Sunday, May 26, 2019

தமிழகத்தில் இருக்கும் உளவுத்துறை, ஏன் சரியாக செயல்படவில்லை?னு நான் கண்டுபிடிச்ட்டேன்

 1   அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வரும் போது, ரஜினி அரசியலுக்கு வருவார்.-தமிழருவிமணியன்:

அப்போ கடைசிவரை சினிமா தர்பார்தான், அரசியல் தர்பார் நடக்காது?

==============

2  என் குழந்தைகளை, நான், அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன். அவர்களை, வேறு துறைக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன்.-பிரியங்கா: 

 ஆமா குழந்தையா இருக்கும் வரை அரசியலுக்கு வர விடாதீங்க, 18 வயசு ஆனதும் நம்ப பாரம்பரிய வழக்கப்படி கொண்டாந்திடுங்க


==============


\3   என் தந்தை அருகில் இல்லாதது, மிக வருத்தமாக இருக்கிறது.-லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப்: 

 நீங்களூம் எதுனா ஊழல் பண்ணிட்டு அவருக்குத்துணையா ஜெயிலுக்குப்போய்டலாமில்ல?


==============

4    மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை கணக்கிடும் போது, அதே இடத்தில், 'விவிபேட்' பதிவுகளையும் கணக்கிட முடியும். 50 சதவீத விவிபேட் கணக்கிடப்பட வேண்டும் என, நாங்கள் விடுத்த கோரிக்கையை, முடிவுகளை வெளியிட, ஆறு நாள் தாமதமாகும் எனக் கூறி, தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பதிவான ஓட்டுகளை, முதலில் எண்ணிவிட்டு, பின், ஏதாவது ஐந்து, விவிபேட் இயந்திரங்களின் பதிவுகளை கணக்கிட்டால், தவறு, முரண்பாடு ஏற்படும்.-சந்திரபாபு நாயுடு


 ரிசல்ட் வரும் முன்பே தோல்விக்கான காரணம் வாக்கு எந்திரம்தானு  துண்டு போட்டு வைக்கறாரு

===============

'5   லோக்சபா தேர்தலில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், கனிமொழி வெற்றி பெறுவார். அவருக்கு, மத்திய அமைச்சரவையில், நிச்சயம் ஒரு பொறுப்பு காத்துக் கொண்டிருக்கிறது.மத்திய அரசு சம்பந்தப்பட்ட பணி எதுவாக இருந்தாலும், அவர்கள் எடுக்கின்ற முயற்சிக்கு, அனைவரும் உறுதுணையாக இருப்பர்.-முன்னாள் அமைச்சர், நேரு  


 மே 23  ரிசல்ட் வர்ற வரை எல்லாரும் நான் தான் ஜெயிப்பேன்னு அனத்திட்டே இருப்பாங்க 

==============





6    ஆட்சியின் திட்டங்களில், ஏதேனும் குறை இருந்தால், அதை சுட்டிக்காட்டி, தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டும்.  ஸ்டாலின், 'ஆட்சி மாற்றம் வரும்' எனக் கூறி, பிரசாரம் செய்கிறார்=சரத்குமார் 


 பகுத்தறிவுக்கட்சி ஜோசியக்கட்சி ஆகிடுச்சு


=============


7  .சட்டசபையில், ஸ்டாலினுக்கு பேசவே தெரியாது.-சரத்குமார் 


 மேடைல மட்டும் நல்லா பேசிடறாரா? துண்டுச்சீட்டைப்பார்த்துப்படிக்கும்போதெ  தப்பு தப்பா தான் பேசறாரு

============

8   மே, 23க்குப் பின்,அ.தி.மு.க.,விற்கு மகிழ்ச்சியும், ஸ்டாலினுக்கு அழுகையும் வரும்-சரத்குமார் 


 நமக்குப்பேமண்ட் வரும்?

============



9   தமிழகத்தில், 'பெட்ரோக் கெமிக்கல்' முதலீட்டு மண்டலம், நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைவிரிவாக்கம் என, விவசாயத்தை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சியநிலங்களையும் சீரழிக்க, 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது.விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிப்பதை விட, விவசாயிகள் என்ற இனத்தையே, ஒட்டு மொத்தமாக அழித்து விடலாம். எனவே, இனிமேலாவது விழிப்புணர்வுடன், இந்தத் திட்டங்களை, உடனே கைவிட, மத்திய அரசு முன் வர வேண்டும்.-ராமதாஸ்  

 தேர்தல் முடியட்டும்னு இத்தனை நாளா அமைதியா இருந்தார் போல  , கூட்டணி தர்மம்


=============

10  ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், அந்த நம்பிக்கையில், தேர்தல் முடிவுக்கு முன், தேனி, எம்.பி., ரவீந்திரநாத் குமார் என, கல்வெட்டில் பொறித்துள்ளனர். தேர்தல் முடிவுக்கு பின், மத்தியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம்.-நல்லக்கண்ணு 


 ஆமா போனதடவையை விட அதிக சீட்டுகளுடன் ஃபுல் மெஜாரிட்டியுடன்  பாஜக் அரசு அமையும்


============

1 1  ஓட்டு கணிப்பில், எனக்கு நம்பிக்கை இல்லை.- ராகுல் 

 இதுவே நமக்கு சாதகமா வந்திருந்தா துள்ளிக்குதிச்சிருப்போம்?

===============


  12 மக்களின் விருப்பம் எது என்பதை தெரிந்து கொள்வதே சரியானது.-ராகுல்

மக்களின் விருப்பம் எது?னு தெரிஞ்சுக்காமயே இருப்பது தவறானது

=============

 13 மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது, 23ம் தேதி தெரிந்து விடும்;-ராகுல்

பேச்சு மாறக்கூடாது, அப்புறம் வாக்கு எந்திரத்தில் முறைகேடுனு பல்டி அடிக்கக்கூடாது 


=============

14 மக்களின் முடிவு தெளிவாகத் தெரிந்தபின், அதை மதித்து நடப்பது தான், சரியாக இருக்கும்.- ராகுல்  # அழலை கண்ணு வேர்க்குது மொமெண்ட்


============

 15  பா.ஜ., கட்சியை அகற்றி விட்டு, பிரதமருக்கு யார் பொருத்தமாக இருக்கின்றனரோ, அவர்களை தேர்வு செய்வோம் என்ற கருத்து, எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ளது. தேவைப்பட்டால், காங்., அல்லாதவர்கள் கூட, பிரதமராக வரலாம்.-மகேந்திரன்  

பிரதமர் வேட்பாளர் யாருன்னே உங்களால தேர்தலுக்கு முன்பே அறிவிக்க முடியலை


=============


16  -ஸ்டாலின், தான் முதல்வராக வேண்டும் என, நாள்தோறும் கனவு காண்கிறார்; -அன்புமணி 

 அன்புமணி ஆகிய நான் கண் முன் வந்து போகுதே?

==============


17  ஸ்டாலின்கனவு, நனவாகாது.மக்களைப் பற்றி அவருக்கு கவலையில்லை; வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவதில்லை. தனி நபர் விமர்சனம் செய்து வருகிறார். -அன்புமணி 

 அவரோட வீடு மனைவி மக்கள் பற்றி கவலை இருக்கறதாலதான்  மகனை இப்பவே களம் இறக்கி இருக்காரு


=------


-18    மோடி, ,இ.பி.எஸ்.,  ராமதாஸ் ஆகியோரை, விமர்சனம் செய்கிறார். எனவே, ஸ்டாலினுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.--அன்புமணி 

 விமர்சிப்பது அவ்ளோ பெரிய தப்புங்களா?


================


 19  தமிழகத்தில் இருக்கும் உளவுத்துறை, சரியாக செயல்படவில்லை.-முருகானந்தம்


விஜயகாந்த் நடிச்ச உளவுத்துறையே சரியா ஓடலையே? தமிழ் நாட்டுக்கும் உளவுத்துறைக்கும்   ராசி இல்லை போல 


=============


   20  வெயில் காரணமாக, முதியவர்கள் ஓட்டளிப்பதை தவிர்த்து விடவும் வாய்ப்புள்ளது. எனவே, தேர்தல் நடக்கும் மாதத்தை மாற்ற வேண்டியது, மிகவும் அவசியம்.- நிதிஷ் குமார்  #  அப்புறம் மழை பெய்யுது ,  பனி அப்டீம்பீங்க’’--------------

=============


0 comments: