Thursday, May 16, 2019

தளபதி ராக்கிங் பர்ஃபார்மென்ஸ்- பூலோகம் கண்ணை மூடிவிட்டால் பூனை இறந்து விடுமா?

1  மணிரத்னம் இயக்கிய அழகியல் படங்கள்ல "இதயத்தை திருடாதே "முக்கியமானபடம்,ஆனா உங்களுக்கு மட்டும் அது ஏன் பிடிக்கலை தலைவரே!?


டைட்டில்லயே "திருடாதே"னு அபசகுனமா வருதே?திருடாம அரசியல் எப்டி பண்றது?நமக்குத்தெரிஞ்சதெல்லாம் திருட்டு,புரட்டு,உருட்டு,மிரட்டு
==============


2 என்ன மடத்தனமான அரசு இது?ரெய்டு வரும்போது இன்ன தேதில இன்ன டைம் ல வர்றோம்னு சொல்லிட்டு வர்றதில்ல?கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம நடு ராத்திரில வந்தா என்ன பண்ணுவான் என்"கட்சிக்காரன்?பணத்தை மறைப்பானா? மத்த விஷயங்களை மறைப்பானா?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நோட்டீஸ் அனுப்பிட்டு ரெய்டு


=============

3 சார்,2 படத்தைத்தவிர நீங்க நடிச்சதெல்லாம் பிளாப்,அப்றம் எப்டி 8 படங்கள் கைவசம் இருக்கு?


ஒரு படத்துல ஹீரோ"சான்ஸ் கிடைச்சா அந்தப்படத்துக்கு இலவசமா இசை அமைச்டுவேன்
பிரமாதமான ஜிங் ஜக் கா இருக்கே?============


4 எம் டி சார் உங்க கம்பெனிகளுக்கு "கொடை ஆரஞ்சு நிறுவனம், சாத்துக்குடி நிறுவனம் னு பேரு வெச்சிருக்கீங்களே?


ஏன்?ஆப்பிள் நிறுவனம் பேமஸ் ஆகலையா?=============


5 டியர்,எனக்கு 20 , உனக்கு 18


அரசியல்வாதி மகள் = 20+18=38 தானே வருது?இன்னும் 2 சார்ட்டேஜ் ஆகுதே?
மக்கு,அதான் குழந்தை இருக்கே? 2 வயசு ஆகுதில்ல?============


6 ஜோசியரே!மாமனார் வேற எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் ஆரம்பிக்க சொல்றாரு?.ஆரம்பிக்கலாமா?


மாமனாரோட முதலீடுன்னா பேஷா ஆரம்பிக்கலாம்,உங்க கைக்காசுன்னா வேணாம்.============


7 போலீஸ் வாகனத்தில் செல்கிறது ஆளூங்கட்சியினரின் பணம்” -னு குற்றச்சாட்டு வைக்கறீங்களே?தலைவரே!அந்த விஷயம் உங்களுக்கு எப்படித்தெரிஞ்சது?


நாங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது"அப்படித்தானே செஞ்சோம்?..குறவன் ........ ஜாடை ....மறவனு. க்குத்தானே தெரியும்?


============


8 ரைட்டர் சார்,உங்க கதைல ஏகப்பட்ட கொலைகள் இருக்கே?


இல்லையே?வில்லன் ஹீரோயினை"மட்டும்தானே கொல்றாரு ?ஒரு கொலை தானே?
தமிழ்ல ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்,கொலையா கொன்னிருக்கீங்க ,தமிழை===============


9 தலைவரே!நான் சொல்றதை அப்டியே திருப்பி சொல்லுங்க


"பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டுவிடுமா?"
பூலோகம் கண்ணை மூடிவிட்டால் பூனை இறந்து விடுமா?================


10 கம்யூனிஸ்ட் ஆட்சியிலே கேரளாவில் வரலாறு காணாத 32 நாட்கள் தொடர் மழை,வெள்ளம் வந்தது,அதிமுக ஆட்சியிலே சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மழையே வராது.அவ்ளவ்"ராசியான ஆட்கள் நாங்கள்,சந்தேகம் எனில் வரலாற்றின்"பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பீர்!============


11

2 தொகுதிகளில் ஏன் போட்டி இடுகிறீர்கள் ?என கேட்கிறார்களே?அதில் என்ன"தப்பு?ஒருவர் 2 சம்சாரம் ,3 சம்சாரம் கட்றப்ப அதுவும் 3 சம்சாரமும் உயிரோட இருக்கறப்பவே கட்றப்ப 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டும் போட்டி இட்டால் என்ன?ஸ்பேர் மாதிரி தானே?


===============

12 சார் ,தமிழ்நாடு மக்கள் தொகை எவ்ளோ?
சுமாரா 7 கோடி இருக்கலாம்
பட விமர்சனத்துல போய் பார்த்து படம் புடிக்கலனா உங்க டிக்கட் பணத்தை நான் தந்து விடுகிறேன்.கறீங்களே.படத்துக்குப்போகாமயே 7 கோடிப்பேரும் படம் பிடிக்கலைனு அடிச்சு விட்டா 7 கோடி ×120 ருபா =8,40,00,00,000 ரெடி ஸ்டாக் வெச்சிருக்கீங்களா?

=============13  நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம் ,செய்வதைத்தான் சொல்வோம்
ஓஹோ,என்ன சொன்னீங்க?என்ன செஞ்சீங்க?
நாங்க ஜெயிச்சா நான் முதல்வர் பதவி ஏத்துக்குவேன்னு சொன்னேன்


===============14 தலைவரே!எவனோ ஒருத்தன் வந்து "பிங்க்கி பிங்க்கி பாஙக் கி சொல்றான் ,அவனுக்கு 2000 ரூபா தர்றீங்க?
அது கோடு வோர்டுய்யா. 10× 200 ருபா =2008 ருபா.பிங்க் கலர்லதானே அந்த நோட்டு இருக்கு.இதை வாங்கி பாங்க் ல அவன் a/c ல போட்டுடுவான்


=================15 டியர்,உங்களைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா ராணி மாதிரி வெச்சுக்காப்பாத்துவீங்களா?
ராணி மாதிரி வெச்சுக்காப்பாத்தனும்னா ஆ.ராசா மாதிரி கொள்ளை அடிச்சாதான் உண்டு,நா மாச சம்பளக்காரன்,உழைச்சாதான் சோறு


=================


16 டியர்,நீங்க ஒரு 420 னு வெளில பேசிக்கறாங்களே?நிஜமா?
ஆமா,அவங்க என் டென்த் மார்க் பத்தி சொல்றாங்க 420 / 500.
+2 ல 840 / 1200
டபுள் போர் ட்வெண்ட்டி னு சொல்வாங்க


================


17 பிலிம் இன்ஸ்ட்டிடியூஷன்
தேர்வில்
GOT. சிறுகுறிப்பு வரைக
get க்கு past tense GOT
சுத்தம்,Game Of Thrones ஹாலிவுட் தொடர் பற்றி கேட்டா ஆங்கில இலக்கணக்கதை விடறே?


=================


18 சார்,என்ன பேஸ்ட் வேணும்?க்ளோசப்?கோல்கேட்?
பிரபல ட்விட்டர் அட்லீ ரசிகர் = காபி பேஸ்ட் போதும்


==================


19 சமச்சீர் கல்வியைக்் கொண்டு வந்தது நாம தானே தலைவரே?
ஆமா
அப்றம் ,அதே மாதிரி சமச்சீர் செல்வம் திட்டமும் கொண்டு வரலாமே?
அதெப்டி?எல்லார் கிட்டயும் ஒரே அளவு பணம்,சொத்து இருந்தா வேலை செய்ய கட்சிக்கு அடிமைகள் எப்டி சிக்குவாங்க?


=================

20 கொத்தடிமை ,பரம்பரை அடிமை என்ன வித்தியாசம்?
சம்பளம் தர்ற முதலாளிக்கு மட்டும் ஓவரா விசுவாசமா இருந்தா கொத்தடிமை.முதலாளி,முதலாளி மகன்,பேரன் ,கொள்ளுப்பேரன் னு பரம்பரைக்கே அடிமை ஆனவர்கள் பரம்பரை அடிமை


================


0 comments: