Friday, February 28, 2014

ஒரு வாட்டி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டான்னா

1. லேடி ஜோசியர் - மீன ராசிக்காரங்க் இந்த வருசம் லவ் பிரபோஸ் செஞ்சா சக்சஸ் ஆகும்.



 ஓஹோ.இப்பவே செக் பண்ணிடுவோம்.மேடம்.ஐ லவ் யூ



======================


2  என் கிட்டே 5 வருசமா வீட்டுக்கு வந்து ஜோசியம் பார்க்கறீங்க.ஆனா உங்களுக்கு கல்யாண ராசியே இல்ல.



தப்பு மாமா.உங்க பொண்ணு 3,மாசம்


======================



3  அத்தான்.விடிய விடிய கட்டிலைச்சுத்தி நடந்துட்டே இருக்கீங்களே ஏன்?


 என் ராசிப்படி முதல் இரவே நடக்காதுன்னு ஜோசியர் சொன்னத ்.பொய்யாக்கிட்டேன்


=====================


4   7 ல குரு பார்க்கறதால விருச்சிக்ச் ராசிக்கு நேரம் சரி இல்லை.



ஜோசியரே! உங்க வீட்டுக்கு எதிர் வீட்ல ஒரு குரு இருக்கான்.ஓடுங்க ;-))


====================


5   DR.புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு அபார்சன் ஆகும்னு ஜோசியர் சொன்னதை பொய்யாக்கிட்டோம்.


எப்டி?


முதல் இரவே நடத்தலையே? # இப்போ என்ன செய்வீங்க?


=======================



6   டாக்டர்.கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுங்க ரெட்டை வாழைப்பழம் சாப்பிடக்கூடாதாமே?



மிஸ்!,அதெல்லாம் மூட நம்பிக்கை.யூ கேரி ஆன்


======================



7   வில்லனைப்பார்த்து ஹீரோ சுட்ருவேன் னு மிரட்ற மாதிரி போஸ்டர் டிசைன் பிரமாதம்.



நீங்க வேற.இது சுட்ட கதை னு சிம்பாலிக்கா சொல்றாங்க



======================



8    ஹீரோ முத சீன் ல சீட்டாடும் போது க்யூன் ஜாக்கி சீட் கூட சேர்க்க கிங் (K) ஸீட்டை ஓப்பண் பண்றார்.



ஓஹோ.ஓப்பனிங் கிங் னு சொல்லிக்க?


====================



9 சாப்ட்டாச்சா???


சாப்ட்டேன் னா என்ன செய்வீங்க? சாப்பிடலைன்னா என்ன செய்வீங்க?




=========================



10   டியர்.என்னிடமுள்ள சுடிதார்ல்லாம் இப்போ அவுட் ஆப் ஃபேஷன் ஆகிடுச்சு.புதுசு வாங்கிக்கொடுங்க.



நீ கூட பஞ்சாங்கமா ,அவுட் ஆப் பேஷனாத்தான் இருக்கே



========================



11   டாக்டர்.2 நாள் ஜிம் போய் 4 கிலோ குறைக்கிற மாதிரி ஒர்க் அவுட் இருக்கா?



 இல்லை.ஆனா 6 நாள் ,கிச்சன் பக்கமே போகாம இருந்தா 1 கிலோ குறைக்கலாம்



======================



12   டாக்டர்.நான் குண்டானது வேற யாருக்கும் தெரியாம இருக்க ஏதாவது வழி இருக்கா?



 வீட்டை விட்டு வெளில போகாதீங்க.யாரையும் உள்ளே விடாதீங்க மேடம்



========================



13  டியர் !சுடிதார், சேலை கட்டிக்கிடடா்..எவ்ளோ குண்டாகிட்டோம்ன்னு தெரியாது.



உனக்குத்தெரியாது.ஆனா எனக்குத்தெரியுமே?



======================


14  லேடி -டாக்டர். வலது கண்ணு துடிச்சிட்டே இருக்கு,கெட்ட சகுனமோன்னு மனசு கிடந்து தவிக்குது .



 நல்ல வேளை சொன்னீங்க.கண் அடிக்கறீங்கனு நினைச்சேன்



======================



15  ஜனவரி 10 லீவ் போட்டா 2 நாள் சம்பளம் கட்.



ஓஹோ.அப்போ 9 ந்தேதி லீவ் குடுங்க.10 ந்தேதி லீவை எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன் # யாரு கிட்டே?



=======================



16 இந்த பைலை எல்லாம் பாத்து முடிச்ட்டு லீவ் எடுத்துக்குங்க.



 பாத்துட்டேன் சார்.6 மஞ்சள் பைல் ,4 பச்சை பைல்.



=========================



17 கதைக்களம் மதுரை ,ஹீரோ வில்லன் களை அடிச்சு துவம்சம் பன்றாரு.




இதென்ன விஷால் பட கதை மாதிரி இருக்கே?



============================



18 ஒரு வாட்டி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டான்னா அப்புறம் இந்த ஜில்லா ல யே இருக்க மாட்டான்.



 ஏனுங்க்ணா? ஜில்லா ல ஹாஸ்பிடலே கிடையாதுங்களா?



============================



19   டாக்டர்-,இந்த பேஷன்ட் ஏதோ சினிமா பார்த்த அதிர்ச்சில கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார்.எந்த ஜில்லாக்கு போனாலும் இவரைக்காப்பாத்த முடியாது




===========================



20   ட்ரெய்லர் விடும்போது யாரும் கதையை யூகிக்க முடியாத படி ரெடி பண்ணுங்க.



 முழுப்படமே பாத்தாலும் ஒரு பயலாலும் கதையை கண்டுபிடிக்கவே முடியாது



===============================

தெகிடி - சினிமா விமர்சனம்

ஹீரோ  எம் ஏ கிரிமினாலஜி படிச்சவர். அவருக்கு பரத், நரேன் வேலை செஞ்ச மாதிரி ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி ல வேலை கிடைக்குது . அவரோட வேலை என்னான்னா அவருக்கு  ஒரு ஆள் ஃபோட்டோ, அட்ரஸ் குடுத்து அவரைப்பத்தின விபரங்களை  அவரை ஃபாலோ பண்ணி சப்மிட் பண்ணனும். 


இந்த மாதிரி சில பிராஜெக்ட்சை அவர் வெற்றிகரமா செஞ்சு முடிச்சுடறார். கம்ப்பெனியோட  முக்கியமான விதி  அந்த நபரோட நாம எண்ட்ஜ தொடர்பும் வெச்சுக்கக்கூடாது . 


 இப்போ  ஹீரோயின் ஃபோட்டோ  கொடுத்து விசாரிக்கச்சொல்றாங்க . ஹீரோ ஹீரோயின் மேல லவ் ஆகிடறார். அவர்  கிட்டே பழகறார். 



அப்போ ஒரு திருப்பம். இதுவரை அவர் உளவு பார்த்து தகவல் சொன்ன ஆட்கள் எல்லாம் வரிசையா கொலை செய்யப்படராங்க. இப்போ  ஹீரோயின் உயிருக்கு ஆபத்து . ஹீரோ  ஹீரோயினை எப்படி காப்பாத்தினாரு ? யார் அந்த கொலை களை செஞ்சாங்க ? எதுக்கு செஞ்சாங்க ? என்பதெல்லாம் சஸ்பென்ஸ் 


பீட்சா , சூது கவ்வும் , அட்டகத்தி  போன்ற வித்தியாசமான படங்களைக்கொடுத்து நல்ல பேர் வாங்குன  பட  நிறுவனம் தான் இந்தப்படத்தையும்  கொடுத்து  இருக்கு . 

 திரைக்கதை , இயக்கம், எடிட்டிங்க்  தான் படத்தின்  முதுகெலும்பு . அபாரமா ஸ்கிரிப்ட்டுக்காக உழைச்ச இயக்குநர்  ரமேஷ்க்கு வாழ்த்துகள் . இவர் நாளைய இயக்குநர் பாகம் 2 இல் முதல் பரிசு வாங்கியவர். தமிழ் சினிமாவின்  சஸ்பென்ஸ் த்ரில்லர் இயக்குநர்கள் வரிசையில் உயர்ந்த இடம் உண்டு 


ஹீரோ வில்லா பட  ஹீரோ அசோக். இவர் எப்போதும்  சோகமான தாடியுடன் ஏன் வர்றார்?னு தெரியல . க்ரைம் த்ரில்லர் படம்னா இப்படித்தான்  ஹீரோ இருக்கனும்னு யாராவது  டெஃபனிஷன்  கொடுத்து  வெச்சிருக்காங்களா? 


 சுபா கதையில் வரும் நரேன் போல் , பிகேபி கதையில் வரும் பரத்  போல் கல கலப்பான கேரக்டராக அமைத்திருந்தால் இன்னும் படம்  பி சி யில் ரீச் ஆகி இருக்கும் ,


இருந்தாலும் பல இட ங்களில்  இயல்பான, அமைதியான நடிப்பால் மனம் கவர்கிறார் 

\நாயகி ஜனனி அய்யர் , அவன் இவன் படத்தில்  லூஸ் போலீஸாக சாரி  போலீசாக வரும் லூஸ் இவர் தான்/ இதில்  மிக அழகான கேரக்டர் . நல்லா பண்ணி இருக்கார் . மிக கண்ணியமான ஆடை வடிவமைப்புகள்  சபாஷ் 



போலீஸ் ஆஃபீசராக வரும்  ஜெயப்ரகாஷ் கம்பீரமான நடிப்பு . பலே போட வைக்கும்  பர்ஃபார்மென்ஸ்




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஹீரோ - ஹீரோயின் சந்திப்புக்காட்சிகள் , நட்பு , காதல்  உருவாகும் இடம்  எல்லாம் செம நேர்த்தி . குறிப்பாக  நாயகி பேசும் காதல் , நம்பிக்கை சார்ந்த வசனங்கள் தியேட்டரில்  கிளாப்ஸ் அள்ளுது 


2  ஹீரோவின் நண்பனாக வரும் காளி அருமையான யதார்த்தமான் நடிப்பு . 


3 படத்தை மிகச்சுருக்கமாக  2 மணி நேரத்தில்  முடித்தது . சஸ்பென்ஸ் காட்சிகளை கடைசி வரை காப்பாற்றியது .

 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. ஹீரோ  நவ நாகரீக இளைஞன் . டிடெக்டிவ் ஏஜென்சி வெச்சிருக்கார். ஆனால் அவர் கிட்டே ஒரு செல்  ஃபோன்  கூட  இல்லை. இது நம்பும்படி இல்லை. அதுக்கான காரணம் சரியா சொல்லப்படலை 


2 சாதாரண   ஹோட்டல் சர்வர்  ஆக  இருக்கும்  ஆள் 30,000  ரூபாய் மதிப்புள்ல காஸ்ட்லி செல் ஃபோன் வைத்திருக்கார் 



3  மூன்று  வில்லன்களில்  ஒருவர்  தன் உண்மையான பேரை மாற்றி பொய்ப்பேரில்  ஹீரோவை ஏமாத்தறார் . ஓக்கே. ஆனால் அவரைப்பற்றி  பேப்பரில்  நியூஸ் வரும்போது அந்தப்பொய்ப்பேரில்  எப்படி  நியூஸ் வரும் ? 


4  காதலியிடம் ஆரம்பத்தில் எந்த உண்மையையும் சொல்லாமல்  இருப்பது  ஓக்கே, ஆனா அவளே என்னதான் நடக்குது ? என கேட்ட பின்னும்  ஹீரோ ஏன்  மென்னு  முழுங்கனும் . எல்லா உண்மையையும் சொல்லிடலாமே? 



5 ஹீரோ கைது ஆன விஷயம்  ஹீரோயினுக்கு எப்படி தெரியுது ? அவர் எப்படி ஜாமீன் எடுக்க போலீஸ் ஸ்டேஷன் வந்தார் ? ( நண்பன் ஃபோனில்  இருந்து தகவல் சொல்லி அவர் வந்தார் என சமாளிக்க முடியாது , ஹீரோயின் வந்ததையே  ஹீரோ ஆச்சரியமாகவும் , அதிர்ச்சியாகவும் பார்க்கறார் ) 


6  கொலை செய்யப்பட  இருக்கும் நபருக்கு   ஹீரோ  ஃபோன் பண்ணி “ ஒரு லைஃப் பிரச்சனை இருக்கு , அதைப்பத்திப்பேசனும் என இழுப்பது எரிச்சல் . சார் , உங்க உயிருக்கு ஆபத்துன்னா  வேலை  முடியுது . அதே  போல்   ஃபோனை அவர் கட் பண்ணியது  இவர் மேட்டரை எஸ் எம் எஸ்  கூட பண்ணி  இருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை ? 


7   க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில்  3 வில்லன்கள் இந்த வேலை யை எல்லாம்  ஏன் செய்யறாங்க ? என தெரிய வரும்போது  “ ஏன் இவ்வளவு ரிஸ்க் ? தலையை சுத்தி  மூக்கைத்தொடனும் ? அதுக்கு பேசாம  ஒரு பேங்க்கை  ஒரு டைம்  கொள்ளை அடிச்சா போதுமே எனத்தோணுது  




மனம் கவர்ந்த வசனங்கள்



1. டிடெக்டிவா ஒர்க் பண்றப்ப நாம எந்த க்ளையண்டுக்காக வேலை செய்யறோமோ அவருக்குக்கூட நம்ம டெடிகேசன் தெரியாது # தெகிடி



2 உன் மனசை உறுத்தும் எந்த வேலையையும் 2வது முறை செய்யாதே.செஞ்சா அதுவே உனக்குப்பழக்கிடும் # தெகிடி



3 எனக்கு மட்டும் ஏண்டா இப்படி ?



 வாழ்க்கை விரக்தியா இருக்கும்போது எல்லாரும் இதைத்தாண்டா சொல்றாங்க # தெகிடி 



தப்பை ஒத்துக்கறதுக்கும் ஒரு தைரியம் வேணும்.ஐ லைக் இட் # தெகிடி


பொண்ணுங்க கிட்டே பேசும்போது என்ன பேசறோம் என்பதை விட எப்படிப்பேசறோம் என்பது தான் முக்கியம்



லைப் ரொம்ப சின்னது.அதனால சின்னச்சின்ன விஷயத்தைக்கூட எஞ்சாய் பண்ணனும்



7  செஞ்ச தப்பைப்பத்தியே பேசிட்டு இருந்தா தீர்வு கிடைக்காது


8 நான் அவரோட பிரண்ட்.அவரைப்பார்க்கனும் 



பிரண்ட் செத்தது கூடத்தெரியல.நீ எப்டி பிரண்டா இருக்க முடியும் 



9 பொண்ணுங்க பொதுவா அவங்க மனசுக்குப்பிடிச்சவங்க எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவாங்க


10  இந்த மாதிரி மாட்டும்போது எதிராளியின் கண்ணை மட்டும் பாத்துடக்கூடாது.அப்டிப்பார்த்தா நம்ம உருவம் முழுசா அவங்க மனசுல பதிஞ்சிடும்



11  1000 தடவை யோசிப்பதை விட முக்கியம் ஒரு தடவை  செய்யனும் 



12 காதலி டூ காதலன் = ஒண்ணை முழுசா நம்பும்போது அது நம்ம கூடவே கடைசி வரை வரும், நான் என்னை நம்பறதை விட உன்னை அதிகமா நம்பறேன்


13 நமக்குத்தேவை இல்லைனு அலட்சியமா நாம நினைக்கும் சில சின்ன விஷயங்கள் கேசுக்கே முக்கியமான தடயம் ஆகிடும்



14  தைரியமா நாம செய்யறதெல்லாம் சரியா செய்யறதா அர்த்தம் கிடையாது


15  தேவைகள் தான் நம்ம வாழ்க்கையைத்தீர்மானிக்குது



16 தெரியாம நாம செஞ்சுடும் தப்புகளை விட அந்த தப்பை மறைக்க ச்செய்யும் தப்புக்களே அதிகம் 



17  நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம அதுவரை வெச்சிருந்த நம்பிக்கையையே மாத்திடும்



18  நீ சொன்னதெல்லாம் நடக்குமா?ன்னு  தெரியலை, ஆனா நான்  சொன்னது நடந்துடுச்சு 




 




 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்


1. டைட்டிலிலேயே இயக்குநரின் டச்.# ஜனனி தான்.ஜனனி அய்யர் இல்லை.சபாஷ் # தெகிடி



காலேஜில் அப்செர்வேசன் கிளாசில் தன்னை குறை சொன்ன லெக்சரரின் வாதத்தை முறிக்கும் இடம் குட் # தெகிடி


நாயகி புல் ஹேன்ட் சர்ட் போட்டு கழுத்து பட்டன் வரை போட்டிருக்கு.ரொம்ப கண்ணியம் போல.நற நற # ஜனனி அய்யர்


4  லாங்க் ஷாட்க்கு ஒரு மாதிரி பிஜிஎம் ,க்ளோசப் ஷாட்களுக்கு வேறமாதிரி பிஜிஎம் என இயக்குநர் பின்றார் 



5 தெகிடி @ இடை வேளை.புதிய கதை நேர்த்தியான திரைக்கதை.எடிட்டிங் ,பிஜிஎம் அபாரம்



6  தெகிடி = சூதாட்டம் ,சாமார்த்தியமாய் விளையாடுபவன் ,தந்திரம்,சாதுர்யம், புரட்டு வேலை

 
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 45 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று

ரேட்டிங் = 3.25  / 5


சி பி கமெண்ட் - தெகிடி - அபாரமான திரைக்கதை, 2014ன் முக்கியமான சஸ்பென்ஸ் த்ரில்லர்,சிறப்பான இயக்கம், பெண்கள் , மாணவ மாணவிகள் , எல்லோரும் பார்க்கலாம். ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன் 

 
 
 
டிஸ்கி -

வல்லினம் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/02/blog-post_7592.html

  

வல்லினம் - சினிமா விமர்சனம்

 

ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வந்த அபாரமான க்ரைம் த்ரில்லர் மூவியான ஈரம் படத்தை அடுத்து எடுக்கப்பட்ட வல்லினம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? பார்ப்போம் .


 ஹீரோ ஒரு பேஸ்கட் ப்ளேயர். திருச்சி ல காலேஜ் க்ரவுண்ட் ல விளையாடும்போது சக நண்பன்க்கு எதிர்பாராத விதமா இறப்பு நிகழுது. ( எல்லா இறப்புகளும் பெரும்பாலும் யாரும் எதிர்பாராததே!) .அதனால மனதளவில் பாதிக்கப்படும்  ஹீரோ ஒரு மாற்றம் தேடி சென்னை வருகிறார். அங்கே உள்ள காலேஜ் ல சேர்ந்து படிக்கிறார் . 

 அங்கே ஹீரோயினை சந்திக்கிறார். அதே காலேஜ் தான். ஜஸ்ட் ஃபிரண்ட்ஷிப் தான் . அப்புறம் காலேஜ் ல பேஸ்கட் பால்  டீம் ஃபார்ம் ஆகுது. இண்ட்டர் காலேஜ் காம்ப்பட்டிஷன் ல  ஹீரோ  டீமும் ஆடுது. 


அதுல  ஹீரோ  டீம் ஜெயிக்குதா? இல்லையா? என்பது தான் கதை . 




முன் பாதி யில் சும்மா காலேஜ் , காதல் , கலாய்ப்புகள் அப்டினு அசால்ட்டா போகுது திரைக்கதை . அதுக்குப்பின்  இயக்குநர் அது வரை எடுத்ததைப்போட்டுப்பார்த்து விழிச்சுக்கிட்டார் போல. சீட்டாட்டத்தில் விட்டதைப்பிடிக்கும் ஆவேசத்தில் ஆடுவார்களே அது போல் பின் பாதி திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கிறார். ஆனாலும்......


 எதிர்பாராத விதமா  ஒரு கல்யாணத்துக்குப்போய் அங்கே பிரமாதமான விருந்துசாப்பாடு சாப்ட்டா நமக்கு எப்படி  இருக்கும்? அது மாதிரி  ஈரம் படம் இருந்தது . அதே கல்யாணப்பொண்ணுக்கு கட்டுச்சோறு விருந்து எனும்போது நம் மனம் இன்னும் அதிகமா எதிர்பார்த்துப்போகும்போது  9 வகையான வெரைட்டி ரைஸ் எதும் போடாம  ஒரே ஒரு லெமன் ரைஸ் போட்டா எப்படி ஏமாற்றம் ஆகும் ? அது மாதிரி ஆகிடுது. 


ஹீரோவா தேவயானியின் தம்பி நகுல் .ஆள் நடிப்பில் நல்ல முன்னேற்றம், பேஸ்கட் பால் நிஜமாகவே படத்துக்காக கற்றாராம். சபாஷ் . அவர்  பாடி லேங்குவேஜில்  நல்ல  முன்னேற்றம். ஆனால் இதுவரை 10 படம் கூட பண்ணாமல் அவர் விஜய் , விஷால் ரேஞ்சுக்கு   வில்லனிடம் மோதும்போது கொடுக்கும்  பில்டப்கள்  ஓவர் . 


 ஜெகன் காமெடி பண்றதா நினைச்சுட்டு  கொஞ்சம்  மொக்கை போடறார். 


 ஹீரோயின் புது முக நாயகி  மிருதுளா. ரொம்ப அகலமான முகம். தமிழர்களுக்கு அவ்வளவு  சீக்கிரம் பிடிச்சுடாது . அவர் முகம் நம்ம மைண்ட் ல செட் ஆவதற்குள் அவர்  லூஸ் தனமாய் சேஷ்டைகள் செய்வது  எரிச்சல் . ஒரே ஒரு பாடல் காட்சியில் கடலில் 5 நிமிஷம் குளிச்சுட்டே  இருப்பது ஆஹா! கொடுத்த சம்பளம் இதுக்கே சரியாகப்போச்சு போல . 


பின் பாதி  திரைக்கதையில்   நல்ல கவனிப்பு  இருந்தாலும்  ஒவ்வொரு சீனும்  முடியும் போதும்  இதுதான் அடுத்த சீன், இப்படித்தான் காட்சிகள் நகரும் என சுலபமாக  யூகிக்க  முடிவது பெரிய பலகீனம் . 


பாடல் காட்சிகள்  நல்லா எடுத்திருக்காங்க .


கெஸ்ட்  ரோலில்   ஈரம் ஆதி  வர்றார். அதுல் குல்கர்னியை வேஸ்ட் பண்ணிட்டாங்க . ஹீரோயின் அப்பா வுடனான  உரையாடலில் நல்ல அழுத்தம், அந்தக்காட்சியை இன்னும் மனதில் பதிய வைக்கும்படி  எடுத்திருக்கலாம்


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. பேஸ்கட் பால் பிளேயர் என்பதை  ஹீரோ சென்னையில் யாரிடமும்  சொல்லாமல்  இடைவேளை டைமில்  வில்லனுடன் மோதும்போது ஷூட் போட்டு காட்சியால் உணர்த்துவது 


2   கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும்  தில்லுமுல்லுகள் , அது பற்றிய வசனங்கள் கச்சிதம் 


3  ஹீரோயின்  தன் அப்பாவிடம் தன் காதலனுக்காக வாதிடும் காட்சியும் கடைசியில் அம்மா இல்லைனு இப்போதான்  ஃபீல் பண்றேன் என்பதும் டச்சிங்க் .  





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  பின்  பாதியில்  சொல்ல வேண்டிய சம்பவங்கள் அத்தனை  இருந்தும்  ஏன் முன் பாதியில் அவ்வளவு அநியாய அசிரத்தை ? 


2   ஹீரோ - ஹீரோயின்  காதல்  மனதைத்தொடவில்லை 


3 .காதலை வெளிப்படுத்தும்  தருணத்தில்   ஹீரோயினுக்கு எப்பவும் கிளாமர்   டிரஸ்  கூடாது . 


4  க்ளைமாக்ஸ்   பரபரப்பை ஏற்படுத்தத்தவறி  விட்டது  


 


மனம் கவர்ந்த வசனங்கள்



1.  நீ என்ன படிக்கறே? 


 பி சி ஏ 

 எங்கேயோ  கேள்விப்பட்ட மாதிரி  இருக்கே? 


 நாம தான் அதுவும் படிக்கறோம் 



2  என்னடா இவன் சுறு சுறுப்பே  இல்லாம ஸ்லோமோசன் ல வர்றான் ? 



3  நாலு அடி இருந்தா நாலடியார் . நாலே நாலு  முடி  இருந்தா நான் முடியார் 



4  என்னை  உனக்குப்பிடிக்காதுன்னு  நினைச்சேன் \\


 உன்  கோபத்தில் ஒரு  நியாயம் இருக்கு 


5  சமைச்ச  உடனே சாப்பிட்டா அது  உப்புமா , அடுத்த நாள் வெச்சிருந்து சாப்பிட்ட  அது  ரொம்பத்தப்பும்மா    



6  பேஸ்கட் பால் பிளேயரா  இருந்துக்கிட்டு சச்சின் தான் பிடிக்கும்கறியே? 


 எந்த  கேம் , எந்த பிளேயர்ங்கறது முக்கியம் இல்லை 



 7  அவன்  கேப்டனா  இருக்கறது  உனக்கு  ஓக்கே தானே? 


 யார்  கேப்டன் என்பது முக்கியம் இல்லை , யார் பெஸ்ட்டா ஆடப்போறாங்க என்பது தான் முக்கியம் 



8  இனிமே இந்த மாதிரி வேலை  எல்லாம் பண்ணாதீங்க. மீறி செஞ்சா , ம் அதான் செய்யாதீங்கனு சொல்லிட்டனே ? 



9  காதலிக்க எதுவும்  முக்கியம் இல்லை , அன்பா அக்கறையா  ஒரு விசாரிப்பு , ஒரு எஸ் எம் எஸ்   போதும்  




 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்


1. வல்லினம் த்ரில்லர் மூவின்னாங்க 46 கள்ளக்காதல் ஜோடியும் 12 தெய்வீகக்காதலர்களும் அபிராமி கவுன்ட்டர்ல # படம் சுமாரா இருந்தாலும் டைம் பாஸ் ஆகிடும் போலயே 

==================



2 பேஸ்கட் பால் பிளேயர்ஸ் பத்தின படம் போல.தமிழன் ஏத்துக்குவானா? # வல்லினம்


=====================


3 இசை ,பின்னணி இசை = தமன் னு போடறாங்க # அப்போ இத்தனை நாளா இத்தனை பேரு தனித்தனியா வா செஞ்சாங்க?



======================



4 இது பொண்ணுங்களுக்கான படம் போல.ஹீரோ குளிக்கற சீன் ,ஸ்லோமோசன் ல பேஸ்கட் பால் த்ரோ பண்றதெல்லாம் காட்றாங்க # வல்லினம்


====================



காதலா காதலா பிரபுதேவா - கமல் டான்ஸ் ஸ்டெப் இந்தப்படத்தைப்பாத்து முன் கூட்டியே சுட்டுட்டாங்க போல # வல்லினம்


====================


6 நாயகி  மிருதுளா.பூசணிப்பூ மாதிரி அகல முகம்.ரசிச்சுட்டு இருக்கும்போதே லைலா ,ஜெனிலியா மாதிரி லூஸ் தனம் பண்ணுது.முடியல



=================


வல்லினம் - இடைவேளை.பெரிதாக கவரவில்லை.ஈரம் படத்தில் வந்த சுவராஸ்யங்களில் 25% கூட இல்லை.



====================



8  ஹீரோயின் லோ கட் பனியன் ,மிடி யோட குனிஞ்சு பரிமாறிக்கிட்டே ",எல்லாரும் வெட்கப்படாம சாப்பிடுங்க"ங்குது.இது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?



==================


9 பிரசாந்த்தோட அட்டர் பிளாப் படமான கல்லூரி வாசல் கதையை உல்டா பண்ணிட்டாங்க போலயே?



==============


10 ஹீரோயின் கடல் ல குளிச்சு முடிச்ட்டு கரை ஏறி மண் ல புரண்டு விளையாடுதே.அம்மா அப்பா திட்ட மாட்டாங்களா?


=================


11 என்னதான் ஹீரோயின் அல்வாத்துண்டு உதட்டழகியா இருந்தாலும் ஹீரோ அவரைக்கடல்ல புரட்டிப்போட்டு கடிச்சு வைக்கறாரே? கசக்காதா?



======================


12 இடை வேளை அப்போ வெளில போகாத காதல் ஜோடிங்க இப்போ போய்ட்டு போய்ட்டு வருதுங்க.அடேய்.என்னடா நடக்குது இங்கே? ;-)))


==================


13  டைரக்டருக்கு மனசுக்குள்ளே செல்வராகவன் னு நினப்பு.ஹீரோ காலேஜ் டாய்லட் ல நெம்பர் 1 போகும்போது பின்னால வந்து 143 சொல்லுது.அய்யோ ராமா


=================


14 ஹீரோ ஹீரோயின் கிட்டே காதலை முதன் முதலா வெளிப்படுத்தும் கவிதை தருணம்.உடை எவ்ளவ் முக்கியம்?,ஹீரோயின் துக்ளியூண்டு சிம்மீஸ் போட்டிருக்கு


====================


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் -ஈரத்தில் கால் வைத்தால் பின் அடுத்த அடி கவனமா வைக்கலைன்னா சறுக்கும். அறிவழகன் க்கு வல்லினம் ஒரு சறுக்கல் படம். ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன். ஈரோட்டில் ஒரு வாரம் தான் ஒடும் . நானா கண்டு பிடிக்கலை. மார்ச் 7 நிமிர்ந்து நில் வருதாம்.இந்தபப்டத்தை டி வி ல சீக்கிரம் போட்டுடுவாங்க , அப்போ பார்த்துக்கலாம் 


வல்லினம் - சுமாரான  முன் பாதி , விறுவிறுப்பான பின் பாதி -யூகிக்க முடியும் காட்சிகள்  


a



டிஸ்கி -

தெகிடி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/02/blog-post_7004.html 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (28 2 .2014 ) 13 படங்கள் முன்னோட்ட பார்வை

இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாக வருகிற 28ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீசாகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. டப்பிங் படங்கள் இந்த வரைமுறைக்குள் வராது.


கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சுமார் 200 படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீசாகவில்லை. இந்த புதிய கட்டுப்பாட்டால் அந்த படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. அறிவிப்பு வெளியான முதல் வெள்ளிக்கிழமையே 13 படங்கள் ரிலீசாவது திரையுலகிற்கு சின்ன அதிர்ச்சிதான். இந்த படங்களில் வல்லினம்,  மட்டுமே மீடியம் பட்ஜெட் படம். அதைத்தவிர பனிவிழும் மலர்வனம், அமரா, தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை, வங்கங்கரை ஆகியவை சிறு பட்ஜெட் படம். வெற்றி மாறன் (மலையாளம்), நான் ஸ்டாப், பறக்கும் கல்லரை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் (ஆங்கிலம்) கரன்சி ராஜா (தெலுங்கு) ஆகிய படங்களும் ரிலீசாகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

 
1.  வல்லினம் -ஈரம் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கியிருக்கும் படம் வல்லினம். எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் மெகா படத்தயாரிப்புக்கு இடையில் சிக்கி கடையினமாக வெளிவருகிறது. நகுல் ஹீரோ.




விளையாட்டை மையப்படுத்தி சினிமா எடுப்பது தமிழில் அரிது. அதிலும் பாஸ்கட் பால் போன்ற ஒரு விளையாட்டு? அரிதிலும் அரிது. அந்த ரிஸ்க்கை துணிந்து இதில் எடுத்துள்ளார் அறிவழகன். நகுல் இதில் பாஸ்கெட் பால் ப்ளேயராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் சவால், ஹீரோவைப் பார்த்தால் தோற்றத்திலேயே அவரின் விளையட்டு வீரர் லுக் தெரிய வேண்டும். இரண்டாவது ஓரளவுக்காவது பாஸ்கட் பால் ஆட தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டுக்காகவும் நகுலை ட்ரில் வாங்கியது படயூனிட். அவரும் முழுமையாக ஒத்துழைத்து, தமிழ்நாடு டீமில் இடம்பிடிக்கிற அளவுக்கு தோற்றத்தையும் திறமையையும் மெருகேற்றியுள்ளார்.
 
ஈரோடு அபிராமி யில்  ரிலீஸ்  
 
 
 
2.தெகிடி - என்றால் தாயம் போன்ற சூதாட்ட விளையாட்டுகளை குறிக்கும் சொல். ஏமாற்றுவதையும் தெகிடி என்ற பெயரில் குறிப்பிடலாம். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு ஆப்டான பெயர்.



ஜனனி அய்யர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். பெங்களூருவிலிருந்து சென்னை வரும் அவருடன் அசோக் செல்வனுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த புதிய உறவு என்னென்ன தொந்தரவுகளை சிக்கல்களை அளிக்கிறது, அதனை அவர் எப்படி அவிழ்க்கிறார் என்பதை சொல்லும் படம் (என்று எளிமையாக சொல்லலாம்). அசோக் செல்வன் கிரிமினாலஜி படிப்பை முடித்த பட்டதாரி என்பது படத்தின் கூடுதல் சுவாரஸியம்.

ஒரு கொலையின் பின்னணியில் நடக்கும் க்ரைம் ட்ராமா இந்தப் படம். நாளைய இயக்குனர் செஷன் டூ வில் முதல் பரிசு வென்ற பி.ரமேஷின் முதல் படம். அபினேஷ் இளங்கோவன், சி.செந்தில்குமார் தயாரித்திருக்கும் படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் வெளியிடுகிறார்.

நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் நாளை நம்மை த்ரில்லடைய வைக்க வருகிறது தெகிடி. படத்தின் சிறப்பு அம்சம் இதன் நீளம். இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய படம் இது.
 
ஈரொடு சண்டிகாவில்  ரிலிஸ்  
 
 
 
3. பனிவிழும்மலர்வனம் -பனி விழும் மலர்வனம்'. என்ற படத்தலைப்புக்கு பொருத்தமாக,கவித்துமான இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் படத்தை உருவாக்கியுள்ளார்கள் . மனதுக்கும் உடலுக்கும் இதமான, புத்துணர்வு தரும் தேக்கடி, குமுளி ஆகிய மலை வாசஸ்தலங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக்குழு. பனி விழும் மலர் வனம் படத்தை சிடிஎன் ப்ரொடக்சன்ஸ் படக்கம்பெனி தயாரிக்கிறது.

இயற்கையின் ஆற்றல் எங்கும் பரவியிருக்கிறது' என்ற புதுமையான கருவை அடிப்படையாகக் கொண்டு 'பனி விழும் மலர்வனம்' படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்கள். இயற்கை அழகை ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்க, திரை படைப்பை பதிவு செய்ய மலைகளின் காடு, மேடு பள்ளங்களில் அட்டைகளும் மற்ற இயற்கை உயிரினங்களும் தந்த வலியைப் பொருட்படுத்தாமல், கடினமாக உழைத்ததை கூறியிருக்கிறார்கள்.

கோலிவுட்டில் ஜீவா நடித்த 'ராமேஸ்வரம்', ஜித்தன் ரமேஷ நடித்த 'நீ வேணுண்டா செல்லம்' ஆகிய படங்களில் பணியாற்றிய ஜேம்ஸ் டேவிட் இப்படத்தை இயக்கியுள்ளார்.

'சுள்ளான்', 'மனதோடு மழைக்காலம்', 'ஜனனம்' ஆகிய படங்களின் கேமராமேன் ராகன் ஒளிப்பதிவில் , இயக்குநர் ஷங்கருடன் 'நண்பன்' படத்தில் பணியாற்றிய, தமிழ் சினிமாவின் விருது பட கலை இயக்குனர் டி.முத்துராஜ் கலை இயக்கத்தில், ராஜின் இசையமைப்பில், ரவிஷங்கர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

'நீதானே என் பொன் வசந்தத்தில்' நாயகனாக நடிப்பதாக இருந்த அபிலாஷ் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' என்ற படத்தில் நடித்த சாய்னாதான் நாயகி. பேராண்மையில் ஐந்து பெண்களில் ஒருவராக அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான 'நீர்ப்பறவையில்' போலீஸ் ரோலில் கவனிக்க வைத்த வர்ஷா மற்றுமொரு கதை நாயகி.  அமைதிப்படை 2 படத்திலும் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பை நகைச்சுவை நடிகர் பாப லக்ஷ்மண் ஏற்றிருக்கிறார். இயக்குநர் ஜெகனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கண்கவரும் இடங்களில், தேர்ந்த நடிகர்கள் மற்றும் திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களைக் கொண்டு தயாராகிவரும் 'பனிவிழும் மலர்வனம்' ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு 'Incredible India' வின் ஆச்சரியங்களைப் பறைசாற்றக்கூடிய படமாக இருக்கும் என்கிறது 'பனி விழும் மலர் வனம்' படக்குழு.  
 
ஈரோடு அண்ணா வில்  ரிலீஸ்  
 
 
 
4 அமரா-ஞாபகங்கள்’ படத்தையடுத்து ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் படம் ‘அமரா’. இதில் புதுமுகம் அமரன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ‘களவாணி’ ஓவியா ஒப்பந்தமாகியிருந்தார். திடீரென்று அவரை நீக்கிவிட்டு ‘காதலர் குடியிருப்பு’ ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளனர். இதுபற்றி ஜீவனிடம் கேட்டபோது, “ஹீரோயினாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரது கால்ஷீட் பெறுவதில் பிரச்னை வந்தது. கதைப்படி ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. எப்போதும் தளத்தில் இருக்க வேண்டி இருக்கும். ஆனால், அவரால் அப்படி வர முடியாது என்றார். இதனால் அவருக்கு பதில் ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளோம்” என்றார். 
 
 
ஈரோடு கிருஷ்ணா வில்  ரிலீஸ் 
 
 
வெற்றிமாறன் IPS’’ (karmayotha-malayalam)- வி.எஸ். நாராயணன் வழங்க ஸ்ரீபாரதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.என்.பாரதி தயாரிக்கும் படம் “வெற்றிமாறன் IPS’’ 

மலையாளத்தில் “கர்மயோதா” என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே “வெற்றிமாறன் IPS’’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.


‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லால் கதாநாயகனாக அதிரடி போலீஸ் அதிகாரி வெற்றிமாறனாக நடித்திருக்கிறார். மற்றும் சோனா, சாய்குமார், ரியாஸ்கான், சுகுமாரி, முகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு பிரதீப் நாயகர் ஒளிப்பதிவு செய்ய எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைக்கிறார்.


படம் பற்றி இயக்குனர் மேஜர் ரவி கூறியதாவது,


”இது நான் இயக்கியுள்ள ஏழாவது படம். ‘அரண்’ படத்தை மோகன்லால், ஜீவா நடிக்க உருவாக்கினேன். நல்ல பெயர் கிடைத்தது.


பெற்றோர் தங்களின் பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்கிறோம். அவர்கள் எது கேட்டாலும் வாங்கித் தந்து விடுகிறோம். செல்போன் மற்றும் லேப் டாப் உட்பட வாங்கிய அவர்கள் எந்த மாதிரியான விஷயத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. தவறான பாதையில் அவர்கள் போவதற்கும் காரணமாகிவிடுகிறது.


பத்து வயது பெண்கள் கூட பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தும் கொடுமையையும் இதில் தோலுரித்து காட்டுகிறேன்.


நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் மோகன்லால் “வெற்றிமாறன் IPS” படத்தில் நடித்திருப்பது எனக்குப் பெருமையே, ”என்றார் மேஜர் ரவி.

ஈரோடு சீனிவாசா வில்  ரிலீஸ் 

வல்லினம் (அபிராமி),தெகிடி(சன்டிகா ),பனிவிழும்மலர்வனம்(அண்ணா)அமரா(கிருஷ்ணா)வெற்றிமாறன்(சீனிவாசா).LERANKENSTEIN (VSP)#28 2 14 @ஈரோடு
 

மணிமேகலையுடன் கூட்டு

1. கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை #,எல்லாரும் பழையபடி விறகு அடுப்புக்கு மாறிட்டா இவனுங்க டப்பா டேன்ஸ் ஆடிடும்"



======================



2  பவர் கட் ஆனால் அரசுக்கு SMS அனுப்பலாம் - டெல்லி அரசு அறிவிப்பு # நெம்பரை வெச்சு ட்ரேஸவுட் பண்ணி உதைக்கவா?



===================


3  பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் நான் இல்லை: சரத்பவார் # காமெடி ல சரத்குமாரையே மிஞ்சீட்டீரே? நீரு யாரு ஓய்?



=====================


4 விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய், அஜீத்! - செய்தி # இப்போ நடக்கற சண்டையே 2 ஹிட் ல எது மெகா ஹிட் ?



========================



5  கோலம் போட்டு, கரும்பு கடித்து, உரியடித்து பொங்கல் கொண்டாடிய நமீதா! - செய்தி # ஏய்யா நாங்க மட்டும் பட்டாசு வெடிச்சா பொங்கல் கொண்டாறோம்?



======================



6 ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள் # இவர் படத்தை அவர் பட ரசிகரும் ,அவர் படத்தை இவர் பட ரசிகரும் பதிஞ்சிருப்பாங்களோ?



==================



7  மக்களை அதிகம் கவர்ந்தவர்கள்: பில்கேட்சுக்கு முதலிடம், சச்சினுக்கு 5வது இடம் # பில் கேட்ஸ் இல்லையா? அதான் டக்னு கேட்ச்



=====================


8  பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது: தமிழக அரசு அறிவிப்பு # இன்னோவா கார் தர்றதா சொல்லி ஆசை காட்டி மோசம் செஞ்சுட்டாரே?



=====================


9 ஒரு தமிழ் படத்தை பார்த்து அது தமிழ் படம்னு சொல்ல முடியுமா-சீமான் # அதானே? விஜய் படத்தைப்பார்த்து விஜயலட்சுமி படம் னு சொல்ல முடியுமா?



====================



10  கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதி...- செய்தி #, ஜில்லா எபக்ட்டா?


====================



11 ஜில்லா’ படம் வெற்றியடைய மொட்டை போட்ட மதுரை ரசிகர்கள்.# திருப்பதி போனா திருப்பம் வரும்.சலூன் ல போய் போட்டா கணக்குல வராதுங்க்ணா



====================


12 ஏ ஆர் முருகதாஸ் - விஜய் காம்பினேசன் பட டைட்டில் நாளை அறிவிப்பு # பொங்கல் அன்னைக்கு வந்தா தை பிறந்தா வழி பிறக்கும் னு நினைக்கறாங்க போல



=======================


13  மோடியால் பிரதமராக முடியாது-ஜெயந்தி நடராஜன் # அப்பக்கூட காங்கிரஸ் காரர் தான் பிரதமர் ஆக முடியும்னு சொல்ல் முடியலையே?



==================



14 அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை # தலைவர் இப்போ மணிமேகலையுடன் கூட்டு .காங் க்கு ஓட்டு அப்டினு அடிச்சு விடுவாரே?



=======================



15 பாஜக அணியில் சேரவேண்டாம்: வைகோவுக்கு திருமா வேண்டுகோள் .# திவ்யா! அந்தப்புதர்ப்பக்கம் போகாதே



====================


16  விஜயகாந்த் - திருமாவளவன் சந்திப்பு # நம்ம சந்திப்பு ஒரு சகாப்தமா இருக்குமா? அது தெரியல.என் பையனோட முத படம் டைட்டில் சகாப்தமா இருக்கும்



========================



17 ராகுல் பிரதமர் ஆவதே முக்கியம்: ஷிண்டே விளக்கம் # என்ன முக்கு முக்கினாலும் நடக்காது போலயேங்க்ணா



===================




18  அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் நிரப்பப்படும்:-் கே.சி.வீ # டீச்சராப்பார்த்து அப்பாயின்ட் பண்ணுங்க.காலி இடம் எல்லாம் ஜாலி இடம் ஆகட்டும்



==================


19   முக்கியச்செய்தி-கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு # அடேங்கப்பா.இனி என்னென்னெ பூகம்பம் வரப்போகுதோ.



=====================


20   ஜெயலலிதா கடிதம் எழுதுவது யாரை ஏமாற்றும் நாடகம்?: கருணாநிதி# தலைவா! 1000 தான் இருந்தாலும் டிராமா போடறதுல நம்மை யாரும் மிஞ்ச முடியாது



=================================