Tuesday, May 21, 2019

சனி பகவான் போறப்ப எதுனா கொடுத்துட்டுதான் போவார்

1  கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி
# கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.ஒரு அமைச்சருக்கு உண்டான பொறுப்புடன் பேசவும்,தனிப்பட்ட வெறுப்புடன் அறிக்கை விடக்கூடாது"


==========

2 வேதாந்தா நிறுவனம் என்னிடம் பேரம் பேசினார்கள்!" - சீமான் பகீர் குற்றச்சாட்டு #பேரம் படியலையா?============


3 என் தாத்தாவின் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசை: உதயநிதி
# ஏற்கனவே"மணிரத்னம் இயக்கத்துல வந்த இருவர் படமே எவ்ளோ லாஸ்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல,அதுக்குள்ளே அடுத்ததா?


=============


4 மு.க.ஸ்டாலின் ராகுலை முதலில் பிரதமர் என்றார், நேற்று சந்திரசேகர்ராவிடம் பேசினார்; மறுபுறம் மோடியுடனும் பேசுகிறார்

- தமிழிசை
# யார் கூடப்பேசுனாலும் கைல துண்டு சீட்டு வெச்சிருப்பாரே?நம்ம அடையாளத்தை விட்டுத்தரமாட்டமில்ல?===========


5 ஒரே நேரத்தில் 3 படகுகளில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்குத்தான் உண்டு−Jayakumar | # ஆக்சுவலா இவர்"சொல்ல"வந்தது காங் ,பாஜக,3 ம் அணி னு 3 தரப்பு கிட்டயும் பேச்சு வார்த்தை நடக்கறதைத்தான் சொல்றாரு,ஆனா தமிழன் மைன்ட் வேற எங்கேயோ போகுமே?

============


6 கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு பற்றி கருத்து கூற விரும்பவில்லை: ரஜினிகாந்த்
# இதுதான் நண்பனுக்கு,நட்புக்குத்தரும் மரியாதை.இதே சிச்சுவேஷன் கமலுக்கு அமைஞ்சா ரஜினி யை தாக்கி இருப்பாரு

==========


7 முதலில் தான் பேசிய வார்த்தைக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு, கட்சிப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும்- தமிழிசை # கட்சிக்கு ஓனர் அவருதானே?============

8 இந்து மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் உண்மையான இந்து அல்ல - பிரதமர் மோடி # முஸ்லீம்"மதத்தை சேர்ந்தவர் தீவிரவாதியா இருந்தா அவர் உண்மையான" முஸ்லீம் இல்லை,எங்க கிட்டயும் சீப்பு இருக்கு

=============


9 கமலஹாசன் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர் பேசியது யாருக்கும் எதுவும் புரியவில்லை: செல்லூர் ராஜீ

# புரியவில்லை என்றால் ENT splst கிட்ட காதை காட்டவும்.அவர் நாக்கை அறுப்பேன்னா எப்டி?===============


10 * தமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது. இதுபோன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது - சென்னை உயர்நீதிமன்றம் பெருமிதம்
# ரைட்டு,யாகம் செஞ்சு மழை வர்லைன்னா ஜட்ஜ் அய்யா பொறுப்பேத்துக்குவாரா?


============11 1  தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம் - கமல்ஹாசன் # தீ”வீரமா” பரவாம இருந்தா சரி


=============


2  கோட்சே குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை - கமல்ஹாசன் #   வாண்ட்டடா ஜீப்ல ஏறுகிறார், பர பரப்பு அரசியலில் ஜெயிச்சுட்டார்


============

3   என் மீது கோபம் கொள்பவர்கள் 'ஹே ராம்' பாருங்கள் - கமல் #   ரிலீஸ் ஆனப்ப ஓடாத படத்தை இப்போ ரீ ரிலீஸ் பண்ணி பிரமோஷன் பண்றாரா>


==============


கமல்ஹாசனை நடமாட விடப் போவதில்லை - ஜீயர் # என்ன தாதா மாதிரி பேசறாரு? நடமாட விட மாட்டேன் நடனமாட விடமாட்டேன்னு சின்னபுள்ளத்தனமா?


கூட மாட பாதுகாப்புக்கு இப்போ போலீஸ் வேற இருக்கு


===============


5 ஆளும்கட்சியால் தான் வளர்ச்சியை கொடுக்க முடியும் - அன்புமணி # ஆளுங்கட்சியை ஆத்ரிச்சாதான் தனக்கு வளர்ச்சினு பூடகமா சொல்றாரு


=============


6 இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமல்ஹாசன் பேச்சுக்கு கருத்து கூற விரும்பவில்லை - ரஜினிகாந்த் # கருத்துக்கூற விரும்பலையா? கருத்து சொல்ல தெரியலையா?


============


7 பாஜகவுடன் பேச மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருவது உண்மைதான் - தமிழிசை # நெம்பர் பிசி நெம்பர் [பிசினு வ்ந்ததாம்


============

8 மேகமூட்டம் இருந்தால் ரேடார் வேலை செய்யாது -மோடி # அரசியல்வாதிகளுக்கு மூளை வேலை செய்யாது?


===========


9 திமுகவை அழிக்கதான் அரசியலுக்கே வந்து இருக்கிறேன்

-சீமான் # நாங்க கூட மக்களுக்கு சேவை அளிக்க வந்ததா நினைச்ட்டோம்==============


10  அமமுக வெறும் 'அணி' அதிமுகவை விட்டுச்சென்ற 'சனி' - ஓபிஎஸ்  

 சனி பகவான் போறப்ப எதுனா கொடுத்துட்டுதான் போவார்னு  சொல்றாங்களே? என்ன கொடுத்தாரு?> 


=================

0 comments: