Wednesday, May 15, 2019

மிஸ்டர் க்ளீன்

1   நான் காட்பாடி தொகுதியில், 11 முறை தேர்தலில் நின்றுள்ளேன். 12வது முறையும் நான் தான் நிற்பேன்; நான் தான் ஜெயிப்பேன். என்ன காரணம் என்றால், காட்பாடி தொகுதிக்கு பாலாறு தண்ணீர் தந்தேன் -துரைமுருகன்:

 வேட்பாளருக்கான நேர்காணலில் ஸ்டாலின் கிட்டே சொல்ல வேண்டியதை ஏன் பிரஸ்ல சொல்றீங்க?


===============


2தேச நலன் கருதி, 2002ல், காங்கிரசோடு,த.மா.கா., இணைந்தது. பின், எங்கள் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், மீண்டும், த.மா.கா.,உருவானது. -  யுவராஜா  

அப்போ தேச நலனை விட தனிப்பட்ட அங்கீகாரம் தான் முக்கியம்கறீங்களா?


================


ஜனநாயகத்தை கொன்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பாடம் புகட்ட உள்ளனர்.-சந்திரபாபு நாயுடு:  # செக்‌ஷன் 302ன் கீழ் வழக்கு தொடர்வாரோ?


==============

4  ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அவர், பா.ஜ., முகவர் போல செயல்பட்டதால், விடுவிக்கப்பட்டார். -     தினகரன்  


 இப்போ ஈபிஎஸ் மட்டும் என்ன சசிகலாவின் முகவர் போலவா இருக்கார்?


-----------------

 5  கட்சிக்கும், ஆட்சிக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதால், இ.பி.எஸ்., முதல்வராக்கப்பட்டார் -    தினகரன் 


வளர்த்த கடா மார்பில் பாயுதேனு சோகப்பாட்டு பாடப்போறாரோ? சட்டி சுட்டதடா கை விட்டதடா?


================

. 6  நான் நினைத்திருந்தால், அன்றே முதல்வராகி இருக்கலாம். நாங்கள் பதவி ஆசை பிடித்து அலையவில்லை.-    தினகரன்  #  ஒரு திருத்தம் அதுக்கு சசிகலா நினைக்கனும்


=============


7  இப்போது, தமிழகத்தின் மாற்றத்துக்கான விளிம்பில் உள்ளோம். - கமல்  $ விளிம்பு நிலை மக்களுக்காகப்போராடுபவரா?

=========
8  
கடலுார் மாவட்டம், இறையூரில் செயல்பட்டு வரும்,இரண்டு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், கரும்பு விவசாயிகள் பெயரில், 88.51 கோடி ரூபாய்,வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து இருக்கிறார்கள் - வைகோ 


 கசப்பான செய்தி


===============

9     தஞ்சை மாவட்டத்திலும்,கரும்பு விவசாயிகளை மோசடி செய்து, போலி ஆவணங்கள் வழியாக,சர்க்கரை ஆலைகள் இதுவரை, 360 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. இந்த சர்க்கரை ஆலைகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -வைகோ 


இனிக்க இனிக்கப்பேசி லோன் வாங்கிட்டாங்க போல 


==============


10  ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆறு மாதங்களில், மின்சார தட்டுப்பாட்டை நீக்கினார். தற்போது, நம் தேவைகள் தீர்ந்ததுடன், 3,000 மெகாவாட் மின்சாரத்தை, மற்ற மாநிலங்களுக்கு அளிக்கிறோம். -ஓபிஎஸ் 

 ஓஹோ இதுதான் கரண்ட் பாலிடிக்சா?

=============

- 11  இது தான் நல்லாட்சி.அ.தி.மு.க., மக்களுக்கு நல்லாட்சியை தந்ததால் தான், 25 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்டுள்ளது. -ஓபிஎஸ் #   1996   ல  ஆட்சியை இழந்தது ஏன்?னு சொல்லிட்டா தேவலை


==============


12  தி.மு.க., ஆட்சியில், ஏழை மக்களிடம் அடிமாட்டு விலைக்கு அபகரிக்கப்பட்ட நிலங்கள், ஜெ., ஆட்சியில் மீட்கப்பட்டன.-ஓபிஎஸ்  #  மீடகப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் அளீக்கப்பட்டனவா? ஆட்டையைப்போட்டுட்டாங்களா? 


=============

13   மோடி, வெறுப்பை பயன்படுத்தினார்; ஆனால், பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், அன்பை பயன்படுத்தியது. இந்த போட்டியில், அன்பு வெற்றி பெறப் போகிறது-- ராகுல்

அம்மா என்றால் அன்பு , அப்போ அம்மா கட்சி தான் வெற்றி பெறும்கறாரா?னு அதிமுக காரங்க க்மேட்கப்போறாங்க 

 அன்பு தோத்துட்டா  வம்பு தான் வெற்றி பெற்றதும்பாரா?



--------------
14  இந்த தேர்தலில், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் நிலை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஊழல் மற்றும் ரபேல் ஆகிய முக்கிய பிரச்னைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை,எங்களின் சொந்த பிரச்னைகள் அல்ல; மக்களின் பிரச்னைகள்.  ராகுல்

 ஆமா நம்ம சொந்தப்பிரச்சனைன்னா அது பிரியங்கா காந்தியின் கணவர்  மேல இருக்கற வழக்குகள் தான், அதைப்பற்றிப்பேச முடியாதே?

===============


==========

15  மக்கள் கோபத்திலும், இயலாமையிலும் உள்ளனர். =பிரியங்கா 

ஆமா , இருக்கறது காங் பாஜக என ரெண்டே மெயின் கட்சிகள் , 2ம் சரி இல்லைன்னா?


============


 16  மக்களின் பிரச்னைகளை பேசுவதற்கு மாற்றாக, பிரதமர்மோடி, மற்ற விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்தார்.=பிரியங்கா 


மக்களின் பிரச்சனைங்கறது பாய் மாதிரி, தினமும் அதை விரிச்சுப்போட்டுதான் ஜனங்க படுக்கறாங்க

-------------


, 17  தங்களின் கோபத்தை, ஓட்டு மூலம் மக்கள் வெளிப்படுத்த உள்ளனர். -பிரியங்கா 

கோபம் வரனும்னு தூபம் போடறாரா?

============



18   இந்த தேர்தலில் பா.ஜ., தோல்வியை சந்திக்கப் போவது தெளிவாகத் தெரிகிறது, பிரியங்கா 

 தெரிஞ்சுமா இன்னும் பிரச்சாரம் பண்றீங்க? ஓய்வெடுக்கலாமே?


=============

19  நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அப்புறப்படுத்துவதும், துாய்மைப் பணி தான்,'' = மோடி 

க்ளீன் பண்ணிட்டா மிஸ்டர் க்ளீன் இமேஜ் கிடைக்கும்?




============


20  இதுவரை நான், ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது;-மோடி  

 இனிமே தான் ஈடுபடப்போறார் போல 

 நான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவன் னு சொன்னீங்களே அது அனுதாப ஓட்டு வாங்க முயல்வதுதானே? இது ஜாதி அரசியல் இல்லையா? 

===============

0 comments: