Monday, May 27, 2019

அவரு பழமொழியையே தப்பு தப்பாதான் சொல்வாரு , கணக்கை மட்டும் சரியா போட்டுடுவாரா?



1  எட்டு வழிச்சாலை என்பது மிகவும் அவசியம். அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ப, சாலை வசதிகளை அமைக்க வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.- இ.பி.எஸ்.,


எட்டு வழிச்சாலையால விவசாயிகளுக்கு ஏழரை (சனி) அப்டினு சிலர் சொல்றாங்களே?


=============

2  கர்நாடகாவில், தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. மழை பெய்து அணைகள் நிரம்பினால், தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும்-கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர், ரேவண்ணா:


அதாவது சுடு சோறு போட மாட்டேன், பழைய சோறு மிஞ்சி இருந்தா பிச்சை போடறேன்கறாரு, அப்புறம் கோர்ட் எதுக்கு? காவேரி மேலாண்மை வாரியம் எதுக்கு?

=============
3   தமிழகத்தில், இ.பி.எஸ்., ஆட்சிக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. அ.தி.மு.க., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும். ஸ்டாலின் தப்புக் கணக்கு போடுகிறார் - தமிழிசை:

இவருதான் அதிமுக க்கு இன்சார்ஜ் போல, நாம கூட தமிழக பாஜக வுக்கு இன்சார்ஜ்னு தப்பா நினைச்ட்டோம்


==============


4  எட்டு வழிச்சாலை குறித்து, தேர்தல் முடியும் வரை, வாய் திறக்காமல் இருந்துவிட்டு, இப்போது, 'மக்களுக்கு உயிர் முக்கியம்; அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்' என, திடீரென மிரட்டும் தொனியில், இ.பி.எஸ்., வசனம் பேசுகிறார்.- தினகரன்


இதை  அரசியல் சாணக்கியத்தனம்னும் சொல்லலாம்

================

5  சோறு போடும் விவசாய நிலங்களை அழித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, எட்டு வழிச்சாலை போட துடிக்கும், இ.பி.எஸ்.,சின் நயவஞ்சகம், நிச்சயம் நிறைவேறப் போவதில்லை.= தினகரன்

எட்டு க்கு துட்டு வாங்கிட்டாரோ?

==============


6   எல்லா கருத்துக் கணிப்புகளும், மத்தியில், பா.ஜ., அரசு அமையும் என, தெளிவுபட சொல்லியுள்ளன. இது, நிச்சயம் நடக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தக் கருத்துக் கணிப்பில் சற்று மாறுபாடு வருவதற்கு வாய்ப்புள்ளது. -இல.கணேசன் :

நமக்கு ஆதரவா வர்றது நடக்கும், எதிரா வர்ற கருத்துக்கணிப்பு நடக்காது, அதானே உங்க ஃபார்முலா?

===============
7  . தமிழகத்தில், பா.ஜ., கூட்டணிக்கு இழப்பு ஏற்பட்டால், நாடு முழுவதும் உள்ள, பா.ஜ., கூட்டணி கட்சிகள் சரி செய்யும்.-இல.கணேசன் :

பா ஜ கவுக்கு சரி செய்யும், ஓக்கே ஆனா அதிமுக வ்ஜுக்கு எப்படி சரி செய்ய முடியும்? 


==============


8  ஓட்டுப் பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, பா.ஜ., தலைமையிலான கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறியிருக்கிறது. சில வணிக நிறுவனங்கள், இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை, அரசியல் மற்றும் பொருளாதார நோக்கில் வெளியிடுகின்றன- திருமாவளவன்

ஷேர் மார்க்கெட் ஒரே நாள்ல உச்சத்துக்குப்போனதுக்கு இந்த கருத்துக்கணிப்பு புரோக்கர்களுக்கு ஒரு ஷேர் போய் இருக்குமோ?


==============

9 . பல சமயங்களில், கருத்துக் கணிப்புகள் உண்மையாக அமைந்தது இல்லை. தமிழகத்தில், ஓட்டுப் பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடிவு மட்டுமல்ல; சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும், தி.மு.க., அணிக்கே சாதகமாக அமையும்.= திருமாவளவன்


அப்போ திமுக வுக்கு சாதகமா வர்ற கருத்துக்கணிப்பை ஏத்துக்கறீங்க?

===========


10    ஆளும் அரசுகள் மீது, மக்களுக்கு கோபம் இருந்தால், எப்படி இருக்கும் என்பதை, கடந்த தேர்தல்களில் நான், களத்தில் பார்த்திருக்கிறேன். இந்தத் தேர்தலில், ஆளும் அரசுகள் மீது, மக்களுக்கு அத்தகைய கோபமெல்லாம் இல்லை. -வைகைச்செல்வன்


அப்டியே கோபம் இருந்தாலும் அதை நாம தந்த 1000 ரூபா 2000 ரூபா 6000 ரூபா மாற்றிடும், அதானே?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்கறாரு

==============




11   ஓட்டு கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. முதலில் நாம், அதைப் புரிந்து கொள்ள வேண்டும். 1999ம் ஆண்டில் இருந்து, பெரும்பாலான ஓட்டு கணிப்புகள், தவறாகவே இருந்துள்ளன.-வெங்கையா நாயுடு


 எது எப்படியோ இதை வெச்சு ஷேர் மார்க்கெட்ல ஒரு அள்ளு அள்ளிட்டாங்க

=================


 12  ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில், அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, கடமைகளை நிறைவேற்ற வேண்டும்-வெங்கையா நாயுடு

 அரசியல் கட்சிகள் எந்தக்காலத்துல மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்னு நினைச்சிருக்காங்க?


==============

13   தேர்தலுக்கு பின் வெளியாகியிருப்பது, கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு,'' - இ.பி.எஸ்.


 தமிழகத்தைஒ சொல்றாரா? பாஜக ஜெயிக்கும்கற கருத்தை சொல்றாரா?

=============


14  கட்சியில் பதவி வழங்காத விரக்தியால், பெருந்துறை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம், கட்சி பொறுப்பு களை ராஜினாமா 


 தனிமரம் தோப்பு ஆகாதும்பாங்க ., ஆனா இப்போ  “ தோப்பு “ தனி மரம் ஆகிடுச்சே?


 தனியா நின்னா தோப்பு க்கு தோப்பு ( தோல்வி) நிச்சயம்


=================


15   :''தமிழகத்தில் பழனிசாமி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்'' -தமிழிசை 

 அவரு பழமொழியையே தப்பு தப்பாதான் சொல்வாரு , கணக்கை மட்டும் சரியா போட்டுடுவாரா?


===============


16  இடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு # பீல்டுல இறங்கி வேலை செஞ்சா சாமான்ய மக்கள் பல்ஸ் தெரியும்.ஏசி ரூம்ல உக்காந்துட்டே வேலை செஞ்சா இப்டிதான் ரிசல்ட் கிடைக்கும்



==============


17 மோடிக்கு வயதாகி விட்டது - திருநாவுக்கரசர்.
# நமக்கு என்ன வயசுங்கோ? மோடி பிறந்தது 17 - 9 -1950 திருநாவுக்கரசர் பிறந்தது 13 - 7 - 1949 அப்டினு"சொல்றாங்களே?


=================


18   பலமான ஓட்டு வங்கிகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியாக, அ.தி.மு.க., அணி இருப்பதால், நிறைய இடங்களில் வெற்றியைக் குவிக்கும்.-கே.பாலு  

 அப்போக்கூட எல்லா இடங்களிலும் வெற்றியைக்குவிக்கும்னு சொல்ல முடியல பாருங்க 

===========




19   தேர்தலில், மம்தா, சந்திரபாபு நாயுடு, அமரீந்தர் சிங் ஆகியோர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதில்லை. -ரவிசங்கர் பிரசாத் 

யாராவது தான் ஜெயிக்கறப்பா இதுல முறைகேடு நடந்க்திடுச்சுனு சொல்வாங்களா?

=============



20   பிரதமராக நரேந்திர மோடியை, மக்கள் மீண்டும் தேர்வு செய்தால், தேர்தல் தோல்வியை, எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் -ரவிசங்கர் பிரசாத் 

 கூட்டணிக்காக தேடி வருவாங்க  பாருங்க 

0 comments: