Friday, March 25, 2011

குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/03/kullanari-koottam-movie-posters.jpg 

போலீஸ் எஸ் ஐ செலக்‌ஷனில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்ததைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அதற்காக அவர் மெனக்கெட்டு அமைத்த ஜனரஞ்சகமான திரைக்கதை இருக்கே .. கலக்கல்...

இடைவேளை வரை காதல் ,அதற்குப்பிறகு போலீஸ் செலக்‌ஷன் ஸ்டோரி என எந்த விதக்குழப்பமும் இல்லாமல் இயக்குநர் சர்வசாதாரணமாக திரைக்கதையை கையாண்ட விதம் பிரமிப்பூட்டுகிறது...

ஹீரோ - ஹீரோயின் சந்திப்பைக்கூட சாதாரண செல்ஃபோன் ரீ சார்ஜ் மேட்டரில் அவர் டெவலப் பண்ணிய விதம் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நல்ல பாடம்..

வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ விஷ்ணு இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப சாதாரணமான தோற்றத்தோடு ,இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்...படத்தில் ஹீரோவுக்கு ஃபைட் இல்லை என்பது கூடுதல் நிம்மதி..

ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்.. நடிப்பு ஓக்கே..இவர் கசாமுசா டிரஸ் எல்லாம் போடாமல் கதையின் கண்ணியத்துக்கு ஏற்றவாறு டீசண்ட்டாக உடை அணிந்து வந்து இயக்குநர் சொன்ன வேலையை கரெக்ட்டாக செய்து பாராட்டை பெறுகிறார்...
http://www.tamilnow.com/movies/gallery/kullanari-koottam/remya-nambeesan-in-kullanari-koottam-2.jpg
படத்தோட கதை என்ன?ஒரு போலீஸ் ஆஃபீசருக்குத்தான் பொண்ணைக்குடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் பெண்ணை காதலிக்கும் பையன் தன் அப்பாவுக்கு போலீசையே பிடிக்காது என்ற முட்டுக்கட்டையை தாண்டி எப்படி எஸ் ஐ ஆகி காதலியின் கையைப்பிடிக்கிறான் என்பதுதான்... அதை எந்த அளவு கதையோட்டத்துடன் கூடிய காமெடியுடன் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவராஸ்யமாய் சொல்லுவதில் இயக்குநர் டிஸ்டிங்க்‌ஷனில் பாஸ் ஆகி இருக்கிறார் .

படத்தோட ஓப்பனிங்க்ல அப்பாவின் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்குப்பதிலாக யாரோ ஒரு பொண்ணுக்கு தவறுதலாக ரீ சார்ஜ் செய்ய அந்தப்பெண்ணை பார்த்து அந்த ரீ சார்ஜ் பணத்தை பெறுவதற்குள் அவர்களுக்குள் காதல் ரீ சார்ஜ் ஆகிறது..இந்த சுவராஸ்யமான சம்பவம் படத்தை இடைவேளை வரை கொண்டு போவது ஆச்சரியம் தான்..
http://gallery.nkl4u.in/wp-content/gallery/kullanari-kootam/kullanari-koottam-movie-exclusive-stills-1.jpg
கதையுடன் கூடிய காமெடியில் கலக்கும் வசனங்கள்

1. அப்பா - டேய், எனக்கு ஒரு உதவி பண்றியா..?

ஹீரோ - வேலைக்குபோன்னு சொல்லாம எது வேணாலும் சொல்லுங்க.. கேட்கறேன்..

அப்பா   - நடக்காததைப்பற்றி நான் எதுக்கு கவலைப்படறேன்..?


2.  இங்கே பாரு பசங்களா... மழைக்குக்கூட   போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கிடக்கூடாது...அது உங்களுக்கு ஞாபகம் வரட்டும்னு தான் நான் இப்படி நடந்துக்கறேன்...


 3.  டேய்.. வாயை மூடிட்டு சாப்பிடு..

அது எப்படி முடியும்?நீ சாப்பிட்டு காமி...

அய்யோ அப்பா முடியலடா சாமி.. வெற்றிங்கற உன் பேரை ஏன் உன் வீட்ல வெட்டின்னு கூப்பிடறாங்கன்னு இப்பத்தான் தெரியுது...

4.  இந்தா.. நான் உன் கிட்டே வாங்குன 10 ரூபா.. சரியா இருக்கான்னு எண்ணிப்பார்த்துக்க...

ஏண்டா.. நீ என்ன 7 ரூபா + 3 ரூபான்னா குடுத்திருக்கே..? ஒரே ஒரு பத்து ரூபாதானே .. எதுக்கு எண்ணி பார்க்கனும்?

5. ஹீரோயின் - நீங்க என்ன பண்றீங்க..?

ஹீரோ -  ...................................

ஹீரோயின் - என்னங்க.. இப்படி சும்மாவே இருந்தா எப்படி? பதில் சொல்லுங்க..

ஹீரோ - நான் வேலைக்கு போகாம சும்மா இருக்கேன்கறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொன்னேங்க..


6.  எந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கீங்க..?

ஹூம்.. என்னை நம்பி ஒரு டீக்கடைல கூட அக்கவுண்ட் வெக்க விட மாட்டேங்கறாங்க...( குமுதம் ஜோக் வெ சீதாராமன்)

7.  ஏங்க.. ஆட்டோ  எல்லாம் வேணாம்ங்க....

காசு நான் தர்றேன்.. 

அப்ப சரி.. இப்பவே போலாம்.. ஹி ஹி 

8.  ஏம்ப்பா.. ஆட்டோ வருமா..?

வந்தா கூட்டிட்டு போ... ( எஸ் வி சேகர் நாடகக்காமெடி- தத்துப்பிள்ளை)

9. ஹீரோயின் தோழி - யார்டி இவன்?

ஹீரோயின் - ஜஸ்ட் ஃபிரண்டுதாண்டி...

ஹீரோயின் தோழி - ஹூம்.. கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... ( ஆடியன்ஸின் செம க்ளாப்ஸ்#எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ)

10. ஹீரோயின் - ஏண்டி.. அவனுக்கு ஃபோன் போட்டு பேசட்டுமா?

ஹீரோயின் தோழி - ஹய்யோ பச்சை மண்ணு.. என்னை கேட்டுத்தான் எதுவும் செய்யும்.. ஹூம்.. நானும் அழகாத்தான் இருக்கேன்.. எனக்கு ஒருத்தனும் மாட்ட மாட்டேங்கறானே..?  (எந்த ஒரு மொக்கை ஃபிகருக்கும் ஒரு இளிச்சவாயன் உண்டு , அது இயற்கையின் நியதி #இடைச்செருகல் சொந்த டயலாக் ஹி ஹி - நன்றி குருதிப்புனல் கமல் வசனம்)


11.  காது குத்தல் ஃபங்க்‌ஷன் நல்ல படியா முடிஞ்சுதா..?

ஹூம்.. இவன் நமக்குத்தாங்க காது குத்திட்டான்..லவ்வை டெவலப் பண்ண போயீட்டு வந்திருக்கான்..

12.  இப்படி தம் அடிக்க்கறீங்களே... போலீஸ் செலக்‌ஷன் ல எப்படி ஓடப்போறீங்க?

ரயில் ஓடறதுக்கு முன்னால புகை விடறதில்லையா? எப்படி ஓடறேன்னு மட்டும் பாரு... ( வெ. க.குழு படத்தில் 50 புரொட்டா சாப்பிட்டு ஜெயிக்கும் காமெடியனின் இந்த டயலாக்கிற்கு அரங்கம் அதிரும் கை தட்டல் # தம் பார்ட்டிங்க)

13.  ஏண்டா.. காதல் அவ்வளவு சக்தியை தருமாடா..? 

அனுபவிச்சுப்பார்த்தாத்தாண்டா அதனோட அருமை தெரியும்..

14. பேசாம நீ என் கட்சில சேர்ந்துடு.. நல்லா வளர்ந்துடுவே...

28 வருஷமா வளராதவனா இப்போ வளரப்போறேன்? அட போங்கப்பா.. (இந்த டயலாக்கை பேசும் காமெடியன் அழகர் சாமியின் குதிரை பட ஹீரோ)
http://boxoffice9.com/gallery/var/resizes/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Kullanari-Koottam-Stills,Photos,Pics/Kullanari%20Koottam%20Stills00-11.jpg?m=1299302886
படத்தில் பல சீன்கள் கை தட்டலை அள்ளிக்கொள்கின்றன.... பர்சனல் லோன் வேணுமா? என பிரைவேட் பேங்க் ஸ்டாஃப் கேட்கும்போது எரிச்சலாய் மறுக்கும் ஹீரோ அடுத்த 10 நிமிஷத்துலயே சார் எனக்கு 1500 ரூபா பர்சனல் லோன் வேணும் என கேட்பது செம காமெடி...

மிஸ்டு கால் கொடுக்கும் ஹீரோவை கலாய்க்க ஹீரோயின் ரெடியாக ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்க கண்ணிமைக்கும் நேரத்தில் ஹீரோ மிஸ்டு கால் கொடுப்பது செம சீன்...

மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு..

இடைவேளை வரை காதலை கலகலப்பாக கொண்டு செல்லும் இயக்குநர் படத்தின் பின் பாதியை அப்படியே சர்வசாதாரணமாக கலர் மாற்றுவது செம..

ஃபர்ஸ்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற.. செகண்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற  என சொன்னால் கூட நம்பி விடலாம்...அந்த அளவு செகண்ட் ஆஃப்பில் களம் மாற்றம்..
http://3.bp.blogspot.com/-npFJgY61Qbo/TX-Ce40GYII/AAAAAAAAexk/eFqomEVGcB0/s400/Kullanari-Koottam-ramya-nambeesan-3.jpg
எஸ் ஐ செலக்‌ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது...

காதல் என்பதை முத்தத்தில் சொல்லி விட்டாய்.. மவுனத்தில் உணர்த்தி விட்டாய் பாடல் வரிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே தரம்.. ஒளிப்பதிவு  கண்ணுக்கு குளிர்ச்சி.. எடிட்டிங்க் உட்பட்ட டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் ஓக்கே ரகம்
.
படத்தில் டைட்டில் தான் சரி இல்லை.. இன்னும் கவித்துவமாய் வைத்திருக்கலாம்.. அதே போல் ஆரம்பத்தில் செல் ஃபோன் ரீ சார்ஜ் செய்யும் பெண்ணிடம் ஹீரோ பேசும் டபுள் மீனிங்க் டயலாக்கை கூட கட் பண்ணி விடலாம்....


இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு  இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப்பூச்செண்டு கொடுத்துப்பாராட்டலாம்..
ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று


ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 140 நிமிடங்கள் ஓடுகிறது...


 டிஸ்கி -1. சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 2 -  
  SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

42 comments:

Senthil said...

vadai

senthil, doha

Unknown said...

போடா டேய் ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரொம்ப நல்லாவே சொல்லியிருக்கிங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படம் பார்க்க ஆவளை துண்டியிருக்கிறது தங்கள் விமர்சனம்..
நன்றி..

அடுத்த படம் சாந்தி தானே..

டக்கால்டி said...

Vanthen

Ram said...

என்னாது வர்ற வர்ற நம்ம சிபி கடையில டீஜன்ட்டான படமா விமர்சனத்துக்கு வருது..

MANO நாஞ்சில் மனோ said...

//போலீஸ் எஸ் ஐ செலக்‌ஷனில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்ததைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அதற்காக அவர் மெனக்கெட்டு அமைத்த ஜனரஞ்சகமான திரைக்கதை இருக்கே .. கலக்கல்...//

யப்பா முதல் முதலா நல்ல வார்த்தை சொல்லிட்டாருய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

//வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ விஷ்ணு இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப சாதாரணமான தோற்றத்தோடு ,இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்...படத்தில் ஹீரோவுக்கு ஃபைட் இல்லை என்பது கூடுதல் நிம்மதி..//

செவி தப்பிச்சது சந்தோஷம்.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்..//


ப்பூப்ப் அப்பிடியா....

MANO நாஞ்சில் மனோ said...

//அப்பா - டேய், எனக்கு ஒரு உதவி பண்றியா..?


ஹீரோ - வேலைக்குபோன்னு சொல்லாம எது வேணாலும் சொல்லுங்க.. கேட்கறேன்..


அப்பா - நடக்காததைப்பற்றி நான் எதுக்கு கவலைப்படறேன்..?//


நீ என் இனமடா ராஜா....

MANO நாஞ்சில் மனோ said...

// டேய்.. வாயை மூடிட்டு சாப்பிடு..


அது எப்படி முடியும்?நீ சாப்பிட்டு காமி...//

நம்ம மொக்கையன் செல்வா'கிட்டே டிரைனிங் எடுத்துருப்பான்களோ....

MANO நாஞ்சில் மனோ said...

//ஹீரோயின் தோழி - யார்டி இவன்?


ஹீரோயின் - ஜஸ்ட் ஃபிரண்டுதாண்டி...


ஹீரோயின் தோழி - ஹூம்.. கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... ( ஆடியன்ஸின் செம க்ளாப்ஸ்#எத்தனை பேர் பாதிக்கப்பாடாங்களோ)//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

//இப்படி தம் அடிக்க்கறீங்களே... போலீஸ் செலக்‌ஷன் ல எப்படி ஓடப்போறீங்க?


ரயில் ஓடறதுக்கு முன்னால புகை விடறதில்லையா? எப்படி ஓடறேன்னு மட்டும் பாரு... ( வெ. க.குழு படத்தில் 50 புரொட்டா சாப்பிட்டு ஜெயிக்கும் காமெடியனின் இந்த டயலாக்கிற்கு அரங்கம் அதிரும் கை தட்டல் # தம் பார்ட்டிங்க)//


ஹை நல்ல பதிலா இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//எஸ் ஐ செலக்‌ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது...//

ம்ம்ம் படத்தை உடனே பாத்துர வேண்டியதுதான்...

Unknown said...

அடடே மனம் நில்லுனா நிக்காதடா!

சக்தி கல்வி மையம் said...

என்னாச்சி இவருக்கு பதிவுபோட்டு எஸ்கேப் ஆயிடராரு ...

MANO நாஞ்சில் மனோ said...

//இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப்பூச்செண்டு கொடுத்துப்பாராட்டலாம்..//

அப்பாடா இயக்குனர் தப்பிச்சிட்டான்'பா....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
என்னாச்சி இவருக்கு பதிவுபோட்டு எஸ்கேப் ஆயிடராரு ...//

பாவம் கொஞ்சம் சாப்பிடவாவது டைம் குடுங்கய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
அடடே மனம் நில்லுனா நிக்காதடா!//

தெளிவா சொல்லும் ஒய் "மனம்"மா "மனோ"வா....

Unknown said...

மனோ எனும் மெல்லினம் இப்போ தொடயினம் ஹிஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

அடுத்த பட விமர்சனம் எப்போ?

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா எப்படின்னா நான் "நினைச்ச மாதிரியே" குள்ள நரி கூட்டம் விமர்ச்சனத்தை போட்டிங்க! உங்க கருத்து கணிப்பை பார்க்கும் போது இப்படம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றே எண்ணதோனுகிறது. கதாநாயகி சுமார் என்பதால் போகலாமா? வேண்டாமா? என்பது புரியாத புதிர்

ம.தி.சுதா said...

படத்தை பாக்கிறிங்களா அல்லது அப்படியெ முழுங்கிறிங்களா ? ஹ..ஹ...

வசனமெல்லாம் அச்சொட்டாமல் வருதே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
மனோ எனும் மெல்லினம் இப்போ தொடயினம் ஹிஹி!//


எலேய் பிச்சிபுடுவேன் பிச்சி ஹே ஹே ஹே ஹே...

பொ.முருகன் said...

உங்க ஜோக்ஸ்ஐ யாரும் காப்பிக்கூட அடிக்க மாட்டேன்ங்ரான்களே பாஸ் ஏன்.

Thirumalai Kandasami said...

மாசத்துக்கு ஒரு நல்ல படம் வந்தா தமிழ் சினிமாவுக்கு நல்லது தானே,,

ராஜி said...

பதிவு அருமை, நைஸ், மார்வலஸ், ஜோர், தூள், நல்லா இருக்கு

Unknown said...

தல இன்னைக்கு விமர்சனம் ரொம்பவே நல்லா இருக்குது, படமும் நல்லா இருக்குனு சொல்றீங்க, பார்த்துடுவோம்...

உணவு உலகம் said...

வரி விடாமல் விமரிசனம். விலாவாரியான அலசல். ரொம்ப பொறுமை சாமி உங்களுக்கு.

உணவு உலகம் said...

நேற்று போல் இன்றும் இல்லை, தமிழ்மணம் ஓட்டு போடும் வசதி. என்ன ஆச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

பதிவின் டைட்டிலை க்ளிக் பண்ணவும்... நீங்க ரம்யா நம்பீசனை க்ளிக் பண்ணி இருப்பீங்க.. அது தப்பு.. ஹி ஹி

shanmugavel said...

பார்த்துட்டா போச்சு!

pichaikaaran said...

படத்தை விட, உங்கள் எழுத்தும், நீங்கள் ரசித்த விதமும் அருமை

ஹேமா said...

சிபி...நான் இணையத்திலேயே நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பது வழக்கம்.இப்பல்லாம் உங்க விமர்சனம் பார்த்தே படம் பார்க்க முடிவெடுக்கிறது வழக்கமாகுது.நேரம் நிறைய மிச்சம் உங்களால !

Philosophy Prabhakaran said...

// ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்.. //

வன்மையான கண்டனங்கள்...

Philosophy Prabhakaran said...

// மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு.. //

இதெல்லாம் நாங்க (யூத்துகள்) பிராக்டிக்கலாக செய்யும் விஷயங்கள்... ம்ம்ம்... அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது... போய் புள்ளக்குட்டிங்களை படிக்க வையுங்க...

மதன்செந்தில் said...

ஆனந்த விகடனுக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம் போல..? காவலனுக்கு 45 சொல்றீங்க, இதுக்கு 44 சொல்றீங்க.. என்னத்தான் முக்கி முக்கி படம் எடுத்தாலும் 42தான் போடுவாங்க..

டக்கால்டி said...

Paathudalaam

டக்கால்டி said...

//ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்..//

Kandikkiren...

Unknown said...

படத் தலைப்புக்கு -6 மார்க் போட்டு ஆனந்த விகடன் 50 கொடுக்கிறத நிறுத்திட்டீ்ங்களே CPS !

geethappriyan said...

நல்ல விமர்சனம்,பார்க்கிறேன்

ராஜ நடராஜன் said...

//மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு..//

காஞ்ச வடை சாப்பிட வந்திருக்கேன்.
இவ்வளவு புத்திசாலிக இருக்கற ஊருன்னுதான் பேரு!