Tuesday, May 14, 2019

தூக்கத்துல உளர்ற வியாதி

==========

1   எங்கள் பிரதமராக, ராகுலை முன்னிறுத்துவோம். ஆனால், இது தொடர்பான இறுதி முடிவை, ஐ.மு., கூட்டணி தான் எடுக்கும்.=ஜோதிராதித்யா சிந்தியா   # உங்கள் பிரதமராவா? அப்போ மக்களீன் நாட்டின் பிரதமரா வேற ஒருவர்  வருவாரா?


==============

  2 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலைப் போல், இம்முறை, 260 - 280 தொகுதிகள் வரை, வெற்றி பெற்று, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது கடினம். ஆனால், தே.ஜ., கூட்டணி, நிச்சயம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட, அதிக இடங்களில் வெற்றி பெறும். -சஞ்சய் ராவத் 

 குழப்பாதீங்க , 285  சீட் வந்தாதான் தனிப்பெரும்பான்மை
=====================


3  நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், சிவசேனை, மிக்க மகிழ்ச்சி அடையும்.-சஞ்சய் ராவத் 

 உங்க ஒருத்தர் சந்தோஷத்துக்காக நாங்க கஷ்டப்படனுமா?


============

 4  போரின்போது சரணடையும் ராணுவம் போல், எதிர்க்கட்சிகள் நிலை உள்ளது-முக்தர் அப்பாஸ் நக்வி  

வாக்குப்பதிவு எந்திரம் மேல பழி போட ரெடி ஆகிட்டாங்களா?


===============


.5   தேர்தலில், தங்களின் முடிவு என்ன என்பதை தெரிந்துக் கொண்ட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரக் கும்பல், முன்கூட்டியே சரணடைந்து விட்டது.-முக்தர் அப்பாஸ் நக்வி  


எங்களை  மக்கள் நிராகரிக்கிறார்கள் ஏற்றுக்கொள்ளலைனு ஓப்பனா அறிக்கை விட முடியுமா?

==============

 6  மே, 23ல் ஓட்டுகள் எண்ணப்படும்போது, தங்கள் தோல்விக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்க, எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.-முக்தர் அப்பாஸ் நக்வி  

வாக்குப்பதிவு எந்திரங்கள்  பழுதடைந்த பூத்களில் எல்லா எந்திரங்களிலுமே எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் மேல தான் லைட் எரியுது> அது எப்படி? மற்ற கட்சிகள் சின்னம் மேல லைட் எரிஞ்சிருந்தா டவுட் வந்திருக்காது


===============


: 7  46 ஓட்டுச் சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடத்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, எந்த அடிப்படையில் முடிவெடுத்தார் என்பதை விளக்க வேண்டும்.-

 கே.எஸ்.அழகிரி 

 மேலிட உத்தரவின் அடிப்படையில் தான்

==============

 8  எந்த அரசியல் கட்சியும், மறு ஓட்டுப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படாத நிலையில், 46 ஓட்டுச் சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடத்துவதில், ஏதோ உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறோம் -கே.எஸ்.அழகிரி 

பாஜக அரசு மீண்டும் அமைய வேண்டும் என்ற நல் நோக்கம்தான்

=============
9 மறு ஓட்டுப்பதிவு நடத்துவதை, தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்.- 

 கே.எஸ்.அழகிரி 


 உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாங்கற மாதிரி கிடைச்ச ஓட்டுகளூம் மறுபடி மறுபடி வாக்குப்பதிவு வெச்சா கிடைக்காதில்ல?


============


 10      காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மோசமான நடத்தையை, என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. -

 பிரகாஷ் ஜாவடேகர்


ஒரு அரசியல்வாதியோட மனசு  இன்னொரு  அரசியல்வாதிkகுத்தானே தெரியும்? உங்களூக்கே புரியலைன்னா எப்படி?

================

11  ஒவ்வொரு நாளும், எதிர்க்கட்சிகள், பிரதமரை சபிக்கின்றன. அவருக்கு எதிராக, தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கின்றன. ஜாதிரீதியிலும், அக்கட்சிகள் அவமதிக்கின்றன. இது தான், காங்கிரசின் கலாசாரம். ஊழல் விவகாரங்கள் குறித்து, பா.ஜ., பேசுவதால், இது போல் நடக்கிறது. -

 பிரகாஷ் ஜாவடேகர்


 ஆளூங்கட்சியின் சாதனைக:ளைச்சொல்லி ஓட்டு கேட்கலாமில்ல? எப்போப்பாரு எதிர்க்கட்சிகளை குறை சொல்லியே ஓட்டுக்கேட்டா எப்படி?

=============


12   எனக்கு பின்னால் பெரும்படை இருக்கிறது - எச் ராஜா # சீக்கிரமா டாக்டரிடம காட்டவும்.படை ,படர் தாமரை ஆபத்து


=============


13 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும்: அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி


# மிஷன் இம்ப்பாசிபிள்==============


14 88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை - CM EPS # MLA சம்பளம் உயர்த்தப்படுமா?னு கேட்டாங்களே?அது"மக்கள் பிரச்சனை ல வராதுங்களா?


==============

15 மத்தியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வரும்
- ப. சிதம்பரம் # தூக்கத்துல உளர்ற வியாதியை அசால்ட்டா விட்ரக்கூடாது,உடனே டாக்டரைப்பார்க்கவும்


================


16  எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ராகுல் சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.-

கெஜ்ரிவால்


வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் கறதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல 

================ 17   மத்தியில் மீண்டும் பா.ஜ. ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால் அதற்கு ராகுல் தான் காரணமாவார். -

கெஜ்ரிவால்


அப்போ பாஜக ஆட்சி அமைக்கலைன்னா அதுக்குக்காரணம் மோடியா?


==============

18   ஒட்டு வங்கிக்காக ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் மோடி பயன்படுத்துவது சரியல்ல-

கெஜ்ரிவால்


ராணூவத்தை போருக்குத்தானே பயன்படுத்தனும், இவங்களோட பெரிய அக்கப்போராக இருக்கு


==============

19 பா.ஜ., தலைவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச் சென்று, ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் -மம்தா பானர்ஜி

 இப்போ பிரச்சனை பணம் பட்டுவாடா பண்றதா? பட்டுவாடாக்கு இஜட் பிளஸ் பாதுகாப்பு தர்றதா?


================

20   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்திருந்தார் - யஷ்வந்த் சின்கா   # இதை வாஜ்பாய் உயிரோட இருக்கும்போதே ஏன் சொல்லலை?


==============

0 comments: