Wednesday, May 22, 2019

லவ்வர்ஸ் பார்க் ல நயன்தாராவும் ,விக்னேஷ் சிவனும்,தீபா வெங்கட்டும்

1  எல்லாரும்"என்னை"பேர் சொல்லியே கூப்பிடுங்கஏன் தலைவரே?
வாங்க ஜி,போங்க ஜி னு கூப்பிட்டா 2 ஜி ஆகிடும்.கூட்டணிக்கட்சிக்கும் தர்மசங்கடம்,எனக்கும் சமாளிக்க வராது==============

2 டாக்டர்,தம் அடிச்சா முடி கொட்டுமா 🙄உடனே கொட்டாது,முதல்ல கேன்சர் வரும்,அதுக்கப்புறமா மொத்த தலைமுடியும் கொட்டும்

=============


3 இன்ஸ்பெக்டர்,இந்த கேஸ்ல அரசியல்வாதிகளுக்கு சம்பந்தம் இல்லைனு எப்படி சொல்றீங்க?பையனோட அப்பா ஒரு கட்சிப்பிரமுகர்,இந்த பிரச்சனை கிளம்பியதும் "நீ எனக்குப்பையனும் இல்லை,நான் உனக்கு அப்பாவும் இல்லைனு கோபமா சொல்லிட்டாரு,இப்ப லாஜிக் சரியா இருக்கா?

==============


4 ஒரு மொக்க லவ் ஸ்டோரிஉண்மை சொன்னால் நேசிப்பாயா ❤?

சரி,சொல்லு
உண்மை
அய்யோ===============


5 தலைவரே?நமக்கு கட்சி ஆபீஸ் இருக்குல்ல?
ஆமா
வீடு?
இருக்கு
நம்ம கூட கூட்டணி சேர வர்றாங்களே?அவங்களுக்கு இதே மாதிரி வீடு,ஆபீஸ் இருக்குல்ல?
ஆமா
அப்றம் ஏன் தண்டமா ஹோட்டல்ல சந்திச்சு கூட்டணி ஒப்பந்தம் சைன் பண்ணனும்?
மடையா,உழைச்சு சம்பாதிச்ச காசா போச்சு?திருடுன காசுதானே? #DMDK vs ADMK


==============


தலைவரே!திராவிடன் ,திருடன் என்ன வித்தியாசம்?பதவி கிடைக்கும் வரை திராவிடன்,கிடைச்சுடுச்சுன்னா திருடன்;
( எல்லாரும் இல்ல,திருடறவங்களை மட்டும் குறிக்கும்)=============


7 தலைவரே!நேத்து நைட் டிவி ல அந்தரங்கம் படம் பாத்தீங்களா?இல்லையே?ஏன்?
அந்தரம் னு சொல்றதுக்குப்பதிலா அந்தரங்கம்னு உளறி வெச்ட்டீங்க,இனி அவனவன் கலாய்ப்பான்,மீம்ஸ் போடுவான்
போடட்டும்,முதல் தடவை அவமானப்படறப்பதான் கஷ்டமா இருக்கும்,அப்றம் பழகிடும்================


8 கல் டிசைன் வச்சு தைச்ச பிளவுஸூலாம் கறுப்படிக்குதே எப்பிடி மெய்ன்ட்டெய்ன் பண்றது?கல்லுக்கு மருதாணி வெச்சு விட்டுட்டா சிவந்துடாது?


================


9 தலைவரே!நான் ஒரு நாளுக்கு 20 ட்வீட் கட்சிக்கு ஜால்ரா அடிச்சு போடறேன்,ஒரு ட்வீட்க்கு 200 ருபா ன்னா ஒரு மாசத்துக்கு எனக்கு"எவ்ளோ வரும்?லூசாய்யா நீ!கொடுக்கறதா சொல்வோம்,ஆனா குடுக்க மாட்டோம்.நம்ம கட்சிக்கு கை நீட்டிதான்யா பழக்கம்,நீ தேர்தல் நிதி குடுத்தா வாங்கிக்குவோம்


==============


10 தலைவரே!இந்த ஆட்சியை அகற்றும்வரை தூங்க மாட்டேன்னு சபதம் போட்டீங்க?ஆமா
இப்போ கூட்டணி குறித்து பேச போன் பண்ணா தலைவர் தூங்கறார் னு சொன்னாங்க?
ராத்திரிதான் தூங்க மாட்டேன்,பகல் ல தூங்குவேன்=============


11 தலைவரே!பிரதமர் கலந்துக்கற கூட்டத்துல உங்க ஆதரவை அளிச்சிருக்கலாமில்ல?என்னய்யா இப்ப?வாரா வாரம் வந்துட்டுதானே இருக்காரு?அடுத்த வாரம் பார்ப்போம் ராக்ஸ்


=============


12 மூக்குத்தி போட்ட பெண்கள் பேரழகு ..ஆனா அதுக்குன்னு முகராசியும் வேணுமாமே?நிஜமா மாமே?் மூக்குத்தி போட மூக்கு ராசியா இருந்தாலே போதுமே?


===================


13 மூக்குத்தி போட்ட பெண்கள் பேரழகு ..ஆனா பெரும்பாலான பொண்ணுங்க அதை விரும்பறதில்ல,ஏன்?பொதுவா பொண்ணுங்க நோஸ்கட் பண்றதை விரும்பறதில்லை==================


14 தலைவரே!யார் புதுக்கட்சி ஆரம்பிச்சாலும் லபோதிபோனு அடிச்சுக்கறீங்களே?அது ஏன்?புதுசா ஒரு ஜவுளிக்கடை ஓப்பன் பண்ணா பக்கத்துல இருக்கற பழைய கடைக்கு கூட்டம் குறையுமில்ல?==================


15 சார் நீங்க ் ஜாதகம் பார்க்கறதுண்டா?


இந்தாங்க ,என் ஜாதகம்
ம் பலன் சொல்லுங்க
அது தெரியாது,சும்மா பார்ப்பேன்,அவ்ளோதான்=================


16 லவ்வர்ஸ் பார்க் ல நயன்தாராவும் ,விக்னேஷ் சிவனும் ஒரு பெஞ்ச் ல இருக்காங்க சரி,பேக் பெஞ்ச்ல இன்னொரு பொண்ணு இருக்கே யாரு?தீபா வெங்கட் ,இப்பெல்லாம் ் நயன்தாரா க்கு எல்லா படத்துலயும் அவங்கதானே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்? நிஜ வாழ்வில வாய்ஸ் குழப்பரேஷன் வந்துடக்கூடாதுனு மெய்ன்டெய்ன் பண்றாரு


=================


17 மேடம் ,ஏன் துப்பட்டா போடலை?


சாரி,எனக்கு"மூட நம்பிக்கை கிடையாது


==============


18 தலைவரே!இலக்கியத்துல குறுந்தொகை மாத்திரம் பிடிக்காதா?அது ஏன்?


நமக்கு எப்பவும் பெருந்தொகையே பெறும் தொகையா இருக்கனும் பெருந்தகையே!===============


19 தலைவரே! மைக்ரோ மேனேஜ்மென்ட் திட்டம் என்றால் என்ன?


ஒவ்வொரு வார்டு கவுன்சிலருக்கும் ஒரு டார்கெட் கொடுப்போம், அந்த அளவு நல்ல ஓட்டோ , கள்ள ஓட்டோ கட்சிக்கு சேர வைக்கனும்==============


20 மாப்ளை ,பொண்ணு பாத்துட்டு போய்ட்டீங்க, ரிசல்ட் சொல்லீட்டீங்கன்னா நல்லது கெட்டது ,சீர் ,சினத்தி பற்றி பேசி முடிச்சிடலாம்.


பொண்ணு கட்றது உறுதி,ஆனா முகூர்த்த"நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
விளங்கிடும்==============

0 comments: