Sunday, May 26, 2019

"காவி"யத்தலைவன் மெகா ஹிட்

மோடியின் முகத்தில் தோல்வி பயம் ராகுலின் முகத்தில் வெற்றிச்சிரிப்பு.என்ன திரைக்கதைல திருப்பம் வருது போல



==============




2 சம்மர் ட்ரிப் போறவங்க படகுசவாரி ஏறும் முன் நீச்சல் தெரிந்தவராக இருந்தால் மட்டும் ஏறவும்.எத்தனை நியூஸ் வந்தாலும் திருந்தமாட்டாங்க ஜனங்க




=============




3 எவ்ளோதான் பணக்காரங்களா இருந்தாலும் தங்கள் வாரிசுக்கு 12 வயது தாண்டிய பிறகும் பஸ் பயணங்களில் ஆப் டிக்கெட் எடுப்பதில் பெற்றோர்களுக்கு அலாதிப்ரியம் (அரசாங்கத்தை /அடுத்தவனை ஏமாத்தறோம்னு ஒரு குஷி)




============




4 அதிக பாலோயர்ஸ் இருக்கற பல ஐடிகள் சஸ்பண்ட் ஆகிட்டு வருது.அதுக்காக யாரும் கவலைப்படாதீங்க.ஜீரோ வில இருந்துதான் ஆரம்பிச்சோம்.மறுபடி முதல்ல இருந்து வருவோம்




=============




5 ஒரு சாதாரண பார்வையாளரான நமக்கே இந்த படம் ஓடும், இந்த படம் ஓடாதுன்னு ஒரு தடவை பார்க்கும் போதே தெரிஞ்சிருதே..


கோடி கோடியா முதலீடு பண்ணி படம் எடுக்கறவங்க எப்டி ஏமாறுகிறார்கள்?
பொதுவா எல்லாருக்கும் எதிர்வீட்டு ,பக் வீட்டு குறைகள் தெரிஞ்ச அளவு தன் குறைகள் தெரியாது.அந்த பார்முலாதான்



==============


6 வாழ்க்கையில் சம்பாதிப்பதா ?சாதிப்பதா? எது முக்கியம் ?


நம் காலத்துக்குப்பின்னும் நம் பேர் நிலைத்திருக்க சாதிப்பதுதான் முக்கியம்,ஆனா நாம் வாழும் காலத்தில் நல்லபடியா வாழ சம்பாதிப்பு முக்கியம்,அதனால முதல்ல சம்பாதிப்பு,அப்புறம் சாதனை



=============


7 ஒரு வீடியோ பார்த்தேன்,கர்நாடகா,ஆந்திரா வழக்கப்படி திருமணமான புதுப்பெண் புகுந்த வீட்டுக்குள்ள வர்றப்ப வாசப்படில இருக்கற பாத்திரத்தை உதைச்ட்டு உள்ளே வரனும்,ஓங்கி ஒரு எத்து எத்துச்சு பாருங்க,பக்கத்துல இருந்த புருஷனுக்கு கதி கலங்கி இருக்கும்

==========


8 சார்,குடும்பங்கள் கொண்டாடும் வெற்றினு விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க!யாரோட குடும்பம் கொண்டாடுது?


அருண்விஜய் குடும்பம்
தனுஷ்குடும்பம்
இப்டி ...அவங்க"டைம்லைன்"பாத்தா சூசகமா தெரிவிச்சிருப்பாங்க



=============


9 மான்ஸ்டர் படத்துக்கு ரைட்டர் CSK வை விடமாட்டேன்ட்டாங்களா?அது ஏன்?


படம் பூரா எலியின் அட்டகாசம் தான் கதை.இவரு "மியாவ்" புக் போட்டவரு,பூனைக்கும் எலிக்கும் ஆகாதே?



============


10 ஹெச் ராஜா வை கிண்டலடிச்ச ஒரு மீம் இங்கே போட்டேன். 785 மென்சன்ஸ். அவருக்கு அவ்ளோ செல்வாக்கு இருக்கா?இல்ல ஒரு 10 பேரு மட்டும் பல அவதாரம் எடுத்து வர்றாங்களா?

===========


11 மாயாவதி ,மம்தாபானர்ஜி இவங்க 2 பேரும்தான் பிரதமர் யார்?னு முடிவு பண்ணுவாங்க


அய்யோ,அது ஆபத்தாச்சே?மோடி ,ராகுல் 2 பேரு ல யாரு வந்தாலும் இவங்க 2 பேர் வர்றது அல்லது தீர்மானிக்கறது ரொம்ப ஆபத்து



==============


12 நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற / வேலைப்பளுவிற்கு /பணிச்சுமை க்கு தகுந்த சம்பளம் கிடைக்கவில்லை என்றால் போராட வேண்டாம் .எந்த அளவுக்கு சம்பளம் கிடைக்குதோ அந்த அளவு உழைத்தால் போதும். காசுக்கேத்த தோசை,மாவுக்கேத்த பணியாரம் மொமெண்ட்


==============


13 பங்கு மார்க்கெட் நாளைக்கு குப்னு ஏறப்போவுது. 23/5/19 வரை ஏறுமுகம்தான் .அதுக்கப்புறம் பார்ப்போம்


=============


14 சினிமா ல வேணா"காவியத்தலைவன் அட்டர்பிளாப் படமா விஜய்காந்த்க்கு அமைஞ்சிருக்கலாம்,ஆனா அரசியல்ல "காவி"யத்தலைவன் மெகா ஹிட் ஆகிடும் போலயே!உடன்பிறப்புகள் நிலைமைதான் சிரமம்.காவடி தூக்கவும் முடியாது ,எதிர்க்கவும் பலம் போதாது


===============


15 பலரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு எக்சிட் போல் ரிசல்ட் பத்தி சொல்றாங்க.என்"கணிப்பில் மாற்றம் இல்லை.மத்தியில் பாஜக தனிக்கட்சி மெஜாரிட்டி 285+


தமிழகத்தில் திமுக கூட்டணி 3− 5
அதிமுக கூட்டணி 34−36



============

16 என்னுடையகருத்துக்கணிப்பை சொன்னேன்.நடக்கலாம் ,நடக்காம போகலாம்.நடக்கலைன்னா தற்கொலை பண்ணிக்கறியா?ட்விட்டரை விட்டுப்போய்டறியா?வேலையை ரிசைன் பண்றியா?ஊரை விட்டுப்போய்டறியா?னு அட்டாக்கிங்க் ஜாஸ்தியா இருக்கு.கருத்துரிமைனாகிலோ என்ன விலை?னு கேட்பாங்க போல


டிஸ்கி− தமிழகத்தில் Dmk படுதோல்வி


===============


17 பஸ் ,ரயில் பயணங்களில் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குபவரிடம் முன்"கூட்டியே நம் பேக் (பை) தந்து இடம் பிடித்துக்கொள்வதே குமாரசாமித்தனம் (குள்ளநரித்தனம்,,தலைவர் பாணில சொல்லனும்னா சாணக்கியத்தனம்)


=============



18 பங்குச்சந்தை ஒருவார ஏற்றத்துக்காக media க்கு பணம் தந்து பொய்யான கருத்துக்கணிப்பு பரப்பறாங்க என்றும் ஒரு பேச்சிருக்கு,அதற்கும் பாசிபிலிட்டி இருக்கு.கோடிகளில் புரளும் பங்குச்சந்தை பிக்சிங்



=============


19 ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கிட்டாராம் அம்பானி!...அதனால காங் ஜெயிக்கற வாய்ப்பு அதிகம்னு சிலர் கணிக்கறாங்க.அது வேற ஏதாவது வேற மேட்டரா இருக்கும்.



==============




20 பேங்க்ல பணம் கட்ட வர்றவங்க செலான் பில்லப் பண்ணும்போது தேதி தெரியாம சுத்தி"சுத்தி பார்க்கறாங்க,எங்கே"காலண்டர் மாட்டி இருக்கு?னு.இந்த மாதிரி ஞாபகமறதி ஆட்கள் அவங்கவங்க வீட்ல இருந்து கிளம்பும்போதே வீட்டு தினசரி காலண்டர்ல அன்றைய தேதி சீட்டை கிழிச்சு பாக்கெட்ல போட்டுட்டு வரலாமே?



==================

0 comments: