Wednesday, May 15, 2019

சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாமார்த்தியமாகத்திருடுவது எப்படி?

1  கமல் தேர்தல் ல தோத்துட்டா மனசு ஒடிஞ்சு போய்டுவாரா?


ச்சே ச்சே,(டார்ச்)"லைட்"டா எடுத்துக்குவாரு...
==============

2 டைம் மிஷின் கிடைச்சா என்ன செய்விங்க?


டைம் பார்ப்பேன்===============


3 ராகுல் = மோடி சர்கார் டவுன் டவுன்


தங்கபாலு = மோடி,சர்கார் படம் இரண்டுமே"நகர்ப்புற மக்களைக்கவர்ந்தவை துபாஷ்=============


4 மச்சினிகளை கவனிக்கும் அளவுக்கு மனைவியை கவனிப்பதில்லை

கணவர்,அது ஏன்?
மச்சினி ங்கறது குற்றால அருவி மாதிரி,சீசன்ல டூர் போறப்ப குளிச்சாதான் உண்டு,மனைவிங்கறது வீடல இருக்கற மினரல் வாட்டர் மாதிரி எப்ப வேணா குடிச்சுக்கலாம்னு அசால்ட்டு
(கொல்லிமலை சித்தரின் ஓலைச்சுவடியிலிருந்து)
================


5 தலைவரே!உங்களுக்கு னு சில பாலிசி வெச்சிருக்கீங்களாமே?என்னென்ன?


எல் ஐ சி பாலிசி
ஜீவன்தாரா பாலிசி
===============


6 சார்,உங்க ரசிகர்கள் கற்றவை பற்றவை னு டேக் போட்டு கீச்சறாங்களே?என்ன அர்த்தம்?

ஸ்டைலா தம் பற்ற வை,அதுதான் நான் கற்றவை னு அர்த்தம்=================

7 மேடம்,வாக்கிங் போகலையா?

"நடக்கற" விஷயத்தை பேசுங்க============


8 கட்சித்தொண்டனான நீயே மேடைல தலைவர் மகனை கொலை செய்ய முயற்சி பண்ணுனியாமே,அது ஏன்?

வாரிசு அரசியலை ஒழிக்கனும்னு அவர்தானுங்க சொன்னாரு


=================


9 பனிமலர் க்கு கவர்மெண்ட் ஜாப் கிடைச்சிடுச்சாம்

ஓஹோ,அப்ப இனி அரசாங்கப்பணி மலர்?================


10 மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் எங்களுக்கு வாக்களித்தது வீணாகிவிடுமோ என யாரும் கவலைப்பட வேண்டாம்.வை.கோ வை எதிர்த்தோம்,பின் தேவை வந்ததும் ஆதரிக்கவில்லையா?அதே போல் மோடியையும் ஆதரிக்கத்தயங்க மாட்டோம்.யாரு கால்ல செருப்பு அறுந்தாலும் நம்ம தலைல கிரீடம் ஏறனும்


===============


11 நீங்க முதல்ல இருந்த கட்சியோட முக்கியக்கொள்கை என்ன?

மது ஒழிப்பு
இப்ப அந்தக்கட்சியை விட்டு விலகி புதுசா ஒரு கட்சிக்கு வந்திருக்கீங்களே?அவங்க சாராய ஆலை அதிபர்னு தெரியுமா?
தெரியும்,என்னோட கொள்கை பணம் சம்பாதிப்பது


=================

12 இந்துக்களுக்கு நான் விரோதி என்ற பொய்யான குற்றச்சாட்டை என்மீது ஆளுங்கட்சிகள் சுமத்துகிறார்கள்,
என் மனைவி,
அம்மா
,சின்னம்மா 1 ,
சின்னம்மா2
என எல்லோருமே கடவுள்"பக்தைகள்தான்.பகுத்தறிவு என்பது சும்மானாச்சுக்கும்


=========


13 தலைவரே!எம்மதமும் சம்மதமே ன்னா என்ன அர்த்தம்?

அதாவது எல்லா மதத்தினரின் ஓட்டு மட்டும் வேணும்,ஆனா தேர்தல் முடிஞ்சதும் இந்துக்களை மட்டும் கிண்டல் பண்ணுவோம்னு அர்த்தம்


===============


14 தலைவரே!நம்ம கிட்டதான் 28% வாக்கு வங்கி இருக்கே?நாம ஏன் நாம் தமிழர்,மக்கள் நீதி மையம் னு யாரைப்பாத்தாலும் பயப்படறோம்?

அவங்க 2 பேரும் தலா 4 % வாங்குனாலே நமக்கு 8% நட்டம் தானே? 20% வெச்சுட்டு எதிர்க்கட்சியாக்கூட ஆக முடியாதே?ஆக... ஆக.... யாரு புதுசா வந்தாலும் நமக்கு அனர்த்தம்தான்================


15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூவே பூச்சூடவா"நதியா,வைகாசி பொறந்தாச்சு காவேரி இவர்களை இணைத்து,ஒரு"படம் எடுப்போம்,நதிகளைத்தான் இணைக்கமுடியலை..நக்மா வை ் வைக்கற இடத்துல குஷ்பூ வை வைக்கற மாதிரி ..=================


16 ரஜினி ,யூகிசேது ஒப்பிடுக

தர்பார்
நையாண்டி தர்பார்


=============


17 டாக்டர் ,எனக்கு ஏன் யார் மேலயும் பொசஸிவ்நெஸ் வரமாட்டிங்குது?

ஒரே ஒரு காதலியோ,மனைவியோ ,தோழியோ,சிநேகிதியோ இருந்தா பொசசிவ்னெஸ் வரும்.ரகத்துக்கு 3 இருந்தா அது வராது


=============


18 ரைட்டர் சார்,உங்க நாவல் படிச்சேன்,
முதல் முறையா எழுதுறாப்ல தெரியல!
ஆமா,அது நாலாவது முறை.3 தடவை எழுதிப்பாத்து அடிச்சு திருத்தி 4 வது டைமா எழுதுனது.கரெக்டா கண்டு பிடிச்ட்டீங்களே?=============


19 தலைவரே!மணிமேகலைப்பிரசுரத்துல இதுவரை 1000 வெவ்வேற டைட்டில்ல புக் விட்டுட்டாங்களாம்,இதுவரை வராத டைட்டில்ல ஒரு புக் நீங்களோ உங்க அட்மினோ விடனுமாம்

என்ன டைட்டில்?
சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாமார்த்தியமாகத்திருடுவது எப்படி?


================


20 டைரக்டர் சார்,உங்க மகர ராசி ட்ரெய்லர் பார்த்தேன்,அதுல, ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்

யோவ் ,அது மகரராசியா?இதுலயே பிழை.நீ அடுத்தவன் கிட்ட பிழை கண்டுபிடிக்கறியா? (telugu)


================

0 comments: