Friday, March 25, 2011

நடமாடும் வாக்குச்சாவடி... இந்த கைல துட்டு.. அந்த கைல ஓட்டு......

Hilarious political cartoon images

1. நடிகர் வடிவேலு: தி.மு.க.,வில் உறுப்பினராக நான் இல்லை. ஆனால், மக்களில் ஒருவராக, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை பிரசாரத்தின்போது எடுத்துச் சொல்வேன். திருவாரூரில், கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் என் பிரசாரத்தை துவக்க உள்ளேன்.


அதெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மானஸ்தன் அடுத்த தேர்தல்ல கேப்டன் எங்கே போட்டி இடுவாரோ அங்கே  சுயேச்சையா நின்னே அவரை மண்ணை கவ்வ வைப்பேன்னு பேசுனாரே... அவரைப்பார்த்தா சொல்லுங்க.... 


--------------------------------------------------2. தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள்: இந்தியாவில், 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பூகம்பம் வந்தாவது திராவிடக்கட்சித்தலைவர்களை காவு வாங்கிட்டா நாளை வரும் புதிய சந்ததியினராவது ஆரோக்ய அரசியலை எதிர் கொள்றாங்களா? பார்ப்போம்..

-----------------------------------
http://4.bp.blogspot.com/_Aulhuuecnl8/SZOrgAZqk2I/AAAAAAAAB6A/fCi0-02sCb8/s400/DN_12-02-09_E1_04-03%2520CNI2.jpg

3. பத்திரிகைச் செய்தி: நாகை அடுத்த வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் கிலி என்ற தம்பியப்பன் (40). பா.ம.க., நாகை ஒன்றிய (கிழக்கு) செயலர். இவரது வீட்டில், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பார்த்தீங்களா? பா  ம க கட்சிக்காரங்களுக்கு நாட்டுப்பற்றே இல்லைன்னு யாரும் இனி சொல்லிட முடியாது..நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....

------------------------------------------

4. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி: மைசூரில் இருந்து வந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் நிற்கிறார்; அவருக்கு எதிராக மண்ணின் மைந்தனை நிறுத்தி உள்ளேன். சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்துவிட்டது. ஜெயலலிதாவை, சசிகலா ஆட்டிப்படைக்கிறார்.

வீட்டுலதான் பொம்பள ராஜ்யம்னா நாட்டுலயும் ..........
-----------------------------------
http://i51.tinypic.com/nmk9r4.jpg
5. ம.தி.மு.க., பொதுச் செயலர்வைகோ பேட்டி:தமிழகத்தில் இனி தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க., அமையும். இந்த முறை, ம.தி.மு.க., தேர்தலில் போட்டியிடாமல், வெளியில் இருந்து கவனிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

முடிவில் மாற்றம் இல்லை.. ஆனால் மனதில் ஏமாற்றம் உண்டு.. சரி விடுங்க.. அடுத்த எலக்‌ஷன்ல 15 சீட் யாராவது தந்துடுவாங்க... 

-----------------------------------------

6. தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: டாஸ்மாக் மூலம், பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் விற்க நடவடிக்கை எடுப்பது குறித்து, அ.தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை எதிர்த்தும் பொது வேட்பாளரை களமிறக்குவோம்.

ஆமா.. அப்படியே இறக்கீட்டாலும்... அவருக்கு ஒரு குவாட்டர் வாங்கிக்குடுத்து பொது வேட்பாளரை மது வேட்பாளர் ஆக்கிட மாட்டாங்களா? எங்க கொட நாடு கோமளவல்லி..?
------------------------------------
http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SYiKTA9eDSI/AAAAAAAAAZc/yY5AQmPG6yU/s400/4.bmp
7. சிவசேன தலைவர் பால் தாக்கரே பேட்டி: இந்தியாவை சீரழிக்கும் இரண்டு விஷயங்கள், ஒன்று தேர்தல், மற்றொன்று ஜனநாயகம். ஊழலுக்கு அடித்தளமே தேர்தல் நடைமுறைகள் தான். எனவே, இவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிக அவசியம்.

ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்..

--------------------------------

8. இந்திய தேசிய லீக் மாநில தலைமை நிலைய செயலர் நாகூர் ராஜா பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், 10 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இரண்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஒரு சீட்டாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை அழைத்து பேசவில்லை. ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். அ.தி.மு.க.,வுக்கு எதிராக, 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.

அட போங்கப்பா.. ஆனானப்பட்ட வைகோவே அவமானப்பட்டு நிக்கறாரு.. வந்துட்டாங்க பெருசா.. இது டபுள் மீனிங்க் வேற.....

---------------------------------------
http://3.bp.blogspot.com/_orHurCodGB8/TGvjsi7vCBI/AAAAAAAAGro/_S8pXgA3Njc/s1600/tamilmakkakural_blogspot_man.jpg
9. சமத்துவ மக்கள் கட்சிநிறுவனர் சரத்குமார் பேட்டி: நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் அ.தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம். ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து, தமிழகத்தை ஜெயலலிதா மீட்டெடுப்பார் என நம்புகிறோம்.

அது சரி.. உங்க கட்சிக்கு 3 சீட் குடுப்பவருடன் மட்டுமே கூட்டணி என்பது தானே உங்க கொள்கை? இதே எலக்‌ஷன்ல கலைஞர் 4 சீட் கொடுத்திருந்தா அவர் கால்ல விழுந்திருப்பீங்க.. பெரிய யோக்கியவான் மாதிரி நடிக்கறாங்கப்பா...


டிஸ்கி - இன்று 4 படங்கள் ரிலீஸ் ஆகுது. குள்ளநரிக்கூட்டம், சட்டப்படி குற்றம்,சாந்தி அப்புறம் நித்யா,அல்லி ராஜ்யம்... பார்ப்போம் எது முதல்ல மாட்டுதுன்னு.....

25 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் முதலாய்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன சார் இன்னும் சாந்தி படத்திற்கு போகலயா...

விமர்சம் படிக்க ஆவலா இருக்கோம்..

Arul Kumar P அருள் குமார் P said...

நானும் ஆஜர்...!

உள்ளேன் ஐயா....!

Arul Kumar P அருள் குமார் P said...

அண்ணாவோட மைன்ட் வாய்ஸ் ...நல்ல கற்பனை ..!

Unknown said...

அடங்கொன்னியா இர்க்கியா இல்லையா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல யோசனை சொல்லிய்ருக்கிங்க...அப்படியே தேர்தல் கமிசனிடமும் சொல்லுங்க.


எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

Anonymous said...

அரசியல் சரவெடி

Sivakumar said...

டாப்பு டக்கரு!

செங்கோவி said...

//நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....// கலக்கல்..சாந்தி படத்துக்கு போகாம இங்க என்னய்யா பண்ணுதீரு?

சக்தி கல்வி மையம் said...

இது டிரைலரா?

சக்தி கல்வி மையம் said...

விமர்சனம் டைப்பிங் தானே?

சசிகுமார் said...

வைகோ இல்லம் கார்டூன் மிக அருமையாக உள்ளது

உணவு உலகம் said...

அரசியல்னா சாருக்கு அல்வா சாப்பிடற மாதிரி.

MANO நாஞ்சில் மனோ said...

//அதெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மானஸ்தன் அடுத்த தேர்தல்ல கேப்டன் எங்கே போட்டி இடுவாரோ அங்கே சுயேச்சையா நின்னே அவரை மண்ணை கவ்வ வைப்பேன்னு பேசுனாரே... அவரைப்பார்த்தா சொல்லுங்க.... //

இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்...

MANO நாஞ்சில் மனோ said...

//அப்படி பூகம்பம் வந்தாவது திராவிடக்கட்சித்தலைவர்களை காவு வாங்கிட்டா நாளை வரும் புதிய சந்ததியினராவது ஆரோக்ய அரசியலை எதிர் கொள்றாங்களா? பார்ப்போம்..//

ஆ கொலை வெறி.....

MANO நாஞ்சில் மனோ said...

//பார்த்தீங்களா? பா ம க கட்சிக்காரங்களுக்கு நாட்டுப்பற்றே இல்லைன்னு யாரும் இனி சொல்லிட முடியாது..நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....//

கூபுடுங்கலேய் அந்த காடுவெட்டி'குரு'வை....

MANO நாஞ்சில் மனோ said...

//முடிவில் மாற்றம் இல்லை.. ஆனால் மனதில் ஏமாற்றம் உண்டு.. சரி விடுங்க.. அடுத்த எலக்‌ஷன்ல 15 சீட் யாராவது தந்துடுவாங்க..///

வைகோ பதுங்குரத பார்த்தா அண்ணன் பிரபாகரன் உயிரோடு இல்லையோன்னு பயமா இருக்குய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

//ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்..//

அய் அய் இது நல்ல ஐடியா'வா இருக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

//அது சரி.. உங்க கட்சிக்கு 3 சீட் குடுப்பவருடன் மட்டுமே கூட்டணி என்பது தானே உங்க கொள்கை? இதே எலக்‌ஷன்ல கலைஞர் 4 சீட் கொடுத்திருந்தா அவர் கால்ல விழுந்திருப்பீங்க.. பெரிய யோக்கியவான் மாதிரி நடிக்கறாங்கப்பா...//


நாட்டாமை தீர்ப்பை மாத்து...

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி - இன்று 4 படங்கள் ரிலீஸ் ஆகுது. குள்ளநரிக்கூட்டம், சட்டப்படி குற்றம்,சாந்தி அப்புறம் நித்யா,அல்லி ராஜ்யம்... பார்ப்போம் எது முதல்ல மாட்டுதுன்னு..... //

நாசமா போச்சி மனோ எஸ்கேப்பு...

நர்மதன் said...

இதையும் படியுங்க
ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

நர்மதன் said...

இதையும் படியுங்க
ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

Unknown said...

தல ஒருத்தர் விடாம கலாய்ச்சிருக்கீங்க, பார்த்து ஆவாஸ் அஞ்சிங் :-))))))

ராஜ நடராஜன் said...

//ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்.. //

கமெண்டுக்கு மகுடம்:)

ரஹீம் கஸ்ஸாலி said...

present