Friday, February 19, 2016

சேதுபதி - சினிமா விமர்சனம்

வில்லனோட பொண்ணு ஒரு போலீஸ் ஆஃபீசரைக் கல்யாணம் பண்ணி இருக்கு. 2 பேருக்கும் ஒத்து வர்லை. டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டா குழந்தையைப்பார்க்க முடியாதோன்னு புருசன் தயங்கறான். சரி சமாதானமா வாழ லாம்னு பார்க்கும்போது  ஒரு சின்ன தகராறில் பொண்டாட்டியை கை நீட்டி அடிச்சுடறான். கை நீட்டாம அடிக்க முடியாதில்ல?


 அதுக்கு என்னமோ அந்த சம்சாரம்  ஓவரா துள்ளுது. கோபத்துல  தாதாவான தன் அப்பா கிட்டே  என் புருசன் செத்தாலும் பரவாயில்லை, என் கிட்டே இருந்து அவனைப்பிரிச்சுடுங்க அப்டிங்குது.


பெரிய தாதா, ரவுடி , அரசியல்வாதி ( எல்லாம் 1 தானே? ) யான வில்லன் ஸ்கெட்ச் போட்டு போலீஸ் ஆஃபீசரான மாப்ளையை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடறார், அதுல  ஒரு சின்ன ஆள் மாறாட்டத்துல  வேற ஒரு போலீஸ் ஆஃபீசரை உயிரை வாங்கிடுது,


இப்போதான் ஹீரோ எண்ட்ரி. இந்த கேசை துப்பு துலக்கறார்


 இந்த கேசிலிருந்து அவரை விலக்க வைக்க  வில்லனால் ஒரு சதித்திட்டம் தீட்டப்படுது. ஸ்கூல் ஸ்டூடண்ட்டை சுட்டுட்டதா  போலீஸ் ஸ்டேசன்லயே அவர் மேல  கேஸ் போட்டுடறாங்க.


இந்த சதியில்  இருந்து  ஹீரோ  எப்படி  மீண்டு வர்றார் என்பதே  விறுவிறுப்ப்பான திரைக்கதை


ஹீரோவா வித்தியாசமான நடிப்பின் நாயகன்  விஜய்  சேதுபதி. கலக்கி எடுத்து விட்டார்   நடிப்பில், அவரது  போலீஸ்  கம்பீரம் இது தாண்டா போலீஸ்  டாக்டர்  ராஜ சேகருடைய நடிப்பை நினைவுபடுத்துது


ஹீரோயினா  ரம்யா நம்பீசன் . இருவரும்  லூட்டிகள், சுட்டிகளுக்கு தெரியாமல்  செய்யும்  ரொமான்சுகள்  செம  கிளு கிளு



போலீஸ் ஸ்டேஷனில்  சப் இன்ஸ்பெக்டராக   வருபவர் கவனிக்க  வைக்க்கிறார்

வில்லன் நடிப்பு கன கச்சிதம்


காட்சிகள் இடைவேளை வரை ரெக்கை கட்டிப்பறக்குது

 திரைக்கதை , எடிட்டிங்  கன கச்சிதம்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

சார்.ஒயிப் மிஸ்சிங்.நடத்தையில் சந்தேகம்னு கேஸ் எழுதவா?

யோவ்.மிஸ்சிங் னு மட்டும் எழுது.போதும் #,சே


2 ஏ பொண்டாட்டி, என் கண்ணைப்பார்த்துப்பேசு, கோபமா இருக்கும்போது என்  கண்ணைப்பார்க்க மாட்டியா?

ம்ஹூம், பார்த்தா கண் அடிப்பீங்க!  # சே

3 இந்த போலீஸ்காரரை   வேலை நிறுத்தம்  செய்யனும்

 தலைவரே! வேலை நீக்கம் அது. சுத்தம். # சே








 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


சேதுபதியா?அந்தாள்.ஒரு சைக்கோ ஆச்சே? செம ஓப்பனிங் சீன் டூ வி சே


2 போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் ல ஹீரோ மீசை முறுக்கற மேனரிசம் தவறாம வந்திடுது.லேடி போலீஸ் னா ஜடையை திருகிக்குவாங்களா?




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  போலீஸ்  சப்ஜெக்ட் படங்களில்  பஞ்ச் டயலாக், ஓப்பனிங்  சீன் எல்லாம் எதுவும் வைக்காமல் யதார்த்தமாக எடுத்ததற்கு ஒரு சபாஷ்


2  ஹீரோ வீடியோ செட்டிங்கில் சம்சாரத்துடன்  செய்யும் லூட்டுகள், குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டிகள்  எல்லாம் பக்கா


3  போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அந்த மாணவன்  கொலை ட்விஸ்ட்  செம , இடைவேளை ட்விஸ்ட்டாய் கன கச்சிதம்

4 ஹீரோ  ஹீரோயின் இடையே ஃபைட் வரும்போது அப்போது குழந்தை வந்ததும்  சமாளிக்கும் காட்சியும் , வீட்டுக்கு வரச்சொல்லி அழைக்கும் அம்மாவிடம் புருசனை விட்டுக்கொடுக்காம பேசும் ஹீரோயின் டயலாக்கும் கலக்கல்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு சொந்த  துப்பாக்கியில்  லாக்கர் ரிலீசில் இருக்கா? இல்லையா? என தெரியாதா?

2    எப்போதும் ஷார்ப்பாக  இருக்கும் ஹீரோவை உடன் பணி புரியும் சக போலீஸ் ஆட்களே  ஏமாற்றுவது எப்படி?

3  ஹீரோவை உசுப்பேற்றி  அவர் ரவுடியை அடிப்பதை வீடியோ எடுக்கும் வரை ஹீரோ  ஏன்  வேடிக்கை பார்க்கிறார்?

4  விசாரணை கமிசனில் அந்த லேடி ஆஃபீசர்  ஓவரா சவுண்ட் உடுதே, ஒரு ஹைய ர் ஆஃபீசர் அப்படியா  இருப்பார்?







சி  பி  கமெண்ட் -சேதுபதி - முன் பாதி  செம விறுவிறுப்பு, பின் பாதி சராசரி, விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு ஹிட்,க்ரைம் த்ரில்லர் - விகடன் =43, ரேட்டிங் = 3 /5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே







 ரேட்டிங் = 3 /5

0 comments: