Thursday, May 23, 2019

ஆடி போய் ஆவணி வந்தா என் அப்பா டாப்பா வந்திடுவாரு-உதயநிதி

1   ராகுல் தெரிவித்துள்ளது போல், மோடிலை என்ற வார்த்தையே, எங்கள் அகராதியில் இடம் பெறவில்லை; அவர் பதிவிட்டிருந்த புகைப்படமும் போலியானது. இதை, யாரும் நம்ப வேண்டாம் - ஆக்ஸ்போர்டு அகராதி நிறுவனம்,

 அப்போ ராகுல் லை இனிமே இடம்பெறுமா?


 ராகுல் சரியான அகராதி பிடிச்சவரா இருப்பார் போல 


=============
2   கடந்த லோக்சபா தேர்தலில், மோடிக்கு, மன்மோகன் சிங்கும், சோனியாவும் போட்டியாக இருந்தனர். ஆனால், இந்த தேர்தலில், மோடிக்கு போட்டியே இல்லை.-ராஜ்நாத் சிங்:

 போட்டியே இல்லைனா கூட்டணி எதுக்கு? சிங்கிள் சிங்கமா களம் இறங்கி இருக்கலாமே?

===============

3   கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என, கட்சியினரும், ஆதரவாளர்களும், என்னைப் பற்றி கூறுகின்றனர்; இது, அவர்கள் என் மீது வைத்த அன்பை காட்டுகிறது-சித்தராமையா:

காங்கிரசில் கோஷ்டிப்பூசல் ஏற்படப்போகுது என்பதைக்காட்டுது

--------------

4  ,  உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும் -அன்புமணி: # கூட்டணி முடிவுகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை அல்லவா?


================

5   'ராகுல், தன்னை, சர்வதேச முட்டாள் என்பதை நிரூபித்து விட் டார்'-அனந்த குமார் ஹெக்டே

அவராவது ஏப்ரல் ஃபூல். ஆனா ஓட்டு போடற ஜனங்க எவெர் ஃபூல் ( EVER FOOL)


===============

, காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய, பிரக்யா சிங்கை, ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்-மோடி


 தன்னை சுட்டுக்கொன்ற கோட்சேவையே சாகும்போது காந்தி மன்னித்து விட்டாரே?


===============

7  சுதந்திர போராட்ட வீரர், ராம் மனோகர்லோகியா, பிரதமராக இருந்த நேருவிடம், 'பெண்களின் மிக முக்கிய பிரச்னை, குடிநீரும், கழிப்பறை வசதியும் தான்' என, கூறினார்.நான், லோகியாவின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறேன்-மோடி

பெண்களின்  முக்கியப்பிரச்சனை சீரியல்கள் தான், அதுக்காக 24 மணி நேரமும் டி வி சீரியல் போட்டுடாதீங்க ‘


======

8  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காமரூபம் வரை, தேசம் முழுவதும், 'இந்த முறை, 300; மீண்டும் மோடியின் தர்பார்' என்ற, ஒரே குரல் தான் ஒலிக்கிறது.- மோடி

தேசம் முழுவதும் ஒலிக்குதுன்னா அது எப்படி ஒரே குரல் ஆகும்? பல குரல் ஆச்சே?

==============


9  என்னை மீண்டும் பிரதமராக்க, முடிவு செய்த மக்களுக்கு நன்றி- மோடி  # கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சா? மே 23 க்குப்பின் பேச வேண்டிய டயலாக்கை இப்பவே பேசறாரே?

==============


10  'கடந்த தேர்தலில், மோடிக்கு பதிலாக, நடிகர் அமிதாபை தேர்வு செய்து இருந்தால், நாட்டிற்கு ஓரளவாவது நல்லது நடந்திருக்கும்,'' - பிரியங்கா காந்தி  # ஜனங்களூம்  மருமக ஐஸ்வர்யா ராய் வாழ்கனு கோஷம் போட்டிருப்பாங்க 


==================


11  புதுச்சேரி அரசிடம் இருந்து எந்த கோப்புகளும் ராஜ்நிவாஸ் வருவதில்லை' - கவர்னர் கிரண்பேடி  #  ஜட்ஜ் மாப்பு வெச்சுட்டாரே ஆப்பு?


============


12  லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இனிமேல் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை - பிரியங்கா காந்தி

 உங்களுக்கே ட்வுட் வந்திடுச்சா? நேத்து வரை காங் ஜெயிக்கும்னு நம்பிக்கையா உறுதியா சொன்னீங்க?


=============


13 'லோக்சபா தேர்தலில், பஞ்சாபில், காங்கிரஸ் தோல்வி அடைந்தால், என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.= பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

 ஓவர் கான்ஃபிடன்ஸா? அரசியல் அரிச்சுவடி தெரியாதவரா?


இதையே மேற்கோள் காட்டி ஸ்டாலின் கூட அதிமுக வை வம்புக்கு இழுக்கலாம்


================


14   லோக்சபா தேர்தலில், பஞ்சாபில், காங்கிரஸ் தோல்வி அடைந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். மாநில அமைச்சர்களும், வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்' = பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்  # பிள்ளையார் சுழி இவரு போட்டு விட்டுட்டா மத்த மாநில முதல்வர்களுக்கு சனி ஸ்டார்ட் ஆகிடும்


================ இப்ப பிரச்சனையே நீங்க தேர்தல் விதிமுறைகளை பின்பற்றலை, பணப்பட்டுவாடா பண்ணீங்க் என்பதுதானே? 


===============
 இது எனக்குத்தெரியாது , என் நாலெட்ஜுக்கு வர்லைனு சொல்லிட்டா மேட்டர் ஓவர் - ஓபிஎஸ்  மைண்ட் வாய்ஸ்


=============


 ஜூன் போனால் ஜூ”LIE"க்காற்றே...உதய நிதிதான் தமிழக கவர்னரா?


ஆடி போய் ஆவணி வந்தா என் அப்பா டாப்பா வந்திடுவாரு மொமெண்ட்


=============


18 காந்தி குறித்த ஜீயரின் கருத்து ஏற்புடையதல்ல'' = கே.எஸ்.அழகிரி 

அது அவரது சொந்தக்கருத்து அப்டினு சொல்ல மறந்துட்டாரு


==============


19  கமல் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்' - தமிழிசை  # அப்போ கமல் விடும் அறீக்கை எல்லாம் இவருக்கு தெளிவாப்புரியுது போல 


===============
 ஹோட்டலுக்கு பணம் சப்ளையர் நம்ம ஜனங்க தானாம்=============

0 comments: