Tuesday, May 28, 2019

செயல் தலைவர் செயலாற்றல் தலைவரா இல்லைங்கறீங்களா?

 1  நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை எதிர்க்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகளில் மாற்றமில்லை- அன்புமணி:

 நம்ம கொள்கையே கூட்டணில இருக்கனும், அதுக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னுதானே? அதனாலதானே சட்டமனறத்தேர்தல், ஊராட்சித்தேர்தல்லயும் கூட்டணி தொடரும்னீங்க? 


=============
2   : மக்கள் அளித்துள்ள தீர்ப்பை, மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது.- சந்திரபாபு நாயுடு

அப்படிப்பட்ட முயற்சி உடையார் இகழ்ச்சி அடைவார், கவலை வேண்டாம்

=============


: ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்வதற்கு முன்னோட்டமாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக வெளியிடப்பட்டுள்ளன - குலாம்நபி ஆசாத்

 எல்லா மீடியாக்களும் விலைபோய் விட்டன அப்டீங்கறீங்களா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் PAY

============
4 ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில உணர்வு இன்று அதிகரித்து வருகிறது. அகில இந்தியக் கட்சிகள், அந்தந்த மாநில நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்ற எண்ணமும், வலுப்பெற்று வருகிறது. ஆகையால், மாநிலக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற சூழலை நோக்கி, இந்தியா காலடி எடுத்து வைக்க, இத்தேர்தல் வழிவகுக்கும்.-
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்   


மாநில உணர்வு பிரிவினைக்குதானே வழி  வகுக்கும்?


===========


 
5   தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான பின், சிலர் அந்த முடிவுகளை ஏற்க மறுத்து, வீண் சண்டையிட்டு, கருத்துக் கணிப்பு தவறானது என, கூறிக் கொள்கின்றனர். ஆனால், பலதரப்பட்ட கருத்துக் கணிப்புகளும், ஒரே மாதிரியான முடிவுகளையே வெளியிட்டுள்ளன. எனவே, ஓட்டு கணிப்பை ஒட்டியே இம்முறை, தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கும் என்பது, ஊர்ஜிதமாகி உள்ளது.- அருண் ஜெட்லி 


ஷேர் மார்க்கெட்  குப்னு ஏறுவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்டதுனு சொல்றாங்களே?


============ 
ஓட்டு கணிப்பு முடிவுகளை, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஓட்டு கணிப்பில் ஈடுபட்ட பெரும்பாலான நிறுவனங்களும், செய்தி தொலைக்காட்சி சேனல்களும், பா.ஜ.,வுக்கு ஆதரவானவை. இதுவும், பா.ஜ.,வின் ஒரு தேர்தல் உத்தி தான். -எஸ்.சுதாகர் ரெட்டி  


 தேர்தலே முடிஞ்சிடுச்சு , இதுல என்ன தேர்தல் உத்தி?


==============

7   என் கணிப்புப்படி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, 200க்கும் குறைவான இடங்களில் தான், வெற்றி கிடைக்கும்.-எஸ்.சுதாகர் ரெட்டி  


ஒரு 100  சீட் கம்மியா கணக்கு போட்டுடீங்க


=============
8  ,கருணாநிதி அளவுக்கு, ஸ்டாலின், நம்பகமான, செயலாற்றல் மிக்க தலைவராக, மக்களிடத்தில் தன்னை நிறுவிக் கொள்ளவில்லை.-கே.பாலு  

செயல் தலைவர் செயலாற்றல் தலைவரா இல்லைங்கறீங்களா?


===========


9   தற்போது நடக்கும் ஆட்சியே போதும் என்ற மனநிலையே, மக்களிடம் இருக்கிறது. =கே.பாலு  

 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து?

=============

10 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, நம்பகம் இல்லாத தன்மையை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. ஆனால், ஒருமுறை கூட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான புகார் எதையும், அவர்களால் நிரூபணம் செய்ய முடியவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக, அவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றனர். ஆனால், நாட்டு மக்கள், அந்தப் பிரசாரத்தை ஏற்க மாட்டார்கள்.-

முக்தார் அப்பாஸ் நக்வி : 

 தேர்தல் கமிஷனே ஏத்துக்கலை.


============

11  இருபது ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன், துாத்துக்குடி மக்களிடம் ஓட்டுகள் கேட்டேன்.- தமிழிசை

நாங்க உப்பு உற்பத்தி பண்ற இடத்துல இருக்கறவங்க ரோஷம் ஜாஸ்தின்னுட்டாங்களா? 

============

12   கருணாநிதி அளவுக்கு, ஸ்டாலின், நம்பகமான, செயலாற்றல்மிக்க தலைவராக, மக்களிடத்தில் தன்னை நிறுவிக் கொள்ளவில்லை -கே.பாலு

 ராமதாஸ் அளவுக்கு அன்புமணி வளராத மாதிரியா?

=============

13 ,  ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில உணர்வு அதிகரித்து வருகிறது. அகில இந்தியக் கட்சிகள், அந்தந்த மாநில நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்ற எண்ணமும், வலுப்பெற்று வருகிறது-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

 தமிழகம் , கேரளா வில் மட்டும்தானே அப்படி?


==========================

14 :துாத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, மோடி அரசு உரிமம் வழங்கியுள்ளது. இது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும், கேவலப்படுத்துவதாக உள்ளது. பல வேதி நச்சு திட்டங்களின் மூலம், தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இருந்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது.-திருமாவளவன் 

 தமிழ்நாடுதான் பாஜகவுக்கு ஓட்டுப்போடலையே? பழி வாங்கும் நடவடிக்கைனு யாரும் இன்னும் கிளம்பலையா? 

================
15   கூட்டணிக்காக, பா.ம.க., கொள்கையை விட்டுக் கொடுக்காது என்றால், அ.தி.மு.க.,வும் கூட்டணிக்காக, கொள்கையை விட்டுக் கொடுக்காது. =ராஜேந்திர பாலாஜி


 அப்போ அதிமுக பாமக பிளவு உறுதியா? 

==============
'16  அ.தி.மு.க.,வில் தற்போது, சின்ன சிதறல் ஏற்பட்டுள்ளது' என, எம்.எல்.ஏ., கருணாஸ் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வைப் பற்றி கருத்து சொல்ல, கருணாஸ் அரசியல் மேதை இல்லை. அவர், அ.தி.மு.க.,வில் மாவட்டச் செயலரோ, உயர்மட்டக் குழு உறுப்பினரோ இல்லை. அவருக்கும், அ.தி.மு.க., கட்சிக்கும், எந்தத் தொடர்பும் இல்லை.-ராஜேந்திர பாலாஜி

 கருணாஸ்க்கு எதிராக அதிமுக வின் தர்ணாஸ் இருக்குமா?


============
17 சிறுபான்மை மக்களுக்கு, பாதுகாப்பு அரணாக எப்போதும், த.மா.கா., இருக்கும். சிறுபான்மையினரின் உரிமைக்காக, மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவேன். மூப்பனார் வழியில், சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக, த.மா.கா., தொடர்ந்து பாடுபடும்.-  வாசன்


சிறுபான்மை , பெரும்பான்மைனு ஏன் பிரிச்சுப்பேசறீங்க? அனைத்துத்தரப்பினருக்கும் ஒரே மாதிரி இருப்போம்னா வேலை முடிஞ்சது


=================

18 தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், நீர் மேலாண்மை குறித்து பேசுவதற்கு, பா.ம.க., தான் காரணம். - அன்புமணி 


 மதுவிலக்கு, புகையிலை எதிர்ப்பு , வரிசையில் நீர் மேலாண்மை, விவசாய நலன் , எல்லாம் நல்லதுதான், ஆனா இந்த  ஜாதிக்கட்சி அடையாளம் தான் பின்னடைவு

================


19   காவிரி - கோதாவரி திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். - அன்புமணி 

1/39  ஐ வெச்சுக்கிட்டு என்ன அழுத்தம் தர முடியும்?, போன தடவை 30+ எம் பி சீட்ஸ் ஜெயிச்சே ஒரு அழுத்தமும் தர முடியல

================


20  'சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில், சட்டத்தை மதித்து தான் அடுத்த பணியை மேற்கொள்வோம்' என, முதல்வர் தெளிவாகக் கூறியுள்ளார்.- அன்புமணி 


சட்டத்தை மீறி செய்வோம்னு முதல்வர் கூற முடியுமா? 


===================

================

0 comments: