Wednesday, May 22, 2019

அதிமுகவுக்கு ரஜினி தலைமை, திமுக வுக்கு கமல் தலைமை

1  ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் பேசி, அமைச்சரவையில் இடம் கேட்கிறார்' என, தமிழிசை கூறி வருகிறார். மோடி அமைச்சரவையில் இடம் கேட்க, ஸ்டாலின் ஒன்றும், விபரம் தெரியாதவர் அல்ல-  கே  எஸ் அழகிரி  # தில்லு இருந்தா எங்க அண்ணன் மேல கை வெச்சுப்பாருங்க வடிவேலு காமெடி மாதிரி இருக்கு

============


2 ., மம்தா பானர்ஜியிடம், மோடி இரு முறை பேச முயற்சித்தார். ஆனால், மம்தா பேசவில்லை. 'வரவிருக்கும் புதிய பிரதமரிடம் பேசிக் கொள்கிறேன்' என, மறுத்து விட்டார். -கே  எஸ் அழகிரி  

 புதியதாக வர இருப்பவர் பழைய பிரதமர்னா என்ன செய்வார்?

============


3  தேர்தலுக்குப் பின், தமிழக, பா.ஜ., தலைவருக்கு, பயம் வந்து விட்டது-கே  எஸ் அழகிரி  

 தேர்தல் முடிவு வந்த பின் யாருக்கு பயம் வருமோ?

===============

.4  'தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவுடனானது, ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு' என,  ஸ்டாலின் தெளிவாகக் கூறி விட்டார்.-, ஆர்.எஸ்.பாரதி\

 இதுல தான் குழப்பம், அரசியல்வாதி அகராதியில்  மரியாதை நிமித்தமான சந்திப்பு'nனாலே ஏதோ அரசியல் பேசறாங்கனுதான் அர்த்தம்

==============

 5 தமிழிசை பேசியிருப்பது, அவர் அரசியலில் இன்னும், பக்குவம் அடையவில்லை என்பதை காட்டுகிறது. இதனால், எந்தக் குழப்பமும், தமிழக அரசியலில் வராது.-, ஆர்.எஸ்.பாரதி\


அரசியல்ல குழப்பம் வராது, ஆனா அரசியல்வாதிங்க மனசுல குழப்பம் வந்திடுச்சே?

==============6   ராகுல் தான் பிரதமர் என்பதில், கடுகளவும் மாற்றமும் இல்லை. அது, உறுதியாகவும் தொடர்கிறது.-, ஆர்.எஸ்.பாரதி\


 நீங்களா முடிவு பண்ணா எப்படி? ஜனங்க முடிவு   தெரிய மே 23 வரை வெய்ட் பண்ணுங்க

-===============

\7   தமிழகத்தில், ஏழைகளுக்கும் மரியாதை இல்லை; தியாகிகளுக்கும் மரியாதை இல்லை.-நல்லக்கண்ணு    #  காலி பண்ணச்சொல்லி கோர்ட் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் காலி பண்ணலைன்னா சட்டத்துக்கு மரியாதை இல்லையே?


================

8  தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், ஸ்டாலினை சந்தித்ததால், எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை. -', வைகோ : 

சும்மா  வெத்து வேட்டுதான்கறாரா?


=============


9  தி.மு.க., தன் நிலைப்பாட்டை, தெளிவாக சந்திரசேகர ராவ்,இடம் எடுத்துக் கூறி விட்டது. காங்கிரஸ் தலைமையிலான மாநில கட்சிகள் தான் ஆட்சியமைக்கும் என்ற, தி.மு.க., நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.-', வைகோ : 

 மாற்றம்  ஏமாற்ற,ம்


================


10 பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 56 இளங்கலை முதுகலை படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது அல்ல - தமிழக அரசு

அப்பறம் ஏன் அனுமதி கொடுக்கறீங்க? விபரம் தெரியாதவங்க ஏமாறட்டும்னா?

=============11 அதிமுகவுக்கு ரஜினி தலைமை ஏற்க வேண்டும் - பிரவீன் காந்தி # இரட்டை இலை வாக்கு வங்கி யை அப்டியே எடுத்துக்கிட்டு நோகாம நோம்பி கும்பிட்ருவாரு

=========

12 அதிமுகவுக்கு ரஜினி தலைமை ஏற்க வேண்டும் - பிரவீன் காந்தி # அப்போ திமுக வுக்கு கமல் தலைமை ஏற்கனுமா?

==============

1 3 நான், பா.ஜ.,வுடன் பேசி வருவதாக, அபாண்டமான பொய்யை, -தமிழிசை கூறியிருக்கிறார்.- ஸ்டாலின்  


  மெகா கூட்டணி என்பதால் மெகா பொய்யோ என்னவோ? 

============

14  துாத்துக்குடியில் போட்டியிட்டுள்ள தமிழிசை, வைப்புத் தொகை கூட பெற முடியாத தோல்வி பயத்தில், இவ்வாறு பேசி வருகிறார். -- ஸ்டாலின்

 சரி சரி தண்ணியைக்குடி(ங்க) தண்ணியைக்குடி(ங்க) மொமெண்ட்

=============
15  ஸ்டாலின் சொல்லும் எந்த வாக்குறுதியையும், நிறைவேற்றப் போவதில்லை.-பிரேமலதா #  ஜெயிச்சு வந்தாத்தானே  அது பற்றிக்கவலைபட முடியும்?

==============


16   ஸ்டாலின் கூட்டணி தோல்வி அடையப் போவதால், எல்லாருக்கும் அவர், துாது அனுப்பி வருகிறார்.-பிரேமலதா ]

 ஜெயிக்கற குதிரைக்குத்தாங்க மதிப்பு, தோற்கற குதிரையை யாரும் கண்டுக்க மாட்டாங்க

=============

 17 எங்கள் கூட்டணி இருக்கும் வரை, எந்தக் காலத்திலும், தி.மு.க., என்ற கட்சி, ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது-பிரேமலதா 

“ கட்டியம் கூறி சொல்கிறாரா?

 படுத்த படுக்கையா ஆகிடுமா?


============


.18  இன்று தமிழகம், அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கட்டப் பஞ்சாயத்து தான் இருக்கும்.'-பிரேமலதா 

 அந்த அமைதிப்பூங்காவுலயே சத்தம் இல்லாம சைலண்ட்டா பஞ்சாயத்தை   முடிக்க வழி இருக்குங்களா?

===========
19 மின்னணு ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் மீது, ஏராளமானோர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதில், தில்லுமுல்லு செய்ய முடியும் என, நினைக்கின்றனர். ஆனால், எனக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு மீது, எந்தச் சந்தேகமும் கிடையாது. =அஜித் பவார்

 என்ன சேம் சைடு கோல் போடறாரு

=========
20    மோடிக்கு எதிராக, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி வரும் நிலையில், ஒருமித்தக் கருத்துடைய தலைவர்கள் சந்திப்பது இயல்பானது.-திருநாவுக்கரசர்  

கொள்கை கருத்து இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஏது?> ஆட்சியைப்பிடிப்பதுதான் ஒரே கொள்கை கருத்து

0 comments: