Monday, May 06, 2019

ஆட்சிக்கு சாம்பார்


1  ▪️சென்னை செங்குன்றத்தில் கிழிந்த ரூ.500 நோட்டை 100 ரூபாய் கமிஷனுக்கு மாற்றிய கதிர்வேல் என்பவரை அவரது நண்பர்கள் அடித்துக் கொன்றனர்

▪️50 ரூபாய் கமிஷன் எனக்கூறி விட்டு 100 ரூபாய் எடுத்துக் கொண்டதால் கதிர்வேல் கொலை - 4 பேரை போலீசார் கைது செய்தனர் # 50/4 =12.50 ரு க்கு ஒரு கொலை!=============
2 "அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து எதுவும் செய்ய முடியாது!" - அமைச்சர் ஜெயக்குமார்.

பாண்டவர் அணி வனவாசம் போற காலம் நெருங்கிட்ச்சுங்கறாரா?


===========

3    32 ஆண்டு காலம், ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து, அவரை காப்பாற்ற முடியாத பாவிகள், தற்போது, அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என, தனியாக இயக்கத்தை தொடங்கி உள்ளனர்-OPS  நீங்க கூடத்தான் ஜெ கூடவே இருந்தீங்க, நீங்களாவது காப்பாற்றி இருக்கலாமே? 


ஜெ மரணம் பற்றிய விபரம் கேட்க  விசாரணைக்கமிஷன் உங்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகலையாமே? ஏன்?


அதிமுக வை வேற யாரும் வெளில இருந்து அழிக்கவே முடியாதுனு சொல்லிடுங்க 


======================


4    தமிழகத்தில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக, 4,723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தேர்தல், டி.ஜி.பி., அஷுதோஷ் சுக்லா:  #  தீர்ப்பு வர 400 வருசம் ஆகுமே?


அப்போ ஒரு பயலும் தேர்தல் விதிமுறைகளை மதிக்கவே இல்லைனு சொல்லுங்க 


==================


5    :திண்ணை பிரசாரம் என்ற பெயரில், ஸ்டாலின், திண்ணை நாடகம் நடத்துகிறார். -தமிழிசை


ஆனா நிஜமான நாடகத்துல துண்டுச்சீட்டுக்கு அனுமதி இல்லை, மனப்பாடம் பண்ணி தான் வசனம் சொல்லனும்


=================


6   தன் கட்சியினரை, ஏற்கனவே, 'செட்டப்' செய்து, முன் தயாரித்த கேள்விகளுக்கு, பதில் கூறுவதாக ஸ்டாலின்  நடிக்கிறார். -தமிழிசை  # செட்டப் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆகிடுச்சா?


 நடிகர்க்ள் அரசியலுக்கு வருவதும் அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆவதும் சகஜம் தானே?


=================


7    மக்கள் எதைக் கேட்டாலும், நாங்கள் அதை செய்து தருவோம். மக்கள் தான், 'மாஸ்டர்!' -ராகுல்  # செய்து தருவீங்களா? கேண்ட்டீனா நடத்தறீங்க?

================
8    பிரதமர் மோடியோ அல்லது எந்த அரசியல் தலைவரும், மக்களுக்கு மாஸ்டர் கிடையாது. -ராகுல்  # ஆனா ஜனங்க ட்ரங்க்கன் மாஸ்டர்களா இருக்காங்களே? ============
9நானும் நாட்டின் காவலாளி' என்ற புதிய நாடகத்தை, பா.ஜ.,வினர் துவக்கியுள்ளனர். அதை வைத்து, தங்களைக் கூட அவர்களால், காத்துக் கொள்ள இயலாது.  -மாயாவதி   #  ஏன்? அவங்க வந்தா  நீங்க சிலை  வைக்கறதுக்கு உலை வெச்சிருவாங்களா? 


=================

10  தினகரனுக்கு தேள் கொட்டினால், தி.மு.க., தலைவருக்கு நெறி கட்டுகிறது. அந்த அடிப்படையில் தான், சபாநாயகருக்கு எதிராக அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.  -தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்


அடுத்ததா கமலையும் வம்பிழுப்பார் போல, அவரும் நம்பிக்கை இல்லாத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிச்சாரே?

=================11  சட்டசபையில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், 11 எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளித்தனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை.- முத்தரசன் # மாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொன் குடம் ,கதைதான்


===========

12 நடந்து முடிந்துள்ள, 18 சட்டசபை இடைத்தேர்தல், தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், ஆட்சியை தக்க வைக்க, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடிய ஜனநாயக விரோத செயலை, ஆளும்கட்சி மேற்கொள்கிறது.-முத்தரசன்  # இதையே உங்க கூட்டணிக்கட்சித்தலைவர் பண்ணி இருந்தா  சாணக்கியத்தனம், ராஜதந்திரம்னு சிலாகிச்சு இருப்பீங்க? 

===============


13  நீட்' தேர்வுக்கு ஆடை, ஆபரண கட்டுப்பாடு: மூக்குத்தி, மோதிரம், வாட்ச் அணிய தடை  # ஒட்டியாணம் க்கு தடை இல்லையா? அதுல தான் ஏகப்பட்ட பிட் வைக்கலாம்


============

14 முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்து. ஆனால், பா.ஜ., போல, அவற்றை நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்தியதில்லை,'=மன்மோகன் சிங்,  # அந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கே இதுவரை தெரியாதாம், அதான் ஹை லைட்டே

===============


15   'பா.ஜ.,வும், காங்.,கும் ஒன்று தான். அதனால், காங்.,குக்கு ஓட்டளித்து, உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்-மாயாவதி  #  அப்போ பாஜக வுக்கு அளிச்சாலும் வீண் தானெ?


==============

16  பா.ஜ.,வை அழிக்கும் நிலைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். - பிரியங்கா,

 அப்போ ஆட்சிக்கு சாம்பார் வெச்சுடுவீங்கனு நம்பறீங்க?

===============

17  உ.பி.,யில் போட்டியிடும் ஒவ்வொரு, காங்., வேட்பாளர்களும், பா.ஜ.,வின் ஓட்டுகளை, கணிசமாக பெறுவார். -பிரியங்கா,

அப்போ உ பி ல காங் க்கு தனி வாக்கு வங்கி கிடையாதா?

==============

18  என் உயிரை கூட விடுவேனே தவிர, பா.ஜ.,வுக்கு ஒருபோதும் உதவ மாட்டேன்.- -பிரியங்கா,  #  இந்த மாதிரி பிரச்சாரம் பண்றதே பாஜக வுக்கு உதவி தான் . எதுனா உளறிட்டு இருங்க 

============


19   மோடி அலை இல்லை; ராகுலுக்கும் ஆதரவு அலை இல்லை. மக்கள் எப்படி ஓட்டளித்துள்ளனர் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை-காங்.,  தகவல் தொடர்புத்துறை தலைவர், பிரவீன் சக்ரவர்த்தி


அலை யே இல்லையா? அப்போ அலையே இல்லாத ராமேஸ்வரம் தான் குறியீடு, ராமர் புகழ் பாஜக தான் ஆட்சி அமைக்குமா?

=============

20   உ.பி.,யில் இந்த முறை நாங்கள் சிறப்பாக வருவோம்; மொத்தமுள்ள, 80ல், 71 இடங்களை கைப்பற்றுவோம்- பிரவீன் சக்ரவர்த்தி  #   மீதி இருக்கற 9 இடங்கள் பாஜக வுக்கு  போனாப்போகுதுன்னு விட்டுக்கொடுத்தீட்டீங்க போல 

===============

0 comments: