Thursday, May 02, 2019

கடைசி"வரை வாய்ப்பில்ல ராஜா

1  டாக்டர்,ஏன் த்ரெட்டிங் பண்ணும் போது ரொம்ப தும்மல் வருது.?


இயற்கையா எப்டி இருக்கோ அப்டியே விட்ரனும்,செயற்கை அழகு கூடாது என்பதற்கான் த்ரெட்டனிங் அது=============


2 சூர்யா பட அறிவுப்புக்காக அஜித் ரசிகர்கள் கொண்டாடறாங்க,அநியாயம்யா # சிவா + சூர்யா 39

==========


3 வாட்சப்
புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.

பதிவிடும் நாள்:14.04.2019

என் பெயர் மகரஜோதி. எனக்கு வயது 42. 2014 ஏப்ரல் மாதம் எனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 3A stage என்று சொன்னார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

முதலில் அறுவை சிகிச்சை செய்து இடதுபுற மார்பை நீக்கினார்கள். தொடர்ந்து கீமோதெரபி, ரேடியேசன் என்று ஏழுமாதங்கள் தொடர்சிகிச்சை.

அவ்வளவுக்குப்பிறகும் மீண்டும் கேன்சர் உடலின் பிற பாகங்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2016 செப்டம்பரில் இடுப்புவலியும் கால்வலியும் வந்தது. அது கேன்சராக இருக்கலாம் என்றே தெரியாமல் இடுப்புவலிக்கும் கால்வலிக்கும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறுமாதங்கள் ஆகியும் வலி குறையவில்லை. எனவே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவரிடம் சென்றேன். பரிசோதனைகளுக்குப்பிறகு இடுப்பு மற்றும் தொடை எலும்புகளில் கேன்சர் கட்டி வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டினார். கட்டியின் அளவு 4.4 மிமீ. என்றும் ரேடியேசன் மூலமாக அந்தக்கட்டியை ஓரளவு கரைக்கமுடியும் என்றும் சொன்னார் மருத்துவர். இப்போது கேன்சர் நான்காவது நிலையை (4th stage) அடைந்திருந்தது. ரேடியோதெரபிமூலம் அந்தக்கட்டி 3.2 மி.மீ. அளவிற்குக் குறைந்தது. 

முற்றிலும் அந்தக்கட்டியை அகற்றுவதற்கு வழியில்லை என்றும் கேன்சர் மேலும் பரவாமல் இருக்க "Palbace" என்னும் மாத்திரையை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார் மருத்துவர். 

அந்த மாத்திரை ஒரு புட்டியின் விலை ரூ.95,000/-. அது ஒரு மாதத்திற்கானது. அந்த மாத்திரை விற்கும் நிறுவனம் நோயாளிக்கு ஒரு சலுகை வழங்குகிறது. தொடர்ந்து பத்து மாதங்கள் பணம் கொடுத்து இந்த மாத்திரை வாங்கினால் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்த மாத்திரையை இலவசமாக வழங்கும். தெரிந்த மருத்துவர் ஒருவர்மூலம் (அவரும் Oncologist) மருந்து நிறுவனத்தினரிடம் பேசி, ரூ.76,000/- க்கு அந்த மாத்திரை வாங்க ஏற்பாடு செய்து மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.

இதற்கிடையில் கருப்பை (Uterus) மற்றும் சினைப்பை (Ovaries) யிலும் சிறுசிறு கட்டிகள் இருப்பதாகவும் அவை கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர் சொன்னதால் கருப்பை மற்றும் சினைப்பை இரண்டையும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர். இவற்றை அகற்றியதாலும் கேன்சருக்கு எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகளாலும் எலும்பு தேய்மானம் வரும் என்பதால் அதற்காக மாதம் ஒருமுறை ஒரு இன்செக்சன் போட்டுக்கொள்ளவேண்டியதிருந்தது.

ஆறுமாதங்கள் கழிந்தபிறகு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் இடுப்பில் இருந்த கட்டி 3.2 மி.மீ.இல் இருந்து 6.6 மி.மீ. வளர்ந்திருப்பதாக தெரியவந்தது. மருத்துவரிடம் கேட்டதற்கு நோயின் தன்மை அத்தகையது என்றும் இயன்றவரை கட்டுக்குள்வைப்பது மட்டுமே சாத்தியம் என்றும் சொன்னார்.

முற்றிலும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் புற்றுநோய்க்கான இயற்கை மருத்துவத்தின் சாத்தியம்குறித்து தேடத்தொடங்கினோம். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, நியூரோபதி என்று பல இயற்கை மருத்துவ முறைகள்மூலம் புற்றுநோயிலிருந்து பலர் விடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தபோது ஒரு நம்பிக்கை பிறந்தது. அவ்வாறான பல முறைகளில் ஒன்று, கேரளா அட்டப்பாடி அருகே சிண்டக்கி என்ற கிராமத்தில் பழங்குடி மக்களால் வழங்கப்படும் "ஒற்றைமூலிகை" மருத்துவம். "வள்ளியம்மாள் குருகுலம்" என்ற பெயரில் எல்லாவிதமான கேன்சருக்கும் மருந்து கொடுக்கிறார்கள். 

முதல்முறை சென்றபோதே அங்கு வந்திருந்த பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் பேசியபோது அவர்களின் அனுபவம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

என்னை பரிசோதித்த மருத்துவர் சலீமா பத்து மாதங்கள் அவர்கள் கொடுக்கும் மருந்தை சாப்பிடவேண்டும் என்றும் எனக்குள்ள கேன்சரை முற்றிலும் குணமாக்க இயலும் என்றும் நம்பிக்கை தந்தார்.

பிப்ரவரி 2018 ல் முதல்முறை இருபது நாட்களுக்கு மருந்து கொடுத்தார்கள். ஆச்சர்யமான ஒரு மாற்றம் என்னவெனில் அதுநாள்வரையிலும் இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் கேன்சர் கட்டிகள் இருந்ததால் என்னால் இடதுபுறம் திரும்பிப் படுக்க இயலாது. மேலும் தரையில் உட்காரும்போது காலை மடக்கவும் இயலாதிருந்தது. ஆனால் அந்த இருபது நாட்களிலேயே அந்தப்பகுதிகளில் இருந்த வலி சரியாகி என்னால் இயல்பாக இடதுபுறம் திரும்பிப்படுக்கவும் காலை மடக்கி உட்காரவும் முடிந்தது. அந்த அனுபவம் கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் அந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு வந்தேன்.

இதேவேளையில் இயற்கை மருத்துவம் குறித்த தொடர்ந்த தேடலில் திரு.ஹீலர் பாஸ்கர் குறித்து தெரியவந்தது. கோவைப்புதூரில் அவர் நடத்திவந்த "நிஷ்டை" நிலையத்தில் ஐந்துநாள் வகுப்பில் கலந்துகொண்டேன்.

அவர் கற்றுக்கொடுத்தபடி எனது உணவுமுறையிலும் வாழ்க்கைமுறைகளிலும் சில மாற்றங்களை செய்துகொண்டேன். உடல் கழிவுநீக்க முறையை தொடர்ந்து ஒருமாதம் மேற்கொண்டேன். உணவை மென்று உண்பது, வாயை மூடி உண்பது, வாரம் ஒருமுறை உண்ணாவிரதம், காலை உணவாக வெறும் பழங்களை மட்டுமே உண்பது, சில யோகாசனங்கள் இவற்றையும் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். 

திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள் கற்றுத்தந்த இந்த வழிமுறைகளும் அவர் வலியுறுத்தும் "நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும்" என்னும் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையும் கேன்சரிலிருந்து நான் மீள்வேன் என்ற மன உறுதியைக் கொடுத்தன. மேலும் அவரது வழிகாட்டலின்படி எனது வாழ்க்கைமுறையில் நான் மேற்கொண்ட மாற்றங்களும்கூட, எனது நோயை வெல்ல ஒரு காரணமாய் அமைந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனவரி 2019 ல் பன்னிரண்டு மாதங்கள் முடிவடைந்ததும் ஸ்கேன் செய்து பார்க்க முடிவுசெய்தோம். கோவையில் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்வதைவிட வேறொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் செகண்ட் ஒப்பினியன் வாங்கிய திருப்தியும் கிடைக்கும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள Regional Cancer Centre மருத்துவமனையில் PET scan எடுத்துக்கொண்டேன். பிப்ரவரி மாதம் எடுத்துக்கொண்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க மார்ச் மாதம் சென்றோம். ஸ்கேன் ரிப்போர்ட்டை முழுவதும் பார்த்த மருத்துவர், உடலின் எந்த பகுதியிலும் கேன்சருக்கான அறிகுறியே இல்லை என்றார். 

இடுப்பு எலும்பில் 6.6 மி.மீ. இருந்த கட்டியும் இல்லை. மேலும் அப்போது சிறிய அளவில் கல்லீரல் பகுதியிலும் கேன்சர் கட்டிகள் தென்படுவதாகச் சொல்லியிருந்ததும் இப்போது இல்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்னொரு செய்தியையும் சொல்லவேண்டும். எலும்புகளில் கேன்சர் பரவி நான்காம் நிலையை எட்டியபோது மருத்துவர் என் கணவரைமட்டும் தனியே அழைத்து சொன்னது -"இன்னும் அதிகபட்சம் இரண்டு வருடங்கள்தான் உங்கள் மனைவியின் வாழ்நாள்". அவர் சொல்லி சரியாக இரண்டுவருடம் முடிகிறது. ஆனால் முன்னைவிட இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கேன்சர் நோயிலிருந்து விடுபட்டும் இருக்கிறேன். இயற்கை/ மூலிகை மருத்துவத்தில் இது சாத்தியம் என்பதற்கு நானே வாழும் உதாரணம். 

இந்த செய்தி அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் இதனைப்பதிவு செய்கிறேன்.

கேரளாவில் மருந்து வழங்குமிடம்:

வள்ளியம்மாள் குருகுலம்,
சிண்டக்கி கிராமம்,
அட்டப்பாடி தாலுகா,
பாலக்காடு மாவட்டம்.

கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக 2.30 மணிநேர பயணம்.

இங்கேயே பொன்னியம்மாள் குருகுலம் என்ற பெயரில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார். கேரளாவின் வயநாட்டிலும் கர்நாடகாவில் சிமோகா மாவட்டத்தில் நரசிம்மபுராவிலும் புற்றுநோய்க்கு மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களது உறவினர்களோ நம்பிக்கை இழந்துவிடவேண்டாம். இதுபோன்ற மாற்று மருத்துவ வழிமுறைகளை முயற்சிக்கலாம்.

குறிப்பு: சர்க்கரை நோய், கிட்னி நோய்களுக்கும் இந்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்கிறது.

மேலும் தகவல் தேவைப்பட்டால் எனது அலைபேசிக்கு அழைக்கவும். 

98948 67008
93842 07709

நன்றி.

=================


4  இன்று [23-4−2019] புத்தக தினம்!
விருந்து ,திரைச்சித்ரா,மருதம்,இந்து நேசன் ,சினிமித்ரன் படிப்பதைக்குறைத்து கணையாழி,தீராநதி,கிழக்குவாசல் ,போன்ற இலக்கியப்புத்தகங்கள் படித்து வாசிப்புத்திறனை வளர்ப்போம்
=============


5 போலீஸ் ஆபீசர் தாடி வெச்சிருக்கலாமா?கேரக்டர் சீக்கியர் கிடையாது,கேட்டா நம்மை வந்து அடிப்பாங்க,எதுக்கு வம்பு? பாக்காதமாதிரி இருப்போம்==========


6  25/4/19 −29/4/19 வரை ஊட்டி ,கொடைக்கானல் ,கொல்லிமலை போன்ற ஹில்ஸ் ஏரியா வில் பயணங்களை தவிர்க்கவும்.மழை ,புயல் எச்சரிக்கை .மண்"சரிவு, டிராபிக்ஜாம் அபாயம்=============
7 பணத்தைக்கைமாத்தாக(கடனாக) யாருக்காவது தரும் வரைதான் அது நம்ம பணம்.தந்த பின் திருப்பி அவங்க தந்தாதான் நிஜம்.தராம விட்டா அது அவங்க பணம்
============

8 ரிப்பன் பக்கோடாஓலை பக்கோடா
சீவல்
எல்லாம் 1 தான்
காஞ்சனா1 காஞ்சனா 2
பேருதான் வேற வேற
காஞ்சனா 3 மாதிரி============


9 9/4/2019 புயல் வரப்போகுது.வாக்கு எந்திரங்கள் பத்திரம்.அப்றம் மழை அடிச்சிட் போய்ட்ச்சுனு கத விடப்போறாங்க==============


10 மனைவியின் ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று மஹாபாரதம் கூறுகிறது.

ஏன்னு சொல்லுங்க பாப்போம்..!
ஆ னனா ் ஊ் ன்னா சம்சாரம் அங்கே போய் சாப்ட்ருவாப்டி,நாம பட்டினிதான்
==============


11 பிரியங்கா காந்தி மேல கூட்டத்துல கை வெச்சவனுக்கு ஒரு அடி தந்தது பாருங்க,டம்னு சத்தம ்இங்கே வலிக்குது


=============


12 தமிழகத்தைப்பொறுத்தவரை அண்ணனை விட தம்பிக்கே ராசி


எ.கா 1 அண்ணன் சிலம்பரசன் (STR) க்கு மேரேஜ் இன்னும் ஆகல,ஆனா தம்பி குறளரசனுக்கு ரெடி ஆகியாச்
எ.கா 2 அண்ணன் அழகிரிக்கு எட்டல,தம்பி தளபதிக்கு எட்டியாச் கழக தலைமை பதவி
============


13 அரசாங்கப்பணியில் சகலமும் அனுபவித்துக்கொண்டே அரசைக்குறை கூறுவது ,தவறாக பேட்டி தருவது பெற்றோர் தயவில் அவர்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டே அவர்களையே குறை கூறுவதற்கு சமம்
===============
14 மத்திய அரசுப்பணி,வருமான வரித்துறையில் மாதம் ரூ 50,000 சம்பளம் பெறும் தங்கமங்கை கோமதி போட்டியில் கலந்துகொள்ளும்போது ஷூ வாங்கக்கூட பணம் இல்லை என பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சி.அரசின் தவறும் இருக்கு
=============
15 அமித்ஷா கோயிலுக்குப்போனாக்கூட"வாசல்ல கால்"மேல கால் போட்டாதான் இருக்கை அமரும் போல.சபை அடக்கமே இல்ல==============


16 பணிச்சுமை அதிகம்னு சலிச்சுக்காத ஆள் ரயில்வே"போர்ட்டர்தான்


=============

17 2024 தேர்தல்ல அமித்ஷாவோ ,யோகியோ மோடியை அத்வானி ஆக்கிடப்போறாங்கனு பட்சி சொல்லுது.நாகராஜசோழன்கள் பிறப்பதில்லை,களமேற்றப்பட்டவர்களே!


==========


18 இனி குவாட்டர் அடிப்பது படிப்படியாக குறைக்கப்படும்.

இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு.4 குவாட்டர் சேர்ந்தது தான் ஒரு புல் .ஒன்னேகால் புல்"தான் ஒரு"படி.பிறகு எப்டி"படிப்படியா"குறைக்க இயலும்?

============


19 அதிர்ஷ்டம் என்பது அன்ரிசர்வ்டு ட்ரெயினில் சீட் கிடைப்பது

விழி ஒளி இழந்த அதிர்ஷ்டம் என்பது பர்த்தே கிடைப்பது


=============


20 ராகுல் காந்தி − பிரியங்கா காந்தி − சின்ன ஹெலிகாப்டர் ,பெரிய ஹெலிகாப்டர் கலாய்ப்பு அருமை.இருவரின் சகோதரபாசம் ரசிக்க வைத்தது.2024 ல் பிரியங்கா காந்தி யை பிரதமர் வேட்பாளராக்கலாம் (ராகுல் நம்ம தளபதி மாதிரிதான் ,கடைசி"வரை வாய்ப்பில்ல ராஜா தான்)

===============

0 comments: