Saturday, May 18, 2019

ISHQ -(2019) ( மலையாளம் )- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ரிவஞ்ச் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


ISHQ -(2019)  ( மலையாளம் )- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ரிவஞ்ச் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

ஸ்பாய்லர்  அலெர்ட்

ஹீரோ வும் ஹீரோயினும் நம்ம ட்விட்டர் காதல் இளவரசன் அருண்காந்தும அவரோட ஆத்மார்த்த காதலியும் போல சேட்டிங்ல பழகி லவ்வறாங்க , ஒரு லாங் ட்ரைவ் போலாம்னு முடிவு பண்றாங்க , அப்போ ஒரு அவசரக்குடுக்கை ஆடியன்சில் ஒரு ஆள் என்ன இது ? கார்த்தி - தமனா நடிச்ச பையா கதையை அட்லீ வேலை ( திருட்டு வேலை) பண்ணீட்டாங்களா?னு குரல் கொடுக்கறான்


காரை ஒதுக்குப்புறமா நிறுத்தி  லவ்வர்ஸ் 2 பேரும்  இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையைப்பற்றியா பேசப்போறாங்க , எல்லா தெய்வீகக்காதலர்களும் என்ன செய்வாங்களோ அதான் பண்றாங்க .  கற்பனையக்கடாசிடுங்க , இது யூ படம், அதனால கில்மா சீன் எல்லாம் கிடையாது , சும்மா கிஸ் தான்


 சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி அப்போ வில்லன் அங்கே எண்ட்ரி ஆகறான்.இங்கே என்ன டா பண்றீங்க போலீசைக்கூப்பிடவா?னு மிரட்றான். அவனும் அவன் எடுபுடியும் காரில் ஏறிக்கறாங்க , கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கார்லயே ரவுண்ட்ஸ், பேசிப்பேசியே டார்ச்சர் பண்றான்  வில்லன்

 ஒரு வழியா ஹீரோயினுக்கு எந்த சேதாரமும் இல்லாம வில்லன் அவங்களை விட்டுடறான். தப்பிச்சாப்போதும்னு   2 பேரும் கிளம்பறாங்க 


 இப்போதான் இடைவேளை ட்விஸ்ட் . ஹீரோ ஹீரோயின் கிட்டே கேட்கறாரு “ நான் கடைக்குப்போய்ட்டு வர்ற  கேப்ல அவன் ( வில்லன் ) உன்னை என்ன செஞ்சான்? 

 பிரேக்கப் 


இடைவேளைக்குப்பிறகு ஹீரோ வில்லனை எப்படிப்பழி வாங்கறான்? கறதை வித்தியாசமான திரைக்கதைல சொல்லி இருக்காங்க ( கொல்லலை, ஆள் வெச்சு அடிக்கலை , ஆனா பழி வாங்கறான்)



க்ளைமாக்ஸ் ல ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தாங்களா? என்பதை வெண் திரையில் காண்க 

 ஹீரோவா ஷான் . அமர்க்களப்படுத்தி இருக்கார் . இந்த மாதிரி கேரக்டருக்கு   சித்தார்த் , சேரன் , மாதிரி சாஃப்டான  ஜிம் பாடி அல்லாத ஆள் தான் செட் ஆகும் முதல் பாதியில் வில்லனிடம் கெஞ்சும் போதும்  பின் பாதியில் சைக்கோ நடிப்பும் அபாரம் 

 எடிட்டிங்  பிஜிஎம்  ஒளிப்பதிவு அனைத்தும் கன கச்சிதம் ., பிஜி எம் மட்டும் ஆங்காங்கே கேஜிஎஃப் சாயல்


ஹீரோயினா ஆன் சீத்தாள்  ( ANN SHEETAL)  கச்சிதமான நடிப்பு ஓப்பனிங் சீனில் காதல் வழியும் அவர் முகத்தைப்பார்த்து ரசித்த நமக்கு க்ளைமாக்ஸில் காட்டும் அந்த ட்விஸ்ட் முக பாவனை திடுக்கிடச்செய்கிற்து


வில்லனா ஷைன் டாம் சாக்கோ   ( எம் சி ஆர் ஓனர்  பேரு கூட சாக்கோ ல முடியும் )  போக்கிரி வில்லனை நினைவுபடுத்தறார்



 வில்லனோட சம்சாரமா  லியோனா லிசாய்  ஹீரோயினை விட அழகு , உடல் வாளிப்பு , நடிப்பு , இளமை எல்லாத்துலயும் ஓவர்டேக் தான் அசத்திட்டார் 


 படத்தின்  முதல் பாதி திரைக்கதை துல்கர் சல்மான் நடித்து ரிலீஸ் ஆகி சரியாக ஓடாத கலி பட சாயல் 

 பின் பாதி   யாரும் எதிர்பாராத திரைக்க்கதை 

 க்ளைமாக்ஸ் கலக்கல்  ரகம் 

 வாய்ப்பிருந்தும் வசதி இருந்தும்  கில்மா சீனோ வல்காரிட்டியோ கெட்ட வார்த்தை பேசறதோ  எதுவும் இல்லாத நீட்டான  ஃபேமிலி எண்ட்டர்டெய்ன் மெண்ட்




நச்  வசனம்



1  அதோ அந்தப்பொண்ணு யார்?னு தெரியுமா?

ம்ஹூம்
நான் யார்?னு தெரியுமா?
நோ
இன்னொரு தடவை அந்தப்பொண்ணைப்பார்த்தே நான் யார்"?னு தெரிஞ்சுக்குவே (malayalam )


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 துல்கர் நடித்த கலி படத்தின் சாயல் திரைக்கதையில் (malayalam)


2 ஒரே ஒரு கார் ,ஹீரோ,வில்லன்,ஹீரோயின்,எடுபுடி 4 கேரக்டர்கள் 80 நிமிட பரபரப்பான ,திரைக்கதையில்

இடைவேளை
கேரளா

ஆலப்புழா
மாவேளிக்கர பிரதீபா (malayalam)


3 அடுத்த சீன் என்னவா இருக்கும்?னு யூகிக்க முடியாத அளவு திருப்பங்கள் நிறைந்திருப்பதே நல்ல திரைக்கதை (malayalam)


சபாஷ் டைரக்டர்


1  படம்  ஓடிட்டு இருக்கும்போது ஒரு ஆள் கூட தம் அடிக்க வெளீல போகலை , ஒவ்வொரு சீன்லயும் டெம்ப்போ ஏத்தி வெச்சிருக்காரு  அருமையான இயக்கம்


2  ஹீரோவின்  பழி வாங்கல் ஐடியா அபாரம்


3  க்ளைமாக்ஸ்ல நாயகி காட்டும் இன்னொரு முகம் ( பெண்ணிய வாதிகள்  விசில் அடிப்பாங்க )




 லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 டார்ச்சர் பண்ற வில்லன் ஒரு சீன்ல காரை விட்டு 20 அடி தள்ளி நின்னு தன் கூட்டாளி கிட்டே டிஸ்கஸ் பண்றார், அப்போ ஈசியா ஹீரோ தப்பி இருக்கலாம், அல்லது ஒரு முயற்சியாவது பண்ணி இருக்கலாம்


2 பணம் பறிக்கும் படலத்தில் வில்லன் ஹீரோவிடம் மிரட்டும்போது சரி எவ்ளோ ஏடிஎம் ல எடுத்துட்டு வரட்டும்?கறப்போ 5000 ரூபா போதும்கறான், இதுதான் சான்ஸ்னு ஒரு 50,000 கேட்டிருக்கலாம்.


3 வில்லன் ஹீரோ கிட்டே செல்ஃபோனை மிரட்டி பிடுங்கி பின் திருப்பித்தருவது ஏன்?


4 ஹீரோயின் கிட்டே ஃபோன் வாங்கி அதுல இருந்து அவனோட செல் ஃபோனுக்கு கால் பண்னா வில்லனுக்கு ஈசியா அவ நெம்பர் கிடைச்சிருக்கும் அதை ஏன் செய்யல?


5 பின் பாதியில் வில்லனின் வீட்டுக்குள் ஹீரோ , அப்போ ஏதோ சாமி ஊர்வலம் வருது . வில்லனின் கதறல் கேட்கக்கூடாதுனு நினைக்கும் ஹீரோ வில்லன் வீட்டில் இருக்கும் டி வி வால்யூமை உயர்த்தி வெச்சிருக்கலாமே?


6 ஹீரோயினுக்கு கோபம் வர முக்கியக்காரணமே ஹீரோவின் மடத்தனமான உளறல் தான் , அதை ஹீரோயின் கிட்டே சொல்லாமயே இருந்திருக்கலாம்


7 கார்ல பகல்ல லாங் ட்ரைவ் போற ஹீரோ கார் டிக்கி ல வில்லனின் ஆளை அசால்ட்டா கட்டிக்கொண்டு போவது எப்டி/ போலீஸ் செக்கிங் வராதா?

8 படம் முழுக்க ஏகப்பட்ட க:ளேபரங்கள் நடக்குது . போலீஸ் சுவடையே காணோம்


ISHQ (malayalam) - அடிபொலி திரைக்கதை.7 கேரக்டர்களைக்கொண்டே விறுவிறுப்பான ரொமாண்டிக் ரிவஞ்ச் த்ரில்லர் தந்த இயக்குனருக்கு ஒரு ஷொட்டு,ஏ சென்ட்டர் பிலிம்.க்ளைமாக்ஸ் கே பாலச்சந்தர் டச். ரேட்டிங் 3.5 / 5 தமிழில் ரீமேக்கினால் சேரன் ஹீரோ,அருண்விஜய் வில்லன். நிச்சயவெற்றி

டிஸ்கி - 1997ல் மியூசிக்கல் ஹிட் மூவியாக ரிலீஸ்  ஆன  இஷ்க் ஹிந்திப்படத்துக்கும்  இந்தப்படத்துக்கும்  சம்பந்தம் இல்ல. அது  வேற  கதை  , இது  வேற  கதை
--
 சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

1 comments:

Sai isha furnitures said...

மிகக்கேவலமான ரிவியூவ்🤬