Saturday, May 04, 2019

அலிபாபாவும் 40 திருடர்களும் -2

1    தமிழகத்தின் காவலர், இ.பி.எஸ்., தான்- , ராஜேந்திர பாலாஜி: துணைக்காவலர் ஓபிஎஸ் அதை விட்டுட்டீங்களே?

=============

2  கோபாலபுரத்திற்கும், அறிவாலயத்திற்கும் மட்டும் தான், ஸ்டாலின் காவலாளியாக இருக்க முடியும்.= , ராஜேந்திர பாலாஜி: # முதல்வர் ஆவோம்னு ஆவலாளியா இருக்கக்கூடாதா?


============


தேர்தல் முடிவுக்குப் பின், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், காணாமல் போய்விடும்.-பொன்முடி:   # நம்ம ஆட்சில பலரோட நிலங்கள் காணாமப்போன மாதிரியா?


காணாமபோன கட்சிகள் திமுக கூட்டணிக்கே வந்துட்டா வரவேற்பீங்க தானே?வாசல்கத வுகள் 24 மணி நேரமும்  திறந்தே இருக்குமே?

=============


4  : தொழிலாளர் நலம் சார்ந்த கட்சியாக, த.மா.கா., செயல்பட்டு வருகிறது  -வாசன்  # கம்யூனிஸ்ட் கூட கூட்டணி நு உங்க கூட்டணி ஆளுங்க தப்பா நினைச்சுடப்போறாங்க 


===============

 மக்களின் பிரச்னைகளைக் கேட்டு, அதற்கு தீர்வு காண்பதற்கு, என் சகோதரர் ராகுலை போல், வேறு தலைவர்கள் யாரும் இல்லை.-    பிரியங்கா

காங்கிரசில் இல்லைனு விளக்கமா சொல்லுங்க 

============

 6  என் குடும்பத்தினரை, பா.ஜ., குறி வைத்து செயல்படுகிறது. -    பிரியங்கா  # உங்க கணவர் ,  அம்மா, அப்பா அப்டினு எல்லார் மேலயும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கே? நெருப்பில்லாம புகையுமா?அடுப்பில்லாம வேகுமா?

=============

7  தேர்தல் பிரசாரத்தின்போது, எங்கள் குடும்பத்தைப் பற்றி, நாங்கள் பேசுவதில்லை; மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசுகிறோம்.-  பிரியங்கா

மக்களோட பிரச்சனையே உங்க குடும்பத்தினர் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்குன்னுதானே? 

=================

8  , பா.ஜ., தலைவர்கள், தங்கள் பிரசாரங்களில், எங்களின் குடும்பத்தைத் தான் குறி வைக்கின்றனர். -    பிரியங்கா  # பாஜ க குடும்பங்கள் மீது குறி வெச்சா சேம் சைடு கோல் ஆகிடுமே?


===========


9  ,   லோக்சபா மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில், நாம் வெற்றி பெறுவோம். இதை, உளவுத்துறை மூலம் அறிந்து, அ.தி.மு.க., தரப்பில் அச்சத்தில் உள்ளனர்.-தினகரன் #   இப்போ நீங்க சொன்ன தகவல் உளவுத்துறைக்கே இப்போதான் தெரியுமாம்


==============

 10  ஆட்சியை குறுக்கு வழியில் காப்பாற்ற, நமக்கு ஆதரவான மூன்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு விளக்கம் கோரி, சபாநாயகர் மூலம், முதல்வர் பழனிசாமி தரப்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மே 23க்கு பின், பழனிசாமி ராஜினாமா செய்வார்.=தினகரன்  $ மே 23  இயக்கம் ல இவரும் ஒரு அங்கத்தினர் போல 



அதாவது அவங்க இப்போ எந்த இடத்துல இருக்காங்கனு இடம் சுட்டி பொருள் விளக்குகனு கேடிருக்காங்க 

=================1
11  “பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல... களவாணி..!” - மு.க.ஸ்டாலின் # நேத்துதான்"ராகுலுக்கு"கோர்ட்ல" கண்டனம்"கிடைச்சுது,இன்னைக்கு இவரு.நானும் ரவுடிதான்"மொமெண்ட்




============




12 ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்காவிட்டால்

அரசியலை விட்டு ஒதுங்கி விடுவாரா ஸ்டாலின்?” - அமைச்சர் ஜெயக்குமார் # அல்லது அவரோட சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைக்கத்தயாரா?ஒரு 10% போதும்


===========


13 எடப்பாடி கண் அசைத்தால் 40 தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரெடி' - ராஜேந்திர பாலாஜி # எதுக்கு?அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவா?


============


1 4  ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உள்ள அதிகாரம் கூட, எம்.எல்.ஏ.,க்களுக்கு கிடையாது- திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ்:   # அதிகாரம் , குறள் இதெல்லாம் விடுங்க, சமபளம், அலவன்ஸ் பத்திஒ பேசுங்க


=================]

15   உ.பி.,யில், 41 லோக்சபா தொகுதிகளில், காங். வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு, எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், வாரணாசி தொகுதியில், நான் போட்டியிடவில்லை. -பிரியங்கா: # நீங்க வளர விடாம சதி பண்றாங்க, ஜாக்கிரதை


மோடியை எதிர்த்துப்போட்டியிட்டா டெபாசிட் வாங்கறதே கஷ்டம்னு சொன்னாங்களா?



==============



16   பா.ஜ., அல்லாத அரசு தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் -சிதம்பரம்  # அப்போக்கூட காங் தான் ஆட்சி அமைக்கும்னு தில்லா சொல்ல முடியலையா?


=============


17    : லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதில், நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளோம். -, சிதம்பரம்   #  காங் ஜெயிக்கும்னு சொல்ற நம்;பிக்கை இல்லை?


===============



18  -பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில், 'மோடி மோடி' என, மக்கள் முழக்கமிடுகின்றனர். அவை, வெறும் முழக்கங்களாக இல்லாமல், நாட்டு மக்களின் ஆசீர்வாதங்களாக உள்ளன.-அமித் ஷா # நல்லா கேட்டீங்களா? கோ பேக் மோடி யா இருக்கப்போகுது


===============


19   மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்-அமித் ஷா # அனைவரும்   விரும்பறாங்களா> அப்போ எதிர்க்கட்சிக்கு ஒரு சீட் கூட கிடைக்காதுங்கறீங்களா? 


=================


20    எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கோ, எம்.எல்.ஏ., ஆவதற்கோ தகுதியில்லாத ஸ்டாலின், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்ற கனவில் மிதக்கிறார்.-சட்டத்துறை அமைச்சர், சண்முகம் # சுதந்திர நாட்டில் கனவு காணக்கூட உரிமை இல்லையா? அப்துல்கலாம் என்ன சொல்லி இருக்காரு? கனவு காணூங்கள்


==============

0 comments: