Sunday, May 19, 2019

சேலத்தில் ஸ்பெஷல் ஆன்ட்டி

1  சமூக நீதியைக்காககும் ஒரே"கட்சி நம் கழகம் மட்டுமே!அதற்காக எங்கள்"குடும்பத்துக்கு"மட்டுமே சொந்தமான,சொத்துக்களை ஏழைகளுக்கு பங்கிட்டு"தரத்தயாரா?எனக்கேட்டால் எப்படி?


--------------

2 நாங்கள் ஆட்சிக்கு (ஒரு வேளை) வந்தால் ஏழைகளுக்கு,மாதந்தோறும்"தலா"ரூ,60,000 நாங்கள் கொள்ளை"அடித்த பணத்தில் இருந்து"பங்கு"தருவோம்.இதுக்கும் மேல,எங்களை சோதிக்காதீர்!பொறுமைக்கும்"ஒரு"எல்லை உண்டு


================


3 ஏண்டா தேங்காச்சட்னினு கேட்க மாட்டீங்களோ.. அதென்ன ‘வொய்ட் சட்னி?’


எங்க தலைவர் கை ரொம்ப சுத்தம்.கறுப்புப்பணம் ,கறுப்பு எதுவுமே ஆகாது.எல்லாம் வெள்ளைலதான் டீலிங்க்.தக்காளி சாதம் ,லெமன்"சாதம் சாப்பிடறதுனாக்கூட வெள்ளையாதான் வேணும்பார்===============

4 கல்நெஞச்க்காரரி

நான் அவளை Follow பண்ணறேன்
அவள் என்னை Follow பண்ண மாட்டேங்கிறா ..😏😏
பாலோ"பண்ணி வந்தா கேப் விடனும்.ஒரு வேளை கரம் பற்றி கூடவே இணையா வர ஆசைப்படறாங்களோ என்னவோ?
=================


5 வாக்காளப்பெருமக்களே!எனக்கு,என்"அப்பாவுக்கு,அம்மாவுக்கு,என,3 பேருக்குமே"சம்மன்"வந்துள்ளது.அதனால்"பிரச்சாரத்துக்கு"வருவது"சிரமம்.நீங்கள் என்னை வெற்றி"பெற வைத்தால் ஜெயிலிலிருந்து"ரிலீஸ்"ஆனதும்"தொகுதிக்கு நல்லது செய்வேன்


============


6 ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே திருட,கொள்ளை அடிக்க உரிமை உண்டு னு"சட்டம் வரனும் அப்பதான் ஒரே"குடும்பத்துல அப்பா ,மகன்,மகள்,பேரன் ,பேத்தி னு எல்லாரும் பதவிக்கு வர முடியாது.அனைவருக்கும்"திருட"ஒரு"வாய்ப்பு வேண்டும்


=============


7 தலைவரே!நதிநீர் இணைப்பு என்பது சாத்தியமே இல்லாதது. அது இயற்கைக்கு முரணானது என்று அறிக்கை விட்டிருந்தீங்களா?


ஆமா
அப்போ,அணை கட்றது கூடத்தான் இயற்கையைத்தடுப்பது போல,முரணானது,உடைச்சு,விட்ரலாமா?==================


8 உடன்பிறப்பே!வெய்யிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் பிரச்சாரத்துக்கு வராமல் இராதே!சொந்தக்காசு செலவு பண்ணி ஜூஸ் சாப்பிட்டுட்டாவது வா!அண்ணா நாமம் வாழ்க! என் குடும்பம் மட்டும் வளர்க!

==============


9 ஷாலினி தவறாகப்பேசியதற்குப்பொறுப்பேற்று அஜித்"மன்னிப்புக்கேட்க வேண்டும்


தலைவரே!அவங்க டாக்டர்"ஷாலினி.வேற"டிபார்ட்மெண்ட்===============


10 உடன்பிறப்பே!நயன்தாரா என்றில்லை,எந்த"நடிகைக்கு எப்போது பிரச்சனை என்றாலும் கழகம் குரல் கொடுக்கும்,காரணம் அந்த பிரச்சனைக்கு"காரணமே கழகத்தாராதான் இருக்கும்,வேற வழி?


==============


11 அதிகாலையில் எழும் பழக்கம் இருந்தா முன்னேறலாம்னாங்க,8வருசமா 4:30AM க்கு எழுந்துட்டு இருக்கேன் இன்னும் உருப்புட்டபாடில்ல🙁😕


ஓஹோ,எந்திரிச்சு என்ன செய்வீங்க?
8 மணிக்கு அலாரம் வெச்ட்டு மறுபடி தூங்கப்போய்டுவேன்=============


12 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ரூ 5000 தருவோம்


நாளைக்கு கிடைக்கப்போற பலாக்காயை விடுங்க.இப்போ எவ்ளோ தருவீங்க?
============


13 கட்சித்தலைவரான நீங்க ஏன் தேர்தல் ல போட்டி இடலை?


இப்டி கேப்பீங்கனு தெரிஞ்சுதான் வேட்பாளர் ஆக பட்டப்படிப்பு ஒரு முக்கியத்தகுதி னு வெச்சிருக்கேன்,தம்பி,நீ படிச்ச ஸ்கூல் ல நான் (பட்டப்படிப்பு படிக்காத) வாத்தியாரு==============


14 கணக்கு ஆசிரியர் = 1,30,00,000 இது எவ்ளோ?


மாணவி = ஒரு கோடியே 3000 கோடி
சுத்தம்,நீ படிக்க லாயக்கு இல்ல,அரசியலுக்குதான் லாயக்கு===============


15 தலைவரே!ஆளுங்கட்சி நம்மை விட அதிகமா கொள்ளை அடிச்சிருக்குனு எப்டி உறுதியா சொல்றீங்க?


1977க்கு அப்புறம் நாம ஆட்சில இருந்தது வெறும் 12 ஆண்டுகள் மட்டும்
அதாவது 42 வருடத்தில் கிட்டத்தட்ட 30வருடம் அதிமுக ஆட்சி.12 வருசத்துலயே 10 தலைமுறைக்கு சொத்து சேத்துட்டமே,அப்போ 30 வருசம் ஆண்டவங்க?================


16 தலைவரே!ஏற்கனவே எம் எல் ஏ வா உள்ள ஒருவரை எம் பி தேர்தலில் நிறுத்தறீங்களே?அவர் ஜெயிச்சுட்டா எம் எல் ஏ பதவியை ராஜினாமா பண்ண வேண்டி வருமே?மறுபடி தேர்தல் நடத்துனா அது அரசுக்கு தண்டச்செலவுதானே?


ஜெயிச்சாத்தானே?அப்டியே ஜெயிச்சாலும் அரசுக்குத்தானே நட்டம்?எனக்கென்ன நட்டம்?==================


17 தேர்தல் முடியும் வரை ஒரு நபர் அதிகபட்சம் ரூ 50,000 மட்டுமே எடுத்துச்செல்லலாம்.


ஓஹோ"அப்போ சென்னைல ஒருத்தருக்கு 52000 ரூபா தரனும்னா 2 தடவை போய்ட்டு வரனுமா?==============


18 கிளிக்கோலம் போட 18×18 புள்ளிக்கோலம் உகந்தது. மயில் கோலம் போட 21×21 புள்ளிக்கோலம் சிறப்பு.ஆக நீங்கள் ஆதரிக்க வேண்டிய"சின்னம்...


என்ன?தலைவர்"சம்பந்தம் இல்லாம உளர்றாரு?
துண்டு சீட்டு பாக்காம புள்ளி விபரங்களோடு பேசத்தயாரா?னு சவால் விட்டாங்களாம்==============

19 சேலத்தில் ஸ்பெஷல் ஆன்ட்டி ஆஸ்பிடல் நாங்க ஆட்சிக்கு வந்ததும் திறப்போம்


நாசமாப்போச்சு,அது ஸ்பெஷல் ஆன்ட்டி இல்ல"தலைவரே!ஸ்பெஷாலிட்டி/சிறப்பு மருத்துவமனை.எப்ப பாரு ஆன்ட்டி ஞாபகம்தான்===============


20 தலைவரே!நம்ம தங்கச்சி கருத்து சுதந்திரம் ரொம்ப முக்கியம்னாங்களே?


ஆமா.
நீங்க ட்விட்டர்ல யாராவது எதிர்கருத்து சொன்னா பிளாக் பண்ணிடறீங்களாமே?வீரன் னா கேள்விகளை எதிர் கொள்ள வேணாமா?கோழை தானே பிளாக் பண்ற பயந்தாங்குளி வேலை பார்ப்பாங்க?===============

0 comments: