Monday, May 13, 2024

ஒரு நொடி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)

   

      பெரிய  நட்சத்திரப்பட்டாளங்களில்லாமல் திரைக்கதையை  நம்பி  எடுக்கப்படும்  படங்கள்  பெரும்பாலும்  ஹிட்  ஆகி விடுகின்றன. இரு  வேறு  நபர்களின்  மரணங்கள்    எப்படி  ஒரு  புள்ளியில்  இணைகின்றன  என்பதை  விளக்கும்  க்ரைம்  த்ரில்லர்  படமான  இது  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  உங்களை  சுவராஸ்யப்படுத்தும்  வல்லமை  கொண்டது.26/4/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  மீடியாக்கள்  வரவேற்பையும், மக்கள் ஆதரவையும்  ஒருங்கே  பெற்ற  படம்  


 இந்தப்படத்தில்  வாவேற்கத்தக்க  முக்கியமான  விஷயம்  நாயகனுக்கு  ஜோடி  இல்லை , டூயட்  இல்லை , மொக்கைக்காமெடி  டிராக்  இல்லை .   


ஸ்பாய்லர்  அலெர்ட்


 முதல்  கேஸ் =  பொலீஸ்  ஸ்டேஷனில்  ஒரு  பெண்  தன்  கணவன்  காணாமல்  போனதாக  மிஸ்சிங்  கேஸ்  கொடுக்கிறாள் .ஒரு  நபரிடம்  வட்டிக்குப்பணம்  வாங்கியதாகவும்  அந்த  நபர்  எம் எல்  ஏ  செல்வாக்கு  உள்ள  ஆள்  எனவும் ரொம்ப நெருக்கடி   தந்து  கொடுத்த  பணத்துக்கு  ஈடாக    அவர்களுக்கு சொந்தமான ஒரு  நிலத்தை எழுதி   வாங்கிக்கொண்டதாகவும் , அந்த  நிலத்தை  மீட்க  பணம்  ரெடி பண்ணி அன்று  காலையில்  கிளம்பியவர்  வீடு  திரும்பவில்லை . எட்டு  லட்சம்  ஹாட்  கேஷாக  அவர்  கையில்  இருக்கிறது


போலீஸ்  இன்வெஸ்டிகேஷனை  ஆரம்பிக்கிறது .எம் எல் ஏ  விடம்  இருந்து  நெருக்கடி  தரப்பட்டாலும்  நாயகன்  ஆன  இன்ஸ்பெக்டர்  அந்த  ஃபைனான்ஸ்  பார்ட்டியை  விசாரிக்கிறார். காலை  9  மணி  முதல்  இரவு  வரை  அந்த  ஆள்  எங்கே  எங்கே  போனார்  என  விசாரணை  நடக்கிறது . ஆனால்  துப்பு  எதுவும்  கிடைக்கவில்லை . அந்த  ஃபைனான்ஸ்  பார்ட்டியோ , எம் எல்  ஏ வோ  கொலை  செய்திருக்க  வாய்ப்பு  குறைவு 


 இரண்டாவது  கேஸ் =   நகைக்கடையில்  சேல்ஸ்  கேர்ள்  ஆக  வேலை  செய்யும்  ஒரு  இளம்பெண்  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கிறாள் . இந்தக்கேசை  நாயகன்  விசாரிக்கிறார். அந்தப்பெண்  42  நாட்கள்  கர்ப்பம்  என  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  தெரிய  வந்ததால்  காதல்  விஷயம்  பிடிக்காமல்  பெற்றோர்  அல்லது  பெண்ணின்  அப்பா  ஆணவக்கொலை  அல்லது  கவுரவக்கொலை  செய்திருக்கலாம்  என  முதலில்  போலிஸ்  நினைக்கிறது . அல்லது  கர்ப்பம்  ஆக்கிய  காதலன்  திருமணத்துக்கு  நெருக்கடி  கொடுத்ததால்  பெண்ணைக்கொலை  செய்திருக்கலாம்  என  சந்தேகிக்கிறது 


  ஆனால் விசாரணையில்  அந்தக்காதலனுக்கும், பெண்ணுக்கும்  பதிவுத்திருமணம்  ஏற்கனவே  நடந்தது  என்  தெரிகிறது.  சந்தேக  வட்டத்தில்  காதலனும், அப்பாவும்  நீங்குகிறார்கள் 


 மேலே  சொன்ன  இரு  கேஸ்களுக்கும்  ஒரு  தொடர்பு  இருக்கிறது , அதை  நாயகன்  எப்படி  துப்பு  துலக்கி  கண்டு  பிடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை 


முதல்  கேசில்  மிஸ்ச்ங்  நபராக  வரும்  எம்  எஸ்  பாஸ்கர்  வழக்கம்  போல  தன்  அனுபவம்  மிக்க  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் .ஃபைனான்ஸ்  பார்ட்டி  ஆக  வேல  ராம மூர்த்தி  மிரட்டலான  நடிப்பு .போலீஸ்  விசாரணை  நடக்கும்போது  கூட  கெத்து  காட்டும்  அவர்  உடல்  மொழி  அபாரம் . எம் எல் ஏ  ஆக  பழ  கருப்பையா  ஓவர்  ஆக்டிங் . டிராமா  நடிகர்  போல்  நடித்திருக்கிறார். நிஜ  வாழ்வில்  சிறந்த  பேச்சாளர்  ஆன  இவர்  ஏன்  படத்தில்  மட்டும்  இப்படி  செயற்கை  தட்ட  நடித்தார்  என்பது  தெரியவில்லை 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  நாயகன்  தமன்  குமார்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். ஓவர்  அலட்டல்  இல்லை , ஆனாலும்  போலீசுக்கு  உரிய  கம்பீரம்  குட் யூனிஃபார்மில்  இல்லாத  போதும்  போலீசுக்கான  கம்பீரத்தைக்காட்டும்  அவர்  உடல்  மொழி , ஜிம்  பாடி , போலீஸ்  ஹேர் கட்  அனைத்தும்  கச்சிதம் 


எம் எஸ்  பாஸ்கரின்  மனைவியாக  ஸ்ரீரஞ்சனி  ஸ்ரீவித்யாவுக்கு  நிகரான  அகன்ற  , பெரிய  கண்கள் , நல்ல  நடிப்பு .


 காணாமல்  போன  பெண்ணாக  நிகிதா கச்சிதம் . அவரது  அம்மாவாக   தீபா  சங்கர்   நிறைவான  நடிப்பு 


சஞ்சய்  மாணிக்கம்  தான்  இசை ., பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை  ஓக்கே  லெவல் 


ரத்தீஷின்  ஒளிப்பதிவில்  படப்பிடிப்பு  கச்சிதம் .குரு  சூர்யாவின்  எடிட்டிங்கில்  128  நிமிடங்கள்படம்  ஓடுகிறது . காணாமல்  போகும்  பெண்ணின்  ஃபிளாஸ்பேக்கில்  இன்னும்  ட்ரிம்மிங்  தேவை . டூயட் , ரொமான்ஸ்  காட்சிகள்  அவ்ளோ   தேவை  இல்லை 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மணி  வர்மன்  


சபாஷ்  டைரக்டர்


1    நான்  லீனியர்  கட்டில்  சம்பவங்கள்  முன்  பின்  நகர்ந்தாலும்  குழப்பம்  ஏற்படுத்தாத  திரைக்கதை  பெரிய  பிளஸ் 


2   நாயகன்  தன்  இன்வெஸ்டிகேஷனை  நடத்தும்  போது  நாமே  நேரில்  அதைக்காண்பது  போல  சுவராஸ்யமாக  , மனதுக்கு  நெருக்கமாக  அமைத்த  விதம் 


3    மெயின் கதைக்கு  என்ன  தேவையோ  அதை  விட்டு  இம்மி  அளவிலும்  விலகாத  திரைக்கதை பெரிய  பலம்


  ரசித்த  வசனங்கள் 


1   நான்  தான்  குத்துக்கல்  மாதிரி  இங்கேயே  உக்காந்திருந்தேனே   பார்க்கலை ?


பார்த்தேன் , குத்துக்கல்  தான்  இருக்குனு  நினைச்சுட்டேன் 


2   சிதம்பர  ரகசியம்  கூட  தெரிஞ்சுடும், ஆனா  போலீஸ்  ஒரு  ஆளைக்கட்டம்  கட்டனும்னு  முடிவு  பண்ணிட்டா  என்ன  பண்ணுவாங்கனு  கண்டு  பிடிக்கவே  முடியாது 


3   வாழும்போது  நாலு  பேர்  கூட  வாழ்ந்தாதான்  சந்தோஷமா  வாழ  முடியும் 


4   ஒவ்வொரு  இன்ஸ்பெக்டரும்  ஒரு  எம் எல்  ஏ  வை  அரெஸ்ட்  பண்ண  முடியும்னா மொத்த  சட்டமன்றமும்  செண்ட்ரல்  ஜெயில்ல  தான்  இருக்கும் 


5   நிறைய  நேரம்  புத்திசாலிகள்  தான்  உணர்ச்சி வசப்பட்டு  முட்டாள்  தனமா  ஏதாவது   செய்து  மட்டிக்கொள்வார்கள் 


6   ஒரு  தவறு  செஞ்சுட்டா  அதை  சரி  செய்ய  அல்லது  மறைக்க  இன்னொரு  தவறு  செய்யக்கூடாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  அடியாட்கள்  நாலு  பேர்  மொபைல்  ஃபோன்களையும்  போலீஸ்  கான்ஸ்டபிள்ஸ்  இடம்  கொடுத்து   இந்த  ஃபோன்  எல்லாம்  எங்கெங்கே  ட்ராவல்  பண்ணி  இருக்குனு  விசாரிக்கச்சொல்றாரே?  அதுக்குப்பதிலா  ஃபோன்களை  அவங்க  கிட்டேயே  கொடுத்து  அனுப்பிட்டு  அவங்க  ஃபோன்  நெம்பர்சை  மட்டும்  சைபர்  க்ரைம்  போலீஸ்  கிட்டே  தந்தா  அவங்க  ட்ராக்  பண்ணி  சொல்ல  மாட்டாங்களா?  இப்போ  எங்கே  போறாங்க  என்பதும்  தெரிந்து  விடும் , ஃபோனை  வாங்கிட்டா  அவங்க  புது  நடவடிக்கை  எப்படித்தெரியும் ?


 2   ஹேண்ட்  பேக்  ல  ஹாட்  கேஸ்  8  லட்சம்  வெச்சுட்டு  யாராவது  ரிலாக்ஸா  சலூன்ல  சேவிங்க்  பண்ணிட்டு  இருப்பாங்களா?  எப்படா  பணத்தைப்பாதுகாப்பாக  ஒப்படைப்போம்  என்பதுதானே  குறியாக  இருக்கும்? இத்தனைக்கும்  அந்த  நபர்  வாலிபன்  என்றாலும்  பரவாயில்லை . 70  வயது  ஆள்  ஷேவிங்கில்  அவ்ளோ  கவனம்  இருக்குமா? 


3  அந்தபெண்ணின்  டெட்  பாடியின்  முகம்  துணியால்  மறைக்கப்பட்டும்  எப்படி  பெற்றோரால்  அடையாளம்  காண  முடிந்தது  ? என  நாயகன்  மடத்தனமா  சந்தேகப்படுகிறான்.  மகள்  கடைசியாக  வீட்டை  விட்டுக்கிளம்பும்போது  போட்டிருந்த  டிரஸ் , உடல்  இதை  எல்லாம்  பார்த்தாலே  தெரிந்து  விடுமே? முகம்  ஏன்  பார்க்கனும் ? 


4  அந்தப்பெண்  கொலை  செய்யப்படும்போது  பிளாஸ்டிக்  கவரால்  முகத்தைக்கவர்  பண்ணி  , ஒரு  போராட்டம்  நடந்து  பின்  கொலை  செய்யப்படுகிறாள் . ஆனால்  முகம் மேக்கப்  கலையாமல் , வைத்த  பொட்டு  கூட  நகராமல்  இருக்கே?  ( அது  ஸ்டிக்கர்  பொட்டோ,  செந்தூர்  குங்குமமோ  கலையனுமே? ) 


5   ஆல்ரெடி ஒரு  பஞ்சர்  ஆன  டூ  வீலரை  ஸ்டார்ட்  பண்ணி  ஓட்டும்போத்  அப்படி  கீழே  விழாது . தடுமாறும்  அவ்ளோ  தான்.  வேகமாக  வரும்  வண்டி  திடீர் என  பஞ்சர்  ஆனால்  தான்  வண்டி  கீழே  விழும் 


6  அந்தப்பெண்  காஃபிக்கப்பில்  உள்ள  காபியை 75%  குடித்து  விட்டு  மீதி  வைக்கிறாள் . அடியாள்  ஒருத்தன்  அதில்  15%  குடிக்கிறான்.. மீதி  10 %  தான்  இருக்கும், ஆனால்  அந்தப்பெண்  அந்த  அடியாளிடம்  கோபமாக  டம்ளரை  வீசும்போது  80%  காஃபி  இருக்கு 


7  நகைக்கடையில்  சேல்ஸ்  கேர்ள்  ஆகப்பணி  புரியும்  பெண்ணுக்கு  ரிஜிஸ்டர்  மேரேஜ்  நடக்கும்போது   சாட்சிக்கு  சில  நண்பர்கல். ,தோழிகள்  கூட  இருக்காங்க .ஆனா  போலீஸ்  விசாரணையில்  அந்தப்பெண்ணின்  கூட  பணியாற்றும்  பெண்ணுக்கு  அந்த  மேரேஜ்  பற்றித்தெரியலை , இத்தனைக்கும்  பக்கத்து  வீடு   வேற 


8   முதல்  கொலை  திட்டமிட்டு  செய்யப்பட்டதல்ல .அது  ஆக்சிடெண்ட்டல்  டெட். ஆனால்  டெட்  பாடியை  பீஸ்  பீஸ்  ஆக  கட்  பண்ணி  நாய்களுக்குப்போடும்போது  ஒரு  பெண்  அதைப்பார்க்கிறாள்  என  கொலைகாரன்  கொடூரமாகக்கொலை  செய்வதில்  லாஜிக்  இல்லை . கொலையை  நேரில்  கண்ட  சாட்சியைத்தான்  கொல்லனும். இது  வெறும்  டவுட்  தான்  வரும். ,


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விறுவிறுப்பான  த்ரில்லர்  படம்  பார்க்க  விரும்புபவர்கள்  அவசியம்   காணலாம் , ரேட்டிங்  3 / 5 


ஒரு நொடி
அதிகாரப்பூர்வ திரைப்பட போஸ்டர்
இயக்கம்பி.மணிவர்மன்
எழுதியவர்பி.மணிவர்மன்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுகே.ஜி.ரதீஷ்
திருத்தியவர்எஸ்.குருசூரிய
இசைசஞ்சய் மாணிக்கம்
தயாரிப்பு
நிறுவனம்
ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு & விநியோகஸ்தர்கள்
வெளிவரும் தேதி
  • 26 ஏப்ரல் 2024 (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: