Wednesday, May 01, 2019

அய்யாக்கண்ணுவையே கரெக்ட் பண்ணிட்டாங்க, இவங்களை சமாளிக்கறதா கஷ்டம்?


1   நம் நாட்டை, காங்., கட்சி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தும், வறுமையை ஒழிக்க, அக்கட்சி எந்த ஒரு நடவடிக்கையையும், உருப்படியாக எடுக்கவில்லை-ராஜ்நாத் சிங் # நாட்டோட வறுமையை ஒழிக்கலைன்னா என்ன அவங்களோட வறுமையை ஒழிச்ட்டாங்களே?


==============


2   பிரதமரை எதிர்த்து, தேர்தலில் போட்டியிட்டு, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அளவுக்கு, இந்த அரசின் மீது, விவசாயிகள் உச்சபட்ச கோபத்தில் உள்ளனர் -ரண்தீப் சுர்ஜேவாலா # அய்யாக்கண்ணூவையே கரெக்ட் பண்ணிட்டாங்க, இவங்களை சமாளிக்கறதா கஷ்டம்?


===============

3  : மே, 23க்கு மறுநாள், தமிழகத்தில் ஆட்சி கவிழும்  ஸ்டாலின் முதல்வர் ஆவார் -பொன்முடி  # கழகத்துல ஜோசியர்கள் பெருகிட்டாங்க 


=============


துாத்துக்குடி, அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்காக, தொழிற்சாலைகள் ஏற்படுத்தி, அதன்மூலம், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான், என் திட்டம்.-தமிழிசை:   #  தொழிற்சாலை ஆலைன்னாலே ஜனங்க உயிருக்கு
 வைக்கும் உலைனு பயப்படறாங்களே?


=============


5  வாரணாசி தொகுதியில், மோடியை எதிர்த்து, பிரியங்கா போட்டியிடாதது, ஏமாற்றம் அளிக்கிறது0 - அருண் ஜெட்லி:   விடாஅதீங்க , பிரியங்கா எங்கே நிற்கறாங்களோ அங்கே மோடியையும் நிக்கச்சொல்லுங்க மோதிப்பார்த்துடுவோம்


================6  'கடந்த, ஐந்து ஆண்டுகளில், மத்திய பா.ஜ., அரசு, மக்களுக்கு வழங்கிய அநீதியை நீக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நீதி வழங்குவேன்,''-ராகுல் 


இவரு பிரதமர் பதவிக்குப்போட்டி போடறாரா? ஜட்ஜ் ஆகப்போறாரா?


=============


7   பா.ஜ., தலைவர் அமித்ஷா கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் என்று பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார், ராகுல். # கோர்ட் விளக்கம் கேட்டா மன்னிப்பு கேட்டுட்டாப்போச்சு எங்க ஊர்ல ஒரு ரூபாய்க்கு 10 மன்னிப்பு 


=============

8   அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்ல
- போக்குவரத்து துறை # நம்மாளுங்க கொடியைக்கட்டிட்டே நான் அரசியல்வாதி இல்லைனு லந்து பண்ணுவாங்க,யாருக்கும் அனுமதி இல்லைனு தெளிவா சொல்லிடனும்


=============


09 ராணுவத்தில் சேருவதே என் கனவு பிரதமராக வருவேன் என நினைத்ததில்லை - மோடி
# அத்வானி மைன்ட் வாய்ஸ் = நான் கூடத்தான் நினைச்சதில்லை,அமாவாசையா வந்து நாகராஜசோழனா மாறுவீங்கனு..


==============


10 இமான் அண்ணாச்சி வீட்டில் திருட்டு.. 41 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் மாயமானதாக போலீசில் புகார் # நகையைலாக்கர்ல வைக்காம டேபிள் மேட் மேல ஒரு விளம்பரமா இருக்க வெச்சிருக்காரு,அடிச்ட்டாங்க


==============

1 ரஜினி இன்னும், 100 சதவீதம் அரசியலுக்கு வரவில்லை. எனவே, அவருடன் கூட்டணி அமையுமா என்பது பற்றி, இப்போது கூற முடியாது.-வாசன்: யூகிசேது நையாண்டி தர்பார் நடத்துனாரு, ஜி கே வாசன் “தர்பார்” ரை நையாண்டி பண்றாரு


==============


12  தி.மு.க.,தொண்டர்களே, ஸ்டாலினை, தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும், முதல்வர் ஆக முடியாது. -தங்க தமிழ்ச்செல்வன்:  # அதிமுக ல மட்டும் இல்ல திமுக லயும் இவங்க ஸ்லீப்பர் செல் தான் போல


=============


13  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் தான் பணத்தை இழந்தனர்; கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டது.தற்போது, நேர்மையான பண பரிமாற்றம் நடக்கிறது. -மோடி:   # கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு இப்போ மல்ட்டி கலர் , ஈஸ்ட்மென் கலர் பணங்கள் வருது. 2000 ரூபா நோட்டு பிங்க் , 50 ரூபா  ஸ்கை ப்ளூ


==============


14  மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், ஒரே ஆண்டில், 22 லட்சம் பேருக்கு, அரசு வேலை வழங்கப்படும்.-ராகுல்:

# அவங்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?

வேலை வழங்கப்படும்னுதான் வாக்குறுதி தந்திருக்கோம்


==============


15  நான், ஆந்திராவின் முதல்வர். நடத்தை விதிகளை காரணம் காட்டி, தேர்தல் ஆணையம், பணிகளை செய்ய விடாமல், என்னை முடக்குகிறது. ஆய்வுக் கூட்டத்தை கூட்டுவதற்குக் கூட, எனக்கு அனுமதி தரப்படவில்லை. இதெல்லாம், ரொம்ப மோசமான நடவடிக்கை. -சந்திரபாபு நாயுடு:  # அவசியமான நடவடிக்கை, ஆனானப்பட்ட பிரதமருக்கே கண்டிஷன் போட்டிருக்காங்களே?


=============


16 சென்னையிலிருந்து சேலத்திற்கு, இரு தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்போது, 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, புதிதாக எட்டு வழிச்சாலை எதற்கு என்பதற்கு, தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி விளக்கம் அளிக்க வேண்டும்-ஜி.கே.மணி:   # 8 வழிச்சாலை அறிவிப்பை நிதின் கட்காரி மேடைல வெளீயிட்டப்பா அவர் கிட்டேயே டைரக்டா கேட்டிருக்கலாமே?


==============


17    காங்., கட்சியின் மிகப்பெரிய சரிவிற்கு காரணமாக இருப்பவர்,  சிதம்பரம். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், காங்., கட்சியை அதலபாதாளத்திற்கு தள்ளும்.-பொன்.ராதா  # அப்போ அவரை வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க, அதல பாதாளத்துல இருந்து காங் வெளில வந்துடப்போகுது


=================


18 ஜெ., எதிர்த்த திட்டங்களை தொடர்ந்து, அதிகாரிகளையும், காவல் துறையினரையும் குவித்து செயல்படுத்துகின்றனர். இதை, வன்மையாக கண்டிக்கிறேன். -தினகரன் $ நீங்க அரசியல்ல ஈடுபடுவதைக்கூடத்தான் எதிர்த்தாரு , கட்சிப்பணிகளில் தலையிடுவதை எதிர்த்தாரு


==================

19   தி.மு.க., தமிழகத்தைப் 
பலமுறை ஆண்டுஉள்ளது. கருணாநிதி மகன் என்ற பெரிய அடையாளம், ஸ்டாலினுக்கு உள்ளது. ஆனால், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு எந்த அடையாளமும் இல்லை.- அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர், அழகு மருதுராஜ்  # என்ன ? சேம் சைடு கோல் போடறாரு?


=================

20   தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்ததால், மக்கள் எங்களை, பரிதாபமாகப் பார்க்கின்றனர். மோடியைத் துணிந்து எதிர்த்ததால், ஹீரோவாகவும் பார்க்கின்றனர்-அ.ம.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ.,வெற்றிவேல்  # பரிதாபமாப்பார்த்தாலும் நீங்களூம் ஹீரோதான் அப்டினு யாரோ இவரை நம்பவெச்சிருக்காங்க 


===============

0 comments: