Wednesday, May 08, 2024

CASE OF KONDANA (2024) -கன்னடம் /மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


2021 ல்  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆன  சீதராம் டினோய்  கேஸ்  நெம்பர் 18  கன்னடப்படத்தின் காம்ப்போ  ஆன   இயக்குநர்  தேவி  பிரசாத் ஷெட்டி  +  நாயகன் விஜய ராகவேந்திரா   மீண்டும்  இணைந்து  அந்தப்படத்தை  விட  தரமான  ஒரு  த்ரில்லர்  படத்தை  தந்திருக்கிறார்கள் 


கொண்டானா  என்பது  கர்நாடகா  மாநிலத்தில்  பெங்களூர்  அருகே  உள்ள  ஒரு  இடம் . அஞ்கே  நடக்கும்  சில  சம்பவங்களை  வைத்து  திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் . 26/1/2024  அன்று  திரைக்கு  வந்து  வெற்றி  பெற்ற  இப்படம்  மீடியாக்களால்  பெரிதும்  பாராட்டப்பட்டு  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு   போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் .இவர்  தன்  காரில்   இரவு  நேரத்தில்   போகும்போது  ஒரு  பானி  பூரிக்கடை  அருகே  சின்ன  விபத்தில்  மாட்டுகிறார். அப்போது  அங்கே  இருக்கும்  பானி  பூரிக்காரன்  நாயகனுக்கு  உதவுகிறான்.உதவும்போது  நாயகனின்  ஜீப்பில்  உள்ள  ரூ  ஒரு  லட்சம்  பணத்தைபார்த்து  அதை  அபேஸ்  செய்கிறான்


 ஆக்சுவலாக  பானிபூரிக்காரனின்  மகனுக்கு  ஒரு  ஆபரேஷன்  நடைபெற  இருக்கிறது. அதற்குப்பணம்  தேவைப்பட்டதால்  இப்படி  ஒரு  செயலை  வேறு  வழி  இல்லாமல்  செய்கிறான். நாயகன் அந்த  திருட்டைக்கண்டு  பிடித்து  விடுகிறான். இருவருக்கும்  ஒரு  கை  கலப்பு  உருவாகிறது . அதில் ஆக்சிடெண்ட்டலாக  அந்த  பானிபூரிக்காரன்  கீழே  விழுந்து  தலையில்  கல்  பட்டு  ஸ்பாட் அவுட்  ஆகி  விடுகிறான்


 நாயகனுக்கு  என்ன  செய்வது  என்று  தெரிய  வில்லை . அப்போது  அந்த  வழியாக  போலீஸ்  ஜீப்  ரோந்து  வருகிறது . நாயகன்  உடனே   டெட்  பாடியை  மறைத்து  விடுகிறான். அவர்கள்   சென்றதும்  டெட்  பாடியை  நாயகன்  தன்  காரில்  ஏற்றிக்கொள்கிறான்


நாயகனின்  நண்பன்    ஒரு  ஹையர்  போலீஸ்  ஆஃபீசர்.  வழியில்  லிஃப்ட் கேட்டு  நாயகனின்  காரில்  ஏறிக்கொள்கிறார்


ஆரம்பத்தில்  போலீஸ்  ஜீப்பில்  ரோந்து  வ்ந்த  இரண்டு  போலீஸ்  ஆஃபீசர்கள்  நாயகனின்  காரை  ஃபாலோ  செய்கிறார்கள் 


ஒரு  இடத்தில்  நாயகன்   அந்த  டெட்  பாடியை  பெட்ரோல்  ஊற்றி  எரிக்க  முற்படுகையில்  நாயகனின்  நண்பன் , ஃபாலோ  பண்ணி  வந்த  இரண்டு  போலீஸ்  ஆஃபீசர்கள்  மூவரும்  வாக்குவாதம்  செய்கிறார்கள் . 


 நாயகனின்  நண்பன்  நாயகனைக்காப்பாற்ற  முற்படும்போது  ஒரு  தள்ளு  முள்ளு  ஏற்பட்டு  பெட்ரோல்  கேனில்  துப்பாக்கிக்குண்டு  பட்டு  மூவரும்   எரிந்து    இறக்கிறார்கள் 


 நாயகன்  தெரிந்தோ  தெரியாமலோ  இப்போது  நான்கு  பேர்  இறப்புக்கு காரணம்  ஆகி  விட்டான் 


இறந்து  போன  போலீஸ்  ஆஃபீசரின்  மகள்  அசிஸ்டெண்ட்  கமிசனர்  ஆஃப்  போலீஸ் . அவர்  தான்  நாயகி 


 இதற்குப்பின்  நாயகன்  தப்பிக்க  என்ன  எல்லாம்  திட்டம்  போடுகிறான்? நாயகி  எப்படி  நாயகனைக்கண்டு பிடிக்கிறாள்  அதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதுதான்  மீதி  திரைக்கதை 

நாயகன்  ஆக  விஜய ராகவேந்திரா   போலீஸ்  கட்டிங் , ஜிம்  பாடி  என  ஒர்க்  அவுட்  பண்ணி  நடித்திருக்கிறார். குற்ற  உணர்ச்சியில்  கலங்கும்போது  நல்ல  நடிப்பு . ஆக்சன்  காட்சிகளில்  தடுமாறுகிறார்


அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆஃப்  போலீஸ்  ஆக  பாவனா.போலீஸ்  கெத்து  ஓக்கே  ரகம் .ஆனால்  வைஜெயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி , டெல்லி  க்ரைம்   நாயகி  ஷெஃபாலி  ஷா  ரேஞ்சுக்கு  இல்லை 


நாயகானின்  மனைவியாக  குஷி  ரவி  கச்சிதம், அழகான  முகம் , அளவான  நடிப்பு ., இவருக்கு  அதிக  காட்சிகள் இல்லாதது  ஒரு  குறை 


2  மணி  நேரம்  20  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


ககன்  ப்தேரியா  வின்  இசையில்  இரண்டு  பாடல்கள் ஓக்கே  ரகம் .பின்னணி  இசை  குட் விஸ்வஜித்  ராவின்  ஒளிப்பதிவில்  லாங்க்  ஷாட் , க்ளோசப்  ஷாட்  எல்லாம்  கச்சிதம் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  தேவி  பிரசாத் ஷெட்டி


சபாஷ்  டைரக்டர்


1    படம்  போட்ட  30 வது  நிமிடத்தில்  இருந்து  பரபரப்பு  தொற்றிக்கொள்கிறது.கிரிஸ்ப்  ஆக  திரைக்கதையை  நகர்த்திய  விதம் 


2   நாயகனுக்கு  டூயட் , மொக்கைக்கா,மெடி  டிராக்  என  எதுவும்  சொதப்பாமல்  எடுத்துக்கொண்ட  திரைக்கதைக்கு  நியாயம்  செய்த  விதம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அஞ்சு  லட்சம்  ரூபா  கடன்  கேட்கும்  ஆள்  நேரில்  போய்க்கேட்பதுதானே  மரியாதை ? ஃபோன்ல  கேட்டா  கிடைக்குமா?

2   ஹைவே  ரோட்டில்  நாயகன்  ரத்தக்கறை  பட்ட  கல்லைக்கழுவிக்கொண்டிருப்பது  எல்லாம்  ஆகாத  வேலை 


3  நாயகன்  சம்பவம்  நடந்ததுமே  தன்  செல்  ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணாதது  ஏன்?பின்  ஒரு  நாளில்  சைபர்  க்ரைம்  போலீஸ்  லொகேஷனை  வைத்து  கண்டுபிடிக்கும்  என்பது  போலீஸ்  ஆன    அவருக்குத்தெரியாதா?


 4  மெயின்  கதைக்கு  வர   அரை  மணி  நேரம்  எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும்  ஷார் ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கலாம் 


5 க்ளைமாக்ஸ்  ஃபைட்   தேவை  இல்லாதது . அந்த  கேங்க்ஸ்டர்  கூட்டம்   மோதல்  தேவை  இல்லாதது 


6  க்ளைமாக்சில்  நாயகன்  திடீர்  என  நல்லவன்  ஆக  மாறி  அத்தனை  ரவுடிகளையும்  அடித்துப்போட்டு  பாவனாவைக்காப்பாற்றுவது  நம்ப  முடியவில்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்கலாம் .. முதல்  அரை  மணி  நெரம்  பொறுமை  தேவை. நான்  பத்து  பத்து  நிமிடங்களாக  மூன்று  முறை  பார்த்து  நான்காவது  முறை  தான்  முழுப்படத்தையும்  பார்த்தேன். ரேட்டிங்  3 / 5 


Case of Kondana
Theatrical release poster
Directed byDevi Prasad Shetty
Written byDevi Prasad Shetty
Screenplay byDevi Prasad Shetty
Produced byDevi Prasad Shetty
Sathwik Hebbar
StarringVijay Raghavendra
Bhavana Menon
CinematographyVishwajith Rao
Music byGagan Baderiya
Production
company
Flying Elephant Story Tellers
Release date
  • 26 January 2024
CountryIndia
LanguageKannada

0 comments: