Thursday, April 14, 2016

தெறி - சினிமா விமர்சனம்

டெல்லி நிர்பயா மாதிரி ஒரு பொண்ணை அரசியல்வாதியோட மகன் கொடூரமா ரேப்பிடறான்,ரேப் நடந்த 10 மணி நேரத்தில் போலீஸ் ஆஃபீசரான  ஹீரோ குற்றவாளியை கொடூரமா 3 நாள் சித்ரவதை பண்ணி கொலை பண்ணிடறார்.


 வில்லன் தன் மகனோட சாவுக்குப்பழி வாங்க  ஹீரோவோட மனைவி , அம்மா வை டுமீல், ஹீரோ தன் மகளோட  தப்பிச்சிடறார்.

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் மீதி போராட்டம் தான் கதை,

ஹீரோவா தமிழ் சினிமாவின் நடனப்புலி இளைய தளபதி. 3 கெட்டப்கள்.ஆனா ஒரே ஆக்டிங் தான், சத்ரியன்  விஜய்காந்த் போல் ஓப்பனிங்கில் அண்டர்ப்ளே ஆக்டிங். போலீஸ் ஆஃபீசராக கெத்து ஆக்டிங்,பின் பாதியில் பழி வாங்கும் ஆளாக ஆக்ரோச ஆக்டிங்.ஸ்கூலில் நுழைந்து தகராறு செய்யும் ரவுடிகளுக்கு வாத்தியாராக கிளாஸ் எடுக்கும் காட்சி கிளாசிக் மாஸ்  சீன்.


இடைவேளை பஞ்ச் ல  கெத்து காட்டுவதும்  தூள். பெண் கேட்டு ஹீரோயின் அப்பாவிடம் பேசும் டச்சிங் டயலாக் அழகு.


நைனிகா பேபி மீனாவின் மகள் சோ க்யூட்  எக்ஸ்பிரசன்ஸ் . படத்தோட பிளஸ் பாய்ண்ட். ஆனா சில இடங்களில்  ஓவர் ஆக்டிங். பேபி என்பதால் மன்னிச்சுடலாம்


வில்லனாக மகேந்திரன்  செம ஆக்டிங், இன்னும் அவருக்கு அதிக காட்சிகள் வெச்சிருக்கலாம்


நாயகிகள் இருவர் . சமந்தா , எமி ஜாக்சன். சம்ந்தாவுக்கு  மேக்கப்  ஓவர். க்ளோசப்பில் பயமுறுத்தறார். நல்ல கலரா இருக்கும் ஃபிகர் எதுக்கு ரோஸ்பவுடரை 4 கோட்டிங் அப்பனும்?


மொட்டை ராஜேந்திரன்  செம கலக்கல் காமெடி. டயலாக் டெலிவரி குட்

பாடல்கள் 3  ஓக்கே . ஜித்து  ஜில்லாடி , டான்ஸ்  குட்

 ஒளிப்பதிவு  நல்லாருக்கு


 திரைக்கதை  ரொம்ப ஸ்லோவா போகுது. 



சபாஷ் டைரக்டர்


1   பேபி நைனிகா செலக்சன் டாப்


2   ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் , டீசர் , ட்ரெய்லர் எல்லாமே கலக்கலாக ரிலீஸ் பண்ணி படத்துக்கு  ஒரு டெம்ப்போவை ஏற்றியது 


3   ஹீரோ 3 கெட்டப் 3 ஆக்டிங்  என்பது மாதிரி ஸ்டில்ஸ் வெளியிட்டது எடுத்தது


4  முன் பாதி  ஃபேமிலி ஆடியன்ஸ் ம் குழந்தைகளைக்கவரும்படி   எடுத்த விதம்


5 ஹீரோ டிரஸ்சிங் சென்ஸ்,  பில்டப் சீன்ஸ், பிஜிஎம்


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1   போலீஸ் ஆஃபீசர் ஹீரோ இறந்ததாக டிபார்ட்மெண்ட்  எப்படி நம்புது? டெட் பாடி கிடைக்காம எப்டி கேசை மூடறாங்க?


2  தன் மகன் இறந்ததை ஆவேசத்துடன்  கண் முன் கண்ட வில்லன் அப்பவே ஹீரோவைப்போடாமல் எதுக்கு அவகாசம் தர்றார்?


3 படத்தில் பல காட்சிகளில் பல படங்களின் மாஸ்  சீன்களின் கலவையாய் இருப்பது ஏன்? பாட்ஷா , சத்ரியன், ஆனஸ்ட்ராஜ், என்னை அறிந்தால் என விஜய்காந்த், சரத்குமார் படங்களின் கலவையாய்  இருப்பது ஏனோ?

4  ஒரு  போலீஸ் ஆஃபீசர் தான் செஞ்ச கொலையை கொலைகாரனின் அப்பாவிடமே பேக்கு மாதிரி சொல்லி மாட்டிக்கலாமா?



தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்


திருவனந்தபுரம் ஸ்ரீ குமார் தெறி 9 30 am ஷோ.கேரளாவில் பிளாக் டிக்கெட்ஸே இல்லை.கவுன்ட்டர் ரேட் 103 + ரிசர்வேசன் சார்ஜ் 10 ரூ =113 ஒன்லி


2 திருவனந்தபுரத்தில் மொத்தம் 12 தியேட்டர்கள்.அதில் 8 ல் தெறி. மம்முட்டி மோகன் லால் களின் சமீபத்தைய படங்கள் தலா 6 தான்

3 FDFS பார்ப்பதில் பெரிய மைனஸ் வசனம் புரியாது.ரசிகர்களின் ஆரவாரக்கூச்சல் கை தட்டல்கள் தான் கேட்கும்.ஒரு குத்து மதிப்பாதான் பார்க்கனும்

4 தெறி =158 நிமிடங்கள்

5 தெறி டைட்டில் டிசைன் ,பிஜிஎம் சூப்பரு


6 உதவி இயக்குநர்கள் 18 பேர்.அடேங்கப்பா


7 ஓப்பனிங் சீன் துப்பாக்கி ,ஜில்லா வை விட ஒரு மாற்று கம்மி தான்.பைக் சேசிங்


8 மீனா வின் மகள் முக பாவனைகள் டாப்.சோ க்யூட்


9 பாட்ஷா போலீஸ் கமிசனர் ஆபீசில் மாணிக்கம் சைன் பண்ற சீன் போல் செம சீன் 1


10 அரங்கை அதிர வைக்கும் ஜித்து ஜில்லாடி .விஜய் க்கு டான்ஸ் ஸ்டெப் எப்பவும் போல் கலக்கல்

11 ஒத்தை சொல்லால தனுஷ் பாட்டுக்கு விஜய் டான்ஸ்

12 தெறி இடை வேளை.முன் பாதி கமர்சியல் பேமிலி என்ட்டர்டெய்னிங்.முதல் 60 நிமிடம் ஸ்லோ திரைக்கதை.அடுத்த 20 நிமிடம் ஸ்பீடு.இடைவேளை பஞ்ச் செம

13


நச் டயலாக்ஸ்

1 உங்க அப்பா முகம் ஏன் சீரியசா இருக்கு?



லவ் பெய்லியர் டீச்சர்.உங்களுக்கு எதுனா ஐடியா இருக்கா?


2  விஜய் = திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?



ரவுடி =,வள்ளுவர் கோட்டம் # தெறி



3 உங்க முகம் க்யூட்டா குழந்தை மாதிரி இருக்கு



விஜய் = சொல்லி இருக்காங்க பலர்

4 ரவுடி = 5 பேரையும் அடிச்ட்டே இல்ல?ஒரு போன் பண்ணா 10 நிமிசத்துல போலீஸ்.வரும்



விஜய் = போலீஸ்.வந்தே 10 நிமிசம் ஆச்சு.நானே போலீஸ் தாண்டா

5 நீ மண்டபத்துக்குள்ளே வராதே.உள்ளே காபி டீ கொடுத்தா வெளில டிரைவர் வெய்ட்டிங் னு சொல்றேன்



மொட்டை ராஜேந்திரன் = ஐ ஆம் வெய்ட்டிங் சார்

6 இ லோகத்துல சின்னவங்க பெரியவங்க ன்னு யாரும் இல்லை.நல்லவங்க கெட்டவங்க ரெண்டே பேரு தான் # தெறி


7 ஒரு பொண்ணு கிட்டே இன்னொரு பொண்ணுதான் மனசு விட்டுப்பேச முடியும்


1000 அப்பாக்கள் சேர்ந்தாலும் ஒரு பொண்ணுக்கு அம்மா மாதிரி வராது

9 உன்னை எனக்கு எந்த அளவு பிடிக்குமோ அதே அளவு என் போலீஸ் வேலையும் எனக்குப்பிடிக்கும்


10 ஒருத்தன் சூப்பர் மேனா இருக்கறது அவனுக்கு வேணா பெருமையா இருக்கலாம், ஆனா அவன் ஃபேமிலிக்கு அந்த இமேஜ் இடைஞ்சல் தான்


11 வில்லன் மகேந்திரன் - சாவுக்கு மேல பெரிய தண்டனையை உனக்கு தரனும்னு நினைச்சேன், தந்துட்டேன்


12  


 வில்லன் டூ ஹீரோ = நான் உன் கிட்டே  ரொம்ப எதிர்பார்த்தேன், நீ சப்பையா மாறிட்டே

13  உங்களைப்பார்த்த முத நிமிசம் என்ன நினைச்சனோ அதான் 100 வருசம் ஆனாலும் # தெறி


14 அப்ப ஓக்கேன்னா இன்னாங்க அர்த்தம்?
ஓக்கே னு தான் அர்த்தம் செம காமெடிங்க.அப்புறமா சொல்லுங்க சிரிக்கனும் #,தெறி


15 கத்தி எடுத்து ஒருத்தனை போடறது ஈசி.பேனா எடுத்து எழுதறது தான் கஷ்டம் #,தெறி பஞ்ச்


16 சத்தமா பேசாத
சுத்தமா பிடிக்காது மொத்தமா தூக்கிடுவேன்...

 சிபி கமெண்ட் -தெறி -  விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான  கமர்ஷியல் ஆக்‌ஷன் ரிவஞ்ச் சப்ஜெக்ட் - சராசரி. துப்பாக்கி கத்திக்கு பல படி கீழே - விகடன் -41 , ரேட்டிங் = 2.75 /5 



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மார்க் = 41


 குமுதம் = ஓக்கே

0 comments: