Wednesday, May 29, 2019

கோதா”வரி” பேர்லயே வரி இருக்கே?

1    பா.ஜ., அரசு இரண்டாவது முறை, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அரசு, எப்படி ஆட்சி செய்யப் போகிறது என்பதை தான், நாம் பார்க்க வேண்டும்.=டி.கே.ரங்கராஜன்

வேடிக்கை பார்ப்பதுதான் நம் வாடிக்கை ஆச்சே? பாத்துடுவோம், வேற வழி?

============

2 பாஜகவின் , ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தையும் கைவிட வேண்டும்=டி.கே.ரங்கராஜன்

ஆர் எஸ் எஸ் க்கு நோ சொல்லனும்?

============
3 லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். - தினகரன்  

ஏன்? ஏத்துக்காம தான் இருந்து பாருங்களேன், என்ன ஆகப்போகுதுன்னு பார்ப்போம்

===========
4 வெற்றியை எதிர்பார்த்தோம்; கிடைக்கவில்லை.-  தினகரன்   

அப்போ அடுத்த தேர்தலில் தோல்வியை எதிர்பாருங்க, எதிர்பார்த்ததே கிடைக்க அதுதான் வழி

=============

 5 எங்கள் கட்சியின் செல்வாக்கு, போக போகத் தெரியும்- தினகரன்  

செல்வாக்கா? செல்லா வாக்கா?

==========

6 . 300 ஓட்டுச் சாவடிகளில், அ.ம.மு.க.,வுக்கான ஓட்டுகள் பூஜ்யம் காட்டியுள்ளன. எங்கள் முகவர்கள் அளித்த ஓட்டுகள் எங்கே. தேர்தல் ஆணையம் உரிய பதிலை சொல்ல வேண்டும்.'- தினகரன்  

உங்க முகவர்களே ஓட்டு உங்களுக்குப்போடலை-தேர்தல் ஆணையம்

===========

சுயேச்சை வேட்பாளராக இருந்ததால், மக்களுக்கும், எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கின்றனர்.எனவே, புதிய கட்சியை துவங்க திட்டமிட்டுள்ளேன். =- பிரகாஷ்ராஜ் 

தனிக்கட்சியா? பிரCASHஇல்லா ராஜ் ஆகிடப்போறீங்க 


சுயேச்சையா நின்னே ஜெயிக்க முடியல, கட்சி ஆரம்பிச்சா மட்டும் ஜெயிக்க முடியு மா?
============

8  குதிரை பேரம் போன்ற செயல்களில், பா.ஜ.,வுக்கு நம்பிக்கையில்லை. - சிவராஜ் சிங் சவுகான்

நம்ம ரேஞ்சுக்கு யானை பேரம் ஓக்கேவா?

=============

9 மத்திய பிரதேச மாநில, காங்., அரசைக் கவிழ்க்க, எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், மாநில காங்கிரஸ் அரசு, தானாக கவிழ்ந்தால், எங்களால் எதுவும் செய்ய இயலாது- சிவராஜ் சிங் சவுகான்

என்னமோ சிக்னல் கொடுக்கற மாதிரி இருக்கே?
============


10 . மாநில அரசைக் கவிழ்க்க விரும்பியிருந்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவே விட்டிருக்க மாட்டோம்.- சிவராஜ் சிங் சவுகான்

அப்போ உங்க சம்மதத்தின் பேரில்தான் காங் அரசு அமைஞ்சுதா?
==============
11  சட்டசபை இடைத்தேர்தலில், சில தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்று இருந்தாலும், இந்த அரசு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, உடனே பதவி விலகவேண்டும்.-வைகோ

ஜூன் 3 ந்தேதி புதிய அரசு அமையும் , பழைய அரசு கவிழும்னு யாரோ முழக்கம் இட்டாங்களே?:

============

12 , தேர்தல் போரில் தோற்றாலும், பா.ம.க., களத்தை இழக்கவில்லை. -ராமதாஸ்: 

டெபாசிட் = களம்?

=============

13 தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து, அடுத்து வரும் தேர்தலில், வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.-ராமதாஸ்: 

அப்போ அடுத்த தேர்தலில் திமுக கூட கூட்டணியா?


============


14 முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, நான் முன்வந்தேன். ஆனால், கட்சி அதை நிராகரித்துவிட்டது.-மம்தா பானர்ஜி: 

அப்போ உங்க கட்சி ஆளுங்களே உங்க பேச்சை கேட்கறதில்லை>?

============


15  நான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூரு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.-பிரகாஷ்ராஜ்  

டப்பிங் வாய்ஸ் சங்கத்துல பேர் குடுத்து பதிவு பண்ணிக்குங்க 

===========
16  இன்னும், ஒரு ஆண்டில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில், எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி, பெரிய அளவில் ஆதரவை பெறப் போகிறேன்- பிரகாஷ்ராஜ் 

 இவரு தோற்றது பத்தாதுனு இன்னும் ஏகப்பட்ட பேரை தோற்கடுக்கப்போறாரு

=============
17  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, எம்.பி.,க்களில், 43 சதவீதம் பேர் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன' =ஏ.டி.ஆர்., எனப்படும்-
ஜனநாயக சீரமைப்பிற்கான சங்கம் என்ற, தனியார் அமைப்பு 

மீதி 57% பேரு கமுக்கமா தப்பு பண்ணி இருப்பாங்க போல 


================

18 தமிழகத்தில் நடந்த, லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், கட்சி தாவிய பலர், வெற்றி பெற்றுள்ளனர்-செய்தி

 பச்சோந்தியா மாறுவதற்க்கு ஜனங்க க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க?

===============


கோதா”வரி” பேர்லயே வரி இருக்கே? அதான் பயமா இருக்கு

==============


20 தேர்தல் முடிவுகள் குறித்து, ஆத்ம பரிசோதனை செய்வோம்' -, ராமதாஸ் 

இந்த டெஸ்ட்டை எல்லாம் கூட்டணி வைக்கும்போதே கட்சிக்காரங்க கிட்டே ஆலோசனை கேட்டு நடந்திருக்கலாமில?

==================

0 comments: