Wednesday, May 15, 2019

முதல்ல நம்ம வீட்டை கவனிப்போம், பக்கத்து வீட்டை அப்புறம் பார்ப்போம்


1   பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பின்மை என்றெல்லாம், எதிர்க்கட்சிகள் நீட்டி முழக்குகின்றன. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னை இல்லை; 70 ஆண்டு கால பிரச்னை என்பதை, யாரும் மறந்து விடக் கூடாது.- நிதின் கட்கரி:

அப்போ இதெல்லாம் சரி ஆக இன்னும்  எத்தனை ஆண்டுகள் ஆகும்?கறதையும் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிடலாமே?


==================


2    'அரசைக் கவிழ்ப்போம் என்று, கொக்கரிக்கிற கயமையை, வேரோடு வீழ்த்தி, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கடைசி நொடி வரை, இடையறாது பணியாற்ற வேண்டும்'-ஈபிஎஸ்


கடைசி நொடி வரைன்னா வாக்குப்பதிவு முடியும் வரையா?  வாக்கு எந்திரம் மாற்றப்படும் வரையா?


==============


அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும், புதுச்சேரி துணை நிலை கவர்னரை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.-ஸ்டாலின்: 

 முதல்ல நம்ம வீட்டை கவனிப்போம், பக்கத்து வீட்டை அப்புறம் பார்ப்போம்

=================

4  தமிழகம் இன்று, ஓர் எளிமையான, வலிமையான முதல்வரை பெற்றுள்ளது. எந்த பிரச்னை என்றாலும், நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பு இன்றுகிடைத்துள்ளது.-ராஜேந்திர பாலாஜி: 

 அப்போ ஜெ அப்டி இல்லைனு ஒப்புதல் வாக்குமூ;லம் தர்றாரா?


================


 'நீட்' தேர்வில் இருந்து, ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை.-மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்:

 இடைத்தேர்தல் முடியும் வரையாவது  வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கக்கூடாதா? ஈபிஎஸ்  மைண்ட் வாய்ஸ்


===============


6  தேர்தல் முடிவுகளுக்குப் பின், கல்வித் துறைக்கென, தனி சேனல் ஏற்படுத்தப்படும்.-செங்கோட்டையன்:   # கல்விச்சேனலுக்கு சரஸ்வதி சேனல்னு பேரு  வைங்க , சி ஆர் சரஸ்வதி சந்தோஷப்படுவாங்க


===============


7    
அரவக்குறிச்சியில் நிறைவேற்ற வேண்டிய, 85 கோரிக்கைகளை, இருமுறை சட்டசபையில் பேசினேன். ஆனால், இ.பி.எஸ்., அரசு, எதையும் செய்யவில்லை. எனவே, இந்த அரசை விரட்ட வேண்டும்.-அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., வேட்பாளர், செந்தில் பாலாஜி பேச்சு: 


 என்னமோ கொசுவை விரட்டனும் , எறும்பை விரட்டனும்கற மாதிரி அசால்ட்டாப்பேசறாரே?


-----------


8   இ.பி.எஸ்., முதல்வராக இருப்பதே, நான் போட்ட பிச்சை தான். ஐந்து, எம்.எல்.ஏ.,க்களை நான் அழைத்துப் போயிருந்தால், அவர் முதல்வராகி இருக்க முடியாது  - செந்தில் பாலாஜி 

இப்போதான் என்ன கெட்டுப்போச்சு, அழைச்சுட்டுப்போங்களேன் பார்ப்போம்


=============== 


9   
லோக்சபா தேர்தலில், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளவதற்குக் காரணம்  ராகுல் தான்-அரவிந்த் கெஜ்ரிவால் 

 ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் எந்த அளவுக்குப்பிரியுதோ அந்த அள வு ஆளுங்கட்சிக்கு லாபம் தான்


------------
10  
சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க, தி.மு.க.,வுக்கு வழியில்லாததால், எம்.ஜி.ஆர்., - கருணாநிதி நட்பு, ஜெயலலிதா மரணம் போன்றவற்றை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசி வருகிறார்- தினகரன் \\


 எம் ஜி ஆர் கருணாநிதி நட்பு ஒரு சாதனை தானே? ஜெ மரண மர்மம் இதுவரை வெளிவராத ரகசியம் ஒரு சாதனை தானே?>


=============


11  . ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக, தி.மு.க.,வினர் தான், முதலில் வதந்தி கிளப்பினர். கொலை செய்து விட்டதாகக் கூட கூறினர். எனவே, அவர்களைத் தான் முதலில், ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க வேண்டும். -தினகரன் \\

 போலீஸ் கூட இப்படித்தான் புகார் கொடுக்க வந்தவனையே லாக்கப்ல தள்ளும்


================


12  அரசியலுக்கு, நேர்மையானவர்கள் வர வேண்டும். மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், தமிழகத்தில் அதிகரித்துள்ளனர். - கமல் 

 பிக் ;பாஸ்  3 வேற ஆரம்பிக்கப்போகுது, நேர்மையானவங்க எல்லாம் இப்படி 
டைவர்ட் ஆகிட்டா எப்படி?  


===============

13   
தங்களுக்கு சாதகமாக இருந்தால், சரி என்றும், பாதகமாக இருந்தால், சரியாக செயல்படவில்லை என, தேர்தல் ஆணையத்தை, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது வழக்கமானது.-வாசன்  

எதிர்க்கட்சிகள் என்ன குற்றச்சாட்டுகளை    அள்ளி  வீசினாலும் ஆளூங்கட்சி இந்தக்காதில்  வாங்கி அந்தக்காதில் விடுவது வழக்கமானது 

======================


14    
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, 'லேப் - டாப்'பை பயன்படுத்த தெரியாது. அதனால், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தையே, அவர் நிறுத்தி விட்டார்-அகிலேஷ்  

 அப்போ அவருக்கு நீச்சல்  தெரியலைன்னா நாட்ல ஸ்விம்மிங் பூலே இருக்கக்கூடாதும்பாரா//


=================

15  .  
பெரும்பான்மை ஊடகங்கள், எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கின்றன- அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,ஆர்.நடராஜ் 

 ஜெயா டி வி நமது எம்ஜி ஆர்  இவைகளை  எல்லாம் இவர் மதிக்கறக்தில்லை போல 


===================


16   
 மோடி உண்மையிலேயே, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. எனவே, ஜாதிக் கொடுமைகளின் வலியும், வேதனையும் அவருக்குத் தெரியாது.-மாயாவதி

ஜாதிக்கொடுமைகள் பற்றித்தெரியனும்னா நியூஸ் சேனலை   ஓப்பன் பண்ணாலே  போதுமே?இதுக்காக பிறப்பை ஏன் மாற்றனும்?


===============


 17  மோடி தன்னை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என, முனைந்து கூறி வருகிறார்.அவர் உண்மையிலேயே அந்தப் பிரிவில் பிறந்திருந்தால், அவரை பிரதமராக, ஆர்.எஸ்.எஸ்., அனுமதித்திருக்காது.-மாயாவதி

ஆர் எஸ் எஸ்  என்ன என்ன பண்ணும்கறதை எல்லாம் இவர் சரியாசொல்றாரே? அது எப்படி?

===============


 18  கல்யாண் சிங் போன்ற, பா.ஜ., தலைவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு என்ன செய்தது என்பது, அனைவருக்கும் தெரியும். -மாயாவதி

கட்சியோட உட்கட்சி விவகாரம் அது, நீங்க ஏன் தலையிடறீங்க?

=================


============


19  
நாடு முழுவதும், பா.ஜ.,வுக்கு எதிரான அலை வீசுகிறது. இது குறித்து, மக்களிடம் தீவிரமாக பிரசாரம் செய்தோம்.- சந்திரபாபு நாயுடு 

 அதாவது மோடி எதிர்ப்பு அலை மக்களிடையே வீசுதுனு அந்த மக்களிடமே சொன்னீங்களா? சபாஷ்


==============


20   பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டினோம். அடுத்து வரப்போவது, புதிய பிரதமர் தான்-சந்திரபாபு நாயுடு 

 அந்தப்பிரதமர் பேரு சொல்லலாமே?

================

0 comments: