Tuesday, May 21, 2019

தலைவரே!வாரிசு அரசியலை நாம எதிர்க்கறமா?ஆதரிக்கறமா?

1  வாரிசு"அரசியலை"நான்"ஆதரிக்கிறேன்.ஒரு"திருடனோட"மகன் திருடறான்,ஒரு"கொள்ளைக்காரனோட"மகன் கொள்ளை அடிக்கறான்.ஒரு"அரசியல்வாதியோட"மகன்"மட்டும் உழைச்சா"சம்பாதிக்கப்போறான்?

=============

2 வாரிசு வேட்பாளர்களிடம் நேர்காணலில் என்ன கேள்வி"கேட்டிருப்பாங்க?


"அப்பா பேரை காப்பாத்துவியா?
அப்பா சம்பாதிச்ச சொத்தை காப்பாத்துவேன்
ஒருவேளை உங்களுக்கு சீட் தர முடியலைனா யாருக்கு"தர சிபாரிசு"செய்வீங்க?
என்"பையன் ,என்"பொண்ணு


============


3 தலைவரே!வலுவான வேட்பாளர் என்பவர் நல்லவரா? அல்லது வசதி படைத்தவரா?


யோவ்,நல்லவனுக்கு ஏன் நாம சீட் தரனும்?திருடனுக்கு சீட் கொடுத்தாதான் அவனும் திருடுவான்,நமக்கும் பங்கு கொடுப்பான்.==============


4 மகாஜனங்களே!படிச்ச பட்டதாரிக்கு சீட் தந்திருக்கோம்,ஓட்டு போடுங்கனு ஒரு க்ரூப் கிளம்பி இருக்கு.சட்டம் படிச்சவன் மாட்டிக்காம சாமார்த்தியமா திருடுவான்.படிக்காதவனுக்கே பாமர மக்கள் கஷ்டம் தெரியும்.பணக்காரனுக்கும்,படித்தவனுக்கும் வாக்களிக்காதீர்!


=============


5 தலைவரே!பெண்களுக்கு 33% ஒதுக்கனும்னு போராடுனமே?நம்ம"கட்சி வேட்பாளர்கள் 40 பேர்ல எத்தனை பெண் வேட்பாளர்கள்?


2 பேரு
அடேங்கப்பா.13 பேருக்குப்பதிலா வெறும் 2 பேரு,சரி,அந்த 2 பேரும் யாரு?
நம்ம தங்கச்சியும் ,சொந்தக்காரப்பொண்ணும்==============


6 தலைவரே!நம்ம கட்சி வேட்பாளர்கள்ல வக்கீல்களுக்கு அதிக சீட் தந்திருக்கமே,அது ஏன்?


சாதா வேட்பாளர் பொய் சொல்ல,ஏமாத்த கூச்சப்படுவான்,வக்கீல்னா அதுல சர்வீஸ் ஆனவங்கஒரு"திருடனோட"தலைமைக்குக்கீழே இன்னொரு திருடன்தான்"வர முடியும்==============

7 தலைவரே!வாரிசு அரசியலை நாம எதிர்க்கறமா?ஆதரிக்கறமா?


இரண்டும்தான் உடன்பிறப்பே!
புரியல
நம்ம கட்சி ல அதை ஆதரிக்கறோம்,அடுத்தவன் கட்சில வாரிசு அரசியலைப்புகுத்துனா எதிர்க்கறோம்,ஊர்ல யார் வீட்ல திருட்டுப்போனாலும் களவாண்டது நாமாத்தான் இருக்கனும்===============


8 கதை எழுதுறவங்களெல் லாம் ஏன் எப்பவும் one-sided டாவே எழுதுறாங்க???


அப்டி எழுதுனாலே பாதிப்பேரு புரியலைங்கறாங்க.இதுல விருமாண்டி,12பி ,ரன் லோலா ரன் பாணில கதை எழுதுனா குழம்பிடுவான் தமிழன்=================


9 டாக்டர்,ஆடு,மாடு லாம் என்ன பல்லா வெளக்குது?🤔(துலக்குது?)அதுங்களுக்கு பல் சொத்தை வர்றதில்லையே?ஏன்?


ஏன்னா ஆடு மாடுகள் சாக்லெட்,அஸ்கா சர்க்கரைல செஞ்ச ஸ்வீட்ஸ் சாப்பிடறதில்லை,இயற்கை அளித்த இயற்கை உணவுகளைத்தானே சாப்பிடுது?================


10 தலைவரே!பாட்ஷா ங்கற பேரைக்கேட்டாலே உங்க கை,கால் எல்லாம் உதறுதே?


சாதிக் பாட்ஷா,மாணிக் பாட்ஷா இரண்டுபேரு பேரைக்கேட்டாலே ஆட்டோமேடிக்கா நடுங்குது.என்ன பண்ண?================


11 டாக்டர்,முதல்ல எல்லாம் 4 தோசை சாப்பிடுவேன் இப்போலாம் 2 தோசை தான் சாப்பிடறேன் 😲


வெரிகுட்,ஆனா"வெயிட்"குறையலையே?
முதல்ல எல்லாம் ஒரு"தோசைக்கு"ஒரு"கரண்டி மாவுதான் ஊத்துவேன்,இப்ப 2 கரண்டி மாவு ஊத்தறேன்
சுத்தம்====================


12 டேய்,ராமன் ராவணனை கிள்ளினார்னு மொழி பெயர்த்து இருக்கியே?இதுதான் நீ இங்க்லீஷ்"படிச்ச லட்சணமா?


டீச்சர் ,நெட்டுரு போடறவன்தான் உள்ளது உள்ளபடி ஒப்பிப்பான்,நெட் லயே குடி இருக்கறவன் தன் இஷ்டத்துக்கு அடிச்சு விடுவான்,அப்டேட் ஆகுங்க,ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க


============

13 Ram killed Ravana − இதை தமிழில் மொழி பெயர்க்கவும்


தங்கபாலு = ராமன் ராவணனை மென்மையாக தாக்கிப்பேசினார்=============


14 தேர்தல் முடியும்வரை யாரும் வாழை இலையில் சாப்பிடக்கூடாது.இலை மறை காய் மறை பேச்சு தவிர்க்கப்பட வேண்டும்,ஏனெனில் இரட்டை இலையை நினைவுபடுத்தும்.தேர்தல் ஆணையம் அதிரடி,தொண்டர்கள் அதிர்ச்சி (கற்பனை)


==============


15 தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் அனைவரும் காலை 8 மணிக்கு தான் எந்திரிக்கனும்,ஏன்னா காலை 7 மணிக்கு உதய சூரியன் தோன்றும் நேரம்.அதைப்பார்க்கக்கூடாது − தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு (கற்பனை)


==============16 சின்னங்களை நினைவுபடுத்துவதால் தேர்தல் முடியும் வரை யாரும் சூரிய"நமஸ்காரம் செய்யக்கூடாது,கை யை உபயோகிக்கக்கூடாது,குறிப்பா பொண்ணுங்களுக்கு டாட்டா காட்டக்கூடாது −தேர்தல் ஆணையம் (கற்பனை)================


17 தலைவரே!கல்லூரியில்"நடந்த நிகழ்ச்சியால"பல கல்லூரி மாணவிகளின் இதயங்களை"கொள்ளை கொண்டதா பேப்பர்ல போட்டிருக்காங்க


ஆட்சியை மட்டும் பிடிச்ட்டோம்னா எதை எதை எல்லாம் கொள்ளை அடிக்கப்போறோம்னு பாரு=================

18 இன்ஸ்பெக்டர்,உங்க கிட்ட புகார் தந்தவங்க பேரெல்லாம் ரகசியமா வெச்சுக்குவீங்களா?


என்ன இப்படி கேட்டுட்டீங்க?இன்னைக்கு காலைல கூட MPN காலனி பவர்லூம் பாலு ஒரு புகார் தந்தாரு,வெளில"மூச்சு விடலையே?=============


19 தலைவரே!நீங்க நடத்தற பார் க்கு லைசென்ஸ் எடுக்கலையாமே?ஏன்?


மன்னிச்சுக்குங்கப்பா,மப்புல மறந்துட்டேன்============


20 தலைவரே!பெண்களைப் பத்தி பேச, பெண்கள் உரிமை நலச்சட்டம் பத்தி பேச, சிஸ்டர்ஸ் & மதர்ஸ்னு நீங்க மேடைல சொன்னப்ப உங்க ஆளுங்க ‘சகோதர சகோதரிகள்‘ அப்டினு மொழி பெயர்க்கறாங்களே,அது ஏன்?


ஏன்னா அம்மா னு சொல்ல முடியாது,அது அந்தக்கட்சியைக்குறிக்கும்ல,நாங்க விபரமாக்கும்================

0 comments: