Friday, May 17, 2019

கணவரை பெயர் சொல்லி கூப்பிடுவீங்களா.?

1  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுவிப்போம்


மகிழ்ச்சி தலைவரே!ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு நம்ம ஆட்சி நடக்கவே இல்லையா?அப்பவே ஏன் ரிலீஸ் பண்ணலை?
யோவ,் அப்பவே ரிலீஸ் பண்ணி இருந்தா இப்ப அதை வெச்சு அரசியல் பண்ண முடியுமா?=================


2 தலைவரே!காலைல ,பகல்ல குளிக்காம நடுராத்திரி ரெய்டு வந்தப்ப ஏன் குளிக்கப்போனீங்க?


பகல்லதான் நெட்டிசன்கள் கழுவிக்கழுவி ஊத்தறாங்களே?================


3 தேர்தல் நடக்கும் சமயத்திலே ரெய்டு பண்றீங்களே?பணத்தை பறிமுதல் பண்றீங்களே?தேர்தல் செலவு எப்டி பண்ண?இது பழி வாங்கும் நடவடிக்கை.தேர்தல் முடிந்த பிறகு வெளிநாட்டு வங்கிகளிலே பணத்தை டெபாசிட் செய்து விடுவேன்,அதற்குப்பிறகு ரெய்டு விடவும்,அண்ணா நாமம் வாழ்க!இளிச்சவாயத்தொண்டர்கள் வளர்க!


===============


4 நட்ட நடு ராத்திரில எதுக்காக இன்கம்டாக்ஸ்"ரெய்டு நடக்குது?பகல்ல பண்ணக்கூடாதா?


ராத்திரி ல ரெய்டு நடந்தா எதுவோ 1 சிக்கும்னுதான்=============


5 தலைவரே! ரெய்டு எத்தனை மணிக்கு

நடந்தது?
நள்ளிரவு 12 மணிக்கு
அவங்களை ரெய்டு பண்ண விட்டுட்டு நீங்க பாத்ரூம்ல குளிக்கப்போனதா பேட்டி குடுத்திருக்கீங்க,நடுராத்திரில தூங்கத்தானே போவாங்க?குளிக்கப்போவாங்களா?===============


6 அய்யய்யோ,என் வீட்டுக்கு ரெய்டு வந்துட்டாங்க


ஏன் பதர்றீங்க? திருடன்தானே ரெய்டுக்கு பயப்படுவான்?===============


7 இன்ஸ்பெக்டர் ,லாக்கப்ல இருக்கற கைதிங்களுக்கு சாம்பார்,தயிர் குடுங்க.ரசம் மட்டும் வேணாம்


ஏன்?
பாதரசம் கலந்த சாப்பாடு தந்ததா அடிச்சு விடுவாங்க==============


8 இன்ஸ்பெக்டர்.மனைவியை அடிச்ச குற்றத்துக்காக கைது செய்யப்பட வேண்டிய ஆளைப்பார்த்து சல்யூட் அடிக்கறீங்களே,அது ஏன்?


அந்தாளுக்கு 3 சம்சாரமாம்,சொல்லமுடியாது,நாளைக்கே அரசியல்ல பெரிய ஆள் ஆகலாம்==============

9 உங்க பட சென்சார் சர்ட்டிபிகேட்ல 17/18 னு போட்டிருக்காங்களே?புரியல


அதாவது U/A னு அர்த்தம்
===============


10 இனி யாரிடமும் பேசுவதில்லை, நாமுண்டு நம் வேலை உண்டு என்றே இருப்போம்


ஓஹோ,எங்கே ஒர்க் பண்றீங்க?
ஒரு கம்பெனில ரிசப்ஷனிஸ்ட்டா இருக்கேன்.வர்ற calls அட்டெண்ட் பண்ணி பேசனும்
ரைட்டு===============


11 காஃபி கேக்கற என் மாமியார எதிர்த்து காஃபி பொடி தீர்ந்திடுச்சு... டீ போடவா த்தைன்னு கேட்டிர்க்கேன்.

இப்ப நானும் ஃபெமினிஸ்ட் தானே? இல்லியா?
ஆமா.அத்தைக்கு மரியாதை தராம டீ போட்டு பேச முயன்றது தப்புதானே?===============


12 தலைவரே!நம்ம கட்சி ஆளுங்க மேடைல பேசறப்ப அவங்களை கெட்ட வார்த்தை ல திட்டி பேசறாங்க,அவங்க நம்மை கெட்ட வார்த்தைல திட்றாங்க,இது எதுக்கு?


"வார்த்தை"லயே விளையாடுவோம்னு சொன்னமே அது இதுதான்
=================


13 தலைவரே!

நாற்பது இடங்களிலும் வெல்வோம் எனக் கூறிவந்த நீங்க ் தற்போது 35க்கு மேல் வெல்வோம் என கூறுவது ஏன்?
ஓ,அப்டி வேற சொன்னேனா?துண்டு சீட்ல என்ன எழுதி இருக்கோ அதை அப்டியே படிச்சிடுவேன்.சொந்தமா சொல்லத்தெரியாது=================


14 மேடம்,கணவரை பெயர் சொல்லி கூப்பிடுவீங்களா.?


அவனை எதுக்கு நான் கூப்பிடனும்?அவன் எப்பவும் என் கூடத்தான் இருப்பான்=============


15 தலைவரே!தேர்தல்ல எதுக்கு நிற்கறீங்க?மக்களுக்கு சேவை செய்யவா?


மடத்தனமா உளறாதய்யா,எனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கு,அதை எல்லாம் அடைக்கனும்,அல்லது பணம் கடன் குடுத்தவனை மிரட்டனும்.அதுக்கு பதவி வேணும்
=================


16 நான் மக்களைப்பார்த்துக்கேட்கிறேன்,விஞ்ஞானிகள் சேர்ந்து ஏதோ"ஏவுகணையை சுட்டதற்கு பிரதமர் சொந்தம் கொண்டாடுகிறார்,பெருமைப்படுகிறார்,நாங்க"கூடத்தான் அப்பப்ப டீக்கடைகள்ல வடையை நைசா"சுட்டுட்டு வந்துடறோம்,காசு தர்றதில்லை,இதெல்லாம் பெருமையா?


================


17 GST வந்த பிறகு"தொழில் ,வியாபாரம்"படுத்து"விட்டது.நடப்பது"மக்களாட்சியா?மன்னராட்சியா?எதற்காக அரசுக்கு"வரி?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா"வரிகளும் கேன்சல்.வர்ற லாபத்துல பங்கு தந்தா போதும்.நீயும் சம்பாதி,எங்களையும் சம்பாதிக்க விடு


=================


18 ஆளுங்கட்சியின் திட்டமிட்ட"சதி இது.படிவத்தை பூர்த்தி"செய்யும்போது நைசாக"பேச்சுக்குடுத்து என்னை"திசை"திருப்பி விட்டனர்.தோல்வி"பயம்"காரணமாக"என் படிவத்தை நிராகரித்து விட்டனர்


===============

19 வின்வெளியிலே சாட்டிலைட்டை சுட்டு வீழ்த்தியதை பெரிய,சாதனையாக பிரதமர் கூறுகிறார்,எங்கள் ஆட்சிக்காலத்திலே பூமியிலே எத்தனையோ"ஏக்கர் நிலங்களை நைசாக"சுட்டு எங்கள் பேரில் பதிவு செய்து"கொண்டோம்,வெளில சொல்லிட்டா இருந்தோம்.

==============
20 காலைல 11 மணிக்கு மோடி டிவி ல பேசறார்னு சொன்னாங்க,பேசலையே,ஏன்?


11 AM பேச மாட்டார்.அவர் PM ஆச்சே? மதியமோ",ராத்திரியோ"தான் பேசுவார் . 11pm==============

0 comments: