Tuesday, March 22, 2011

லஞ்சம் உண்டு, ஊழல் உண்டு ஓட்டு போடு ராசா.....

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/mkilaignnan.jpg 

1. கொ.மு.க., மாநிலத் தலைவர், "பெஸ்ட்' ராமசாமி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை; நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். சிலிண்டர் சின்னத்தைக் கேட்டுள்ளோம்; தமிழகம் முழுவதும் தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்.

ஹா ஹா சிலிண்டர்னாலே ரொம்ப லேட்டாத்தானே கிடைக்கும்.. அது சரி.. நீங்க இப்போ வேஸ்ட் நாம சாமி ஆகிட்டதா சொல்றாங்களே.. உண்மையா?பின்னே என்ன? எலக்‌ஷன் வரும் வரை கலைஞரை எதிர்த்துட்டு இப்போ ஒரு சீட்டுக்காக அவர் கால்ல விழுந்திருக்கீங்களே.. வெட்கமா இல்லை?


--------------------------------------------

2. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, தலைமைத் தேர்தல் கமிஷன் கடிதம்: பொதுத் தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 200 மீட்டருக்குள் தேர்தல் பிரசாரம் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்; பள்ளிகளில் இருந்து 200 மீட்டருக்குள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.


லூஸ்தனமா இருக்கு.. ஒலிப்பெருக்கியோட சத்தம் 2 கி மீ வரை கேட்கும்.. வெறும் 200 மீ தூரம் விலக்கு இருந்தா போதுமா?

------------------------------------------

3. பத்திரிகை செய்தி: டிரான்ஸ்பார்மர் பழுதால் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமம், நான்கு நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. வெளிச்சத்திற்காக கிராம மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி இரவை கழித்து வருகின்றனர்.

ஏன்? உங்க சொந்த பந்தங்கள் யாரும் தி மு க வுல இல்லையா? இப்படி தீப்பந்தம் ஏந்தும்படி ஆகிடுச்சே..?


---------------------------------------------
http://vimarisanam.files.wordpress.com/2010/09/15-sept-thuglaq.jpg?w=500&h=665
4. ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு:வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில், ம.தி.மு.க., உள்ளது. நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல. கட்டுமானத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும், தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை.வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில், ம.தி.மு.க., உள்ளது. நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல.


எங்கே போனாலும் கேவலப்படறதுதான் உங்க தனித்தன்மையா?  நீங்க பேசாம திருக்குறள்ல தீ நட்பு, கூடா நட்பு அதிகாரத்துல இருக்கற குறளை எல்லாம் படிச்சுப்பாருங்க...

----------------------------------

5. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேட்டி: தேர்தலுக்கு முன் குற்றம் புரிந்தவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றால், குற்றத்தில் இருந்து அவர் விடுபட்டவராக எப்போதிலிருந்து கருதப்படுகிறது? 1989ம் ஆண்டு தேர்தலுக்கு முன், "போபர்ஸ்' பீரங்கி ஊழலில், ராஜிவ் மீது குற்றம் சாட்டப்பட்டு, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. ராஜிவ் குற்றவாளி என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என பொருள் கொள்ளலாம் என்பதை, பிரதமர் மன்மோகன் சிங் உணர்ந்துள்ளாரா?

உங்களுக்கு இந்தியாவோட வரலாறே தெரில.. பதவில இருந்தா அவர் நிரபராதி.. பதவி பறி போனா அவர் குற்றவாளி...

---------------------------------------


6. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: ஜப்பான் நாட்டு புக்குஷிமா அணுமின் உலைகளில் ஏற்பட்டுள்ள அபாய நெருக்கடி, இந்தியாவில் மேற்கொள்ள உள்ள அணு மின் உலைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நில நடுக்கத்தால் பாதிக்கும் இடமாக நாம் கருதும் ஜெய்தாபூர் அணுமின் உலை விஷயத்திலும், கவனமாக செயல்பட வேண்டும்.

அப்படியே அந்த அணு உலைகளால திராவிடக்கட்சிகளுக்கு உலை வைக்க முடியுமா?ன்னு பாருங்க..

------------------------------------------
http://2.bp.blogspot.com/_2jgYHX-LSt8/SObjfaP0GDI/AAAAAAAAABs/4tyvvy2_6H4/s320/thuklaq.jpg

7. பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பேட்டி: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்றாக இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய பலம். இதனால், வட மாவட்டங்களில், தி.மு.க., அமோக வெற்றி பெறும். லோக்சபா தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தோம் என்பது உண்மை தான்; எங்கள் எதிர்பாராத தோல்விக்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.


5 வருஷத்துக்கு ஒரு தடவை கால்ல விழற ஆளை மாத்துவீங்க.. இதுல என்ன பெரிய மாற்றம்?

-----------------------------------
8. ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் சீனிவாசன் பேச்சு: தன் பிரச்னைக்காக, சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்று மவுனவிரதம் மேற்கொண்ட கருணாநிதி, தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என இயக்கங்கள் நடத்த முயன்ற தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் அமைப்புகளுக்கும் கூவம் கரையில் தான் இடம் ஒதுக்கினார். அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த முன் வராமல் காவல்துறையைக் கொண்டு தாக்குதல் நடத்திய தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்.

எங்கே.. பாடம் புகட்டறது,.? அவங்க தான் திகட்டற அளவு கதாநாயகியை களம் இறக்கீட்டாங்களே..மக்கள் மதி மயங்குவது நிச்சயம்... 
Hilarious political cartoon images

45 comments:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

ராஜி said...

Late?

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

டான்னு வந்துட்டீங்க.. 5 நிமிஷம் லேட்

ராஜி said...

வட போச்சே. இருங்க படிச்சுட்டு புரிந்தால்(நான் அரசியல் ஞானத்துல சுழியம்) மீண்டும் வருகிறேன்.

தமிழ் 007 said...

///லூஸ்தனமா இருக்கு.. ஒலிப்பெருக்கியோட சத்தம் 2 கி மீ வரை கேட்கும்.. வெறும் 200 மீ தூரம் விலக்கு இருந்தா போதுமா?///


அதனே!

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

Late?

இதுக்கு சாரி சொல்ல வேண்டியது ஆற்காட்டார் டர்ன்

தமிழ் 007 said...

///எங்கே.. பாடம் புகட்டறது,.? அவங்க தான் திகட்டற அளவு கதாநாயகியை களம் இறக்கீட்டாங்களே..மக்கள் மதி மயங்குவது நிச்சயம்... ///

தமிழ் மக்களை நல்லா புரிந்து வைத்திருக்கீங்க. ஆனா நாங்க அப்படி இல்லை( அப்ப நீ தமிழன் இல்லையான்னு கேட்கக் கூடாது)

தமிழ் 007 said...

படத்துல உள்ள கமென்ட் எல்லாம் சூப்பரோ! சூப்பர்!

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ் 007 said...

///எங்கே.. பாடம் புகட்டறது,.? அவங்க தான் திகட்டற அளவு கதாநாயகியை களம் இறக்கீட்டாங்களே..மக்கள் மதி மயங்குவது நிச்சயம்... ///

தமிழ் மக்களை நல்லா புரிந்து வைத்திருக்கீங்க. ஆனா நாங்க அப்படி இல்லை( அப்ப நீ தமிழன் இல்லையான்னு கேட்கக் கூடாது)


நாம் சிலர் விதி விலக்காய் இருக்கலாம்.. ஆனால் என்றும் விதி விலக்குகள் விதியை மாற்றி விடுவதில்லை

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said

எப்ப பாருஅவங்க கட்சியை தாக்கி பதிவை போட்டா உங்க வீட்டுக்கு மட்டும் தனி டிரான்ஸ்பார்ம் வச்சு கரண்ட் கட் இல்லாம பார்த்துக்குவாங்களா?

டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

டக்கால்டி said...

படங்கள் அருமை..குறிப்பாக கொள்ளுபேர ப்ரொட்யூசர் லொள்ளு...
கலிங்கப்பட்டி தேர்தலில் போட்டி..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும்,. அடேய் தம்பி சந்தானம் அள்ளிக்குட்றா சந்தனம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said

எப்ப பாருஅவங்க கட்சியை தாக்கி பதிவை போட்டா உங்க வீட்டுக்கு மட்டும் தனி டிரான்ஸ்பார்ம் வச்சு கரண்ட் கட் இல்லாம பார்த்துக்குவாங்களா?

இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லா விடினும்...

இடர்ப்பாடு வருது என்பதற்காக நம் நிலைப்பாடு மாற்ற முடியுமா?

டக்கால்டி said...

இடர்ப்பாடு வருது என்பதற்காக நம் நிலைப்பாடு மாற்ற முடியுமா?

March 22, 2011 9:58 AM//

ரைட்டு

Unknown said...

//எங்கே.. பாடம் புகட்டறது,.? அவங்க தான் திகட்டற அளவு கதாநாயகியை களம் இறக்கீட்டாங்களே..மக்கள் மதி மயங்குவது நிச்சயம்...//
ஹி ஹி... :-)

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணா இன்றைய நாட்டு நடப்புக்கு சரியான சாட்டையடி சி.பி.யின் விமர்ச்சனம்.

சி.பி.செந்தில்குமார் said...

>>பி.நந்தகுமார் said...

அண்ணா இன்றைய நாட்டு நடப்புக்கு சரியான சாட்டையடி சி.பி.யின் விமர்ச்சனம்.


இலவசம் வந்து விட்டதால் இனி வெற்றி இல்லை இலை வசம்

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said

இடர்பாடு வருகிறது என்பதற்காக நிலைப்பாட்டை மாற்ற முடியுமா?

மிக்ஸி, கிரைண்டர் வந்தால் உங்க நிலைப்பாடு தொடருமா? Doubt

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said

இடர்பாடு வருகிறது என்பதற்காக நிலைப்பாட்டை மாற்ற முடியுமா?

மிக்ஸி, கிரைண்டர் வந்தால் உங்க நிலைப்பாடு தொடருமா? Doubt

காசுக்காக ஓட்டை விற்பதும், தூக்கத்திற்காக நிம்மதியை விற்பதும் ஒன்றுதானே

காங்கேயம் P.நந்தகுமார் said...

தி.மு.க அ.தி.மு.க வை விட பெரிய கட்சி ம.தி.மு.க -நாஞ்சில் சம்பத் அப்புறம் என்ன இப்பகூட தனியாக இத்தேர்தலில் நின்று ஒரு சரித்திரத்தை படைக்கலாமே?

பாலா said...

சிரிக்கிரதா இல்ல அழுவுரதான்னு தெரியலயெ... :)) நாட்டு நடப்பு... ம்ம்ம்ம்.. டெரர் ...

Unknown said...

அரசியல் சாட்டையடிக்கு நன்றி நண்பா.............இன்னைக்கு உன்னக்கு ஒரு எதிர் பதிவு வருது வைட் பண்ணு ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் தொடருங்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

அரசியல் சாட்டையடிக்கு நன்றி நண்பா.............இன்னைக்கு உன்னக்கு ஒரு எதிர் பதிவு வருது வைட் பண்ணு ஹிஹி!

நான் சமீபத்துல எந்த தப்பும் பண்ணலையே.... கடைசியா திருட்டு புருஷன் பார்ட் 2 பார்த்தேன்.. அதைக்கூட விமர்சனம் பண்ணலையே.. ஒரு வேளை அதைத்தான் போடச்சொல்லி போராட்டமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எவ்வளவு கிண்டல் பண்ணாலும் நம்ப தலைங்க திருந்தாது..

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் தொடருங்கள்..

வழக்கமா உங்க லிங்க்கும் ,பதிவின் டைட்டிலும் தருவீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

எவ்வளவு கிண்டல் பண்ணாலும் நம்ப தலைங்க திருந்தாது..

நமது நோக்கம் தூங்குபவர்கள் போல் நடிக்கும் தலைவர்களைத்திருத்துவது அல்ல... மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பாலா said...

சிரிக்கிரதா இல்ல அழுவுரதான்னு தெரியலயெ... :)) நாட்டு நடப்பு... ம்ம்ம்ம்.. டெரர் ...

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நாம் சிரித்துக்கொண்டே அழுகின்றோம்.. மீண்டும் மீண்டும் புதை குழியில் போய் விழுகின்றோம்

ராஜி said...

காசுக்காக ஓட்டை விற்பதும், தூக்கத்திற்காக நிம்மதியை விற்பதும் ஒன்றுதான்.

மிகச்சரி. ஆனால், நம்மில் எத்தனை பேர் போன தேர்தலில் பணம் வாங்கலை, இலவச வண்ணத்தொலைக்காட்சி வாங்கலைனு மனசாட்சியோடு கடவுளின் பார்வையில் உண்மையை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம். நீங்கள் உட்பட

Unknown said...

என்ன கத்துனாலும் மக்களுக்கு இப்போ இலவசம் தான் கண்ணுக்கு தெரியப்போகுது!

சக்தி கல்வி மையம் said...

நானும் லேட்டு..

வைகை said...

எங்கள் எதிர்பாராத தோல்விக்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.//

எங்களுக்கு தெரியுறது இருக்கட்டும்.. உங்களுக்கு நல்லா தெரியுமா?

வைகை said...

கட்டுமானத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, பலமாகவே உள்ளோம்.//

பேஷ்மெண்டு ஸ்ட்ராங்கு.. பில்டிங் வீக்கு!

சக்தி கல்வி மையம் said...

தமிழ்மணத்தில் 7 வது ஓட்டு.. ம்.ம்..

Sivakumar said...

why go...வைகோ?

ரஹீம் கஸ்ஸாலி said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணத்தில் 7 வது ஓட்டு.. ம்.ம்..////

அதை நான் தான் போட்டேன்...நான் தான் போட்டேன். ஏதாவது அவார்டு தருவீங்களா

'பரிவை' சே.குமார் said...

படத்துல உள்ள கமென்ட் எல்லாம் சூப்பர்!

geethappriyan said...

நண்பரே
எல்லா புக்குக்கும் சந்தா கட்டுறீங்களா?

உணவு உலகம் said...

சாரி, நான் லேட்டுதான், மின் தடை. நேற்று ஒரு ஆன்மீக பதிவு. இன்று ஒரு அசத்தல் பதிவு. சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ said...

//லூஸ்தனமா இருக்கு.. ஒலிப்பெருக்கியோட சத்தம் 2 கி மீ வரை கேட்கும்.. வெறும் 200 மீ தூரம் விலக்கு இருந்தா போதுமா?//

போடு போடு அருவாளை....

MANO நாஞ்சில் மனோ said...

//எங்கே போனாலும் கேவலப்படறதுதான் உங்க தனித்தன்மையா? நீங்க பேசாம திருக்குறள்ல தீ நட்பு, கூடா நட்பு அதிகாரத்துல இருக்கற குறளை எல்லாம் படிச்சுப்பாருங்க...//

ஆமா அப்பிடியே உங்களுக்கு நல்ல நேரமும் போகும். எங்களுக்கும் [மக்களுக்கும்] நிம்மதி....

MANO நாஞ்சில் மனோ said...

//உங்களுக்கு இந்தியாவோட வரலாறே தெரில.. பதவில இருந்தா அவர் நிரபராதி.. பதவி பறி போனா அவர் குற்றவாளி...//

என்னாது வரலாறா அப்பிடீன்னா அது கிலோ என்ன விலை நைனா.../

MANO நாஞ்சில் மனோ said...

//அப்படியே அந்த அணு உலைகளால திராவிடக்கட்சிகளுக்கு உலை வைக்க முடியுமா?ன்னு பாருங்க..//

ஸ்பெக்ட்ரம் பணம் அங்கேயும் பாயும் மக்கா....

தமிழ்க்காதலன் said...

அடடா... எத்தனைத் தகவல்கள் திரட்டி இருக்கீங்க. எல்லாமே நல்ல நகைச்சுவை உணர்வோட மதிப்பிடப் பட்டிருக்கு. சுவாரசியமாய் இருந்தது படிக்க.

நாட்டு மக்களை நினைச்சாதான் பயமும், வருத்தமும் இருக்கு.