Monday, May 20, 2019

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....

1  தலைவரே!நாம ஆட்சிக்கு வந்தா சேலம் −சென்னை 8 வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும்னீங்களா?

ஆமா
தேசியநெடுஞ்சாலைப்பணியாளர்கள் 1 கோடிப்பேர்க்கு வேலை வாய்ப்பு தருவோம்னீங்களே!
ஆமா 2ம் எப்டி நடக்கும்?
நாம ஆட்சிக்கு வர்றது மட்டும் நடக்கவா போகுது?அடிச்சு விடறதுதான்

================


2 துண்டு சீட் அட்மின் = பஸ் பாஸ்... சொல்லுங்க

தலைவர் = பஸ் பஸ்
ரயில் பாஸ்... சொல்லுங்க
ரயில் பஸ்
இலவச ரயில் பஸ்
இலவச ரயில் பாஸ்
அய்யோ ராமா.. சாரி தலைவரே!அய்யோ ராவணா


=============


3 தலைவரே!நீங்க தமிழகத்தில் முதல்வர் ஆக நினைக்கறீங்களா?இந்தியாவுக்கு பிரதமர் ஆக நினைக்கறீங்களா?

சிஎம் ஆகவே சிங்கி அடிச்ட்டு இருக்கேன்...
ஆனா நீங்க ,உங்க ஆளுங்க தமிழக எதிரியை எதிர்க்காம டெல்லி அரசியல் பேசிட்டு இருக்காங்களே அது எதுக்கு?


============

4 தலைவரே!2019 எம்பி தேர்தலை இரண்டாம் சுதந்தரப் போர் னு சொன்னீங்களா?

ஆமா
முதல் சுதந்திரப்போர் எப்போ நடந்தது?யார் யார் அதுல கலந்துக்கிட்டாங்க?னு துண்டு சீட்டு பாக்காம சொல்ல முடியுமா?


===============


5 தலைவரே!நம்ம கட்சியோட கொள்கை என்ன?

நீயும் திருடு,எங்களையும் திருட விடு


============

6 தலைவரே!எந்தக்கட்சில இருந்து எந்தத்திருடன் நம்ம கட்சிக்கு வந்தாலும் அவங்களை சேர்த்துக்கறீங்களே ,அது ஏன்?

எதிரியோட பலவீனம் நம்ம பலம்.
யார் வீட்ல இழவு விழுந்தாலும் நம்ம வீட்ல கல்யாணம் நடக்கனும்


===============


7 தலைவரே!முன்னாடி எந்தக்கட்சில இருந்தாலும் ஒருகட்டத்தில் நம்ம கட்சில ்தான் அடைக்கலம் ஆகின்றனர் ,அது ஏன்?
நம்ம கட்சி மெடிக்கல்ஷாப் மாதிரி,24 மணி நேரமும் கட்சிக்கதவுகள் திறந்தே இருக்கும்.யார்,வேணா எப்போ வேணா ஐக்கியம் ஆகிக்கலாம்,அனைவருக்கும் என் இதயத்தில் இடம் உண்டு


=================


8 தலைவரே!வழக்கமா இந்து மத நம்பிக்கைகளை, இந்துக்களை நையாண்டி பண்ணுவீங்களே!ஏன் இப்ப சமீபகாலமா பம்மிட்டு இருக்கீங்க?
மடத்தனமான கேள்வி!தேர்தல் முடியும் வரை அடக்கி வாசி பாலிசி.எப்பவும் நம்ம சுயரூபத்தை காரியம் முடிஞ்ச பின் தான் காண்பிக்கனும்,அதுதான் சாணக்கியத்தனம்


================


9 தலைவரே!நாற்பதும் நமதே னு பிரச்சாரம் பண்றப்ப கையை விரிச்சு 5 விரல்களை காட்டறீங்களே?5 /40 தான் கிடைக்கும்னு தொண்டன் குழம்பிட மாட்டானா?==========


10 தலைவரே!பொள்ளாச்சி விவகாரத்துக்கு பொங்குனீங்க,இப்ப off ஆகீட்டீங்களே?என்ன ரீசன்?
சப"ரீசன்"


=================


11 தலைவர் − அழகாய் இருக்கிறாய்
பெண் வேட்பாளர் = பயமாய் இருக்கிறது


===============12 விஜய்,அஜித் இரண்டு பேருக்குமே மம்முட்டி ரசிகர் போல
எப்படி சொல்றே?
அவரோட புது மலையாளப்பட டைட்டில் "மதுர" "ராஜா"


=============


13 நம்ம மூன்றாம் கலைஞர் நடிக்க இயக்குநர் வஸந்த் எடுக்கப்போற ரீமேக் படத்துக்கு என்ன டைட்டில்?
ஏய்,நீ ரொம்ப அழகா இருக்கே!


================14 அதிமுக கட்சிக்காரங்களைப்பாத்து கேட்கறேன்,மூன்றாம் கலைஞர் பட்டப்பேருக்கு என்ன தகுதி இருக்கு?னு கேட்டிங்களே?இந்த ஒரு தகுதி போதாதா?அழகான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!எப்படி சிக்சர் அடிச்சார் பாத்தீங்களா?


================


15 எதிர்க்கட்சியினர் 56 வயதினிலே தமிழச்சி எனும் அழகியை நிறுத்தி இருக்கிறார்கள்,நாங்கள் 36 வயதினிலே ஜோதிகாவையே நிறுத்தலாம்னு இருக்கோம்.அவ்ளவ் ஏன்?16 வயதினிலே ஸ்ரீதேவி பொண்ணைக்கூட நிறுத்துவோம்.தேர்தல் போட்டில ஜெயிக்கறமோ இல்லையோ,அழகிப்போட்டில ஜெயிக்கறோம்


==============16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில்பாஸ் தருவோம்.பொதுமக்கள் திருட்டு ரயிலில் வர பயிற்சி அளிக்கப்படும்.திருட்டு ரயில் பயணத்தை யாரும் எள்ளி நகையாடாதீர்!திருட்டு ரயிலில் வந்தால் கோடிகளில் புரளலாம்.ராசி இருக்கு


==============


17 யோவ் பி.ஏ. நான் பத்தாங்கிளாஸ்ல பெயில் ஆன தகவல் எப்படி வெளில போச்சு
ஏன் தலைவரே?
னு டேக் ஓடுதே?


=================


18 நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....
தலைவரே!அது தான் வரமுடியாதே?சும்மா வந்தால் வந்தால் னுட்டு....================


19 நாற்பதும் நமதே செயலாக்கம் பெற்று விட்டால் அடுத்து வரும் 2021 சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் 234 சூப்பர் பிகர்களை நிறுத்துவோம் ,ஆதரிப்பீர் அழகிகளை(.வாக்காளனை ஏமாத்தனும்னா முதல்ல அவன் ஆசையைத்தூண்டனும்)=================


20 தலைவரே!தமிழ்நாட்ல தேசிய நெடுஞ்சாலைப்பணியாளர்கள் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன்னு அடிச்சு விட்டீங்களா?
ஆமா தமிழக தேசிய நெடுஞ்சாலை எவ்ளவ் தூரம் இருக்கு? அது வந்து... அது.. சரி,நானே சொல்லிடறேன்.4525 கிமீ
ஒரு கிமீ க்கு ஒரு ஆள்னாக்கூட மீதி 99,95,475 பேரு சார்ட்டேஜ் வருதே?=============

0 comments: