Thursday, May 23, 2019

அட்லியின் ஐம்பெருங்"காப்பியங்கள்"

1  உடல்நிலை தனக்கு சரி இல்லாத"போதும்
சமையலில் சந்தேகம் வரும்போதும் ஒவ்வொரு வாழ்வியல் பிரச்சனைக்கும் தீர்வு அவரவர் அம்மாவிடம் ரெடிமேடாக இருக்கும். எந்த உறவுக்காகவும் அம்மாவை"விட்டுத்தராதீர் உலக அன்னையர்"தின வாழ்த்து


===========

2 சொந்த சரக்கு இல்லாவிட்டாலும் அடுத்தவர் படைப்பை தொகுத்து வழங்கும் தனித்திறமையால் ஜெயித்தவர்கள்
1 மதுரை முத்து 2 ஈரோடு மகேஷ் 3 அட்லி


===========


3 கீர்த்தி ன்னா புகழ்
தப்பா புரிஞ்சுக்கிட்டு ஏமாற வேணாம் *ராசி பலன்கள் **மேஷம்*-வெற்றி *ரிஷபம்*- நட்பு *மிதுனம்*- உயர்வு *கடகம்*- சினம் *சிம்மம்*-ஆதரவு *கன்னி*-புகழ் *துலாம்*-லாபம் *விருச்சிகம்*-அன்பு *தனுசு*-அமைதி *மகரம்*-நலம் *கும்பம்*-ஆசை *மீனம்*- கீர்த்தி


==============


4 ஜாதியை வைத்து ஒருவரை இகழ்வதை விட கேவலம் அவர் செய்யும் தொழிலை வைத்து எள்ளல் செய்வது,செய்யும் தொழிலே தெய்வம்=============


5 கல்யாணம் ஆன பொண்ணு கன்னி ராசியா இருந்தா அந்த பொண்ணு கிட்ட "நீங்க"கன்னி"தானே? னு கேட்டா சந்தோஷப்படும்தானே?கோபப்படுமா? டேவிட்


=============

6 வீட்ல/ ஹால்ல பிரிட்ஜ் வைப்பது இப்ப ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிடுச்சு.பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்யத்துக்குக்கேடானது.இயற்கையை மீறும் ஒவ்வொன்றையும் தவிர்க்க முயல்வோம்==============


7 குழந்தைகளை,பெண்களைக்கவரக்கூடிய காமெடிப்படமான மான்ஸ்டர் (SJ சூர்யா) ,சிவகார்த்திகேயனின் Mr .லோக்கலுடன் மோதுவது சி.கா வுக்குப்பின்னடைவு # 17/5/2019


==============


8 இன்னும் 10 வருடங்களுக்குப்பிறகு நிறுவப்படும் சிலைகளின் கையில் செல்போன் ஒரு அங்கம் வகிக்கலாம்


=============


9 இரண்டாம் கலைஞரின் தவறான அரசியல் மூவ்.கமல் மேல்"வழக்கு போட தூண்டியது.கமலின் வாக்கு வங்கி இனி அதிகரிக்கும்.


============


10 1 ராஜாராணி ( மவுனராகம்)
2 தெறி ( சத்ரியன் ) 3 மெர்சல் ( அபூர்வ சகோதரர்கள்) 4 விஜய் புதுப்படம் (ஸ்போர்ட்ஸ் த்ரில்லர்) இன்னும் ஒரு படம் எடுத்துட்டா அவை அட்லியின் ஐம்பெருங்"காப்பியங்கள்" கேட்டகிரில வந்துடும்ல?

============


11 200 ரூபா கோஷ்டிகளுக்கு ஒரு அறிவிப்பு.வர வேண்டிய பேமண்ட்டை மே 22 க்குள் வாங்கிவிடவும்.


=============

12 ஆண்களுக்குதான் எத்தனை பிரச்சனை?சில்லறையை சர்ட் பாக்கெட்ல வெச்சா கீழே குனியறப்ப விழலாம்,பேண்ட் சைடு பாக்கெட் ல வெச்சா சீட்ல அமரும்போது விழலாம்,பேண்ட் பேண்ட் பேக் பாக்கெட்ல வெச்சா அமரும்போது குத்தும்,பெண்களுக்கு பிரச்சனை இல்லை.கண்டக்டர்ட்ட "சேஞ்ச் இல்ல"னு ஒரு சிரிப்பு போதும்


=============


13 ஒரு பொருள் வாங்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. அதே சமயம் காசு வீணா செலவு பண்றோமோனு ஒரு பக்கம் தோனுது.என்ன"செய்ய?
ஆதரவற்றோர் இல்லம் அனாதை ஆசிரமம் ஒரு விசிட் அடிக்கவும்.எந்தப்பொருளும்"வாங்கத்தோணாது.சிக்கனமா இருக்க நினைச்சா பொருளாதாரத்தில் நம்மை விட பின்தங்கியவர்களை பார்க்கவும்


==============


14 கமல் தமக்கு எதிரி என்பதற்காக அதிமுக தனது பத்திரிக்கையில் கமல் தனது மகளுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு தவறாக சித்தரித்திருப்பது அரசியல் அநாகரீகத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்


==============


15 பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து
வரலாறு படைத்தது தி.மு.க-தான்- நடிகை விந்தியா # கமல் ஒரு தீர்க்கதரிசி,இது தெரிஞ்சுதான் சலங்கை ஒலி ல பஞ்சபூதங்களும் உன் வடிவாகும் னு பாடுனாரு


==============


16 அடிக்கடி ஓய்வு எடுப்பவன் முன்னேற்றப்பாதையில் பின் தங்குவான்,ஓடிக்கொண்டிருப்பவனே வெற்றி பெறுவான்.


=============
17 இப்பல்லாம் lic முகவர்களைவிட புடவை விற்கிறவங்க அதிகமாயிட்டாங்க. அது ஏன்?
ஒவ்வொரு வீட்லயும் மினிமம் 4 லேடீஸ் .(அம்மா,மனைவி,சகோதரி,மகள்) புடவை பிடிக்காத பெண் யாருமில்ல.மார்க்கெட்டிங்க் சுலபம்===============


18 வாணி− திமுக சரிகா− காங் கவுதமி− பாஜக சிம்ரன் − அதிமுக பூஜாகுமார் − கம்யூனிஸ்ட் எல்லா கட்சிலயும் நம்மாளுக்கு ஆள் இருக்கு


==============

19 டாக்டர் , போக்க
சிறந்த இயற்கை வைத்திய வழி இருக்கா ?? 1 சின்ன வெங்காயச்சாற்றை தலையில் தேய்த்து ஊற வைத்து தலைக்கு குளிக்கவும் 2 வேப்பிலைச்சாறு தடவி குளிக்கவும் 3 வெந்தயம் தேய்த்து குளிக்கவும 4 பெரிய நெல்லிக்காய் சாற்றை மருதாணித்தழையுடன் சேர்த்து அரைத்து தேய்க்கவும்


===============

20 தமிழகத்தில் மழைபெய்ய வேண்டி இந்துசமய அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
# ஜட்ஜ் ஆத்திகவாதியா இருக்கும்,நாத்திகவாதி ஜட்ஜ் இதே தீர்ப்பை சொன்னாதான் ஒத்துக்குவோம்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


================

0 comments: