Saturday, March 19, 2011

ஆனந்த விகடன் VS குஷ்பூ பேட்டி - காமெடி கும்மி

 http://www.anushkapics.com/images/anushka.jpg
 

முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் ஆசி பெற்று கழகத்தின் கிளாமர் பேச்சாளராக குணவதி குஷ்பூ நம் நகரங்களில் வலம் வர இருக்கிறார்..பெண்களின் கற்பு பற்றி உயரிய கருத்துக்களை பகிர்ந்து 87 கோர்ட்களில் பாராட்டு பெற்றவரும்,ஷூட்டிங்க் ஸ்பாட்டில் கடவுள் படத்தைபார்த்தாலே பய பக்தியோடு கும்பிட்டு நல்ல பெயர் வாங்கியவரும்,ஜெயா டி வி யில் ஜாக்கெட்பாட் நிகழ்ச்சியின் மூலம் பெண்களுக்கு ஜாக்கெட் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியவரும் ஆகிய தானைத்தலைவி  (அம்மா தொண்டர்கள் மன்னிக்க)குஷ்பூ இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்திருக்கிறார்..

அந்த பேட்டியை அப்படியே தந்தால் சுவராஸ்யம் இருக்காது என்பதால் குஷ்பூவின் மனசாட்சி என்ன நினைத்திருக்கும் என்பதை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்குடன் தந்துள்ளேன்..

தி மு க வுக்கு குஷ்பூவே தேவை இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்தானே என முணு முணுப்பவர்களுக்கு - சாரி.. இதை நீங்கள் உங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.. ஹி ஹி


 http://2.bp.blogspot.com/_9sqK6HwosiE/R04u1hQz7sI/AAAAAAAAAFQ/DiFVyjX6hxI/s320/kushbu_3_deviyar.jpg

1. ''முதன்முதலா பிரசாரத்துக்குக் கிளம்புறீங்க. என்ன பேசுவீங்க... பயமா இருக்கா?'' 

''எனக்குப் பயமே கிடையாது. 20 வருஷமா இங்கேதான் இருக்கேன். ரெண்டு பெரிய கட்சிகளைப்பத்தியும் நல்லாவே தெரியும். திராவிட அரசியல் வரலாறு தெரியும். நாட்டு நடப்பு தெரியும். வழக்கமான அரசியல்வாதிங்க மாதிரி நான் பேச மாட்டேன். எதிர்க் கட்சி யைப்பத்தியோ, அதன் தலைவர்களைப்பத்தியோ தப்பா பேச மாட்டேன். தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி, இலவச நிலம், ஒரு ரூபாய் அரிசின்னு அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கார். அதைச் சொன்னாலே, கோடிக்கணக்கான மக்களின் ஓட்டு எங்களுக்குத்தான்!''

குஷ்புவின் மனசாட்சி - எனக்கு எதுக்குங்க பயம்? சுந்தர் சி தான் பயப்படனும்..பொதுவா புருஷங்க தான் பொண்டாட்டி என்ன பேசிடுவாளோ.. வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்துடுவாளோன்னு பயப்படுவாங்க..பொண்டாட்டிங்களுக்கு கவலையும் கிடையாது, பயமும் கிடையாது..

2. ''பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ரெண்டு கட்சிகளும் ஒரு காலத்தில் உங்களைக் கடுமையா எதிர்த்தாங்க. இப்போ அவங்ககூட இணைந்து பிரசாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தால்..?'' 

''கண்டிப்பா இணைந்து பிரசாரம் செய்வேன். இப்போ அவங்க எங்க அணியில்தானே இருக்காங்க. தலைவர் பாலிஸிதான் என் பாலிஸியும். மறப்போம்... மன்னிப்போம்!''


குஷ்புவின் மனசாட்சி -

டைரக்டர் சொல்றபடி கேட்கவேண்டியது ஒரு நடிகையோட வேலை.. ஹீரோ கூட டூயட் பாடச்சொன்னா பாடுவோம்.. வில்லன் கூட டூயட் பாடச்சொன்னாலும் பாடுவோம்..கலைஞர் தி மு க வோட டைரக்டர்...


3. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னை தி.மு.க-வுக்கு எதிரா இருக்குதே?'' 

''உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை. மீடியாதான் எல்லாத்துக்கும் காரணம். பரபரப்புக்காக, 'அவ்ளோ நஷ்டம்... இவ்ளோ நஷ்டம்’னு கிளப்பிவிடுறாங்க. கடைசியில், இப்போ டயர் பஞ்சர் ஆன மாதிரி புஸ்ஸுனு போயிருச்சு. எதிர்க் கட்சிகளுக்கு தி.மு.க-வைக் குறை சொல்லக் காரணமே இல்லை. அழுத குழந்தை கையில் பொம்மையைக் கொடுத்தா, அதையே வெச்சு விளையாடும். அது மாதிரி எதிர்க் கட்சிகள் ஸ்பெக்ட்ரமைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க!'' 


குஷ்புவின் மனசாட்சி -

அது என்ன ரம்மோ எனக்கு என்ன தெரியும்?ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துடறாங்க.. என்ன பேசனும்னு எழுதிக்குடுத்துடுவாங்க.. போய் ஒப்பிச்சுட்டு வந்துடுவேன்,, தி மு க தோத்தா என்ன?  ஜெயிச்சா என்ன? எனக்கு கல்லா நம்புனா சரி (நிரம்புனா)
 http://2.bp.blogspot.com/_3qpGd2aQ84w/S9KiJozjZ0I/AAAAAAAABCw/OXCiWs3Kb4Q/s1600/kushboo%5B1%5D.jpg

4. ''கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் என்பது ஒரு முக்கியக் குற்றச்சாட்டு...'' 


''அப்படின்னு மக்களா சொன்னாங்க? எதிர்க் கட்சிகள் புதுசு புதுசா யோசிச்சு காரணம் சொல்றாங்க. 'இவ்வளவு நல்லது பண்ணி இருக்கோம்’னு தைரியமா எங்களால் சொல்ல முடியும். அவங்களால சொல்ல முடியுமா? கலைஞர் ஆட்சியில் தப்பு கண்டுபிடிக்கப் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டு இருக்காங்க!''


குஷ்புவின் மனசாட்சி -

ஆமாங்க.. கலைஞர் வாரிசுலயே பாருங்க ஸ்டாலினுக்கு என்னை பிடிக்கும், அழகிரிக்கு பிடிக்காது.. கனி மொழிக்கு என்னை பிடிக்காது.. கட்சில ஒரு கிளாமரான ஆளு வர்றதை அவங்க விரும்பலை ... இதுவும் குடும்ப ஆதிக்கம் தான்.. ஆனா வெளில சொல்ல முடியுமா?


5. ''கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார்னு உங்க சினிமா நண்பர்கள் எதிர் அணியில் இருக்காங்களே?''

''நான் அவங்களை எதிர்த்துப் பேசறதுக்காகவோ, குறைச்சுப் பேசறதுக்காகவோ அரசியலுக்கு வரலை. ஒருவேளை, அவங்க என்னைத் தாக்கிப் பேசினாலும், நான் அவங்களைத் தாக்கிப் பேச மாட்டேன். எதிர்க் கட்சி என்பதால், அவங்க எனக்கு எதிரிகள் கிடை யாது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆனப்போ, கட்சி வித்தியாசம் இல்லாம எல்லாப் பெண் எம்.பி-க்களும் ஒண்ணா நின்னு கை கொடுத்தாங்களே... அப்படித்தான் நான் அரசியல் பண்ண ஆசைப்படுறேன்!''


குஷ்புவின் மனசாட்சி -

இருந்தா என்ன? என்னமோ அவங்க நாட்டைக்காப்பாத்த வந்த தியாகிங்க மாதிரியும், நான் துரோகி மாதிரியும் பேசறீங்களே.. எல்லாரும் கூத்தாடிங்க தான்.. பணத்துக்காக எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசுவோம்.. கல்லா கட்டற வேலையைத்தான் எல்லாரும் பார்க்கறோம்..?

6. ''விஜய் அரசியலுக்கு வர்றதைப்பத்தி...'' 

''நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமா வேற... அரசியல் வேற! சினிமாவில் கை தட்டி, விசில் அடிப்பாங்க. அவங்க அப்படியே நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நம்பி வரக் கூடாது. அரசியல்... சினிமாவைவிடச் சிக்கலான ஏரியா!''


குஷ்புவின் மனசாட்சி -

அவருக்கு படத்துலதான்  நடிப்பு சரியா வர்லைன்னு  பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...

http://1.bp.blogspot.com/_YfJu9Bi76kI/S_EZCld3IMI/AAAAAAAAA3E/aNez4TgTL7Q/s1600/kus.jpg
7. ''சரி... சினிமா பத்திப் பேசுவோம். உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யாரு?'' 

''எனக்கு ஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு கம்ப்ளீட் ஹீரோயின். ரொம்ப வருஷம் கழிச்சு, இப்போ அனுஷ்காவைப் பிடிச்சிருக்கு. 'அருந்ததி’யில் பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ். நல்ல உயரம், நல்ல அழகு... நம்பர் ஒன் ஹீரோயினுக்கான எல்லா தகுதிகளும் அவங்களுக்கு இருக்கு!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ..


8. ''பலர் உங்களுக்கு ரசிகர்கள். நீங்க யாருக்கு ரசிகை?'' 

''நான் ஸ்கூல் படிக்கும்போது ரவி சாஸ்திரியோட ஃபேன். ஆனா, இதுவரை ஒரு தடவைகூட அவரை நேரில் பார்த்தது இல்லை. அது பெரிய வருத்தம். நடிகர்களில் நான் கார்த்திக் ரசிகை. 23 வருஷமா அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் ஒரிஜினல் பேரான 'முரளி’ன்னு சொல்லித்தான் இப்பவும் நான் கூப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு அவர் பேரே தெரியாது. 'பெரியப் பா’ன்னு சொன்னாத்தான் தெரியும். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல அப்பா.., நல்ல பெரியப்பா அமைஞ்சிருக்காங்க என் குழந்தைகளுக்கு.. .ஹி ஹி 
http://2.bp.blogspot.com/_uYTpXQH0Di4/TGNmMgn6_rI/AAAAAAAAHh4/Hsf_rzwZ9_c/s1600/ileana_vedi.jpg
டிஸ்கி -1 : இந்த பேட்டி குஷ்புவைத்தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. ஹி ஹி  

டிஸ்கி 2 : குஷ்பூவின் குலப்பெருமையை கேவலப்படுத்தி விட்டார்..சி பி மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என யாராவது பதிவு போட நினைத்தால்.. வேணாம்ங்க.. ஏன் இந்த சிரமம்.. இங்கேயே இப்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு...


டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக..

80 comments:

ராஜி said...

குஷ்பூவின் (மனசாட்சி) பதில் நச் ரகம்

சி.பி.செந்தில்குமார் said...

மகளிர் பேட்டிக்கு மகளிர் முதல் கமெண்ட், அட ஓப்பனிங்கே மங்களகரமா இருக்கே..?

ராஜி said...

அட இன்னிக்கு சுடுசோறு எனக்கா? நன்றி சிபி சார்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ம தி சுதாவோட பினாமியா?

சக்தி கல்வி மையம் said...

vadai poche...

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏதேது...மன்னிப்பு நிறையா ஸ்டாக் வச்சிருப்பீங்க போல....பொசுக்கு பொசுக்குன்னு மன்னிப்பு கேட்டுர்றீங்க ...

நிரூபன் said...

பெண்களின் கற்பு பற்றி உயரிய கருத்துக்களை பகிர்ந்து 87 கோர்ட்களில் பாராட்டு பெற்றவரும்,ஷூட்டிங்க் ஸ்பாட்டில் கடவுள் படத்தைபார்த்தாலே பய பக்தியோடு கும்பிட்டு நல்ல பெயர் வாங்கியவரும்,ஜெயா டி வி யில் ஜாக்கெட்பாட் நிகழ்ச்சியின் மூலம் பெண்களுக்கு ஜாக்கெட் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியவரும் ஆகிய தானைத்தலைவி (அம்மா தொண்டர்கள் மன்னிக்க)குஷ்பூ இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்திருக்கிறார்..//


என்ன பேட்டி கொடுத்திருக்கிறார்? ஜாக்கட் போடுவது எப்படி என்றா?
இப்போது தான் பதிவைப் படிக்கத் தொடங்கியுள்ளேன். சும்மா ஒரு கலாய்ப்பு தான்.

நிரூபன் said...

அதன் தலைவர்களைப்பத்தியோ தப்பா பேச மாட்டேன். தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி, இலவச நிலம், ஒரு ரூபாய் அரிசின்னு அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கார். அதைச் சொன்னாலே, கோடிக்கணக்கான மக்களின் ஓட்டு எங்களுக்குத்தான்!'//


இதை விட நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய நிறையச் சேவைகள் இருக்கு. அதை விட்டு விட்டு, செய்ததையே சொல்லிக் காட்டிக் கொண்டு இருங்கோ. என்ன ஒரு அரசியல் வித்தை இது. பார்த்தீர்களா?
இலவ பெரிய ஜாக்கட் திட்டமும் பண்ணியிருப்பதாக எங்களின் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்தி கல்வி மையம் said...

கலக்கல்... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்...

நிரூபன் said...

குஷ்புவின் மனசாட்சி -

டைரக்டர் சொல்றபடி கேட்கவேண்டியது ஒரு நடிகையோட வேலை.. ஹீரோ கூட டூயட் பாடச்சொன்னா பாடுவோம்.. வில்லன் கூட டூயட் பாடச்சொன்னாலும் பாடுவோம்..கலைஞர் தி மு க வோட டைரக்டர்...//

அப்ப கட்சி மாறச் சொன்னா மாறிடுவீங்களா மேடம்?

நிரூபன் said...

ஆமாங்க.. கலைஞர் வாரிசுலயே பாருங்க ஸ்டாலினுக்கு என்னை பிடிக்கும், அழகிரிக்கு பிடிக்காது.. கனி மொழிக்கு என்னை பிடிக்காது.. கட்சில ஒரு கிளாமரான ஆளு வர்றதை அவங்க விரும்பலை ... இதுவும் குடும்ப ஆதிக்கம் தான்.. ஆனா வெளில சொல்ல முடியுமா?//

அப்படியா சங்கதி, உடனே மாதர் சங்கம் சார்பில் போர்க் கொடி தொடங்க வேண்டாம்?

நிரூபன் said...

இருந்தா என்ன? என்னமோ அவங்க நாட்டைக்காப்பாத்த வந்த தியாகிங்க மாதிரியும், நான் துரோகி மாதிரியும் பேசறீங்களே.. எல்லாரும் கூத்தாடிங்க தான்.. பணத்துக்காக எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசுவோம்.. கல்லா கட்டற வேலையைத்தான் எல்லாரும் பார்க்கறோம்..?//

இவ் இடத்தில் குஷ்புவை உயர்த்திக் காட்டி, அவரின் மனச் சாட்சியாகப் பின்னணியில் பேசும், இயக்குனரை- வலைப் பதிவு இயக்குனரைப் பாராட்டுகிறோம்.

Unknown said...

நல்ல விழிப்புணர்வு பதிவு :)))

சி.பி.செந்தில்குமார் said...

>>ரஹீம் கஸாலி said...

ஏதேது...மன்னிப்பு நிறையா ஸ்டாக் வச்சிருப்பீங்க போல....பொசுக்கு பொசுக்குன்னு மன்னிப்பு கேட்டுர்றீங்க ...

hi hi ஹி ஹி உங்களுக்கென்ன யார் அரசியல் பதிவு போட்டாலும் சாரி நோ கமெண்ட்ஸ்னு எஸ்கேப்பாகிடறீங்க..ஆனா நீங்க போடற அரசியல் பதிவுல மட்டும் நாங்க கமெண்ட் போட்டு மாட்டிக்கறோஒம்.. ஹி ஹ் ஹி

நிரூபன் said...

அவருக்கு படத்துலதான் நடிப்பு சரியா வர்லைன்னு பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...//

ஆ...ஹா...ஹ...ஹா.
அப்ப விஜயிற்கு ஒரு கிளாஸ் எடுத்திடுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

>>
இவ் இடத்தில் குஷ்புவை உயர்த்திக் காட்டி, அவரின் மனச் சாட்சியாகப் பின்னணியில் பேசும், இயக்குனரை- வலைப் பதிவு இயக்குனரைப் பாராட்டுகிறோம்.

நான் எங்கே உயர்த்தி காட்னேன்..? எங்கேயோ தப்பு நடந்திருக்கு.. ஹி ஹி

நிரூபன் said...

நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ..//

சில யதார்த்தத்தைக் கூடக் காமெடியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இவ் இடத்தில் உங்கள் சமயோசிதத்தைப் பாராட்டுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger siva said...

நல்ல விழிப்புணர்வு பதிவு :)))

இது நக்கலா, ரியலா?ன்னு தெரியல.. எபடி இருந்தாலும் நன்றினு சொல்லி சமாளிப்போம்

நிரூபன் said...

''நான் ஸ்கூல் படிக்கும்போது ரவி சாஸ்திரியோட ஃபேன். ஆனா, இதுவரை ஒரு தடவைகூட அவரை நேரில் பார்த்தது இல்லை. அது பெரிய வருத்தம். நடிகர்களில் நான் கார்த்திக் ரசிகை. 23 வருஷமா அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் ஒரிஜினல் பேரான 'முரளி’ன்னு சொல்லித்தான் இப்பவும் நான் கூப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு அவர் பேரே தெரியாது. 'பெரியப் பா’ன்னு சொன்னாத்தான் தெரியும். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்!''//

அட நம்ம சிபி; பழைய விடயங்கள், புதிய விடயங்கள், உட்பட குஷ்புவின் அந்தரங்க விடயங்களையும் கலந்து கட்டி ஒரு சிரிப்பு ரகளையைப் பண்ணியிருக்காரு.
ரசித்தேன். அதுவும் காலத்திற்கேற்றமாதிரியான காமெடிகள்.

குஷ்புவின் மனச் சாட்சியைப் படித்து நாங்கள் சிரிக்கிறோம். இதனைக் குஷ்புவின் மனச் சாட்சி படித்தால் நிச்சயமாக அழும்.

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>
இவ் இடத்தில் குஷ்புவை உயர்த்திக் காட்டி, அவரின் மனச் சாட்சியாகப் பின்னணியில் பேசும், இயக்குனரை- வலைப் பதிவு இயக்குனரைப் பாராட்டுகிறோம்.

நான் எங்கே உயர்த்தி காட்னேன்..? எங்கேயோ தப்பு நடந்திருக்கு.. ஹி ஹி//

ஓ.. நீங்க அப்பிடி வாறியளா வழிக்கு. நல்ல வேளை நான் தூக்கிக் காட்டியிருக்கும் இயக்குனருக்கு என்று எழுதவில்லை.

சரியில்ல....... said...

பாஸூ என்னதான் குஷுபூ பேட்டி கும்மியா இருந்தாலும் ஏன் இப்பிடி ஏகப்பட்ட படங்கள் போட்டு பொறுமைய சோதிக்கிறிங்க.... (அவுட் ஆஃப் மாடல்களை நாங்கள் ரசிப்பதில்லை!)

டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

ராஜி said...

ஈரோட்ல 10 ருபாய்க்கு 5 மன்னிப்பு கிடைக்குதா? அப்ப 1000 ரூபாய்க்கு மன்னிப்பு வாங்கி உங்க சகோதரி குஷ்பு க்கு அனுப்பி வைங்க. அவங்களுக்கு நிறைய தேவைப்படுதாம் ம

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் வேண்டுகோளுக்கிணங்க புதிய படம் இணைக்கப்படுகிறது.. (இது எப்படின்னா படத்துல சீன் இல்லைனாலும் தியேட்டர்காரரே இரக்க்கப்பட்டு கை வசம் பர்சனலா வெச்சிருக்கற சீனை இணைக்கற மாதிரி

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

வாங்கய்யா வாத்தியாரய்யா...

டக்கால்டி said...

கடைசில இருக்குற டிஸ்கி நம்பர் ஒண்ணு எனக்கு பிடிச்சிருக்கு...
இட்லி நடிகை தான் இனி இரண்டு நாட்களுக்கு பதிவுலக டாபிக் போல..
இப்போ தான் நல்ல நேரம் தளம் சென்று வந்தேன்...
அங்கேயும் இட்லி நடிகை புராணம் தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது போல மனசாட்சி பேசுவதை உலகம் அறிந்தால் அரசியல் சமூகம் அத்தனையும் தூய்மையாக மாறிவிடும்..

Unknown said...

பொசுக்கு பொசுக்குன்னு மன்னிப்பு கேக்குறதே துட்டு தேத்த தானா ஹி ஹி!

சரியில்ல....... said...

அது என்ன ரம்மோ எனக்கு என்ன தெரியும்?ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துடறாங்க.. என்ன பேசனும்னு எழுதிக்குடுத்துடுவாங்க.. போய் ஒப்பிச்சுட்டு வந்துடுவேன்,, தி மு க தோத்தா என்ன? ஜெயிச்சா என்ன? எனக்கு கல்லா நம்புனா சரி (நிரம்புனா)/////


அட... இதுதாம்லே கரெக்ட்'டான பதிலு... கல்லாக்கட்டுறதுலயே குறியா இருக்கானுகளே....

சுவாரஸ்யமான பதிவு.... கலக்குங்க......!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றும் அருமை..
தொடர்ந்து அசத்துங்க தல...

செங்கோவி said...

எங்க தலைவி குஷ்பூவை பழசுன்னு சொன்னதை வன்மையா கண்டிக்கிறேன்..!

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

எங்க தலைவி குஷ்பூவை பழசுன்னு சொன்னதை வன்மையா கண்டிக்கிறேன்..!

அண்ணே மன்னிச்சுக்குங்கண்னே.. ( அப்பாடா. முதல் மன்னிப்பு கேட்டாச்சு)

உங்களுக்கு பழசுதான் பிடிக்கும்னு எனக்கு தெரியாம போச்சுண்ணே

டக்கால்டி said...

உங்களுக்கு பழசுதான் பிடிக்கும்னு எனக்கு தெரியாம போச்சுண்ணே

March 19, 2011 9:29 AM//

அவர் உங்கள மாதிரி யூத்து அல்லவே...அதேன்

Unknown said...

மனச்சாட்சி இருக்கா??
புது நாயகிகள் எண்டா வேற போஸ்...பழசுகள் எண்டா பின் பக்க போசோ??
நல்ல பாலிசி...வாழ்க சி பி

Unknown said...

//நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ.///
ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி சிறுப்பு தாங்கல...
மனச்சாட்சி கூட காமெடியா தான் பேசுது சி பி பக்கங்களில்

Unknown said...

// குஷ்பூவின் குலப்பெருமையை கேவலப்படுத்தி விட்டார்..சி பி மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என யாராவது பதிவு போட நினைத்தால்.. வேணாம்ங்க.. ஏன் இந்த சிரமம்.. இங்கேயே இப்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு..//

அடச் சீ எனக்கொரு பதிவுக்கு ஆப்படிச்சிட்டீன்களே பாஸ்

Thirumalai Kandasami said...

ஒரு முக்கியமான சந்தேகம்,

இவங்க பேரு "குஷ்பு" வா இல்லை "குஷ்பூ" வா ...உங்க பதிவில் இரண்டும் வருதே? எது சரி?
என்னடா இது ,தமிழுக்கு வந்த சோதனை..

சி.பி.செந்தில்குமார் said...

கோபமா நான் இருக்கறப்ப குஷ்பு.... ஜாலி மூட்ல இருந்தா குஷ்பூ... ( இந்த விளக்கத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சா அதுக்கு முன் கூட்டியே ஒரு மன்னிப்பு ஹி ஹி )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Thirumalai Kandasami said...
ஒரு முக்கியமான சந்தேகம்,

இவங்க பேரு "குஷ்பு" வா இல்லை "குஷ்பூ" வா ...உங்க பதிவில் இரண்டும் வருதே? எது சரி?
என்னடா இது ,தமிழுக்கு வந்த சோதனை..////

என்றா இது சிபிக்கு வந்த சோதனை.... அய்யகோ இப்போ என்ன செய்வாரு....எங்கே போயி கண்டுபுடிப்பாரு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குஷ்புவின் மனசாட்சி -


டைரக்டர் சொல்றபடி கேட்கவேண்டியது ஒரு நடிகையோட வேலை.. ஹீரோ கூட டூயட் பாடச்சொன்னா பாடுவோம்.. வில்லன் கூட டூயட் பாடச்சொன்னாலும் பாடுவோம்..கலைஞர் தி மு க வோட டைரக்டர்... ///////

அப்போ இந்தப் படத்துல ஹீரோ யாருங்ணா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////குஷ்புவின் மனசாட்சி -


அவருக்கு படத்துலதான் நடிப்பு சரியா வர்லைன்னு பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...////////

அவரும் நாலு கோர்ட் படியேறுனா சரியாயிடுங்ளா.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கற்புகரசன் முதலாம் லோத்துங்க சோழன்(யாரப்பா அது கு வ விட்டது) சிபி வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Thirumalai Kandasami said...
ஒரு முக்கியமான சந்தேகம்,

இவங்க பேரு "குஷ்பு" வா இல்லை "குஷ்பூ" வா ...உங்க பதிவில் இரண்டும் வருதே? எது சரி?
என்னடா இது ,தமிழுக்கு வந்த சோதனை..////

என்றா இது சிபிக்கு வந்த சோதனை.... அய்யகோ இப்போ என்ன செய்வாரு....எங்கே போயி கண்டுபுடிப்பாரு...?///

வலை போட்டு கண்டு பிடிப்பாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////7. ''சரி... சினிமா பத்திப் பேசுவோம். உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யாரு?''


''எனக்கு ஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு கம்ப்ளீட் ஹீரோயின். ரொம்ப வருஷம் கழிச்சு, இப்போ அனுஷ்காவைப் பிடிச்சிருக்கு. 'அருந்ததி’யில் பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ். நல்ல உயரம், நல்ல அழகு... நம்பர் ஒன் ஹீரோயினுக்கான எல்லா தகுதிகளும் அவங்களுக்கு இருக்கு!''////////

அதுதான் அந்தம்மாவே அனுஷ்கான்னு எடுத்துக் கொடுக்குதுல்ல, அப்புறம் ஏன் இப்படி குஷ்பூ படத்தையே போட்டு வெச்சிருக்கீங்க? எனக்கு அப்பவே டவுட்டு உங்க கடைல கெழவனுங்க கூட்டம் இன்னிக்கு ரொம்பி வழியுதேன்னு.... இதான் காரணமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி -1 : இந்த பேட்டி குஷ்புவைத்தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. ஹி ஹி ///////

அப்படியே புண்படுத்திட்டாலும்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 2 : குஷ்பூவின் குலப்பெருமையை கேவலப்படுத்தி விட்டார்..சி பி மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என யாராவது பதிவு போட நினைத்தால்.. வேணாம்ங்க.. ஏன் இந்த சிரமம்.. இங்கேயே இப்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு...///////

மன்னிப்பு எனக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை....... இதுவரைக்கும் 124 தடவை சொல்லிட்டீங்க, அதுல 25 தடவை உங்க ப்ளாக்ல, 99 தடவை கமெண்ட்ல....

அய்யய்யோ அது நான் இல்லீங்கோ......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக.. ///////

இலியானா ஓக்கேதான் இருந்தாலும் எங்கள் தங்கத் தலைவி அனுஷ்காவின் பெயர் பதிவில் வந்தும் படம் போடாமல் புறக்கணித்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லையென்றால் சிரிப்பு போலீஸ் உடனடியாக குளிப்பார் என எச்சரிக்கிறேன்.....

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி போட்டுத்தொலைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கற்புகரசன் முதலாம் லோத்துங்க சோழன்(யாரப்பா அது கு வ விட்டது) சிபி வாழ்க

வழக்கமா ரமேஷ் ஒழிகன்னு தானே சொல்வாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக.. ///////

இலியானா ஓக்கேதான் இருந்தாலும் எங்கள் தங்கத் தலைவி அனுஷ்காவின் பெயர் பதிவில் வந்தும் படம் போடாமல் புறக்கணித்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லையென்றால் சிரிப்பு போலீஸ் உடனடியாக குளிப்பார் என எச்சரிக்கிறேன்.....//

என்னது குளிக்கனுமா? போங்கடா பிக்காலி பசங்களா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
சரி சரி போட்டுத்தொலைக்கிறேன்//////

டேய் சிரிப்பு போலிஸ்.... குளியல் கேன்சல்... வெளிய வா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
சரி சரி போட்டுத்தொலைக்கிறேன்//////

டேய் சிரிப்பு போலிஸ்.... குளியல் கேன்சல்... வெளிய வா....//

hehe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக.. ///////

இலியானா ஓக்கேதான் இருந்தாலும் எங்கள் தங்கத் தலைவி அனுஷ்காவின் பெயர் பதிவில் வந்தும் படம் போடாமல் புறக்கணித்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லையென்றால் சிரிப்பு போலீஸ் உடனடியாக குளிப்பார் என எச்சரிக்கிறேன்.....//

என்னது குளிக்கனுமா? போங்கடா பிக்காலி பசங்களா.../////

வெறும் குளியல் இல்ல போலீசு, இது ஃபையர் பாத்.... நல்லாருக்கும், வா வேற கடைல போய் இதே டெக்குனிக்க ட்ரை பண்ணுவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கற்புகரசன் முதலாம் லோத்துங்க சோழன்(யாரப்பா அது கு வ விட்டது) சிபி வாழ்க

வழக்கமா ரமேஷ் ஒழிகன்னு தானே சொல்வாரு?//////

கேரளாவுல போயி மந்திரிச்சு வீட்டுட்டிங்களா?

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

உங்களுடையது அனைத்துமே அக்மார்க் தங்கம் வாழ்த்துக்கள் . அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

தி. மு. க - குஷ்பு
அ .தி. மு.க- அனுஷ்கா.


வாழ்க தமிழக அரசியல், வாழ்க வெள்ளிகிழமை

டக்கால்டி said...

My blog deleted by someone...

:-(

உணவு உலகம் said...

அப்போ நீங்க குஷ்பூவின் இதயத்தில் குடியிருக்கீங்களோ!

உணவு உலகம் said...

குஷ்பூவின் மனசாட்சி?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Haaaaaaa..... sema comedy i enjoyed it very much.haaaaaaaaaaa

டக்கால்டி said...

My blog deleted by someone :-(
Help needed for recovery...

டக்கால்டி said...

My blog deleted by someone :-(
Help needed for recovery...

உணவு உலகம் said...

டக்கால்டி said...
My blog deleted by someone :-(
Help needed for recovery...//
என்ன நண்பரே இப்படி. இதற்கும் திருடர்களா?
மீட்கும் உபாயம் அறிந்தவர்கள் உதவலாமே!

உணவு உலகம் said...

டக்கால்டி said...
My blog deleted by someone :-(
Help needed for recovery...//
நண்பரே, இந்த லிங்கில் சென்று தேடுங்கள், கிடைக்கலாம்.
http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=87065

Anonymous said...

எவ்வளவோ மேட்டர் கஷ்டப்பட்டு நீங்க டைப் செய்து போட்டிருந்தாலும் அனுஷ்கா படத்தை போட்டீங்க பாருங்க அதுல அடிச்சீங்க ஹிட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
எவ்வளவோ மேட்டர் கஷ்டப்பட்டு நீங்க டைப் செய்து போட்டிருந்தாலும் அனுஷ்கா படத்தை போட்டீங்க பாருங்க அதுல அடிச்சீங்க ஹிட்டு//////

ங்ணா.... மேலே கமெண்ட்டு பாக்கலியா? நாங்க மெரட்டியில்ல அனுஷ்கா படம் போட வெச்சிருக்கோம்....!

கோவை நேரம் said...

எப்படியோ உங்க வயசு ஆண்டி பத்தின பதிவு போட்டு திருப்தி அடைந்து விட்டீர்கள் ,,,,

Unknown said...

அப்ப அனுஷ்கா போட்ட்டோ ஏன் போட்டிருக்கீங்க தல :-)

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்புவின் மனசாட்சி -


ஆமாங்க.. கலைஞர் வாரிசுலயே பாருங்க ஸ்டாலினுக்கு என்னை பிடிக்கும், அழகிரிக்கு பிடிக்காது.. கனி மொழிக்கு என்னை பிடிக்காது.. கட்சில ஒரு கிளாமரான ஆளு வர்றதை அவங்க விரும்பலை ... இதுவும் குடும்ப ஆதிக்கம் தான்.. ஆனா வெளில சொல்ல முடியுமா?//

ஹாஹஹ்ஹா அப்பிடி போடு அருவாளை கொக்கமக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்புவின் மனசாட்சி -


இருந்தா என்ன? என்னமோ அவங்க நாட்டைக்காப்பாத்த வந்த தியாகிங்க மாதிரியும், நான் துரோகி மாதிரியும் பேசறீங்களே.. எல்லாரும் கூத்தாடிங்க தான்.. பணத்துக்காக எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசுவோம்.. கல்லா கட்டற வேலையைத்தான் எல்லாரும் பார்க்கறோம்..? //

"நக்கத்கான்" குஷ்புன்னாலே அதுருதுல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்புவின் மனசாட்சி -


அவருக்கு படத்துலதான் நடிப்பு சரியா வர்லைன்னு பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...//

விஜய் "ங்கே"......

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்புவின் மனசாட்சி -


நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ.. //

இந்த லிஸ்ட்ல உம்ம பெரும் இருக்குறதா சொன்னாங்களே உண்மையா...?

MANO நாஞ்சில் மனோ said...

//குஷ்புவின் மனசாட்சி -


நல்ல அப்பா.., நல்ல பெரியப்பா அமைஞ்சிருக்காங்க என் குழந்தைகளுக்கு.. .ஹி ஹி //

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்... யாரந்த பெரியப்பா...?

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி -1 : இந்த பேட்டி குஷ்புவைத்தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. ஹி ஹி //

குஷ்பு பாவம்ணா விட்ருங்க.....
என்னாது அவங்களை விட சொல்லனுமா.....

Unknown said...

//ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு...//

அவ்வ்வ்... அவ்ளோ காஸ்ட்லியா

Unknown said...

சூப்பர் பிகர்ஸ் அண்ட் சூப்பர் ஆண்ட்டி

Unknown said...

ரசித்துப் படிக்க முடிஞ்சதுங்க சி.பி.. செம வாருவாரியிருக்கீங்க..

டிஸ்கி 2: ஹா ஹா ஹா.. கலக்கல்..