Friday, May 10, 2019

உள்ளாட்சித்தேர்தலே தேவை இல்லைங்கோ

1  தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் இயக்கம் திமுக - கனிமொழி
# நல்லா காமெடியாப்பேசறீங்க,ஆனா"தேர்தல்"ரிசல்ட் என்னவோ டிராஜடிதான்=============

2 திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்”- தங்க.தமிழ்செல்வன்! # அதாவது 2 மொள்ளமாரிங்களும் சேர்ந்து ஒரு"கேப்பமாரி வாழ்க்கையைக்கெடுக்கப்போறீங்க?என்னமோ ரிசர்வ் பேங்க் மேனேஜர் ஆகற மாதிரி பில்டப்


==============


3 அ.தி.மு.க.  மக்களை சந்திக்க பயந்து, உள்ளாட்சி தேர்தலையும் தள்ளி போடுகின்றனர்-முத்தரசன்  #  உள்ளாட்சித்தேர்தலே தேவை இல்லைங்கோ அப்டினு கோர்ட்ல   ஈபிஎஸ்  தரப்பு சொல்லிட்டாங்க தெரியுமா?


===========

ரஜினிகாந்த் படம் நடித்து கொடுத்துதான் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று அவசியம் இல்லை : லதா ரஜினிகாந்த் # அமாவாச ,கால் மேல"படுது மொமெண்ட்


============


5

5  தன்னை, ராஜாதி ராஜாவாக கருதி வந்த ராபர்ட் வாத்ரா , நடுக்கத்தில் உள்ளார்-மோடி #  எல்லாம்  தேர்தச்ல் ஜூரம் தான்


====================

6  ராபர்ட் வாத்ரா  வை  சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டேன். உங்கள் ஆசியுடன், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள், அவரை சிறையில் தள்ளுவேன- மோடி   # அடேங்கப்பா , ஒரு ஆளை சிறையில் தள்ள 10 வருச கால அவகாசம் தேவைப்படுது


================
7  பா.ஜ.,வுடன் நேரடி போட்டி உள்ள இடங்களில் எல்லாம், காங்., தலைவர், ராகுல், அவருடைய சகோதரி, பிரியங்கா பிரசாரம் செய்யவில்லை. டில்லியில், ஆம் ஆத்மிக்கு எதிராக பிரசாரம் செய்து, உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். -அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தக்கோட்டைத்தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வரக்கூடாது கைப்புள்ள கட்டதுர  மொமெண்ட்


===============
8    ''அ.தி.மு.க.,விற்கு இது கடைசி தேர்தல்,'' - துரைமுருகன்  #  இனிமே  தேர்தலே வராதுங்கறாரா?

 
கலைஞர் தான் ஒவ்வொரு தேர்தல்ல போட்டி இடறப்பவும் இதுதான் நான் போட்டி இடும் கடைசிதேர்தல்னாரு


================

9   திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு பின் அ.தி.மு.க., வில் எத்தனை பிளவுகள் வருகிறது என பாருங்கள்-துரைமுருகன்

# திருப்பம் வ்ரும் திருப்பரங்குன்றம்?


திமுகல பிளவே வர்ல , ஆனா வீக்கா இருக்கே?


==================
10  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். அப்படியானால் முகிலன் எங்கே?-முத்தரசன்   # முகிலன் பர்சனல் விஷயமா யார் கூடவோ சேர்ந்து எஸ் ஆகிட்டதா சொல்றாங்க, ஒரு தனி நபர்க்காக அரசு , சட்டம் 

 இவற்றை குறை சொல்வதா?


11    திருப்பரங்குன்றத்தில், பா.ம.க.,வினர், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்காக, ஓட்டு சேகரிக்க வேண்டும்.- ஜி.கே.மணி  #முதல்ல திருப்பரங்கௌன்றத்துல பாம க கட்சிக்காரங்க இருக்காங்களா?னு விசாரிச்சுக்குங்க


==============


12  . மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. -ஜி.கே.மணி    #   இப்டி பயமுறுத்தி  ஓட்டுக்கேட்டா யார் ஓட்டுப்போடுவாங்க?


===========
13   முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்த போது, சென்னை கடற்கரையில் இடம் இல்லை எனக் கூறியவர், தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி. ஜெயலலிதா மறைந்த போதும், அவரது உடலை, எம்.ஜி.ஆர்., சமாதி அருகே அடக்கம் செய்யக் கூடாது என, தி.மு.க.,வினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, கருணாநிதிக்கு எப்படி இடம் வழங்க முடியும்? இந்தப் பிரச்னையில், சுயநலத்திற்காக, மக்களை ஏமாற்ற, வரலாற்றை மறைத்து, ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்  -அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர், முனுசாமி பேட்டி:


 கண்ணுக்கு கண்  கைக்கு கை அப்டினு பழி வாங்குனா எப்டி? விட்டுக்கொடுத்து;ப்போப்வதுதானே நல்லது? அவங்க அப்டி செஞ்சா நாமும் அப்டியே செய்யஞுமா? பெருந்தன்மையா விட்டுக்கொடுக்கக்கூடாதா?


================


14    மூன்று, அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க் கள், அந்த கட்சிக்கு எதிராக செயல்பட்டிருந்தால், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? -கே.எஸ்.அழகிரி   #  அப்போ தேர்தல் வர்லையே? இப்பதானே தேர்தல்?


===============


15  சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதால், ஆட்சியை தக்க வைக்க, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.  -கே.எஸ்.அழகிரி    #  மே 23   ரிசல்ட் வந்திடும், அதுவரை எல்லாரும்  பொறுமையாத்தான் இருங்களேன்


================

16    ''மஹாபாரதத்தில் வரும், துரியோதனன் போல, மோடியும், ஆணவத்துடன் செயல்படுகிறார்,'' - பிரியங்கா காந்தி   #  மோடியை எதிர்த்து வாரணாசியில் ;போட்டி கிடுவேண்ட்டு நீங்க கூடத்தான் சகுனி மாதிரி ஜகா வாங்குனீங்க?


=================

17   'கட்சிக்காக, விசுவாசத்துடன் உழைத்தால், பதவி தேடி வரும்,  -ஈபிஎஸ்   # ஆமா, ஆனா  கால்ல நெடுஞ்சாண் கிடையா விழனும்


===============


18    ஜெ.,யால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், பதவிக்காக ஆசைப்படுபவன் அல்ல,'' - தினகரன்  

 ஜெ யால  தான் அரசியலை விட்டு விலக்கி வைக்கப்பாட்டேன்கறதையும் சொ,ல்லுங்க

=================


 பாஜக விடம் அதிமுக வெச்ச மாதிரி?


=================


20   இந்த நாடு, கர்வம் மற்றும் ஆணவத்துடன் செயல்படுவோரை மன்னிக்காது. -பிரியங்கா காந்தி   # ராணுவத்தால் வாழ்ந்தவங்க கூட ஆணவத்தால் தோல்வி அடைவாங்க் அப்டீங்கறாரா?

===============

0 comments: