப்பறம் ரொம்ப நாளா ஒன்னும்கேக்கணும் நெனச்சு கிட்டே இருந்தேன் ,உங்க ஈரோட்டுபக்கம்லாம் வெள்ளனமே கல்யாணத்தை முடிச்சு காலை சாப்பாட்டோட சொந்தக்காரவுங்களலெலாம் அனுப்ப்ச்சுவிடுவீங்கலாமே அப்படியா?ஏன் மத்தியான சாப்பாடுலாம் போட மாட்டீங்களா ? உங்க கல்யாணமும் அப்படித்தான் நடந்துச்சா ?

கண்டிப்பாக பதில் தேவை

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

எதுக்கு கண்டிப்பா பதில் தரனும்? அன்பாவே தர்றேன், விடை ஆமாம்.. ஹி ஹி மிச்சம் பண்ணத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

>>நா.மணிவண்ணன் said...

நீர் ஒரு பிகர் ஆராய்ச்சியாளர்

பி ஹெச் டி படிக்க நினைச்சென் முடியல..... சரி இதுலயாவது...

ராஜி said...

சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கும் போல‌

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ஆமா .. உங்களுக்கெப்பிடி தெரிஞ்சுது?

ராஜி said...

நிரூபன் said...

எம்மையெல்லாம் சிரிக்க வைக்கும், புன்னகை CP(senior police superintendent- SP செந்தில் குமார்) அவர்களின் உள் மனதிற்குள் இத்தனை சோகங்களா? வெகு விரைவில் உங்கள் எண்ணப்படி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம். சும்மா இருந்து சிரிப்பை வரவழைக்கிற எரிமலையைச் சீண்டினது யாரு? அதான் கேட்கிறனில்லை.

>>>>>>>>>>>........
ம் வெளங்கிடும். கல்யாணம் ஆகி??!! ஒரு பொண்ணு இருக்கு. அதுக்கு முதல்ல பார்த்த பொண்ணோட நினைவா அபிராமினு பேர் வெச்சிருக்கேன்னு open statement விட்ட ஆளுக்கு பயபுள்ள சொல்ற வாழ்த்தா இது.

Ram said...

தங்களுக்கு நேர்ந்த நிலமையை நினைத்து வருந்துகிறேன்.. அதிகமா வாகனத்த பத்தி எழுதினா என்ன சொல்வாங்களோ.???

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி கூர்மதியன் said...

தங்களுக்கு நேர்ந்த நிலமையை நினைத்து வருந்துகிறேன்.. அதிகமா வாகனத்த பத்தி எழுதினா என்ன சொல்வாங்களோ.???

கூர்.. இது புரியல...ஓ.. நல்லாஓட்டறாங்கன்னு சொல்வாங்க

Ram said...

//கூர்.. இது புரியல...ஓ.. நல்லாஓட்டறாங்கன்னு சொல்வாங்க//

டபுள் மீனிங் இல்லையே.!!!

Anonymous said...

மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புதிய தொடர்னு சொன்னீங்க..அது இதுதானா

Anonymous said...

ஃபாலோயர்ஸ் அதிகமாயிட்டாங்க..போ இந்த நாடு உருப்படாது

Anonymous said...

கேரளா தொடர் எப்போ ஆரம்பம்

Anonymous said...

60

Unknown said...

ஏத்தம் அய்யா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தம் அய்யா ஏத்தம் !

Thirumalai Kandasami said...

Cp ji,Fantastic lines...Interesting narration...Keep rocking..

Unknown said...

என்ன பாஸ் ஜாக்கி சேகருக்கு ஆதரவா ஏதாச்சும் பதிவு போட்டீங்களா??
உங்களுக்கும் மைனஸ் ஒட்டு போட்டிருக்காங்க??

Thirumalai Kandasami said...

சிரிக்க ,சிந்திக்க,,ஒரு நல்ல பதிவு..இரண்டாம் பாகம் எப்ப வரும் என்று ஆவலாக உள்ளது..

settaikkaran said...

//ஈரோட்ல ஜெகநாத புரம் காலனில ஒரு பொண்ணு இருக்கறதா சொன்னாங்க.. ( அவ்வளவு பெரிய காலனில ஒரே ஒரு பொண்ணா?//

யெப்ப்ப்பா........

//எனக்கு 3மே ஓக்கே.. அப்படின்னேன். எங்கம்மா முறைச்சாங்க//

:-))))))

தூறல் நின்னு போச்சு படத்துலே பாக்யராஜ் பொண்ணு பார்க்கப்போன சீனு ஞாபகத்துக்கு வந்துச்சு! :-)

jeeva said...
This comment has been removed by the author.
வசந்தா நடேசன் said...

மகளிர் தினமும் அதுவுமா இது தேவையா தலை?? நாள்க்கு போட்ருக்கலாமோ??

இருந்தாலும் எழுதவேண்டிய பதிவுதான், நினைவுகள் என்றுமே சுகமானவை!

கோவை நேரம் said...

சொந்த கதை சோக கதைலாம் வெளி வருது ......

tamilbirdszz said...

அனுபவம் தானே வாழ்க்கை பொண்ணுகள் ரம்ப மோசமப்பா ஆண்களை விட படிச்சு வாழ்க்கைல முன்னுக்கு வருதுகள் ..
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.html

tamilbirdszz said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

சொம்பு ரொம்ப அடிவாங்கிடுச்சி போல

கீறிப்புள்ள!! said...

சூப்பர் செந்தில்.. :) பட்ட கேவலத்தையும் போஸ்ட்-ஆ போடற மனசு என்னை போல உங்களுக்கும் இருக்கறதுல மிக்க மகிழ்ச்சி.. ஹா ஹா ஹா..
http://minnalkeeetru.blogspot.com/2011_02_01_archive.html

ஆனா உங்களுக்கு தான் பறந்து விரிஞ்ச பெரிய மனசுன்னு ஒத்துக்கறேன்.. டிடெய்லா எழுதிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்..

Unknown said...

என்ன cps ஃபிகர்கள் சேலையோட இருக்காங்க !
மங்களம் பொங்கவோ ?
பார்த்து, அளவோடு பொங்கட்டும் !!!!!!!!!!!!

ஹேமா said...

சிபி....பாகம் பாகமா சொல்ற அளவுக்குக் கதை இருக்கா !

மாணவன் said...

ஓகே ரைட்டு நடத்துங்க இன்னும் எத்தனபாகம் இருக்கு? :))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பொதுவா ஒரு மனுஷன் கேவலப்படுற மேட்டரை வெளில சொல்ல மாட்டான்.(அப்போ நீ மனுஷன் இல்லையா?)

இவ்வளவுநாளும் தெரியாதா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. சைவமா இருக்கனும்.(பின்னால சண்டை வந்தாக்கூட கடிக்கக்கூடாது.).அதுவும் சுத்த சைவமா முட்டை,கேக் கூட சாப்பிடாததா இருக்கனும் ( செலவு கம்மி)

வெஜிடபிள் கேக் கூடவா சாப்பிடக் கூடாது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2.பிளஸ் டூ வரை படிச்சிருந்தா போதும். ( சின்ன வயசு ஃபிகரா சிக்கும்னு ஒரு நப்பாசை)

ஒரே வகுப்புல பல வருஷம் பெயில் பண்ணி படிச்சிருந்தா?

சி.பி.செந்தில்குமார் said...

>>தம்பி கூர்மதியன் said...

//கூர்.. இது புரியல...ஓ.. நல்லாஓட்டறாங்கன்னு சொல்வாங்க//

டபுள் மீனிங் இல்லையே.!!!

en என் கமெண்ட்ல டபுள் மீனிங்க் இல்ல..இப்போ நீங்க சொன்ன பிறகு அப்ப்டி இருக்கலாம்னு மத்தவங்க நினைப்பாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புதிய தொடர்னு சொன்னீங்க..அது இதுதானா

ஹி ஹி ஆமா, தூங்க விடாம பண்ணும் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஃபாலோயர்ஸ் அதிகமாயிட்டாங்க..போ இந்த நாடு உருப்படாது..

கலைஞரும், அம்மாவும் இருக்கற வரை....

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஆர்.கே.சதீஷ்குமார் said...

கேரளா தொடர் எப்போ ஆரம்பம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

ஏத்தம் அய்யா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தம் அய்யா ஏத்தம்

குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே..?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Thirumalai Kandasami said...

Cp ji,Fantastic lines...Interesting narration...Keep rocking..

March 8, 2011 6:59 PM

நன்றி சார்.. நேத்து நீங்க கால் பண்ணப்பா ஒரு கில்மா படம் பார்த்துட்டு இருந்தேன் (இலக்கணப்பிழை) அதனால நீங்க சொன்னதுக்கெல்லாம் ம் ம் நு சொன்னேன்.. ஹி ஹி சாரி..

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மைந்தன் சிவா said...

என்ன பாஸ் ஜாக்கி சேகருக்கு ஆதரவா ஏதாச்சும் பதிவு போட்டீங்களா??
உங்களுக்கும் மைனஸ் ஒட்டு போட்டிருக்காங்க??

வழக்கமா எனக்கு மைன்ஸ் ஓட்டு வருமே.. இதென்ன புதுசா?

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger Thirumalai Kandasami said...

சிரிக்க ,சிந்திக்க,,ஒரு நல்ல பதிவு..இரண்டாம் பாகம் எப்ப வரும் என்று ஆவலாக உள்ளது

ஹி ஹி இதுக்கே கடும் எதிர்ப்பு.. பார்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger சேட்டைக்காரன் said...

//ஈரோட்ல ஜெகநாத புரம் காலனில ஒரு பொண்ணு இருக்கறதா சொன்னாங்க.. ( அவ்வளவு பெரிய காலனில ஒரே ஒரு பொண்ணா?//

யெப்ப்ப்பா........

//எனக்கு 3மே ஓக்கே.. அப்படின்னேன். எங்கம்மா முறைச்சாங்க//

:-))))))

தூறல் நின்னு போச்சு படத்துலே பாக்யராஜ் பொண்ணு பார்க்கப்போன சீனு ஞாபகத்துக்கு வந்துச்சு! :-)

நன்றி அண்ணே... இதுக்கு முதல்ல டைட்டிலா சாரல் உக்காந்து போச்சுன்னு வைக்கலாம்னு இருந்தேன்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>> This post has been removed by the author.

March 8, 2011 9:34 PM
Delete
Blogger வசந்தா நடேசன் said...

மகளிர் தினமும் அதுவுமா இது தேவையா தலை?? நாள்க்கு போட்ருக்கலாமோ??

இருந்தாலும் எழுதவேண்டிய பதிவுதான், நினைவுகள் என்றுமே சுகமானவை!

ஓ.. நீங்க அப்படி வர்றீங்களா? ம் ம் சாரி.. யார் மனதையாவது புண்படுத்தி இருந்தா..

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger கோவை நேரம் said...

சொந்த கதை சோக கதைலாம் வெளி வருது ......

சோகத்துலயும் ஒரு சுகம் இருப்பது தெரியாதா?

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger tamilbirdszz said...

அனுபவம் தானே வாழ்க்கை பொண்ணுகள் ரம்ப மோசமப்பா ஆண்களை விட படிச்சு வாழ்க்கைல முன்னுக்கு வருதுகள் ..
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.html

உண்மை தான் வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger THOPPITHOPPI said...

சொம்பு ரொம்ப அடிவாங்கிடுச்சி போல

ஹி ஹி .. ஆமா.. ஆனா வெளில யார் கிட்டேயும் சொல்லீடாதிங்க.. மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும்.. இ ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>கீறிப்புள்ள!! said...

சூப்பர் செந்தில்.. :) பட்ட கேவலத்தையும் போஸ்ட்-ஆ போடற மனசு என்னை போல உங்களுக்கும் இருக்கறதுல மிக்க மகிழ்ச்சி.. ஹா ஹா ஹா..
http://minnalkeeetru.blogspot.com/2011_02_01_archive.html

ஆனா உங்களுக்கு தான் பறந்து விரிஞ்ச பெரிய மனசுன்னு ஒத்துக்கறேன்.. டிடெய்லா எழுதிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்..

மனிதனின் மனம் விசித்திரமானது. முடிந்த வரை மறைக்க நினைக்குது. நான் ஓப்பன் டைப்

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஆகாயமனிதன்.. said...

என்ன cps ஃபிகர்கள் சேலையோட இருக்காங்க !
மங்களம் பொங்கவோ ?
பார்த்து, அளவோடு பொங்கட்டும் !!!!!!!!!!!!

மகளிர் தினம் என்பது ஒரு காரணம். நான் திருந்திட்டேன் என்பது 2 வது காரணம். 3வது தான் முக்கிய காரணம் கும்மி எடுத்தடராங்க ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger ஹேமா said...

சிபி....பாகம் பாகமா சொல்ற அளவுக்குக் கதை இருக்கா !

பயப்படாதீங்க ஹேமா..இன்னும் 8 பாகம் தான் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஓகே ரைட்டு நடத்துங்க இன்னும் எத்தனபாகம் இருக்கு? :))

ஹி ஹி 8

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பொதுவா ஒரு மனுஷன் கேவலப்படுற மேட்டரை வெளில சொல்ல மாட்டான்.(அப்போ நீ மனுஷன் இல்லையா?)

இவ்வளவுநாளும் தெரியாதா?

மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்?

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. சைவமா இருக்கனும்.(பின்னால சண்டை வந்தாக்கூட கடிக்கக்கூடாது.).அதுவும் சுத்த சைவமா முட்டை,கேக் கூட சாப்பிடாததா இருக்கனும் ( செலவு கம்மி)

வெஜிடபிள் கேக் கூடவா சாப்பிடக் கூடாது?

ஓ.. கேக்ல வெஜ் கேக் இருக்கா? அப்ப ஓக்கே

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2.பிளஸ் டூ வரை படிச்சிருந்தா போதும். ( சின்ன வயசு ஃபிகரா சிக்கும்னு ஒரு நப்பாசை)

ஒரே வகுப்புல பல வருஷம் பெயில் பண்ணி படிச்சிருந்தா?

ரிஜக்டட்.. ஹி ஹி

அஞ்சா சிங்கம் said...

முதலாவதா பார்த்த ஃபிகர் அபிராமி த்ரிஷா மாதிரின்னு சொல்ல முடியாது.. ஆனா அந்த ஃபிகரோட டிரஸ்ஸிங்க் சென்ஸ் த்ரிஷா மாதிரி இருக்கும். வழக்கமா பொண்ணுங்க வளையல் போடும்போது புடவை கலர்ல போடுவாங்க.. ஆனா த்ரிஷாவோட இந்த ஸ்டில்லுல பாருங்க பார்டர் கலர்+ புடவை கலர் 2 காம்பினேஷனும் மேட்ச் ஆகற மாதிரி வளையல் கலர் மேட்ச் ஆகறதை....அந்த ஃபிகரும் அப்படித்தான் போட்டிருந்தது.................//////////////////////////////

சோ ...................அப்பா முடியல முடியல ................
என்னமா நோட் பண்ணிருக்காரு சத்தியமா அந்த பொண்ணுங்க புண்ணியம் செஞ்சவங்க அதான் தப்பிச்சுட்டாங்க ..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம் அந்தப் பொண்ணுங்க...... உங்களையும் பாத்திருக்காங்களே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இதை அப்படியே ஒப்பனா, பப்ளிக்கா சொன்னாங்க..எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு..அப்பத்தான் நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன். //////////

சிபியோட வயச கண்டுபுடிக்க இதவிட்டா வேற சான்ஸ் கெடைக்காதுய்யா..... டார்லிங் டார்லிங் டார்லிங் படமெல்லாம் எப்போ வந்துச்சு, இவரு அப்பவே பொண்ணு பாத்திருக்காரே? அந்தப் படம் வந்து 30 வருசம் இருக்குமா? அப்போ இவருக்கு 27 வயசுன்னு வெச்சுக்கிட்டா கூட...... கணக்கு எங்கேயோ போகுதே...? அய்யய்யோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரல..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பொண்ணு பேரு அபிராமி.நான் முதன் முதலா பார்த்த பொண்ணோட ஞாபகமாத்தான் இப்போ என் குழந்தைக்கு அபிராமின்னு பெயர் வெச்சதா நினைக்காதீங்க.. அது எதேச்சையா நடந்தது.///////

இந்தக் கதையெல்லாம் எங்ககிட்ட வேணாம், உண்மைக் கதை இன்னும் 2 நாள்ல வெளியாகனும் ஆமா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கேரளா ஃபிகர்னா கேரளா ஃபிகர் தான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்.(இது பற்றி தனி பதிவு மறுக்கா போடறேன் ,டைட்டில்-பாலக்காட்டுப்பொண்ணுங்க - தேங்காய் பன்னுங்க )//////

பின்னே உங்க டிப்பார்ட்மெண்ட்டாச்சே? அதாங்க பிட்டுப் படம்..... நடத்துங்க நடத்துங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நல்ல வேளை அந்த மோஹனாவோட அப்பா பாக்யா மட்டும் படிச்சாரு.. விருந்து,திரைச்சித்ரா,ஹெர்குலிஸ் எல்லாம் படிக்கலை... ஒரு வேளை அதையும் படிச்சிருப்பாரோ#டவுட்டு/////////

ஓ.... இதுல இது வேறயா? அந்தக் கதைகள்ல ரெண்ட எடுத்து விடுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆனா த்ரிஷாவோட இந்த ஸ்டில்லுல பாருங்க பார்டர் கலர்+ புடவை கலர் 2 காம்பினேஷனும் மேட்ச் ஆகற மாதிரி வளையல் கலர் மேட்ச் ஆகறதை....அந்த ஃபிகரும் அப்படித்தான் போட்டிருந்தது..#நல்லா நோட் பண்ணு ஆனா கோட்டை விட்டுடு@மனசாட்சி/////////

வெளங்கிரும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பொண்ணு பாத்த கதையெல்லாம் இருக்கட்டும், பிகர்ஸ் மெயிட்டெயின் பண்ற கதைலாம் கொஞ்சம் சொன்னீங்கன்னா பசங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே?

Mohammed Arafath @ AAA said...

யூத் சொல்லிட்டு "மணல் கயிறு" மாதிரியா?
உன் வாயால நீயே கேடு செஞ்சுட...ஹஹா
உன்னோட உண்மையான வயசு வெளிய தெரிசுடுசே...
மணல் கயிறு வந்து ஒரு இருவது வருஷம் இருக்கும்....
நீ அப்போவே பொண்ணு பாக்க போன...?
இப்போ வயசு 40+
கேட்டா யூத்து ????

செல்வா said...

//.வேலைக்குப்போற பொண்ணா இருக்கக்கூடாது...(ஏன்னா எனக்கு மட்டும் வேலை இல்லாதப்ப மனைவி மட்டும் வேலைக்குப்போனா நமக்குக்கேவலம் தானே..?)
//

ஹா ஹா .. எப்படி அண்ணா ..இன்னும் சிரிப்பு நிக்கல ... ஹய்யோ ஹய்யோ ..

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>அஞ்சா சிங்கம் said...

சோ ...................அப்பா முடியல முடியல ................
என்னமா நோட் பண்ணிருக்காரு சத்தியமா அந்த பொண்ணுங்க புண்ணியம் செஞ்சவங்க அதான் தப்பிச்சுட்டாங்க ..........

என்னே ஒரு உயர்ந்த உள்ளம்

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம் அந்தப் பொண்ணுங்க...... உங்களையும் பாத்திருக்காங்களே....?

ஹி ஹி பாவம் கொடூரன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...சிபியோட வயச கண்டுபுடிக்க இதவிட்டா வேற சான்ஸ் கெடைக்காதுய்யா..... டார்லிங் டார்லிங் டார்லிங் படமெல்லாம் எப்போ வந்துச்சு, இவரு அப்பவே பொண்ணு பாத்திருக்காரே? அந்தப் படம் வந்து 30 வருசம் இருக்குமா? அப்போ இவருக்கு 27 வயசுன்னு வெச்சுக்கிட்டா கூட...... கணக்கு எங்கேயோ போகுதே...? அய்யய்யோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரல..........

March 10, 2011 1:22 AM

நேத்து டி வி ல பரா சக்தி கூட பார்த்தேன். அதுக்கு..?

செல்வா said...

அது எப்படி அண்ணா இப்படி எல்லாம் மேட்சிங் பாக்குரேஎந்க ? ஹி ஹி .. டிஸ்கில கடைசி ல சொன்னத சொன்னேன் ... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>கோமாளி செல்வா said...

அது எப்படி அண்ணா இப்படி எல்லாம் மேட்சிங் பாக்குரேஎந்க ? ஹி ஹி .. டிஸ்கில கடைசி ல சொன்னத சொன்னேன் ... ஹி ஹி

எல்லாம் உங்க டைரியை படிச்ச அனுபவம் தான்.. அப்புறம் அந்த மேட்டரை மறந்துடாதீங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

பொண்ணு பாத்த கதையெல்லாம் இருக்கட்டும், பிகர்ஸ் மெயிட்டெயின் பண்ற கதைலாம் கொஞ்சம் சொன்னீங்கன்னா பசங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே?

தல நீங்க இருக்கறப்ப வால் நான் ஆடலாமா/

சி.பி.செந்தில்குமார் said...

Mohammed Arafath @ AAA said...

யூத் சொல்லிட்டு "மணல் கயிறு" மாதிரியா?
உன் வாயால நீயே கேடு செஞ்சுட...ஹஹா
உன்னோட உண்மையான வயசு வெளிய தெரிசுடுசே...
மணல் கயிறு வந்து ஒரு இருவது வருஷம் இருக்கும்....
நீ அப்போவே பொண்ணு பாக்க போன...?
இப்போ வயசு 40+
கேட்டா யூத்து ????

அட.. என்னாங்க நீங்க.. நான் ஹரிதாஸ் கூட பார்ப்பேன்.. அப்போ வயசு, 80?

சசிகலா said...

தொடருமா........?
அப்போ நிறைய பஜ்ஜி சாப்ட்டு இருப்பிங்க போல...