Sunday, May 19, 2019

தோட்டக்காரன்,சமையல்காரன்,வீட்டு வேலைக்காரன்,செக்யூரிட்டி,கார் டிரைவர்

1  இன்று உலக கதை சொல்லும் நாளாம்.தலைவரே!நீங்க எதுனா கதை விடுங்க,சாரி.கதை சொல்லுங்க


நாற்பதும் நமதே!===============


2 உடன்பிறப்பே!பிரச்சாரங்களில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனில் அம்பானி,முகேஷ் அம்பானி க்ரூப்பின் கொட்டத்தை அடக்குவோம்"என சமூகவலைத்தளங்களில் பரப்புரை செய்வீர்!


மானத்தை வாங்காதீங்க தலைவரே! நம்ம பொழப்பு நெட் ல ஓடிட்டு இருக்கறதே ஜியோ"சிம் புண்ணியத்துல
===============


3 தலைவரே! நாம ஆட்சிக்கு வந்தா கல்விக்கடனை ரத்து பண்ணுவோம்னு அடிச்சு விட்டீங்களா?


ஆமா
தேசிய வங்கிகள் மத்தியஅரசின் கட்டுப்பாட்டுலதானே இருக்கு?
ஆமா
ஒரு"பேச்சுக்கு நீங்க ஜெயிச்சு மத்தியில் வேற அரசு அமைஞ்சா என்ன செய்வீங்க?
அது... அது வந்து....


================


4 நம்ம கட்சியைப் பொறுத்த வரை ஆட்சியை கூட விட்டுகொடுக்கும் ஆனால் சமூகநீதியையோ , மாநில சுயாட்சியையோ விட்டு தராது


தலைவரே!அவ்ளோ"நல்லவங்கன்னா மாநில சுயாட்சி ல ் 7 பேர் விடுதலை செய்ய வேண்டியது தானே .நம்ம ் ஆட்சி காலத்துலயே செஞ்சிருக்கலாம்.ஏன்"செய்யல?
அது வந்து.. ஆக"நீ அந்தக்கட்சி?===============


5 தலைவரே!நம்ம தங்கச்சி எந்தத்தொகுதில போட்டி இடறாங்க?


தூத்துக்குடில
முதல் பிரச்சாரத்தை அங்கேயே ஆரம்பிக்காம ஏன் திருச்செந்தூர்ல ?
அது வந்து...அம்மா தான் திருச்செந்தூர் முருகன் ராசி னு சொன்னாங்க.ஆனா வெளில சொல்ல முடியுமா?பகுத்தறிவு பல்லிளிச்சிடுமே?==============


6 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மானாட மயிலாட போலவே டிக்டாக் நிகழ்ச்சிக்கு"ஒரு"வாய்ப்பு தருவோம்.நீங்கள் பைசா"செலவளித்து கில்மாப்படம் பார்க்க மெனக்கெடத்தேவை இல்லை


==============


7 ராகுல் = சவுக்கிடர்


தங்கபாலு = சவ் கி டர் அதாவது 100ன்னா பயம்
=============


8 தலைவரே!நெற்றியில் பெண்கள் குங்குமம் வைப்பது"பகுத்தறிவுப்பிரகாரம் ஏத்துக்கலாமா?


நம்ம குடும்பத்துக்கா?ஊரானுக்கா?எதுக்குக்கேட்கறேன்னா நம்ம குடும்பத்துல எல்லார்க்கும் ஹிந்தி தெரியும்,ஆனா மத்த எவனும் ஹிந்தி படிக்க வேணாம்போம்.நமக்கு ஒரு நியாயம்,அடுத்தவனுக்கு வேற================


9 நாங்க ஆட்சிக்கு"வந்தால் வங்கிகளில் நீங்கள் இழந்த செக் பவுன்ஸ் சார்ஜை மீட்டுத்தருவோம்


தலைவரே!இது சாத்தியமா?
யோவ்,நாம ஜெயிக்கறது மட்டும் சாத்தியமா?சும்மா அடிச்சு விடறதுதான்================

10 தலைவரே!நீங்க கரெக்ட் பண்ற ஆண்ட்டிகளுக்கு 40 வயசாவே இருக்கே?


நாற்பதும் நமதே னு பந்தாவா சொல்லிக்கலாமே?
=============


11 சந்துல தேவையில்லாம யாருக்கும் டிஎம் பண்ணது இல்ல என்ற கர்வம் எனக்கு உண்டு


அப்டியா?ஒரு SS இருக்கு,இறக்கட்டுமா?
அது எதுனா தேவை இருந்திருக்கும்.தேவை இல்லாம பண்ணது"இல்லை,தேவைன்னா பண்ணுவேன்


============


12 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் .நீட் தேர்வுக்கு 'விளக்கு' அளிக்கப்படும்.


தலைவரே!அது விலக்கு.ஒண்ணா"தமிழ்"ஒழுங்கா"படிச்ட்டு வாங்க,இல்லைன்னா துண்டு"சீட்டு அட்மினை மாத்துங்க===============


13 தலைவரே!தேர்தல்"அறிக்கைல,அனைவருக்கும்"இலவச"ரயில் பாஸ் னு"அறிவிச்சிருக்கீங்களாமே?நம்புவாங்களா?


இலவச"ரயில்"ஒவ்வொரு"நபருக்கும்"தர்றோம்னாலே"நம்பிடுவாங்க,பாஸ்"னா"நம்ப"மாட்டாங்களா?===============


14 தலைவரே!

மக்களின் பிரச்சினைகளை,
நாடாளுமன்றத்தில்,
இன்னும் ஆழமாகவும், கூர்மையாகவும்
சொல்லக் கூடியவர்களாக,
சும்மா கதை விடறதுதான்
எழுத்தாளர்கள் இருப்பார்கள். என்பது உண்மையா?================


15 இலக்கியவாதிகள் டெல்லி சென்றால் என்ன மாற்றம் நடக்கும்?


1. டெல்லியை பின்புலமா வெச்சு கதை எழுதுவாங்க
2 இலக்கியவாதிகள் பொருளாதாரம் மேம்பட்டு இ"லக்"கியவாதி ஆகிடுவாங்க===============


16 மேடம்,நம்ம கட்சி வேட்பாளர்கள் லிஸ்ட் 40 பேர்ல 5 பேர் பேரை வெளியிட்டுட்டீங்களாமே?


ஆமா,தோட்டக்காரன்,சமையல்காரன்,வீட்டு வேலைக்காரன்,செக்யூரிட்டி,கார் டிரைவர்===============


17 தலைவரே!நம்ம கிட்ட இல்லாத பணமா?எதுக்காக தேர்தல் வர்றப்ப எல்லாம் தேர்தல் நிதி தாரீர்னு தொண்டர்கள் தலைல மொளகா அரைக்கறோம்?


1 கறுப்புப்பணத்தை வெள்ளை ஆக்க குறுக்கு வழி இது
2 நம்ம கிட்ட பணம் இல்லாததாலதானே நிதி கேட்கறோம்னு தொண்டன் மடத்தனமா நினைச்சுக்குவான்==============


18 தலைவரே!நம்ம சொந்தக்காரங்களுக்கே திரும்ப திரும்ப சீட் தர்றமே?கட்சியோட அடிமட்டத்தொண்டனுக்கு சீட் தந்தா என்ன?அவனும்தான் சம்பாதிக்கட்டுமே?


பல்லக்குத்தூக்கிகள் கடைசிவரை அடிமையாகவே இருக்கனும்,அரசன் ஆவது நம்ம குடும்பத்து ஆட்களா இருக்கனும்===========


19 ராமராஜன்"நடிச்ச எங்க ஊரு"காவக்காரன் படத்தை குஜராத்ல ரிலீஸ் பண்ணா அந்த டப்பிங் படத்துக்கு என்ன"டைட்டில் வைப்பாங்க?


Chowkidar of our native place============


20 தலைவரே! நம்ம கல்யாணத்துக்கு மொய் வெச்சவங்களோட லிஸ்ட்டை மொய் நோட்ல இருந்து ரெடி பண்ணச்சொன்னீங்களே?இந்தாங்க.இது எதுக்கு?


இதுல இருந்துதான் வேட்பாளர் லிஸ்ட் ரெடி பண்ணனும்=============

0 comments: